தீபாவளி மலர் 2005
 
கட்டுரைகள்
  தொடரும் கேள்விகள்
(அருணா ஸ்ரீனிவாசன்)
  கிஷோர் குமார்
(அப்துல் கலாம் ஆசாத்)
  மலேசியத் தமிழ்க் கட்டுரை இலக்கியம்
(ரெ. கார்த்திகேசு)
  மடியில் இரசாயன குண்டு
(குழலி)
  திருமணமும்,6-ம் வீடும்
(ஜோதிடரத்னா S. சந்திரசேகரன்)
  மைசூர் சௌடையா
('லலிதா')
 
சிறுகதைகள்
  கவிதைத் தொகுப்பு
(சேவியர்)
  தாத்தாச்சாரியார் கோட்
(என். சொக்கன்)
  'டிரீம்' தரிகிட
(ஜே.எஸ்.ராகவன்)
  திருப்பம்
(சித்ரன்)
  காரணம்
(விச்சு)
  ம்.ம்...ஹூஹூம்!
(ராமசந்திரன் உஷா)
  காதல் தூதுவன்
(சரசுராம்)
  குலம் தரும்
(ஷைலஜா)
  அவள், அவன், அவர்கள்
(மீனாக்ஸ்)
  தேவர்களும் கால்களும்
(குழலி)
  நிதானம்
(கிருஷ்ணா வெங்கட்ராமா)
 
கவிதைகள்
  நாட்குறிப்பு
(சேவியர்)
  காலக்கைத்துணை
(பிச்சினிக்காடு இளங்கோ)
 
பேட்டி
  எழுத்தாளர் பி.ஏ.கே வுடன் சந்திப்பு
(பாஸ்டன் பாலாஜி)
 
குறுநாவல்
  வேண்டியது வேறில்லை
(ஜெயந்தி சங்கர்)
<< முதல் பக்கம்
சிறுகதை : காதல் தூதுவன்
- சரசுராம் [sarasuram@yahoo.com]
| Printable version | URL |

"அதெல்லாம் சொன்னா உனக்குப் புரியாதுடா.." ன்னாங்க ரேவதி அக்கா.

"சொன்னாத்தானே புரியும்" -னேன்.

"என்னடா சொல்றது..?"

"காதல்னா என்னக்கா..?"

"மண்டையில கொட்டினேன்னா... பத்து வயசுகூட ஆகல...! உனக்கென்னடா புரியும்? நானே என்னன்னு புரியாத குழப்பத்திலிருக்கேன்.. இதில நீ வேற.. வயசு வந்தா உனக்கே எல்லாம புரியும் போ..! வீதி முனை டீக்கடக்கிட்டயோ... வீட்லயோ ராஜண்ணா இருப்பாரு... இந்த லெட்டர தந்துருடா.." அப்படீன்னு சொல்லிட்டு ரேவதியக்கா என் கன்னத்தில கிள்ளி நெத்தில செல்லமா ஒரு முத்தம் குடுத்தாங்க.

ரேவதியக்காவோட ஸ்டைல் இதுதான். செல்ல முத்தம். அது ரொம்பப் பிடிக்கும் எனக்கு. இந்த வாட்டி ஏனோ அந்த முத்தத்துல ஒரு உற்சாகமே இல்ல. ரேவதியக்கா எங்க பக்கத்து வீடுதான். அவங்க தம்பி கிருஷ்ணா என் ப்ரண்டு. நானும் அவனும் ஒரே வகுப்புதான். நான் அப்பப்போ விளையாடறதுக்கு அவன் வீட்டுக்குப் போவேன்.

ரேவதி அக்காவும் எங்களோட சேர்ந்து விளையாடுவாங்க. ரேவதி அக்காவும் ராஜண்ணாவும் எப்ப முதல்ல சந்திச்சாங்கங்கறதெல்லாம் எனக்கு தெரியாது. ஆனா இப்பெல்லாம் அவங்க எழுதித்தர்ற லெட்டரைக் குடுக்கறதும், எங்க சந்திச்சுக்கலாம்னு சொல்றதெல்லாம் நாந்தான். ரேவதி அக்கா பக்கத்து ஸ்கூல்லதான் படிக்கறாங்க. அவங்க ஸ்கூல்லேர்ந்து வந்ததும் கிருஷ்ணாவுக்கு இங்கிலீஸ் சொல்லிக்குடுக்கறப்போ எனக்கும் சேர்த்து சொல்லிக்குடுப்பாங்க. ரேவதியக்கா மாதிரி எங்க வாத்தியார் கூட சொல்லித்தர மாட்டாங்க. இங்கிலீஸ் படிக்கப்போறேன்னு வர்ரதால எங்கம்மாவுக்கு இன்னும் சந்தேகம் வரல.

