ஆரிய – திராவிட யுத்தம்
தமிழக முதலமைச்சர் கலைஞர் வேலூரில் 27-11-2010 ல் நடந்த பொதுக் கூடத்தில் நாட்டு மக்களை மேற்கண்ட யுத்தத்திற்குத் தயாராக இருக்கும்படி அறை கூவல் விடுத்துள்ளார். ஸ்பெக்ட்ரம் முறையீடுகளில் சிக்கியுள்ள முன்னாள் தொலைத் தொடர்பு அமைச்சர் " தலித்" என்பதால்தான் எதிர்க்கட்சிகள் JPC வேண்டுமென்று போராடுபவதாக முறையிட்டுள்ளார்.
முன்னாள் நிதி அமைச்சர் மறைந்த T.T. கிருஷ்ணமாச்சாரி மீது எழுந்த முந்திரா ஊழல் வழக்கில் அவர் பதவியை ராஜினாமாச் செய்தவுடன் எதிர்க்கட்சிகள் அடங்கிவிட்டதாகவும் JPC வேண்டுமென்று பிடிவாதம் காட்டவில்லை என்றும் அங்கலாய்த்து இருக்கிறார்.
இன்றைய தலைமுறையினருக்கு முந்திரா ஊழல் வழக்கைப்பற்றித் தெரிந்திருக்க நியாயம் இல்லை. ஆகவே இளம் தலைமுறையினரையும், தன் கட்சித் தொண்டர்களையும் திசை திருப்பதற்காகவே இவ்வாறு அவர் பேசி இருக்கிறார். அவர் பேச்சில் நியாயம் இருப்பதைப் போன்ற தோற்றத்தைக் கொடுத்து இருக்கிறார்.
1957 ல் T.T.K. நிதி மந்திரியாக இருந்தபோது ஹரிதாஸ் முந்திரா என்பவருக்குச் சொந்தமான நிறுவனங்களின் பங்குகளை ரூ. 1,26,86,100 க்கு (ஒரு கோடியே இருபத்தியாறு லட்சத்து எண்பத்தி ஆராயிரத்து நூறு ரூபாய்க்கு) L.I.C. வாங்கியது. நிதித் துறையின் முதன்மைக் காரியதரிசி திரு. H.M.பட்டேல் அப்போது L.I.C. யின் சேர்மனாக இருந்த K.R. கமல்நாதை வாங்கும்படி கூறினார். முந்திராவின் நிறுவனங்களெல்லாம் கான்பூரில் இருந்தன.
முந்திரா ஒரு தொழிலதிபரே இல்லையென்றும் ஆகவே அவர் நிறுவனத்தின் பங்குகள் உண்மையானவை இல்லையென்றும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதற்கு ஒரு விசாரணைக் கமிழன் அமைக்கப் பட்டது. T.T.K. யின் நேரடித் தொடர்பு இதில் நிரூபிக்கப்படாவிட்டாலும் அவர் அமைச்சரவைக்குத் தொடர்பு இருந்ததால் அவர் ராஜினாமாச் செய்ய நேர்ந்தது. அதற்குப்பின் பிரதமர் நேரு ரகசியமாக இதில் விசாரணை செய்து இதில் நடந்த தவறுகள் வேண்டுமென்றே செய்யப்படவில்லை என்று தெரிந்து கொண்டு 1962 ல் TTK ஐ மீண்டும் அமைச்சராக்கினார்.
கலைஞர், முந்திரா ஊழலையும், ராசாவின் ஊழலையும் ஒப்பிட்டுப் பேசி இருக்கிறார். ஐயா முதல்வர் அவர்களே முந்திரா வழக்கில் ஊழல் என்று சொல்லப்பட்ட தொகை ரூ. 1,26,86,000. ஆனால் ராசா மீது ஊழல் குற்றம் சொல்லப்பட்ட தொகை : ரூ.17600000,00,00,000. ஐம்பது ஆண்டுகளின் பண வீக்கத்தை கணக்கெடுத்தாலும் தற்போதைய ஊழலுக்கு அருகே வர்றாது.
கலைஞரே ! இரண்டு ஊழல்களும் ஒன்றுதானா? ராசா "தலித்" என்பதனால்தான் எதிர்க் கட்சிகள் JPC வேண்டுமென்று கூக்குரலிடுகின்றனவா ? உங்கள் இதயத்தின் மீது கை வைத்துச் சொல்லுங்கள் ?
பிகு : போஃபோர்ஸ் ஊழலை விசாரிக்க 1987ல் திரு.சங்கரன் தலைமையில் JPC விசாரனைக்கு உத்தரவிடப்பட்டது.