அம்பானி பற்றிய தங்களின் புத்தகம் சிறப்பாக உள்ளது. யாவரும் எளிதிற்புரிந்து கொள்ளும் வண்ணமும் சுவாரசியமாகவும் எழுதியுள்ளீர்கள். புத்தகத்தின் சிறப்பு அம்சமாக நான் நினைப்பது - அவரது சொந்த வாழ்க்கையைப் பற்றித் தேவையான இடங்களில் தேவையான செய்தி மட்டும் தந்திருப்பது. நான் படித்த ஓரிரு புத்தகங்களில் சொந்த வாழ்க்கை சம்பந்தமான தேவையற்ற விபரங்களைத் தந்திருப்பார்கள் (உதாரணம்: அகிரா குரோசேவா புத்தகம்). சனிக்கிழமையன்றே முழுப் புத்தகத்தையும் படித்து நிறைவு செய்து விட்டேன் - சுவாரசியமாக இருந்ததால். அம்பானி பற்றியும் ரிலையன்ஸ் பற்றியும் ஒன்றுமே தெரிந்திராத எனக்கு ஒரே நாளில் நிறையத் தெரிந்து கொள்ள முடிந்தது.
"ஒரு அழுத்தம்" என்பதற்குப் பதிலாக ஓர் அழுத்தம் என இருந்திருக்கலாம். (பல இடங்களில் "ஓர்" பயன்படுத்தப்படவில்லை). சமீப காலமாகவே எல்லாப் பத்திரிக்கை/இதழ்களிலும் "ஓர்"-ன் பயன்பாடு குறைந்து வருவதாக எண்ணுகிறேன். "சொதப்பல்" எனும் வார்த்தையை எழுத்தில் தரலாமா? ஒரு சில இடங்களில் ஆங்கில வார்த்தையின் பயன்பாட்டைத் தவிர்த்திருக்கலாம் எனத் தோன்றியது (பிசினஸ்). |