3 – வொய் திஸ் கொலவெறி


தமிழ்ச் சினிமாக்காரர்களின் புண்ணியத்தில் இன்னும் என்ன என்ன பெயர் தெரியாத வியாதிகளையெல்லாம் ரசிகர்கள் கற்றுக் கொள்ளப் போகிறோமோ! Bi-polar disorder
 
இப்படி ஒரு இத்துப் போன வியாதி இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? அட.. ஸ்ப்ளிட் பெர்சனாலிடியே இப்போ தான் கொஞ்ச வருஷமா தெரியும் அப்படீன்றீங்களா? நீங்க நம்மாளு! இந்த பை-போலார் டிஸார்டர் அப்படீன்ற வியாதி என்னா பண்ணும்ன்னா மனுஷனை நல்ல மூடுக்கும், கெட்ட மூடுக்கும் திடீர்ன்னு மாத்தி விடும்.
 
”Bipolar disorder is a condition in which people go back and forth between periods of a very good or irritable mood and depression. The "mood swings" between mania and depression can be very quick” – அப்படீன்னு விளக்கம் சொல்றாங்க.
 
15-லேர்ந்து 25-வயசுக்குள்ள இருக்கிறவங்களுக்கு இந்த வியாதி வருமாம். யாருக்கு வரும், எப்படி வரும் அப்படீன்றது எல்லாம் இன்னும் விஞ்ஞானிங்களுக்கே தெரியலையாம். ஆனா ஏற்கனவே இந்த வியாதி இருந்தவங்க, இருக்கிறவங்களோட சொந்தக்காரங்களுக்கு வருவதற்கு வாய்ப்பு அதிகமாம். என்னாங்கடா இது, பட விமரிசனம் அப்படீன்னுட்டு வியாதி பத்தி கிளாஸ் எடுக்குறானுங்களேன்னு அலறாதீங்க பாஸூ. ‘3’ படம் பாத்துட்டு வந்தா நீங்களும் மூணு நாளைக்கு இப்படி தான் பொலம்புற மாதிரி ஆகிடும்.
 
மூணு வரிக்கு மேலே கதை இல்லை அப்படீன்றதை தான் சிம்பாலிக்கா ‘மூணு’ அப்படீன்னு டைட்டில் வெச்சிருக்காங்க போல! இடைவேளைக்கு முன்பு, இடைவேளைக்கு பின்பு அப்படீன்னு ரெண்டு பார்ட்டா படத்தை பிரிச்சுக்கலாம். (எல்லா படத்திலேயும் அந்தக் கண்ராவி தானே!)
 
இடைவேளிக்கு முன்னாடி படம் ஜெட் வேகத்திலே மூன் அதான் நிலாவுக்கு செல்லும் வேகம். ஆஹா.. அருமையா இருக்கேன்னு ஆர்வமா உட்காந்தீங்கன்னா, இடைவேளைக்கு பின்னாடி.. ஜவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வு.
 
மொத்தமே 13 கேரக்டர்கள் தான் படத்திலே! அதனால தானோ என்னவோ, கேரக்டெர் செலக்‌ஷன் அபாரம். அந்த டாக்டர் கேரக்டர் மட்டும் யாரோ ஃபைனான்ஸியரோட தூரத்து சொந்தமா இருக்கும் போல! அதிலேயும் நல்ல ஆளா பார்த்து நடிக்க வெச்சிருந்தா அருமையா இருந்திருக்கும்.பிரபு, சிவகார்த்திகேயன், பானுப்ரியா, ரோகிணி, ‘படவா’ கோபி, தனுஷ் நண்பன் கேரக்டர், ஸ்ருதியோட தங்கச்சி அப்படீன்னு எல்லாருமே நடிப்பிலே அருமை!
 
அதிலேயும் இடைவேளைக்குப் பிறகு தனுஷ், ஸ்ருதி ஹாசன் ரெண்டு பேரும் பின்னிப் பெடலெடுத்துடுறாங்க. ஸ்ருதிஹாசனோட வளர்ப்புப் பிள்ளையா வர்ற அந்த நாயும் அருமையா நடிச்சிருக்கு – ரெண்டு மூணு காட்சிகளில் வந்தாலும். ஒருவேளை அது மூணு சீன்லே மட்டும் வரதினால தான் ‘மூணு’ன்னு பேரு வெச்சிருப்பாய்ங்களோ?!
 
