தீபாவளி மலர் 2005
 
கட்டுரைகள்
  தொடரும் கேள்விகள்
(அருணா ஸ்ரீனிவாசன்)
  கிஷோர் குமார்
(அப்துல் கலாம் ஆசாத்)
  மலேசியத் தமிழ்க் கட்டுரை இலக்கியம்
(ரெ. கார்த்திகேசு)
  மடியில் இரசாயன குண்டு
(குழலி)
  திருமணமும்,6-ம் வீடும்
(ஜோதிடரத்னா S. சந்திரசேகரன்)
  மைசூர் சௌடையா
('லலிதா')
 
சிறுகதைகள்
  கவிதைத் தொகுப்பு
(சேவியர்)
  தாத்தாச்சாரியார் கோட்
(என். சொக்கன்)
  'டிரீம்' தரிகிட
(ஜே.எஸ்.ராகவன்)
  திருப்பம்
(சித்ரன்)
  காரணம்
(விச்சு)
  ம்.ம்...ஹூஹூம்!
(ராமசந்திரன் உஷா)
  காதல் தூதுவன்
(சரசுராம்)
  குலம் தரும்
(ஷைலஜா)
  அவள், அவன், அவர்கள்
(மீனாக்ஸ்)
  தேவர்களும் கால்களும்
(குழலி)
  நிதானம்
(கிருஷ்ணா வெங்கட்ராமா)
 
கவிதைகள்
  நாட்குறிப்பு
(சேவியர்)
  காலக்கைத்துணை
(பிச்சினிக்காடு இளங்கோ)
 
பேட்டி
  எழுத்தாளர் பி.ஏ.கே வுடன் சந்திப்பு
(பாஸ்டன் பாலாஜி)
 
குறுநாவல்
  வேண்டியது வேறில்லை
(ஜெயந்தி சங்கர்)
<< முதல் பக்கம்
பாலிவுட் : கிஷோர் குமார்
- அப்துல் கலாம் ஆசாத் [azad_ak@yahoo.com]
| Printable version | URL |
"'உள்ளம் ரெண்டும் ஒன்றை ஒன்று மிஞ்சும் வண்ணம் ஓடும்வேகம்'"

படத்தொகுப்பு அறையில் விருந்தினர்களுக்குக் காட்டுவதற்கென சில பாடல் காட்சிகளை வைத்திருப்பார்கள். பாடலின் இசையுடன் சேர்த்து படத்தொகுப்பு இயந்திரம் எழுப்புகின்ற கிர்ர்ர் என்னும் ஒலியையும் சேர்த்தே கேட்கவேண்டும். அப்படிக் கேட்டதுதான் அந்தப் பாடல். மலைப்பிரதேசத்தில் செல்லும் ரயில்வண்டியில் சன்னல் ஓரத்தில் வாணிஸ்ரீ உட்கார்ந்திருப்பார். கையில் ஏதோ ஒரு ஆங்கில நாவல். படிப்பதாகப் பெயர்பண்ணிக்கொண்டு கூடவே ரயிலுடன் வருகின்ற ஜீப்பில் இருக்கும் சிவாஜியையும், ஏவிஎம் ராஜனையைம் பார்த்து விழிகளை உருட்டிக்கொண்டே வருவார்.

'உள்ளம் ரெண்டும் ஒன்றை ஒன்று மிஞ்சும் வண்ணம் ஓடும்வேகம்'

மாணவப் பருவத்தில் சில இரசாயனங்களை இந்தப் பாடல் உண்டாக்கியது என்பதை மறுக்கமுடியாது. பாடல் முடிந்ததும் எடிட்டர் கந்தசாமி சொன்னார், 'ஆராதனா பாக்கணும்பா மேரே சப்புனோன் கி ரானி அபு ஆயேகி து'ன்ற பாட்டுதான் இது'. அதன் பிறகு சிலநாள்கள் கழித்து ஆராதனாவைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ஷர்மிளா டாகூரும், ராஜேஷ் கன்னாவும் ஈர்த்ததைப் போல கிஷோர் சாஹேபும் ஈர்த்தார். அதற்கு முன்பே பல வருடங்களாகக் கிஷோர் சாஹேப் கொடிகட்டிப் பறந்திருந்தபோதும், அவரது பிரபலமான பாடல்களைக் கேட்டிருந்தபோதும், ஆராதனாவைப் பார்த்த பின் கிஷோர் குமாரின் மீது அதிகமான ஈர்ப்பு.