ரேவதியக்கா நல்ல அழகு. தலைமுடி ரொம்ப நீளமா இருக்கும். தலைல ரோஜாப்பூவோ மல்லிப்பூவோ ஏதோ ஒண்ணு எப்பவு இருக்கும். கண்ணு பளபளப்பா இருக்கும். வீட்ல இருக்கறதவிட ஸ்கூல் போகும்போது யூனிபார்மில இன்னும் அழகா தெரிவாங்க. ரேவதி அக்காவுக்கு ராஜண்ணா பொருத்தமாயில்லன்னு எனக்கு தோணும். அ¨தயும் அக்காகிட்ட ஒரு தடவ கேட்டேன். அக்கா சிரிச்சுகிட்டே சொன்னாங்க.

"எங்கண்ணுக்கு அழகாதான் தெரியுது போடா..."

நான் ஒண்ணும் பேசல. ராஜண்ணா நல்ல மாதிரிதான். ஆனா பாக்க மொரட்டுத்தனமா தெரியும். பேசும்போது அப்படி தெரியாது. எங்களுக்கு அடுத்த தெருவுலதான் அண்ணா வீடு இருக்கு. சைக்கிள்ளதான் வேலைக்குப் போகும். எங்க ஸ்கூலுக்குப் பக்கத்திலதான் அந்தண்ணா கம்பெனி. என்ன ஒரு தடவ கம்பெனிக்குள்ள கூட்டிட்டுப் போயிருக்கு. மெத்தையெல்லாம் செய்யற கம்பெனி. பெரிய பெரிய மிஷினெல்லாம் ஓடும். எனக்கு பயமாயிருந்துச்சு. ராஜண்ணாகிட்ட எனக்கு பிடிச்சது நான் லெட்டரைக் கொடுக்கறப்போ அதோட மொரட்டு முகத்துல ஒரு வெளிச்சம் வருமே அதுதான். சந்தோஷத்தில அதோட உதட்டில சிரிப்பெல்லாம் வரும். உடனே பாக்கெட்டுக்குள்ள கை விட்டு பைசா எடுத்து ஏதாவது வாங்கிக்கடான்னு சொல்லும். இல்லைன்னா நேரா பக்கத்துல இருக்கிற டீக்கடைக்குக் கூட்டிட்டுப் போகும். என்ன வேணுமோ எடுத்துக்கன்னு சொல்லும். எனக்குப் பிடிச்ச பட்டர் பிஸ்கட்டையும், இனிப்புப் பலகாரத்தையும் எடுத்துக்குவேன். ஒண்ணும் சொல்லாது. ரொம்ப தார¡ளம். அப்பறம் மறக்காம தேங்க்ஸ் சொல்லும்.

"டேய் கார்த்தி... லெட்டரப் பாத்து கொண்டு போயி குடுறா. ரொம்ப முக்கியமான விஷயம். ஜாக்கிரத..!" -ன்னாங்க ரேவதியக்கா.

நான் ரேவதியக்காவ மொறச்சுப் பாத்தேன். என்னோட அனுபவம் தெரியாம சொன்ன வார்த்தைகள். இத நான் ரெண்டு வருஷமா செய்யறேன். ராபர்ட் அண்ணாவுக்காகத்தான் இந்த வேலையை நான் நான் முதல் முதலா செஞ்சேன். ராதிகாக்காகிட்ட நான் ட்யூஷன் போன சமயம். ராபர்ட் அண்ணா என்ன வழில நிறுத்தினாங்க. ரொம்ப தயங்கி தயங்கி பேசினாங்க. என் சட்டைல பட்டன் போட்டு விட்டுட்டே சொன்னாங்க.

