தீபாவளி மலர் 2005
 
கட்டுரைகள்
  தொடரும் கேள்விகள்
(அருணா ஸ்ரீனிவாசன்)
  கிஷோர் குமார்
(அப்துல் கலாம் ஆசாத்)
  மலேசியத் தமிழ்க் கட்டுரை இலக்கியம்
(ரெ. கார்த்திகேசு)
  மடியில் இரசாயன குண்டு
(குழலி)
  திருமணமும்,6-ம் வீடும்
(ஜோதிடரத்னா S. சந்திரசேகரன்)
  மைசூர் சௌடையா
('லலிதா')
 
சிறுகதைகள்
  கவிதைத் தொகுப்பு
(சேவியர்)
  தாத்தாச்சாரியார் கோட்
(என். சொக்கன்)
  'டிரீம்' தரிகிட
(ஜே.எஸ்.ராகவன்)
  திருப்பம்
(சித்ரன்)
  காரணம்
(விச்சு)
  ம்.ம்...ஹூஹூம்!
(ராமசந்திரன் உஷா)
  காதல் தூதுவன்
(சரசுராம்)
  குலம் தரும்
(ஷைலஜா)
  அவள், அவன், அவர்கள்
(மீனாக்ஸ்)
  தேவர்களும் கால்களும்
(குழலி)
  நிதானம்
(கிருஷ்ணா வெங்கட்ராமா)
 
கவிதைகள்
  நாட்குறிப்பு
(சேவியர்)
  காலக்கைத்துணை
(பிச்சினிக்காடு இளங்கோ)
 
பேட்டி
  எழுத்தாளர் பி.ஏ.கே வுடன் சந்திப்பு
(பாஸ்டன் பாலாஜி)
 
குறுநாவல்
  வேண்டியது வேறில்லை
(ஜெயந்தி சங்கர்)
<< முதல் பக்கம்
சிறுகதை : குலம் தரும்
- ஷைலஜா [shylaja01@yahoo.com]
| Printable version | URL |

விளையாட்டுப்போல ஆறுவருடங்கள்.! இரண்டாயிரம் நாட்கள்.!காலக்கணக்கை விட்டுத்தள்ளுங்கள் ஒரு மாபெரும் கனவல்லவா நனவாகி விட்டிருக்கிறது?

மணவாளனுக்கு அந்தக் கோபுரத்தை பார்க்கிறபோது அதன் நீள அகல பௌதீகப் பரிமணங்களை எல்லாம் தாண்டி  மஹாபலிக்கு முன்னாலே திருவிக்ரமனாக நெடிதுயர்ந்து நின்ற நெடுமாலே நினைவுக்கு வந்தார். இருநூற்று முப்பத்தாறடி உயரத்தில் பதிமூன்றடுக்கு கோபுரம்!     ஊரில் உள்ள 21 கோபுரங்களுள் இதன் சிகரப்பகுதி மட்டும் மொட்டையாக நின்றது.. இன்று ராஜகோபுரமாய் விண்ணைத் தொட்டு நிற்கிறது!

ஒரு சின்னதிலிருந்து ஒரு பெருசு. விதைக்குள்ளிருந்து விகசித்துக் கொண்டு விருட்சம் வெளிப்படுகிறதே அதுபோல்!

மனிதனுக்கு லட்சியம் என்று ஒன்று இருக்கணும் அந்த லட்சியம்-இலக்கு- உன்னதமாக இருக்க வேண்டும் இருந்துவிட்டால் அது நிறைவேறியே தீரும் அதற்கு சாட்சி இந்தக் கோபுரம் மணவாளன் பெருமூச்சு விடுகிறான். அவனுக்குக்கூட ஓர் ஆசை,ஒருகனவு ,ஒரு லட்சியம் இருக்கிறது ரொம்பக் காலமாக இருக்கிறது அதை வாய்விட்டு யாரிடமும் அவனால் சொல்ல இயலவில்லை சொல்லி என்ன பயன்? ஏழை கனவு காணக்க்கூடாது அவனுக்கு அந்த உரிமை இல்லை அவன் அப்பாகாலத்தில் குடும்பம் ரொம்ப செழிப்பாகத்தான் இருந்தது அந்தப் பரம்பரையில்வந்த தோஷம்-ஒருவேளை-அதுவே வியாதியாகப்போயிற்றோ?

மணவாளனுக்கு இன்னமும் எட்டுக்கல் விட்டெறிகிற நினைப்பு.

"மணவாளா! கோபுரத்திருப்பணிக்கு ஒரு சீட்டு வாங்கிக்கிறியா? "கேட்டவர் இளையாழ்வார்

தபாலாபிசில் வேலை பார்த்து சமீபத்தில் ரிடையர் ஆனவர் எந்த நேரமும் அவர் கையில் நன்கொடை ரசீதுடன் ஊரில் வளைய கொண்டிருந்தார்.

"வாங்கணும் சாமி கட்டாயம் வாங்கணும்" என்றான் மணவாளன்

"பத்துருவா தான் ஒருசீட்டு கிழிக்கட்டுமா?'

