|
|
|
நாள் : 6/12/2004 11:38:59 PM, எஸ்.ராமகிருஷ்ணன்
|
| |
| |
கல்லில் ஊரும் காலம்
சென்றவாரம் மதுரையைச் சுற்றியுள்ள சமணப்படுகைகளைக் காண்பதற்காக மலையேற்றம் மேற்கொண்டிருந்தேன். முன்னதாக பதினைந்து வருடங்களின் முன்பு மதுரைப் பல்கலைகழகத்தில் படித்துக் கொண்டிருந்த நாட்களில் நாகமலை, ஆனை மலையைச் சுற்றிலும் உள்ள சமணப்படுகைகளைத் தேடி அலைந்திருக்கிறேன். இரண்டு மாதங்களுக்கு முன்பாக சில சமணப்படுகைகள் வெடிவைத்து இடிந்து போனதாக தகவல் அறிந்ததிலிருந்து திரும்பவும் அதைக் காணவேண்டும் போலிருந்தது. அதற்காகவே மதுரைக்குப் போயிருந்தேன்.
மதுரைக்கு காலையில் வந்த சேர்ந்தவுடன் சீவகசிந்தாமணி அரங்கேற்றியதாகச் சொல்லப்படும் பெருமாள் மலையில் ஏறி வரலாம் எனச் சொன்னார் கவிஞர் வெங்கடேசன். அவர் திருப்பரங்குன்றவாசி. மதுரையைப் பற்றி ஏராளமாக தகவல் வைத்திருப்பவர், இருவரும் பைக்கில் புறப்பட்டோம்.
பெருமாள்மலை மலையடிவாரத்தில் நிறுத்திவிட்டு மலையைப் பார்த்தபோது உக்கிரமான வெயில் மலையின் மீது ஏறிக்கொண்டிருந்தது. பெருமாள்மலையை மத்திய தொல்பொருள் ஆய்வுநிறுவனம் கைவசப்படுத்தியுள்ளது. அதற்காக ஒரு அறிவிப்புபலகை நட்டிருக்கிறது. ஆனால் காவலாளி அங்கேயில்லை. மலையின்மீது ஏறியதும் சிறிய புடவு போலத் தெரிந்தது. மலையின்மீது ஆடுமேய்க்கும் சிறுவன் அதனுள்ளே நுழைந்து போகும்படி சொன்னான். உள்ளே நுழைந்தால் குளிர்சாதனம் செய்துவைத்தது போல அப்படியொரு குளிர்ச்சி. எங்கிருந்தோ சுரந்து காற்று குபுகுபுவென கடந்து போகிறது.
சமணர்களின் படுக்கைகள் வரிசையாக கல்லில் வெட்டப்பட்டிருக்கின்றன. அதில் மாணவர்களுக்கான படுக்கை ஒரு வரிசையிலும், ஆசிரியருக்கு மற்றொரு புறமுமாகயிருக்கிறது. ஆசிரியரின் படுக்கையின் அருகே சுனையிருக்கிறது, அதனால் தண்ணீர் கசிந்து கசிந்து கல்லில் எப்போதும் ஒரு குளிர்ச்சியிருக்கிறது. சாப்பிடுவதற்காகக் கொண்டுபோயிருந்த கொய்யாப்பழத்தை அங்கிருந்த தீர்த்தங்கரர் சிற்பத்தின் முன்வைத்துவிட்டு மலையிலிருந்து வெயில் தாரை தாரையாகப் பொழிந்து கொண்டிருப்பதை பார்த்துக்கொண்டிருந்தோம். குகைக்குள் வெயிலே இல்லை.
தமிழின் வளர்ச்சிக்கும் கல்விநெறிக்கும் சான்றாகயிருந்தது அம்மலை. ஏதோ பெயர்தெரியாத மலையின் குகைகளில் தான் தமிழின் ஆதிகவிகள் வாழ்ந்திருக்கிறார்கள். இங்கிருந்து எவ்வளவு து¡ரம் நாம் வளர்ந்திருக்கிறோம் என்பது ஆச்சரியமாகயிருந்தது.