"இந்த புக்கை ராதிகாக்காகிட்ட குடுத்துர்ரியா?"

"நீங்களே குடுக்க வேண்டியதுதான?"

"ரொம்ப அவசரம்டா கார்த்தி. அக்காவுக்கு லீவு வேற. வெளிய வர மாட்டாங்க... நான் அவங்க வீட்டுக்கு வர முடியாது. அது ஏன்னு சொன்னா உனக்குப் புரியாது.

ப்ளீஸ்டா...செய்வியா.."-ன்னாங்க.

எனக்கு ராபர்ட் அண்ணாவப் பாக்க பரிதாபமா இருந்துச்சு. சரின்னு சொல்றதுக்கு முன்னாடி நான் ஒண்ணு கேட்டேன். "உங்க வீட்டு கொய்யா மரத்துல கொய்யாக்கா பறிக்க வுடுவீங்களா?"

எங்க தெருவில கடைசி வீடு ராபர்ட் அண்ணா வீடுதான். உயரமா காம்பெளண்டு இருக்கும். கேட்டெல்லாம் போட்டிருக்கும். உள்ளிருக்கிற மரத்துல எப்பவும் கொய்யாக்கா காச்சு காச்சு தொங்கும். நான் பசங்களோட சுவரேறி பறிக்கப் போனா ராபர்ட் அண்ணாவோட அம்மா எங்கள கம்பெடுத்து விரட்டுவாங்க. பரிதாபப்பட்டுக்கூட ஒண்ணும் தரமாட்டாங்க. ராபர்ட் அண்ணா கூட எங்கள விரட்டியிருக்காங்க. கொய்யாக்கா ரொம்ப ருசியா இருக்கும். ராஜேஷ் ரெண்டு தடவ தெரியாம பரிச்சுட்டு வந்து தந்திருக்கான். இப்போ அதைத்தான் நான் கண்டிஷனா கேட்டேன்.

"நீ மட்டும் எப்பா வேணா வந்து பறிச்சுக்கோ... உன் ப்ரண்ட்ஸெல்லாம் கூட்டிட்டு வராதே.."-ன்னாங்க.

ராதிகாக்காகிட்ட அந்த புஸ்தகத்த தந்தேன். அதிலிருந்து ஒரு பேப்பர எடுத்து படிச்சாங்க. அவங்க முகத்தில சந்தோஷத்தப் பாக்கணுமே! தேங்க்ஸ்டா-ன்னாங்க. அப்றம் எனக்கு கணக்கை உற்சாகமா சொல்லித் தந்தாங்க. அப்றம் அந்தக்கா ஏதோ எழுதித் தந்தாங்க. அதை யாருக்கும் தெரியாம ராபர்ட் அண்ணாகிட்ட குடுத்§தன். ராபர்ட் அண்ணா சொன்னபடி அவங்க வீட்ல என்னை மட்டும் கொய்யாக்கா பறிக்க விட்டாங்க. எப்படிடான்னு என்னோட ப்ரண்ட்ஸ் எல்லாரும் ஆச்சரியப்பட்ட¡ங்க. நான் காரணத்த மட்டும் சொல்லவேயில்ல. அப்றம் புக்கு லெட்டருன்னு இல்லாம் வாய் வார்த்தையாகூட நெறய விஷயம் சொல்லுவேன். கோயிலுக்கு வரச்சொன்ன¡ங்க. பார்க்குல காத்துட்டு இருக்காங்க. சினிமா தியேட்டர் வாசல்ல நிக்கிறாங்களாம். இந்த மாதிரி நெறய. ராதிகாக்கா ட்யூஷ்ன்ஸ்ல தப்பு பண்ணினாலும் அடி வாங்காம இருக்கறது நான் மட்டும்தான். அப்றம் ஒரு நாள் ஊரே பரபரப்பாயிடுச்சு. ராதிகாக்காவையும் ராபர்ட் அண்ணனையும் காணலையாம். எல்லாப் பக்கமும் தேடிப்பாத்தாங்க. ஊரவிட்டு ஓடிப்போனதா சொன்னாங்க. ஓடிப்போறதுன்னா என்னன்னு எனக்கு புரியல.