சென்னை எல்லீஸ்ரோடு பாண்டு வாத்தியக் கோஷ்டிகளின் வரப்பிரசாதமான 'மேரி ப்யாரி பெஹன்னியா பனேகி துல்ஹன்னியா' (படம்: சச்சா ஜூட்டா. நாயகன்: ராஜேஷ் கன்னா) தமிழில் 'பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த ஊர்வலம் நடக்கின்றது' (படம்: நினைத்தை முடிப்பவன். நாயகன்; எம்.ஜி.ஆர்.) என மாற்றம் பெற்றபோது, கிட்டத்தட்ட இந்தியில் கல்யாண்ஜி ஆனந்த்ஜி அமைத்திருந்த ட்ரம்பட் இசையை ஒட்டியே தமிழிலும் ட்ரம்பட் இசையை எம்.எஸ்.வி. அமைத்திருந்தார். 'வெண் சங்குக் கழுத்தோடு பொன்மாலை அசைந்தாட நான் கண்ட பொருள் கூறவா' என டி.எம்.எஸ். உச்சத்தில் எடுக்கும்போது, கிஷோரின் 'ஸோலா சிங்கார் மேரி பெஹ்னா கரேகி'
என்பது நினைவுக்கு வரும்.

காதலிக்க நேரமில்லையில் நாகேஷ¤ம் சச்சுவும் முத்துராமனின் முன்னிலையில் 'மனமென்னும் கருவண்டு பறக்கட்டும்' பாடலில் அடித்த கொட்டங்களை எப்படி தமிழ்த் திரை ரசிகர்களால் மறக்க முடியாதோ, அதே போல இந்தியில் 'ப்யார் கியே ஜா'வில் கிஷோரின் முன்னால் மெஹ்மூதும் மும்தாஜும் அடித்த கொட்டங்களை இந்தி திரை ரசிகர்களால் மறக்கமுடியாது. தமிழில் முத்துராமன் நடித்த பாத்திரத்தை இந்தியில் கிஷோர் ஏற்று நடித்திருந்தார். நகைச்சுவை நடிகராக, கதாநாயக நடிகராக, இசையமைப்பாளராக, பாடகராக, தயாரிப்பாளராக இந்தித் திரையில் பேசப்பட்ட மனிதர்.

Kishore Kumarகிஷோர் சாஹேப் 'ஹ்ர்ரே', 'ட்ர்ர்' இத்தியாதி இத்தியாதி ஒலிகளுடன்

அந்த எழுத்தாளர் சுமாரா எத்தனை கதை எழுதியிருப்பாரு ?

இதுல என்ன கணக்கு வாழுது..... அவர் எழுதின கதைகள் எல்லாமே சுமார் தான்.

- திருமலை கொளுந்து
நகைச்சுவயாகவும், இளமையும் குறும்பும் பொங்கும் காதல் பாடல்களையும் பாடுவதற்குப் பெயர் பெற்றவராக அவர் இருந்த போதிலும் திடீரென்று அப்படியே நூற்றெண்பது பாகையில் திரும்பி 'மேரே நைனா சாவன் பாதோம்' (படம்: மெஹ்பூபா) என சிவரஞ்சனியிலும் பாடலைப் பாடி மனதை நெகிழச் செய்வார். ஒரு பக்கம் முகமது ர·பி - லதா மங்கேஷ்கர் கூட்டணி மெல்லிசையில் மனதை மயக்கிக் கொண்டிருக்கும், இன்னொரு பக்கம் துள்ளலோடு கிஷோர் - ஆஷா கூட்டணி கால்களைத் தாளம் போடவைக்கும். ர·பி சாஹேபும் கூட கிஷோரின் பாணியில் 'யாஹ¥! யாஹ¥! சாஹே கோயி முஜே ஜங்லீ கஹே' என்னும் பாடலைப் பாடியிருக்கிறாரென்றால், அன்றைக்கு கிஷோரின் விநோத ஒலிகள் எந்த அளவிற்கு ரசிக்கப்பட்டன என்பதை உணர்ந்துகொள்ள முடியும்.

கங்குலி என்பது கிஷோருக்கும் குடும்பப் பெயர். அப்பாஸ் குமார் கங்குலிதான் கிஷோர் குமார் கங்குலியாகி, பிறகு கிஷோர் குமாரானார்.

நாற்பத்தேழில் துவங்கி பிரபலமான பல பாடல்களைத் தந்திருந்தபோதும், பின்னணிப் பாடகராக அவர் கொடிகட்டிப் பறந்தது அறுபதுகளின் கடைசியிலிருந்து எழுபதுகளின் இறுதி வரையில், ஜனரஞ்சகமான பாடல்களில், என்று சொல்லலாம். அறுபதின் இறுதியில் ஆராதனா, சச்சா ஜூட்டா என ராஜேஷ¤க்கும், எழுபதுகளில் பாம்பே டூ கோவா, ஷோலே, தீவார் (தீ), மஜ்பூர் (நான் வாழவைப்பேன்), டான் (பில்லா), என அமிதாபின் வெற்றிப் பாடல்களின் குரலாக ஒலித்தார். 'தேக்கா ஏக் க்வாப்
55 வார்த்தை Fiction - 2