தமிழ்மொழியின் வளர்ச்சியில் குறிப்பாக இலக்கணவளர்ச்சியில் சமணர்களுக்கு பெரும்பங்கிருக்கிறது. ஒன்பதாம் நு¡ற்றாண்டுவரை சமணத்தின் தாக்கம் தமிழகத்தில் அதிகமாகயிருந்திருக்கிறது. தேவாரப் பதிகத்தில் உள்ள ஒவ்வொரு ஒன்பதாவது பாடலும் எப்படி சமணர்கள் தண்டிக்கப்பட்டார்கள், கழுவேற்றபட்டார்கள் என்ற கோபத்தையே வெளிப்படுத்துகிறது.
துறவிகள் காவியுடை உடுத்தும் வழக்கத்தை முதலில் உருவாக்கியது பெளத்தம். அதற்குப் பெயர் சீவரம். அதாவது சிவப்பு உடை. பெளத்தம் தான் தலையை மழித்துக்கொள்ளுவதை துறவியின் கோலமாக மாற்றியது. அதற்கு முன்பு வேறு எந்த இலக்கியத்திலும் மொட்டையடிப்பதைப் பற்றி குறிப்புகளில்லை. இப்படி மொட்டையடித்துக் கொள்வதற்குத் தேவையான மழிக்கத்தியை பெளத்தத் துறவிகள் தங்களோடு எப்போதும் கூடவே வைத்திருந்தார்கள். இது போலவே அரசமரத்தை வழிபடுவதும் பெளத்த சுவடுதான். அரசமரம் தான் போதிமரம்.
சமணமதம் கிறிஸ்துவுக்கு இரண்டு நு¡ற்றாண்டுக்கு முன்னதாகவே தமிழ்நாட்டிற்கு வந்துள்ளது. சமணமதத்துறவிகள் ஆடையை துறந்தவர்கள், அதனால் திகம்பரர் என்று பெயர், இவர்கள் மலைக்குகைகளில் தங்கி வாழ்ந்தனர். தங்கும் குகைளில் படுக்கை போலச் சமதளமாக தரையில் செதுக்கிகொண்டார்கள். அவர்கள் வாழ்ந்த மலைபகுதி தான் சமணப்படுகை. ஒவ்வொரு சமணப்படுகையிலும் ஒரு சுனையிருக்கும். அது போலவே மழைத் தண்ணீர் தேங்கிக் கொள்வதற்காக சிறிய குழி வெட்டியிருப்பார்கள். உண்ணா நோன்பு காலத்தில் சேகரிக்கபட்ட மழைதண்ணீரை மட்டுமே அருந்துவார்கள். இது போன்ற குகைதளங்கள் மதுரையைச் சுற்றிலுமிருக்கின்றன. குறிப்பாக திருப்பரங்குன்றமலையின் பின்பக்கம். மதுரைபல்கலைகழகத்தின் எதிரிலுள்ள நாகமலை. மேலு¡ர் பகுதியில் உள்ள ஆனைமலை, திருவாதவூரில் என எட்டு சமணமலைகள் உள்ளன. அதில் புளியங்குளம் என்ற இடத்தில் 50 படுக்கைகள் கொண்ட குகையிருக்கிறது.
சமணமதம் கல்வியை முக்கியபடுத்தியது. கல்வி நிறுவனங்களுக்கு பள்ளி என்ற பெயரே சமணமதம் தந்தது தான். காரணம் குகையில் சமணத்துறவிகளோடு தங்கி மாணவர்கள் படித்ததால் இப்பெயர் ஏற்பட்டது, கல்விக்கான தெய்வமாக வாக்தேவியை உருவாக்கியது சமணம் . அது தான் சரஸ்வதியின் முன்னோடி. அது போலவே சரஸ்வதி தேவிக்கு ஆடையாக இருக்கும் வெள்ளையாடை கூட சமண மதத்தில் உள்ள பெண்துறவிகள் உடுத்தும் வெள்ளுடையிலிருந்தே உருவாகியிருக்க கூடும் என்கிறார்கள். அதற்கு சுவேதாம்பரம் என்று பெயர். காந்திஜி தனது உண்ணாநோன்பை சமணமதத்திடமிருந்து தான் கற்றுக்கொண்டதாக குறிப்பிடுகிறார்.
