சென்னை விமான நிலையம்

இன்றைக்கு சென்னை விமான நிலையத்தை உபயோகிக்கும் பயணிகளின் எண்ணிக்கை இந்தியாவிலேயே மூன்றாவதாக இருக்கிறது.  அதேபோல் சரக்குகளைக் கையாளுவதில் மும்பைக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருக்கிறது. எதிர்காலத்தை முன்னிட்டு, தற்போதுள்ள விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டு அருகிலுள்ள கிராமங்களிலுள்ள நிலங்களை எடுத்துக் கொள்ள முயற்சிசெய்யப்பட்டபோது பலத்த எதிர்ப்புக் காணப்பட்டது.  அதன் காரணமாக அந்த முயற்சி கைவிடப்பட்டு 2007-ல் சர்வ கட்சிக் கூட்டம் முதலமைச்சர் தலைமையில்  நடந்தது.  அதில் ஸ்ரீ பெரும்புதூரில் ஒரு புதிய விமான நிலையம் (Green field Airport) அமைக்கலாமென்றும்,  அதற்கு எல்லாக் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டுமென்றும் தீர்மானிக்கப் பட்டது.  அதற்கு எல்லாக் கட்சிகளும் உடன் பட்டன.

தற்போது அதிமுக, பாமக கட்சிகள் புது விமானதளம்  அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து போராடப் போவதாக அறிவித்துள்ளது.  இதில் எந்த விதத்தில் சரி யென்று விளங்கவில்லை.  புதிய விமான நிலையம் அமைக்க வேண்டுமென்றால் பெரிய அளவில் நில ஆர்ஜிதம் செய்தாக வேண்டும்.  அதுவும் சென்னைக்கு அருகில் இருக்க வேண்டும்.  அங்கு விளை நிலம் இல்லாது  வேறு என்ன நிலம் இருக்கும்?  நிலங்களை ஆர்ஜிதம் செய்யாது எப்படி புதிய விமான தளம் அமைக்க முடியும்? இது அதிமுக, பாமக கட்சிகளுக்குத் தெரியாதா? தெரியும்; தெரிந்தேதான் போராட்டம்!

அதிமுக  ஆட்சியில் இருந்தபோது தமிழக அரசிற்கு புதிய தலைமைச் செயலகம் கட்ட முடிவு செய்தபோது அதற்கு திமுக எதிர்ப்புத் தெரிவித்து எல்லாவிதமான இடையூறுகளையும் செய்தது.  தற்போதுள்ள ராணிமேரி கல்லூரி வளாகத்தில் கல்லூரியை இடித்துவிட்டு அங்கே தலைமைச் செயலகம் கட்ட முடிவு செய்தது அரசு.  அதைக் கட்டவிடாமல் செய்ததில் தற்போதுள்ள துணை முதலமைச்சருக்குப் பெரும் பங்கு உண்டு.  அங்கு தலைமைச் செயலகம் கட்டி இருந்தால்  கடற்கரை  எதிரே  மிக அழகாக இருந்திருக்கும்.  ஓமந்தூரார் தோட்டத்தைவிட  அது மிகவும் பொருத்தமான இடம். இயற்கை அழகுடன் சேர்ந்து மனதைக் கவருவதாக இருந்திருக்கும்.  ஆனால் அரசியல்  விளையாட்டு அப்படிச் செய்யவிடவில்லை.

தற்பொழுது  புதிய விமானதளம் அமைக்க எதிர்ப்புக் கிளம்பி இருப்பதும் இதே ரகம்தான்.

விதையொன்ருறு விளைத்தால் சுரையொன்றா முளைக்கும்?

எதிர்க்கட்சிகள் எதிரிக் கட்சிகளாக செயல் படுவதை முதலில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

தொடர்புடைய படைப்புகள் :

One thought on “சென்னை விமான நிலையம்

  • December 8, 2010 at 10:06 am
    Permalink

    egamanathaha ullathu

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : August 21, 2010 @ 8:57 am