மகர ஜோதி பித்தலாட்டம்

 

இந்த ஆண்டு மகர ஜோதி தரிசனத்திற்காக சென்றிருந்த இருந்த பக்தர்கள் அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் அகப்பட்டுக் கொண்டு நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அகால மரணமடைந்து இருக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் பொங்கலன்று காணப்படும் மகர ஜோதியைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் அன்று காலை முதலே காத்துக் கிடப்பது வழக்கம்.

இந்த ஜோதி  ஸ்வாமி ஐயப்பனுக்கு தேவர்கள் எடுக்கும் கற்பூர ஆரத்தியென்றும், ஒரு நம்பிக்கை உண்டு. இன்னும் சிலர் அன்று வானத்தில் தோன்றும் அதிசய ஜோதியென்றும் நம்பிக்கை வைத்துள்ளனர். இவ்வாறாக அதற்கு ஒரு தெய்வாம்ச நம்பிக்கை உண்டு.

இந்த எதிர்பாராது நிகழ்ந்த விபத்திற்குப் பிறகு அந்த ஜோதியைப் பற்றிய சர்ச்சை வெகுவாக எழுந்துள்ளது. அது மனிதர்கலால் ஏற்றப்படும் நெருப்பு என்று கூறிய “ஹிந்து” பத்திரிகை, அது ஏற்றப்படும் மேடையையும் படம் பிடித்துக் காட்டி இருந்தது. இன்று திருவாங்கூர் தேவசம் போர்டு “இது மனிதர்களால் ஏற்றப்படும் தீ என்றும், இயற்கையிலேயே ஏழுவதில்லை” என்றும் விளக்கம் அளித்துள்ளது.

அப்ப்டியென்றால் இது நாள்வரையில் இது வானில் ஏற்படும் அற்புத நிகழ்வு என்று கூறியதெல்லாம் பொய்தானே? பக்தர்கள் நம்புகிறார்கள் என்றால் எதை வேண்டுமானாலும் கூறுவீர்களா? “பக்தி பகல் வேஷமாக மாறக்கூடது” என்று 60 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த திரைப்படத்தின் வசனம் இப்போது நினைவுக்கு வருகிறது.

தொடர்புடைய படைப்புகள் :

  • தொடர்புடைய படைப்புகள் எதுவும் இல்லை !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : February 1, 2011 @ 12:25 pm