பெருமாள்மலையை விட்டு மதியம் இரண்டுமணிக்கு இறங்கி அருகாமையிலிருந்த டீக்கடையில் அதிசரமும் டீயும் சாப்பிட்டுவிட்டு கீழக்குயில்குடிமலைக்குப் பயணமானோம். சமணப் படுகைகளில் மிகவும் பார்க்கவேண்டியது கழுகுமலையும் மதுரையை அடுத்துள்ள கீழக்குயில்குடி மலையும் தான். அதில் கீழக்குயில்குடி மலை மதுரையிலிருந்து பதினைந்து கீலோமீட்டர் து¡ரத்தில் நாகமலை புதுக்கோட்டைக்கு அருகிலிருக்கிறது. மிகச்சிறிய ஊர். அங்குள்ள மலையின் தென்மேற்கில் செட்டிபுடவு என்று ஒரு இடமுள்ளது . அங்கே சமணத்தீர்த்தங்கர்களின் திருவுருவங்கள் இருக்கின்றன. சமணதெய்வங்கள் என்று அறியாமல் காது வளர்த்து பத்மாசன கோலத்தில் இருப்பதால் அதைச் செட்டியார் என்று அழைத்திருக்கிறார்கள் கிராம மக்கள்.
நீள்செவி. அனல்நாக்கு சூழ்ந்த ஒளிவட்டம். சாமரம் ஏந்திய இயக்கியர்கள். அசோகமரத்தின் கீழ் அமர்ந்த கோலம். தீர்த்தங்கர்களின் சிற்பங்களிலே மிக அழகானது இந்தச் சிற்பம். இங்குள்ள பெண்சிற்பம் சிங்கத்தின் மீது அமர்ந்தபடி யானை மீது வரும் அரக்கனை எதிர்த்துப் போரிடுகிறது. ஒருவகையில் மகாபலிபுரத்தில் உள்ள போர்களச் சிற்பத்தை நினைவுபடுத்துவதாக உள்ளது. கொற்றாகிரியா என்பது அந்தப் பெண்தெய்வத்தின் பெயர் சமணப் பெண்தெய்வ வடிவங்களில் அபூர்வமானது இந்தச் சிற்பம்.
வடக்காக மலையின் மீது ஏறுவதற்கு கல்லில் படிவெட்டி வைத்திருக்கிறார்கள். பாதி து¡ரத்திற்குப் பிறகு பாறைகளைப் பிடித்துக்கொண்டு தான் ஏறிப்போக வேண்டும். அரை மணிநேரம் ஏறினால் மலையின் ஒவ்வொரு தளமாக பார்க்கலாம். மலையின் மீது இடிந்த நிலையில் ஒரு கற்கோவில் உள்ளது. அதன் அருகே ஒன்பதாம் நு¡ற்றாண்டில் மாணவர்கள் கல்விகற்பதற்காக அமைக்கபட்ட மாதேவி பெரும்பள்ளி என்ற இடமிருக்கிறது. அதனருகே 50 அடி நீளமுள்ள பள்ளமும், வற்றாத சுனையுமுள்ளது. அங்கும் எட்டு தீர்த்தங்கரர்களின் சிற்பம் கல்லில் செதுக்கபட்டுள்ளது. இந்த மலையில் இருந்து தீப்பந்தம் ஏற்றிக்காட்டினால் அது சரியாக திருப்பரங்குன்றமலையின் மீதுள்ள குகையில் இருந்து பார்த்தால் தெரிவதாக அமைக்கப்பட்டிருக்கிறது.
மலைமீது ஏறிச் சுற்றியபிறகு ஆடு உறிச்சான்பாறை என்ற உயரமான குன்றின் மீது ஏறி உட்கார்ந்து கொண்டோம். துணைக்கு உள்ளு¡ர்வாசிகள் இருவர் வந்துவிட்டார்கள். அவர்களுக்கு இதைப் பார்ப்பதற்காக எதற்காக வந்திருக்கிறார்கள் என்று கேலியாக இருந்தது, மெல்ல இருட்டத் துவங்கியது. தொலைவில் மதுரை வீழ்ந்துகிடந்தது. வெளிச்சம் விட்டுவிட்டு ஒளிரத்துவங்கியது. நாங்கள் உட்கார்ந்திருந்த இடம் மெதுவாக இருளுக்குள் மறையத்துவங்கி அருகாமையில் இருந்தவர்கள் கூட தெரியாதபடி இருள்கூடியது. ஆனால் தொலைவில் இப்போது வெளிச்சம் மின்மினி பறப்பது போல ஊர்ந்து பறந்து கொண்டிருந்தது.