செலவு
- மாதங்கி

ஈஸ்வர் பயங்கர டென்ஷனில் இருந்தால். கம்ப்யூட்டர் மிகத் தெளிவாக வீட்டுக் கணக்குகளைக் காட்டியது. அவனும் வந்தனாவும் கடந்த மாதங்களில் செலவழித்த கிரடிட் கார்ட் தொகை அவர்கள் சேமிப்பை கன்னா பின்னா என்று தாண்டி விட்டது. கோபத்தில் தரையில் கிடந்த பந்தை ஓங்கி சுவரில் அடித்தான். தினேஷின் புத்தக அலமாரியிலிருந்து ஏதோ விழுந்தது. தினேஷ் ஓடி வந்தான். "சாரிடா, டென்ஷன்ல போட்டுட்டேன்," என்றான்.

" பரவாயில்லை அப்பா, உடையவில்லை; அல்சேஷன் வாங்க நான் காசு சேர்க்கறேன்" என்றவாறு ப்ளாஸ்டிக் உண்டியலை அலமாரியில் வைத்தான்.

தோ யே சில் சிலே ஹ¤வே' என கிஷோரின் குரல் பின்னணியில் ஒலிக்கும்போது திரையில் அமிதாபின் ஆளுமைக்கு இணையாக கிஷோரை நினைக்காமல் இருக்கமுடியாது. டான் என்னும் திரைப்படத்தில் 'அரே தீவானோ முஜே பெஹ்ச்சானோ' (தமிழில்: மை நேம் ஈஸ் பில்லா) என கிஷோர் முழங்கும்போது கூடவே ஆடவேண்டுமெனத் தோன்றும். டானில் அவர் பாடிய 'காய்க்கே பான் பனாரஸ்வாலா' (தமிழில்: வெத்தலையப் போட்டேண்டி சக்தி கொஞ்சம் ஏறுதடி) அவருக்கு 1978இல் ·பிலிம் ·பேர் விருதினைப் பெற்றுத் தந்தது. ஆராதனாவின் 'ரூப்பு தேரா மச்தானா'வும் (தமிழில்: எத்தனை அழகு கொட்டிக் கிடக்குது - சிவகாமியின் செல்வன்) 1969இல் ·பிலிம் ·பேர் விருது பெற்ற பாடல். கிஷோர், எட்டு முறைகள் ·பிலிம் ·பேர் விருதினைப் பெற்றிருக்கிறார்.

இந்தி திரையில் அங்கங்கே தலைகாட்டும் 'முஜ்ரா' வகைப் பாடல்களிலும் கிஷோரின் குரல் வண்ணம் உண்டு. 'சலாமே இஷ்க் மேரி ஜான் ஸரா கபூல் கர்தோ' (படம்; முக்கத்தர் கா சிக்கந்தர்). வடக்கின் ரசிகர்களுக்கு முஜ்ரா அறிமுகமாகியிருந்த அளவிற்கு தெற்கில் அறிமுகமாகாததாலோ இல்லை இசை நம்மை ஈர்க்கவில்லையோ எதுவோ ஒன்று, இதே பாடல் தமிழில் வந்தபோது கொஞ்சம்கூட முணுமுணுக்கப்படவில்லை. (படம்: அமர காவியம். பாடல்; ஆசை என்னும் நூலில் ஆடிவரும் பொம்மை). ஆனால், அதே வகையில் கிஷோர் பாடிய பாடலான 'வாதா தேரா வாதா' (படம்: துஷ்மன்), தமிழிற்கு வந்தபோது 'மாப்பிள்ளையப் பாத்துக்கடி மைனாக்குட்டி' (படம்: நீதி) எனப்போடுபோடென்று போட்டது.

இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த வருடத்தில் துவங்கிய கிஷோரின் இசைப் பயணம், இந்திய சினிமாவில் நாற்பது ஆண்டுகள் தொடர்ந்தது. அமிதாபிற்காக சுதேஷ் போஸ்லே கிஷோரின் பாணியில் 'சும்மா சும்மா தே தே' எனக் கலக்கினாலும் நமது காதுகளில் இன்னும் ஏனோ கிஷோரின் 'அரே தீவானோ முஜே பெஹ்ச்சானோ' ஒலித்துக்கொண்டிருக்கின்றது. 

நடிகர், பாடகர், இசையமைப்பாளர் எனப் பல பரிமானங்களில் தனது முத்திரையைப் பதித்து 1987இல் கிஷோர் சாஹேப் விட்டுச்சென்ற இடம், இந்தி திரை உலகில் இன்னும் நிரப்பப்படவில்லை.

உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |