மன்மதன் அம்பு பாடல் விமர்சனம்
பாடல்: தகிடு தத்தோம்
எழுதி பாடியது : கமல்
ஒரே தத்துவம்தான் போங்க இந்தப் பாட்டுல. "போனா போகுதுன்னு விட்டின்னா, கேணைன்னு ஆப்பு வெப்பாண்டா, வேணுமின்னா போயி நின்னீன்னா காக்க வெப்பாண்டா", "சாம, பேத, தான தண்டம் நாலும் சேர்ந்து தோத்துப் போகும் போது தகிடு தத்தோம்", "நல்லவன்னு யாரைச் சொல்ல, கெட்டவன்னு யாரைச் சொல்ல, நல்லவனைக் கெட்டவனா மாத்துறவந்தான் கெட்டவன்" இப்படி பாட்டு முழுக்க ஒரே தத்துவம்தான். பாட்டுல ரெண்டாவது சரணத்துல கம்யூனிஸமும் வந்துருது. ஷ்ஷ் ஷ் அப்பா தாங்க முடியல.
Who's the hero…
பாடியது: ஆண்ட்ரியா
எழுதியது: கமல்ஹாசன்
தமிழில் இப்படி ராக் & ரோல் பாட்டு கேட்டு வெகு காலமாச்சுங்க, ஒரு காலத்துல கலக்கோ கலக்குனாங்களே உஷா உதூப் (அவுங்க படத்துல நடிச்சிருக்காங்க) பாடின மாதிரியே இருக்கு. அருமையான குரல், இசை கோர்வையும் அருமை. rock and rollக்கு Pipe மிக முக்கியம், DSPன் கோர்வை பிரமிக்க வெக்குது. அசத்தல் DSP & Andrea கூட்டணி. உஷா உதூப் இந்தப் பாட்டுக்கு உதட்டசைக்க கமலின் ஆட்டத்தை எதிர்பார்க்கனும். ரசிகர்களுக்கு விருந்து தருவாரா கமல்?
பாடல் கவிதை:
எழுதியது: கமல்
கவிதை (பாடியது): த்ரிஷா, கமல்
ஒரு விபச்சாரப் பெண் தன்னோட வாடிக்கையாளரிடம் பேசுவது போல அமைந்திருக்கும் இந்தக் கவிதை(ப்) பாடலில் புரிவது ஆச்சர்யமான விசயம். முதலில் கவிதைச் சொல்லும் த்ரிஷா வாடிக்கையாளர்களிடம் மனசளவுல தள்ளி இருக்கிறது, அவுங்க நடவடிக்களைச் சொல்ல, கவிதைப்போடு வருது.
இதுக்கு நடுவுல "ஓ..நீங்க பக்திமானா ? ஆ…அதெல்லாம் இல்லீங்க, நான் புத்திமானாங்கிறங்கிறதே கேள்விகுறியா இருக்கு.." இப்படி தன்னோட செருகலையும் கமல் வெச்சிருப்பது ச்சும்மா ச்சும்மா எல்லா படத்திலேயும் சொல்றது ஒரே அலுப்பாவும், அயர்ச்சியாவும் இருக்கு. கமலும் சொல்லும் கவிதை, ஒரு பெண் கடவுளிடம் தனக்கு வரும் கணவன் எப்படி இருக்கனும் வேண்டி விரும்பி வரம் கேட்கிறா மாதிரி இருக்குங்க. இருவரில் ரஹ்மான் செய்த அதே Bass வெச்சி இதற்கு இசையமைச்சதும் கொஞ்சம் பழைய நெடியும் கூட.
கவிதை வரிகளில் ஒரு பகுதி
"மூளை மடிப்புகள் அதிகமுள்ள மேதாவிலாச மண்டையும் வேண்டும்
வங்கியில் இருப்பு, வீட்டில் கருப்பென வழங்கிப் புழங்கிட பணமும் வேண்டும் நேர்மை வேண்டும் பக்தியும் வேண்டும்
எனக்கென சுதந்திரம் கேட்கும் வேளையில் பகுத்தறிகின்ற புத்தியும் வேண்டும்
இப்படி கணவன் வரவேண்டும் என நான் ஒன்பது நாட்கள் நோன்பிமிருந்தேன் "
ஒரு நல்ல கவிதை, இல்லே சுமாரான கவிதை, இல்லை கவிதை..கவிதை கவிதை..
பாடல்: நீல வானம்
எழுதிப் பாடியது: கமலஹாசன்
ஒரு பியானோ, ஒரு வயலின், ஒரு கோரஸ், ஒரு கமல், ஒரு கிதார் போதும்னு நினைச்சு பாட்டு எழுதி இசையமைச்சிருக்காங்க. மெட்டில் சரியா உக்காராத வார்த்தைகளும், கமல் பாடிய பழைய பாடல்களும் ஏதோ ஞாபகத்துக்கு வந்துட்டு போகுது. ஹ்ம்ம்.. இதுவும் ஒரு பாட்டு படத்துல இருக்கு.
பாடல்: ஒய்யாலே
பாடியது: முகேஷ், சுசித்ரா
எழுதியது: விவேகா
B&Cயில இந்தப் பாட்டுக்கு ஆட்டம், பாட்டமா விசில் பறக்கும். ஆச்சர்யமான விசயம் DSP ஆர்மோனியத்தை சரியானபடி உபயோக படுத்தியிருப்பது. நல்ல ஒரு குத்துப் பாட்டு, DSPக்கு புடிச்ச முறையில விட்டு பாட்டை வாங்கியிருக்காங்க. இந்தப் பாட்டுல கமலோட செருகல் எதுவுமில்லாததே வித்தியாசமா இருக்கு. DSPன் குத்துகளின் வரிசையில் இந்தப் பாட்டும் இடம் புடிக்கும்.
பாடல்: மன்மதன் அம்பு
பாடியது: DSP
எழுதியது: கமல்
வழக்கமா, இசையமைப்பாளர்கள் பாடுற பாட்டு எப்பவுமே ஹிட்டாகும், வேற மாதிரி சொல்லனும்னா ஹிட் ஆகுற பாடல்களை இசையமைப்பாளர்களே பாடிருவாங்க. இதுவும் விதிவிலக்கில்லாத பாட்டு. வழக்கமான DSP, வழக்கமான beats.. சேம் ஓல்ட் DSP. மேடைகளில் DSP செய்யும் அதே குறும்பும் இதுல அடங்குது. very lively Song.
படம் ஐரோப்பாவில் எடுக்கப்பட்டதினால கொஞ்சம் வயலின் எல்லாம் அதே பாணிக்கு மாத்தி செஞ்சிருப்பது அருமை. கமல் படங்களில் கமலின் ஆதிக்கமிருக்கும்னு எல்லாருமே தெரியும். இந்தப் படத்தின் பாடல்கள்ல அது ரொம்பவே அதிகமா தெரியறதே அயர்ச்சி. DSP & கமலஹாசன் என்னும் இரு புலிங்க சேர்ந்து பூனைப் பால் கறந்த கதைதான் 'மன்மதன் அம்பு' பாடல்கள்.