தொலைவிலிருந்து பார்க்கும் போது மதுரையின் அழகு மிகவசீகரமாகயிருக்கிறது. நாங்கள் ஏதேதோ பேசிக்கொண்டிருந்தோம். சரக்குரயில் ஒன்று புறப்பட்டு ஆண்டிபட்டி நோக்கி போய்க்கொண்டிருந்தது. மண்புழு ஊர்ந்து போவது போல மிகமெதுவாக அக்காட்சி நகர்ந்து கொண்டிருந்தது. மலையின் மீது விடிகாலை வரையிருந்தோம். மலையின் வெட்டவெளியில் பாறையின் மீது படுத்தபடியே ஏதோ நினைவில் ஊறிக்கிடந்தோம். பின்இரவில் வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாக நிறம் மாறிக்கொண்டிருந்தது. தொலைவில் மீனாட்சியம்மன் கோவில் கோபுரத்தின் விளக்கு வெளிச்சம் துல்லியமாகத் தெரிந்தது.
வெளிர்ஊதா நிறத்தில் வெளிச்சம் கசியத்துவங்கிய விடிகாலையில் கீழே இறங்கினேன். மலையின் பின்புறத்தில் வெடிவைத்து தகர்க்கபட்டு சிதைந்த நிலையில் இருந்த படுகையின் தோற்றம் இப்போது துல்லியமாக தெரிந்தது. அனுமதியின்றி நடைபெறுவதாகவும் அதைத் தடுக்கவேண்டும் என்று ஆவேசமாக சொன்னார்கள் கிராமவாசிகள். காலம் காப்பாற்றி வைத்திருக்கும் மனசாட்சி தான் இது போன்ற சிற்பங்கள், படுகைகள். இன்று குவாரியில் கல்உடைப்பது போல உடைத்து நொறுக்கபடுவது வேதனையாகதானிருக்கிறது, பைக்கில் சாலையில் திரும்பிவரும் போது ஏதோவொரு காலத்திலிருந்து திரும்பிவருவது போலிருந்தது.
மதுரை நகருக்குள் நுழைந்தபோது காலை விடிந்து கொண்டிருந்தது. ஒருவயதானவரும் பத்துவயது சிறுவனும் புதுப்படத்திற்கு ஆள்உயர போஸ்டர் ஒட்டிக்கொண்டிருந்தார்கள். ரயிலில் வரும் மந்திரியை வரவேற்க காலையிலே கரைவேஷ்டி சகிதமாக குடிமயக்கம் கலையாத கண்களுடன் டாடாசுமோவில் காத்துகிடக்கிறார்கள்கட்சிகாரர்கள். ஆப்பிள் பழங்களுக்கு காஷ்மீர் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு, ஏதோவொரு ஆயில்போட்டு சிவப்புநிறத்தை அதிகபடுத்திக் கொண்டிருக்கிறான் பழக்கடைக்காரன். டீக்கடையின் பாய்லர் திருநீறு பூசிப் பளபளக்கிறது.
படியவாறிய தலையுடன் வெளுத்த வேஷ்டி, சட்டையணிந்து கொண்டு வெளியூர்பயணிகளை ஏமாற்றி லாட்ஜிற்கு ஆள்பிடித்துவருவதற்காக கண்ணாடியில் தலைசீவிக்கொண்டிருக்கிறார்கள் இருவர். பூமார்க்கெட்டிற்கு மல்லிகைப்பூ கொண்டுவந்து போட்ட கையோடு டாஸ்மார்க் ஒயின்ஷாப் திறக்க நேரமிருக்கிறது எனஅலுப்போடு காத்திருக்கிறான் ஒரு சிறுவியாபாரி. ஈரம் உலராத கூந்தலுடன் கோவிலை நோக்கி பிரார்த்தனையைச் சுமந்தபடி கையில் எலுமிச்சம்பழத்துடன் நடந்துபோகின்றாள் மத்தியவயது பெண். ரிக்ஷாவில் உறங்கிக்கொண்டிருக்கிறான் ஒரு வயசாளி. ஸ்டார் சலு¡னில் சாம்பிராணி புகை நடுவில் வாடிவாடி நாட்டுக்கட்டை பாடல் உரத்துகேட்கிறது. மதுரை மாறவேயில்லை. கண்ணகி மதுரையை எரித்தாளா, இல்லையா என்று சந்தேகமாகத் தானிருக்கிறது.
