தி.மு.க. வின் காவலன் காங்கிரஸ்

 

ஒரு வழியாக தொலைத் தொடர்பு அமைச்சர் ராசா தன்னுடைய ராஜினாமாக் கடிதத்தை பிரதம மந்திரியிடம் கொடுத்துள்ளார். இவர் ராஜினாமச் செய்ததினால் மட்டும் பிரசனைகள் முடிவுக்கு வரவில்லை. எதிர்க் கட்சிகளுக்கு  இது ஊழலுக்கெதிரான முதல் வெற்றிதான்.  இதில் யாரெல்லம் சம்மந்தப் பட்டுள்ளார்கள், யார் யாருக்கு எவளவு பங்கு சென்றது போன்றவைகளெல்லாம் வெளிச்சத்திற்கு வந்தாக வேண்டும்.  இதற்காக எதிர்க் கட்சிகள்  J.P.C ( Joint Parliament Committee) அமைத்து அதன் மூலமாக விசாரிக்க வேண்டுமென்று போராட்டம் நடத்துகின்றனர்.

கடந்த 5 நாட்களாக நாடாளுமன்றம் முடங்கிப்போய் இருக்கிறது. அலுவல்கள் எதுவும் நடக்கவில்லை.  ஆளும் காங்கிரஸ் மற்றும் தி.மு.க. தலைவர் ஆகியோர் இந்த JPC விசாரணைக்கு உடன்படவில்லை.  அதற்குப் பதிலாக  Public Accounts Committee மூலம் விசாரணை நடத்தலாம் என்ற நிலையில் இருக்கின்றனர். 

இந்த இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்ன?  JPC யில் ஆளும் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையின் கீழ் சுமார் 20 அல்லது 25 உறுப்பினர்கள் இருப்பர். அவர்கள் விசாரணை நடத்துவார்கள். இதில் விசாரணை உடனடியாக நடக்கும். சுமார் மூன்று  மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்.

ஆனால் Public Accounts Committee யில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையில் சுமார் 25 உறுப்பினர்கள் ஆய்வு செய்து அறிக்கை வெளியிடுவார்கள். ஆனால் இதை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளவே சுமார் 2 அல்லது 3 ஆண்டுகளோ அல்லது அதற்கு மேலேயோ ஆகலாம். அவர்கள் அறிக்கை அதற்குமேல் தான் வெளியாகும். இதைத்தான் காங்கிரஸ் மற்றும் தி.மு.க வும் விரும்புகிறது. அதாவது இந்த விவகாரத்தை குளிர் சாதனப் பெட்டிக்குள் வைத்துப் புதைப்பதற்கு இக்கட்சிகள் முயல்கின்றன.

இதில் ஊழல் எதுவும் இல்லை என்று தி.மு.க. தலைவர் நற்சாட்சி பத்திரம் வழங்கியுள்ளார். காங்கிரசும் ஊழல் எதுவுமே நடக்காததுபோல் நடந்து கொள்கிறது. மாண்புமிகு பாரதப்பிரதமரோ மௌனவிரதத்தை மேற்கொண்டுள்ளார். அவர் அந்த விரதத்தைக் கலைப்பதாக இல்லை. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவர்கள் நாடாளுமன்றத்தில் நெளிந்து கொண்டு இருப்பதைத்தவிர வேறெதுவும் செய்யவில்லை.

அமைச்சர்கள் சிதம்பரம், பிரணாப் முகர்ஜி ஆகியோர் விவகாரத்தை மூடி மறைப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். காங்கிரஸ் தி.மு.க.வின் காவலனாக நன்கு செயல்படுகிறது.

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : November 15, 2010 @ 1:19 pm