ரெண்டு பேருகிட்டயும் நான் அதிகமா பேசினதால எனக்கு தெரியும்னு எங்கிட்ட விசாரிச்சாங்க. அதெல்லாம் எங்கிட்ட சொல்லலைன்னு சொன்னேன். அம்மாவுக்கு ஏனோ என் மேல நம்பிக்கையில்ல. அவங்க போனப்பறம் என்னை நாலு சாத்து சாத்தினாங்க.

''என்னடா நடந்துச்சு'' ன்னாங்க.

''எனக்கு ஒண்ணும் தெரியாதும்மா'' னேன்.

''அடி பிச்சுருவேன், உண்மைய சொல்லுடா...''

''லெட்டர் குடுக்கச் சொல்லுவாங்க குடுப்பேன்.. அங்க வரச் சொல்லு, இங்க வரச் சொல்லுன்னு சொல்லுவாங்க... நான் சொல்லுவேன்.. அவ்வளவுதாம்மா..''

''ராஸ்கல், மொளச்சு மூணு எல விடல.. நீ இந்த வேலயெல்லாம் பண்றியா.. உனக்கென்ன அதுக்கு கூலியாடா குடுக்கறாங்க..?''

''ஆமாம்மா.. இது செஞ்சதாலதான் ராபர்ட் அண்ணா வீட்ல கொய்யாக்கா பறிக்க முடிஞ்சது..'' ன்னேன்.

அதுக்கப்புறம் விழுந்துச்சே அடி. மறக்க முடியாத தர்ம அடி. உடம்பெல்லாம் வீங்கிப் போச்சு. இந்த மாதிரி மறுபடியும் பண்ணினே கால ஒடிச்சு போட்டுருவேன்னாங்க. அப்றம் அப்பாவுக்கும் விஷயம் தெரிஞ்சு ராத்திரி தூக்கத்துல என்ன எழுப்பி உதைச்சாரு.

அதெல்லாம் ரெண்டு மாசம்தான். வலியெல்லாம் மறந்து போச்சு. மறுபடியும் ஆரம்பிச்சாங்க. பாலண்ணாதான் என்னை மறுபடியும் கூப்பிட்டது. சித்ராக்காகிட்ட இந்த லெட்டர குடுத்துர்றான்னாங்க. நான் முடியவே முடியாதுன்னு பிடிவாதமா இருந்து பார்த்தேன். என் கையில பட்னு ரெண்டு ரூபாய சொருகினாங்க. நான் அந்த அண்ணாவையே பார்த்தேன். பத்தலையா, இந்தா அஞ்சு ரூவாயா வச்சுக்கோன்னாங்க. எனக்கு என் பள்ளிக்கூடத்துக்குப் பக்கத்துல இருக்கிற மிட்டாய் கடை மாமிக்கு அஞ்சு ரூபா கடன் வேற தரணும். வீட்ல வாங்கியெல்லாம் அதை அடைக்க முடியாது. அப்றம் என்ன பண்றது.?
 
''இதை என்ன பண்ணனும்'' -னு கேட்டேன்.

''பத்திரமா சித்ராக்காகிட்ட குடுக்கனும்..''

ரொம்ப பத்திரமா அத சித்ராக்காகிட்ட தந்தா அந்தக்கா அதை பிரிச்சுக்கூட படிக்காம என் கண்ணு முன்னாலயே கிழிச்சுப் போட்டாங்க. நான் நடந்தத அப்படியே அந்த அண்ணாகிட்ட சொன்னேன். அந்தண்ணாவுக்கு முகமெல்லாம் மாறி போயிடுச்சு. மறுபடியும் அடுத்த நாள் சின்ன கிப்ட் தந்தாங்க. அதையும் நான் சித்ராக்காகிட்ட தந்தேன். அதையும் பிரிக்காம தூக்கிப் போட்டுட்டாங்க. இந்த மாதிரிதான் ரெண்டு பேருக்கும் மாறி மாறி நடந்துச்சு. எனக்கும் ஒண்ணும் புரியல. ஏன் என்னப் புடிக்கலன்னு அந்தண்ணா சித்ராக்காகிட்ட கேட்டுட்டு வரச் சொன்னாங்க. நான் கேட்டேன்.

சித்ராக்கா சொன்னாங்க..