பத்துமைல் தொலைவில் காலத்தை மீறி தமிழின் அற்புதக்காட்சிகள் ஒளிந்து கொண்டிருக்கின்றன. பார்ப்பதற்கு தான் ஆளேயில்லை.
|
|
| |
|
|
மதிப்பு : 3.9
|
மதிப்பீடு செய்ய :
|  |
| |
| |
| மறுமொழி |
kannan
6/13/2004 , 7:35:07 PM
|
Well said, nice article |
| |
|
அ அ இளந்திரையன்
6/14/2004 , 8:57:34 AM
|
அற்புதமான் கட்டுரை!! தங்கள் மொழி நடை வசகர்களைக் காந்தம் போன்று கவரும் தன்மை கொண்டுள்ளது!! |
| |
|
பாலாஜி
6/14/2004 , 4:55:06 PM
|
படிக்கும்போதே நானும் கூட வருவது போன்ற பிரமை. நன்றி. |
| |
|
usha
6/17/2004 , 2:43:27 AM
|
test |
| |
|
usha
6/17/2004 , 2:51:14 AM
|
மனிதர்களைப் போலதான் இடங்களும்! ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு முகம். அது நம் மனதில் எழுப்பும் உணர்வுகளும் வித்தியாசமானவை. உங்கள் எழுத்து, படிப்பவர்களையும் உடன் அழைத்து செல்கிறது என்றால் மிகையில்லை.
|
| |
|
தங்கமணி
6/17/2004 , 10:44:52 AM
|
நல்ல பதிவு. சரஸ்வதி கொற்றவை இவையெல்லாம் சமண தெய்வங்கள் என்பது நல்ல தகவல். தமிழ்நாட்டின் வரலாறு பற்றிய நல்ல நூட்களை குறிப்பிட முடியுமா? |
| |
|
தங்கமணி
6/17/2004 , 10:44:56 AM
|
நல்ல பதிவு. சரஸ்வதி கொற்றவை இவையெல்லாம் சமண தெய்வங்கள் என்பது நல்ல தகவல். தமிழ்நாட்டின் வரலாறு பற்றிய நல்ல நூட்களை குறிப்பிட முடியுமா? |
| |
|
இராதாகிருஷ்ணன்
6/18/2004 , 2:32:30 PM
|
எவ்வளவு பழமையான, முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள்! போற்றிப் பாதுகாக்கத் தெரியாவிட்டாலும், அழிக்காமலாவது இருக்கலாமல்லவா இம்மூடர்கள். கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை? |
| |
|
shankar
6/19/2004 , 2:06:04 AM
|
"பத்துமைல் தொலைவில் காலத்தை மீறி தமிழின் அற்புதக்காட்சிகள் ஒளிந்து கொண்டிருக்கின்றன. பார்ப்பதற்கு தான் ஆளேயில்லை." - மிகவும் லயித்துப் படித்தேன். சிறப்பாக இருக்கிறது ராமகிருஷ்ணன். |
| |
|
Thirumalai
7/22/2004 , 7:17:45 PM
|
ÀòШÁø ¦¾¡¨ÄÅ¢ø ¸¡Äò¨¾ Á£È¢Â «üÒ¾ì ¸¡ðº¢¸û ´Ç¢óÐ ¦¸¡ñÊÕ츢ýÈÉ, À¡÷ôÀ¾üÌò¾¡ý ¬§Ç¢ø¨Ä ±É ÅÕó¾¢Â¢Õ츢ȣ÷¸û.
