தோழியாகவே இருந்துவிடேன்

நீ என்ன
என்பதில் இன்னமும்
நிலவுகிறது எனக்குள்
ஒரு குழப்பம்…

மூடியே இருக்கிறாய்…
பலவந்தமாய் உன் இதழ்
பிரிக்க எனக்கு விருப்பமில்லை…

தானாய் விரிந்து விட‌
உனக்கும் வரவில்லை…

இப்படிச் செதுக்கலாம் உன்னையென‌
நான் யத்தனிக்கையில்
எப்படியாயினும் அங்கொன்றும்
இங்கொன்றுமாய் சிதைந்தே
போகலாம்…

நல்லவேளை
என்னிடமிருந்த முத்து மணிகள்
இன்னமும் என்னிடத்திலேயே…

தோழியாகவே இருந்துவிடேன்
நாம் செல்லும் சாலை
எங்காவது பிரிகிறதா பார்ப்போம்.

தொடர்புடைய படைப்புகள் :

One thought on “தோழியாகவே இருந்துவிடேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : July 22, 2010 @ 3:57 pm