''நேர்ல வந்து சொல்ல தைரியமில்லாதவனுக்கு எதுக்கு காதல்னு கேளுடா..'' ன்னாங்க.

நான் சித்ராக்கா சொன்னத மூணு தடவ சொல்லி மனப்பாடம் பண்ணிட்டு பாலண்ணாகிட்ட சொன்னேன். கேட்டதும் பாலண்ணாவோட சந்தோஷத்தப் பாக்கணுமே!

அப்றம் அவங்க ரெண்டு பேருமே அடிக்கடி சந்திச்சு பேசிக்கிட்டாங்க. வீட்டுக்கு தெரிஞ்சிருச்சு. ரோட்டில நின்னு ஒரே சண்டையா இருந்துச்சு. அப்றம் ரெண்டு வீட்டிலயும் கூடிப் பேசினாங்க. இப்ப ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகி அடுத்த தெருவுல புது வீட்டிலதான் குடியிருக்காங்க. நான் அப்பப்போ அவங்க வீட்டுக்கு பே¡னா சந்தோஷமா மிக்சர் டீயெல்லாம் தருவாங்க.

அப்றம் அருளண்ணா - மீனா அக்காவுக்காக உதவி பண்ணினது, முரளி அண்ணாகிட்ட ஆயிஷாக்கா குடுக்கச் சொன்னதுன்னு நிறைய நடந்துச்சு. ஒரே சமயத்துல ரெண்டு மூணு லெட்டெரெல்லாம் வந்து எனக்குக் குழப்பமாயிருக்கு. அப்றம் யோசிச்சு சரியா சேத்துருவேன்.

இவ்வளவு அனுபவம் இருக்கிற என்னைப் பார்த்து ரேவதி அக்கா, டேய் கார்த்தி பாத்து குடுடான்னா கோபம் வராதா என்ன?

"ஸாரிடா... ஸாரி... கோவிச்சுக்காத கார்த்தி... மேட்டர் ரொம்ப அவசரம்டா... ராஜண்ணா என்ன சொல்றாருன்னு கேட்டுட்டு உடனே வந்து சொல்லு" -ன்னாங்க. ரேவதியக்கா குரல் ரொம்ப பதட்டமா இருந்துச்சு.

நான் நேரா ராஜண்ணா வீட்டுக்கு போனேன். ராஜண்ணாவோட அம்மா வாசல்ல கூடை பின்னிட்டு இருந்தாங்க. நான் உள்ள போனேன். அந்தம்மா என்னை சந்தேகமா பாத்தாங்க. என்னை நிறுத்தினாலும் லெட்டர் அவங்களுக்குக் கிடைக்காது. நான் அதை டவுசர் உள்பாக்கெட்டுல வெச்சிருந்தேன். ராஜண்ணா அவரோட ரூம்ல புக்கு ஒண்ண நெஞ்சில வெச்சுட்டு படுத்துட்டு இருந்தாங்க. ரொம்ப யோசனைல இருந்த மாதிரி இருந்துச்சு. என்னடான்னாங்க. ரேவதியக்கா தந்த அந்த லெட்டர தந்தேன்.

டக்குனு வாங்கி உள்ள மறச்சிட்டு சரி போன்னாங்க. ஒரு தேங்க்ஸ் கூட சொல்லல. எனக்கு ஒரு மாதிரி இருந்துச்சு. ரேவதியக்காகிட்ட வந்தேன். என்னடா ஆச்சுன்னாங்க. ஒண்ணும் சொல்லல. ஒண்ணும் தரவும் இல்லன்னேன். ரேவதியக்கா கண்ணில இருந்து தண்ணி வந்துச்சு.

அப்றம் ஒரு வாரம் கழிச்சு தெருவே பரபரப்பா இருந்துச்சு. ரேவதியக்காவை காணலையாம். காலையிலிருந்து வீட்டுக்கு வரலையாம். நைட்டெல்லாம் தேடினாங்க. எல்லாரும் ராஜண்ணாவை சந்தேகப்பட்டு அந்தண்ணாவோட கம்பெனிக்குப் போனா ராஜண்ணா கம்பெனிலதான் இருந்துச்சாம். எனக்கு பயமாயிருச்சு. என்னன்னு புரியல. ரேவதியக்கா வீட்டுல எல்லாரும் அழுதாங்க. போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனாங்க.