þô¦À¡ØÐ ±ý ¦Àü§È¡÷¸û ÌÊ¢ÕìÌõ Å£Î, ¸£ÆìÌ¢øÌÊ º¡¨Ä¢ø, ÌýüÈ¢üÌ ¦ÅÌ «Õ¸¢ø¾¡ý, ´Õ ¸¢§Ä¡Á£ð¼÷ àÃò¾¢üÌû¾¡ý «¨ÁóÐûÇÐ, þÕôÀ¢Ûõ, ¿¡ý ´Õ Ó¨È «ó¾ Á¨ÄìÌî ¦ºýÚ À¡óò¾§¾Â¢ø¨Ä. «Õ¸¡¨Á¢ø ¯ûÇ Àø¸¨Äì¸Æ¸ò¾¢ø À¾¢§É¡Õ ÅÕ¼í¸û À½¢ Òâó¾¢Õ츢ý§Èý, ´Õ Ó¨È Ü¼ô §À¡öô À¡÷ì¸ ºó¾÷ôÀõ ¸¢ðʧ¾Â¢ø¨Ä. «í§¸ ºÁ½ô ÀΨ¸¸û þÕìÌõ ¾¸Å§Ä ¦ÅÌ ¿¡ð¸ÙôÀ¢ó¾¡ý ¦¾Ã¢ó¾Ð. þýÛõ, ¿¡¸ÁÄô ÒÐ째¡ð¨¼Â¢ø ź¢ìÌõ, ¬Â¢Ãì¸½ì¸¡É Áì¸Ç¢ø ´Õ º¢Äáŧ¾¡ «øÄÐ «Õ¸¢ø ¯ûÇ Àø¸¨Äì¸Æ¸ò¾¢ø ÅÃÄ¡Ú, ¾Á¢ú ÀÊìÌõ Á¡½Å÷¸Ç¢ø ±Å§Ã¡, «ó¾ Á¨Ä¢ý Á£Ð ²È¢ô À¡÷ò¾¢ÕôÀ¡÷¸Ç¡ ±ýÀÐ ºó§¾¸õ¾¡ý. §ÁÖõ «ó¾ ÌýÈ¢ý Á£Ð ºÁ½ô ÀΨ¸¸û þÕôÀ¨¾Ôõ, «¾ý º¢ÈôÒ¸¨ÇÔõ Å¢ÇìÌõ Ũ¸Â¢ø, Àø¸¨Äì¸Æ¸õ ¦ºøÖõ Ó츢 º¡¨Ä¢ø þÕóÐ ¸£ÆìÌ¢øÌÊ Å¢ÄìÌ À¢Ã¢Ôõ þ¼ò¾¢§Ä¡ «øÄÐ, À¡÷¨Å¢ø ÀÎõÀÊÂ¡É §ÅÚ Ó츢 þ¼í¸Ç¢§Ä¡, ¾¸Åø ÀĨ¸ ±Ð×§Á þø¨Ä. «øÄÐ ±ý ¸ñ¸ÙìÌô À¼Å¢ø¨Ä¡ ±ýÀÐ ¦¾Ã¢ÂÅ¢ø¨Ä. «Îò¾Ó¨È °ÕìÌî ¦ºøÖõ ¦À¡ØÐ, Å£ðÊÄ¢ÕóÐ, ÜôÀ¢Îõ ¦¾¡¨ÄÅ¢ÖûÇ ºÁ½ô ÀΨ¸¨Â, «Åº¢Âõ À¡÷ì¸ §ÅñÎõ. ¯í¸ÇÐ ¦ºÈ¢Å¡Éì ¸ðΨÃìÌ Á¢ì¸ ¿ýÈ¢. ¦ÀÕÁ¡û Á¨Ä ±ýÀÐ ±í¸¢Õ츢ÈÐ?
«ýÒ¼ý º,¾¢ÕÁ¨Ä |
| |
|
Banukumar
8/2/2004 , 6:39:26 AM
|
ட்டுரை மிக நல்ல வரைவு.தங்களுடன் சென்றதுபோல் இருந்தது. சமணத்தின் மேன்மையை நடு¿¢¨Äமையாக உரைத்தது மிக நன்று.
அன்புடன்,
இரா.பானுகுமார் சென்னை. |
| |
|
|
|
| (You may need to disable your pop-up blocking
software in order to post a comment.) |
|
|