சந்தானம், விவேக் எல்லாம் கொஞ்சம் உஷார் ஆக வேண்டிய தருணம் இது. சத்தமே இல்லாமல் சிவகார்த்திகேயன் மெல்ல மெல்ல அவர்கள் இடங்களுக்கு நகருகிறார். ‘ஸ்பாண்டேனியஸ்’ கமெண்ட், நல்ல ரீயாக்‌ஷன், அடடே.. அந்த சின்ன தொப்பையை வைத்துக் கொண்டு டான்ஸ் கூட ஆட வருகிறதே! சிவகார்த்திகேயன் – பேசாமல் மெரினாவில் நடிக்க ஒத்துக் கொள்ளாமல் இதை முதல் படமாக வைத்திருந்திருக்கலாம்.
 
ஓவர் நைட்டில் உலகப் புகழ் பெற்ற ‘கொலவெறி’ பாடல் படமாக்கப்பட்ட விதம் சுமார் தான்! இந்தப் பாடலுக்காக படத்துக்கு போக வேண்டும் என்று ஆசைப்படுகிறவர்கள் படம் ஆரம்பித்து ஒரு மணி நேரம் நாற்பது நிமிடங்கள் கழித்து தியேட்டருக்குச் செல்லுதல் நலம்.இசையமைப்பாளர் அனிருத் பல இடங்களில் பின்னணி இசையிலும் கலக்கியிருக்கிறார். 
 
என்ன தான் ‘சைக்கோ’ கேரக்டர்கள் தனுஷுக்கு பழக்கமாக இருந்திருந்தாலும் இந்தப் படத்தில் பள்ளிக்கூட மாணவன், புதுத் திருமணக் கணவன், Bi-polar disorder நோயாளி என்று மூன்று விதத்திலும் வித்தியாசத்தைக் காட்டியிருக்கிறார் தனுஷ். தேசிய விருது பெற்ற நடிகர் என்பதை பல இடங்களில் நிரூபித்திருக்கிறார். சபாஷ் தனுஷ்!
 
ஸ்ருதிஹாசன் அமெரிக்கா செல்லப் போவதாகச் சொல்லி விட்டு போகும் நாளன்று இரவு கடற்கரையில் தனுஷ் தன்னுடைய நண்பனிடம் பேசும் போது, “இவ சொல்லிட்டுப் போறா.. அவன் (சிவகார்த்திகேயன்) என் கிட்ட சொல்லமலேயே சிங்கப்பூர் போயிட்டாண்டா” என்று பேசுகிறார். ஆனால் மறுநாள் காலையில் மொட்டை மாடியில் அவர் அருகில் படுத்து எழுந்திருந்து செல்கிறார் சிவகார்த்திகேயன். (அது தான் சிவகார்த்திகேயன் படத்தில் கடைசியாக தலை காட்டும் காட்சி!)
 
மற்றபடி எடிட்டிங்கிலிருந்து அனைவரும் ஓரளவு மெனக்கெட்டிருக்கிறார்கள்.
 
டைரக்டர் ஐஸ்வர்யாகிட்ட செல்வராகவன் பாணி அதிகமாத் தெரியுது. இன்னும் கொஞ்சம் ஹோம் வொர்க் பண்ணிருந்திருக்கலாம். ‘கொலவெறி’ ஹிட் படத்தை தூக்கி நிறுத்திடும்ன்னு கொஞ்சம் அலட்சியமா இருந்திருப்பாங்களோ ?
 
இரண்டாவது பாதியை இன்னும் கொஞ்சம் ட்ரிம் செய்திருந்தால் ரசிக்கத்தக்கதாக இருந்திருக்கும். ஆனாலும் ஒரு வித்தியாசமான படத்தைக் கொடுத்ததற்காக ஒட்டு மொத்த டீமுக்கும் பாராட்டுதல்களைத் தெரிவிக்கலாம் !

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : March 30, 2012 @ 12:17 pm