ரத்தசரித்திரம்
தொடர்ந்து 5 ஹிட் படங்களையும் ,லேட்டஸ்ட்டாக ஒரு மெகா ஹிட்டையும் கொடுத்த சூர்யாதான் ஹீரோ -ஹிந்திப்பட உலகின் ஹிட் மேக்கர் என பெயர் பெற்ற ராம்கோபால் வர்மாதான் டைரக்டர். பின் புலமும்,அரசியல் செல்வாக்கும் கொண்ட தயாநிதி அழகிரிதான் தயாரிப்பாளர். இவர்கள் மூவரும் இணையும் ஆக்ஷன் படம் என்றால் எதிர்பார்ப்புக்கு கேட்கவா வேண்டும்?
ஆனால் அதீத எதிர்பார்ப்புக்குள்ளான படங்கள் பெரும்பாலும் பலத்த வெற்றியை பெற்றதில்லை.படத்தோட கதை என்ன?சினிமாவில் ஹீரோ பிளஸ் அரசியலில் முதல்வர் நாற்காலியை குறி வைப்பவர் (சிரஞ்சீவியை தாக்கறாரோ?) தனது அரசியல் எதிரிகளை ஸ்கெட்ச் மார்க் பண்ணி தூக்கிக்கொண்டே இருக்கும்போது எதிர்பாராத விதமாக அவருக்கு சம்பந்தமே இல்லாத ஒருவரை கொலை செய்து விட கொலை ஆனவரின் மகன் பழிக்குப்பழி வாங்குவதே கதை.
1985களில் வழக்கொழிந்த ரிவஞ்ச் சப்ஜெக்ட்டை மீண்டும் ஆரம்பித்து வைப்பதில் இயக்குநருக்கு அப்படி என்ன ஒரு சந்தோஷமோ?ஆனால் இதில் வித்தியாசமான 2 அம்சங்கள் உண்டு. ஒன்று ஹீரோதான் வில்லனை கொல்ல ஆசைப்படுகிறான், வில்லன் ஹீரோவைக்கொல்ல வேண்டாம் என நினைக்கிறான். அதே போல் வில்லனுக்கு ஜோடியாக வருபவர் ஹீரோவுக்கு சப்போர்ட்டாக பேசும்போது அதில் உள்ள நியாயத்தை வில்லன் ஏற்றுக்கொள்கிறார்.
படத்தில் மொத்தம் 345 கேரக்டர்கள் வருகின்றன.அதில் 289 ஆட்களை வில்லனும் அவனது ஆட்களும் போட்டுத்தள்ளுகிறார்கள். மிச்சம் மீதி இருப்பவர்களை ஹீரோ போட்டுத்தள்ளுகிறான். படம் முழுக்க வன்முறை கொப்பளிக்கிறது. இடைவேளை விடும்போது பக்கத்து சீட் ஆளை போட்டுத்தள்ளி விடலாமா என நமக்கே ஒரு வெறி ஏற்படும்படி படத்தின் காட்சி அமைப்புகள் இருக்கின்றன.
ஒரு படம் பார்த்தால் மனித நேயம் வளரனும்.பரஸ்பரம் அன்பு மலரனும்.அதுதான் நல்ல சினிமா.ஆனால் இயக்குநருக்கு அதைப்பற்றி எல்லாம் கவலை இருப்பதாக தெரியவில்லை. வன்முறையே இல்லாமல் ஆக்ஷன் படங்கள் எடுக்கலாம்.
சூர்யாவின் நடிப்பில் நந்தா பாதிப்பு தெரியாவண்ணம் சமாளிக்கிறார். முறுக்கேற்றிய உடலுடன் சண்டைக்காட்சிகளில் பிரமாதப்படுத்துகிறார். ஒரு சண்டைக்காட்சியிலும் ,சேஸிங்க் சீனிலும் ரிஸ்க் எடுத்து டைவ் அடிக்கிறார். ரியாலஸ்டிக் ஜம்ப் பண்ணி கலக்குகிறார். அவரைப்பொறுத்தவரை ஓக்கே.
பிரியாமணிதான் ஜோடி. பனித்துளிகள் பூத்த பருத்திப்பூ மாதிரி பளிச் என இருக்கிறார்.ஆனால் அவர் சொந்தக்குரலில் பேசும்போது சாரி….
ஹீரோவின் மனைவியை கடத்தி வைத்துக்கொண்டு ஹீரோவிடம் வில்லன் வசனம் (பேரம்) பேசுவது சலிப்பு. படத்தின் டெம்ப்போவை ஏற்ற படம் முழுக்க தீம் மியூசிக் ஒன்றும் ஒரு பின்னணிப்பாடல் வரிகளும் வந்து கொண்டே இருப்பது மகா போர். பிரியாமணி குழந்தையுடன் தப்பிக்கும் சீன் இன்னும் லெங்க்த்தி ஷாட்டாக எடுக்கப்பட்டிருக்கவேண்டும், மிஸ் ஆச்சா? எடிட்டிங்க்கில் போச்சா? டைரக்டருக்கே வெளிச்சம்.
கோர்ட் வளாகத்திலேயே சூர்யா வில்லனின் ஆளை போட்டுத்தள்ளும் இடம் செம திரில்லிங்க்.அப்போது சூர்யா ஒரு ஸ்டைல் டைவ் ஒன்று அடிக்கிறார் பாருங்கள், அடடா.. ஜெயிலுக்குள் கைதியாக இருக்கும் ஹீரோவை கலவரம் ஏற்படுத்தி போட்டுத்தள்ள வகுக்கப்படும் திட்டம் மகா பழசு. மகாநதி உட்பட பல படங்களில் வந்தாகி விட்டது.
அட இது வில்லனுக்கு ஜோடியக வரும் பார்ட்டி ஆனா வில்லி இல்ல. மற்றபடி ஹீரோ பழி வாங்கும் படலங்களில் வரும் சீன்கள் விருமாண்டி படத்திலும்,ஹீரோயின் தேர்தலில் நிற்கும் காட்சிகள் சிவகாசி படத்திலும் ஏற்கனவே வந்தாகி விட்டது.
இந்த மாதிரி ஆக்ஷன் அல்லது வன்முறை படங்களில் படத்தின் ரிலாக்சேஷனுக்காக காதல் காட்சிகள் ரசிக்கும்படி வைத்து சமன் செய்வார்கள். ஆனால் ராம்கோபால் வர்மா முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக எடுக்க முடிவு செய்து விட்டார் போலும். படம் முழுக்க சண்டை ரத்தம்தான். படத்தில் வசனகர்த்தாவுக்கு வேலை கம்மி. மொத்த பட வசன ஸ்கிரிப்டே ஏ4 ஷீட்டில் 4 பக்கங்கள்தான் வரும்.
வில்லனை ஹீரோ கொன்ற பின் படம் முடிந்து விடுகிறது, ஆனால் அதற்குப்பிறகும் 15 நிமிடம் இழுப்பது தேவை இல்லாதது. கடைசி சீனில் வில்லனின் குழந்தையை காட்டி அவன் ஹீரோவை பிற்காலத்தில் பழி வாங்கக்கூடும் என கொக்கி போடுவது இந்தப்படம் வெற்றி பெற்றால் இரண்டாம் பாகம் எடுக்கலாம் என்ற டைரக்டரின் பேராசைதான் காரணம்.
இந்தப்படத்தை குழந்தைகள், பெண்கள் குறிப்பாக கர்ப்பிணிகள், இளகிய மனம் படைத்தோர், சிறுவர் சிறுமிகள் பார்க்க வேணாம்.
கம்பராமாயணம் மகாவம்சத்தை தழுவி எழுதப்பட்டது என்றும், திருவள்ளுவர் சிங்கள பௌத்தர் என்றும், கௌதம புத்தர் பிறந்தார் என்றும், தமிழர்களுக்கு வேஷ்டியும், சேலையும் கட்டுவதற்கு கற்றுக்கொடுத்ததே தனது மூதாதையர் என்றும் ஜாதிக ஹெல உருமயவின் பாராளுமன்ற உறுப்பினர் மேதானந்த எல்லாவல தேரர்…… பூச்சாண்டி காட்டுகின்றனர்.
//கடைசி சீனில் வில்லனின் குழந்தையை காட்டி அவன் ஹீரோவை பிற்காலத்தில் பழி வாங்கக்கூடும் என கொக்கி போடுவது இந்தப்படம் வெற்றி பெற்றால் இரண்டாம் பாகம் எடுக்கலாம் என்ற டைரக்டரின் பேராசைதான் காரணம்.
//
எச்யூச்மி! தமிழ்ல ரிலீஸான ‘ரத்த சரித்திர’மே இரண்டாம் பாகம் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஹிந்தில வந்த முதல் பாகத்தோட தொடர்ச்சிதான் இது. முதலில் காட்டப்படும் 15 நிமிட காட்சிகள் முதல் பாகத்தில் உள்ளவை. எடிட்டிங்கல கொஞ்சம் சொதப்பிட்டாங்க. சில முக்கியமான காட்சிகள் இல்லை!
appuram intervalllukku enna oru glass raththam kudichcheengalaa? padaththoda stillaye paakkamudiyalla aanaalum ungalukku “romba thairiyam” thaan boss
//இடைவேளை விடும்போது பக்கத்து சீட் ஆளை போட்டுத்தள்ளி விடலாமா என நமக்கே ஒரு வெறி ஏற்படும்படி படத்தின் காட்சி அமைப்புகள் இருக்கின்றன.//
LOL:)))))) ஓவரா வெறியேத்திட்டாங்களா பாஸ் !