அடுத்த நாள் காலைல அதைவிட பரபரப்பா இருந்துச்சு. நான் எழுந்து பயத்தோட பாத்தேன். அப்பா சட்டையைப் போட்டுட்டு ஓடினாரு. நானும் கதவை சாத்திட்டு அப்பா பின்னாலயே ஓடினேன். அப்பா எங்க வீட்டுக்குப் பின்னால இருக்கற தென்னந்தோப்புக்குள்ள ஓடினாரு. நிறைய பேரு ஓடிட்டு இருந்தாங்க. எனக்கு ஒண்ணும் புரியல. பயமா இருந்துச்சு. அங்க இருக்கற பெரிய கிணத்த சுத்தி நிறைய பேரு இருந்தாங்க. அழற சத்தம் கேட்டுச்சு. எனக்கு திக்குன்னு இருந்துச்சு. அம்மா வேகமா வந்து என்ன வீட்டுக்குத் துரத்தினாங்க. நான் கேக்கல. அப்பா திரும்பி வந்து என் கையைப் புடிச்சுக் கூட்டிட்டுப் போனாரு. ரேவதியக்காவோட அம்மா அப்பா தம்பி தங்கச்சியெல்லாம் கதறி கதறி அழுதுட்டு இருந்தாங்க. அப்பா என்னை அந்த கிணத்துக்குக் கூட்டிட்டு போனார். எட்டிப் பாத்தேன். அதிர்ச்சியாயிட்டேன். அந்த வட்டம¡ன கிணத்துத் தண்ணில ரேவதியக்கா மிதந்துட்டிருந்தாங்க. அவங்க எப்பவும் வெக்கற மல்லீப்பூ ஓரமா கிடந்துச்சு. ரேவதியக்காவ சுத்தி மீனெல்லாம் கடிச்சுட்டு இருந்துச்சு. அந்தக்காவோட நீளமான தலைமுடி தண்ணில பரவி... நான் ஓ-ன்னு கதறி அழ... அப்பா நான் பயத்துலதான் அழறேன்னு நெனச்சு... என்னை சட்டுனு வீட்டுக்குக் கூட்டிட்டு வந்தார்.

ரேவதியக்கா ஏன் செத்துப் போனாங்கன்னு எனக்குத் தெரியல. என்னென்னவோ பேசினாங்க. ஒண்ணும் புரியல. ராஜண்ணாகிட்ட போலீஸ் விசாரிச்சாங்க. எனக்கு ராத்திரியெல்லாம் தூக்கம் வரல. ரேவதியக்கா தண்ணில மிதக்கறதே தெரிஞ்சுட்டு இருந்தது. தூக்கத்தில உளறினேனாம். ரெண்டு மூணு தடவ அம்மாவ எழுப்பி பாத்ரூம் போனேன். அம்மா எனக்கு திருஷ்டி சுத்திப் போட்டாங்க. அப்றம் கொஞ்ச நாள்ல எல்லாரும் இதை மறந்துட்ட மாதிரி இருந்துச்சு. ரேவதியக்கா வீட்டைப் பாக்கறப்பெல்லாம் எனக்கு மனசு கலங்கும். வேகமா நடந்துருவேன்.

அப்றம் ஒரு நாள் குமாரண்ணா என்ன வழில நிறுத்தினாங்க.

"என்னண்ணா"-ன்னேன்.

"டேய் எனக்கு ஒரு ஹெல்ப் பண்றாயா?"

"என்ன பண்ணனும்?"

"இந்த லெட்டர உங்க பக்கத்து வீட்டுக்கு புதுசா வந்திருக்காங்களே மேனகாக்காகிட்ட குடுத்திர்றியா? உனக்கு பைவ் ஸ்டார் சாக்லேட் வாங்கித் தர்றேன்."

"ஊஹ¥ம்.. முடியாதுண்ணா... சத்தியமா இனிமே இந்த மாதிரியெல்லாம் யாருக்கும் பண்ணமாட்டேன்.."

"ஏண்டா..?" -ன்னாங்க அதிர்ச்சியா.

நான் சொன்னேன்.

"அதெல்லாம் சொன்னா உங்களுக்கு புரியாதுண்ணா.."

உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |