காவலன் பாடல் விமர்சனம்

 

பாடல் – விண்ணைக் காப்பான் ஒருவன்.. மண்ணைக் காப்பான் ஒருவன் 

பாடியவர்கள்:  திப்பு, ஸ்வேதா 

எழுதியவர்: பா.விஜய்

ஆச்சர்யமாக இருக்கு, படத்தை எழுதியது பா.விஜய். கபிலந்தானே விஜய்தானே ஆச்சார்ய ஆரம்ப பாடலாசிரியர்ன்னு ஆச்சர்யப் பட்டால், வழக்கம் போல வரும் ஒரு ஆரம்ப பாடல்.ட்ரம்பெட் ஆரம்பம்,  சரணத்தில் வயலின்கள் என அதே மொட்டையின் டெம்ப்ளேட் பாடல். புதுசா செஞ்சிருககாங்க. ஆரம்ப பாடல் எடுத்து முடிச்சவுடன், கொஞ்ச நாளைக்காவது விஜய் ஓய்வு எடுக்கப் போயாகனும். காடு மேடெல்லாம் உருண்டு புரண்டு பேயாட்டம் ஆடுவாரு. இந்தப் பாட்டும் கொஞ்சமும் குறைச்சலில்லாத ஆட்டத்தைத் தரும். ரசிகர்களை மனசுல வெச்சிகிட்டு எழுதின பாட்டு, விஜயையும் புகழ கூடாது, அதே சமயம் ரசிகர்கனையும் புகழக்கூடாது, பின்னே எத்தனை வருசம்தான் அதையே பண்றதுன்னு வித்தியாசமா ஆண்டவனைப் பாட போயிட்டாங்க. ஆரம்பத்துல இருந்து வரும் ஒரே மாதிரியான தாளம் சலிக்க வெக்குது. ரெண்டாவது சரணத்துக்கு அப்புறம் வரும் குத்துல விஜய் எப்படி ஆடுவாருங்கிற எதிர்பார்ப்பு எகிற வைக்குது. அதே பழைய கள்ளு, பழைய சட்டி, புதுமணம்.

பாடல் : யாரது.. யாரது 

பாடியவர்கள்:  கார்த்திக் , சுசித்ரா 

எழுதியவர்: யுகபாரதி

"ஒரு படத்துக்கு ஒரு மெலடியாவது வெக்கனும், அது வாழ்நாளைக்கும் பேசப்படற பாட்டா இருக்கனும்" இதுதான் வித்யாசாகரிடம் பழகியவர்கள் அடிக்கடி கேட்கும் வார்த்தை. பாடியது கார்த்திக் வேற சொல்லவும் வேணுமா? அட காந்த குரலழகி சுசித்ராவும் சேர்ந்தா.. ஆனா சுசித்ராவின் குரல் சும்மா ஹலோமட்டும் சொல்லிட்டுப் போயிடறாங்க 🙁 ரெண்டாவது சரணத்துக்கு முன்னாடி தன்னோட ஹஸ்ஸி குரலில் ஒரு ஹம்மிங். காதல் தாபத்துல பாடுற மாதிரியான பாடல். ஐயா சித்திக், இதுல விஜய ஆடவெச்சிராங்க. நல்ல மெலடி.. மோனிஷா என் மோனலிசா படத்தில் டீ ஆரின் “ஹலோ ஹலோ" பாடல் ஞாபகம் வருவதை தவிர்க்கதான் முடியவில்லை.

 

பாடல் : ஸ்டெப் ஸ்டெப்

பாடியவர்கள்:  பென்னி தயாள் , மேகா

எழுதியவர்: விவேகா

இந்தப் பாட்டுக்கு இசையமைச்சது விஜய் ஆண்டனியோன்னு சந்தேகப்படுற அளவுக்கு அரம்ப இசையும், இசை கோர்ப்பும். "நிலாவே வா"அஃதே அஃதே வில ஆரம்பிச்ச ஆட்டம் இந்தப் பாட்டிலும் தொடருது. மேற்கத்திய இசையில் ஒரு களோபரமே நடந்திருக்கு. விஜய் ஆட்டத்தை மட்டுமே எதிர்பார்த்த பாடல். வித்தியாசம் பண்ணியிருக்காரு விதயாசாகர். வழக்கமா விஜய் பாட்டுன்னாவே போற்றித்தான் பாடனுமா? யூ டூ விவேகா? 

பார்க்கதான் சிறுபுள்ள..கலக்குற பயபுள்ள.. 

இளம்பெண்கள் நினைப்பால நீதான் மாப்பிள்ளை 

ஏமாந்த ஆளில்லை..நான் உன்னை போலில்லை. 

என்ஆட்டம் பாரேண்டி யாரும் இணையில்லை 


பாடல் : சடசட சடசட

பாடியவர்: கார்த்திக்

எழுதியவர்: யுகபாரதி

மீண்டும் கார்த்திக், யுகபாரதி. டிபிகல் கார்த்திக், வித்யாசாகர் பாடல். இதென்ன யுவன் பாட்டு மாதியிருக்கேன்னு கேட்கத் தோணுது. மீண்டும் மேற்கத்திய சாம்ராஜ்ஜியம். புல்லாங்குழல் வரவேண்டிய இடத்தில் கூட கீபோர்ட். ஆரம்பத்தில் இருந்தே இருக்கும் அதே துள்ளல், வேகம் உள்ள பாட்டு. 

"காதல் தெருவிலே என் ஆசை அலையுதே நீங்க நினைவினிலே நிழல் கூட வெளுக்குதே"

"குரலாலே என்னில் குடியேறிக்கொண்ட கொலைகாரி உந்தன் ஞாபகங்கள் என்னை குத்துதே"

யுகம், வேகம், வித்யாசாகரின் துள்ளல். நல்லதொரு பாடல்.

பாடல் : பட்டாம்பூச்சி 

பாடியவர்: கே.கே, ரீட்டா 

எழுதியவர்: கபிலன்

ஆரம்ப பாடல் இல்லைன்னா என்ன, எனக்கும் ஒரு வாய்ப்பு வருமென கபிலன் காத்திருந்திருப்பார் போல. semi beatல் ஒரு காதல் பாடல். மீண்டும் 90களில் பாட்டமைத்தது போலவே இந்தப் பாட்டும். இந்தப் பாட்டி பண்பலைகளிலும், தொலைக்காட்சிகளிலும் காதலர்களின் தேர்வா இருக்கும் பாடல். அரசியலுக்கு உள்குத்து வெச்சும் ஒரு வரி. தெரிஞ்சே செஞ்சிருப்பாங்களோ? 

"அலைவரிசையில் நீ சிரிக்க.. தொலை தொடர்பினில் நான் இருக்க.."

ooOoo

ஒட்டுமொத்தமாக பார்க்கும்பொழுது, 4 வருடங்களாக விஜய்க்கு முன்னுரிமை தந்தே வந்த பாடல்களைக் கேட்டு கேட்டு சலிச்சுப் போன நேரத்துல நல்லவிதமாய், வித்தியாசமாய் அமைந்த பாடலகள். இது விஜய்க்கும், வித்யாசாகருக்கும் மிக முக்கியமான படம். ரெண்டு பேருக்குமே ஒரு hit தேவைப் படற நேரத்துல வித்யாசாகர் தனக்கு குடுத்த வேலையை திருப்திகரமா முடிச்சுட்டாரு. அப்ப விஜய்?

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : December 9, 2010 @ 11:03 pm