"இப்பொ வேண்டாம் சாமி கையிலே பணமில்லை,,ஒரு சீட்டு என்ன சாமி நூறு சீட்டு வாங்கறதா நேர்ந்துட்டு இருக்கேன்"

இளையாழ்வார் அவனைப்பார்த்து கபக் என்று சிரித்துவிட்டார்

"நூறு சீட்டுன்னா ஆயிரம்ருபாய் ஆயிற்றே அந்தப்பணம் நீ எப்போ சேர்த்து எப்போ நீ திருப்பணிக்கு செலுத்தறது?நான் சொல்றதைக்க்கேளு உன்னல் முடிஞ்சதைக்கொடு போதும்... என்ன கிழிக்கட்டுமா?" என்றார்

மனவாளன் நெஞ்சை நிமிர்த்தினான்"சாமி! எங்கப்பா நாதமுனி அந்த நாள் தர்மவான் அவரோட வம்சம்நான்.. ஆயிரம் ருபாய்க்கு ஒருபைசா குறைவாய் நான் செலுத்தப் போவதில்லை வைராக்கியம் வச்சிட்டேன் எப்படியாவது பணம் சேர்த்திடுவேன்" என்றான்.

இளையாழ்வார் தபாலாபீசில் சேமிப்புக்கணக்கு இன்ஷ¥ரன்ஸ் எல்லாம் வரவு செலவு செய்பவர் அவர் மனசு கணக்கு போட்டது  ஓராயிரம் ரூபாயாவது இவன்  இந்த ஜன்மத்தில் சேர்க்கிறதாவது?அப்பன் பாட்டன் காலத்திலே வகையாய் வாழ்ந்துடாங்க இல்ல அந்த நினைப்பு விடல்ல... பாவம் மணவாளன்..

அவர் வேறு ஆள் பார்க்க நகர்ந்துவிட்டார்.

அன்னிக்கு சொல்லியாயிற்று இளையாழ்வாரிடம் ..ஏண்டா அப்படிச் சொன்னோம் என்று மணவாளனுக்குத்தோன்றவே இல்லை ஆயிரம் ரூபாய் என்பது பெரிய தொகையா?பெரிய பெருமாள் மனசு வச்சா தாயார் கடைக்கண் பார்த்தா ஆயிரம் என்ன லட்சம் கூட தீயினில் தூசாகும்!

திருமங்கை மன்னர்  ஒருராத்திரியிலெயே மதில் கட்டினாராம்

அம்மாடியோவ்! அவங்க எல்லாம் மனுஷங்க இல்ல...தெய்வம்!

மணவாளன் பெருமூச்சு விடுகிறான்

"அப்போவ்"

கனவு கலைகிறது

எதிரே மகள், பெயர் நப்பின்னை இதுலே எல்லாம் குறைச்சல் இல்லை

வாய்த்தபெண்டாடியின் பெயர் நாச்சியார் மகன் நம்பி-தாத்தாவின் பேர் கடைகுட்டி வகுளாபரணன்.

இந்த நம்பிப்பயல் ஸ்டேட் ·ப்ஸ்ட் வருவாவானென்று மணவாளன் கனவு கண்டான் கடைசியில் என்னவென்ரால் அவன் நம்பரே பேப்பரில் வரவில்லை ஒருதடவை இரண்டுதடவை உஹும் அவன் நம்பர் வரவே இல்லை.

கடைசியில் நம்பி டூரிஸ்ட் பஸ் ஏதும்  வராதா யாராவது வடநாட்டுக்காரன்  அதிர்ஷ்டவசமாய் வெளினாட்டு ஆசாமி கிடைக்க மாட்டானாஎன்று அலைகிற டூரிஸ்ட் கைடாகப் போய்விட்டான்

தானகக் கைவந்த கலை-கேட்டுக்கேட்டுப் பழகிய பழம் பெருமைகளை புது மெருகுடன் உடைசல் ஆங்கிலம் தெலுங்கு இந்தியுடன் சமயத்திற்குத்தக்கவாறு எடுத்துச் சொல்லி ஒருநாளில் அதிக பட்சம் முப்பதுரூபாய் சமபாதித்து காலத்தை கழித்துவருகிறான்

"அப்போவ்' மறுபடி கூவினாள் நப்பின்னை

"என்னம்மா?'

"ஸ்கூல் ·பீஸ் கட்டணும் நாலைக்கு கட்டாட்டி பேரை அடிச்சிருவாங்களாம்.."

மணவாளன் அவளை நிமிர்ந்து பார்த்தான்

நப்பின்னையின் கண்கள் அழகாய்ப் பெரிதாய் காதளவு நீண்ட கண்கள்-அவனைப்போலவே அவளும் கனவு காண்கிறாள் என்பதை  நினைவூட்டின

"நாளைக்குத்தானேகட்டணும் கட்டிட்டாப் போச்சு?"

"போங்கப்பா! நீங்க இப்படித்தான் சொல்வீங்க ஆனா முடியலன்னு கடேசில  கட்டமாட்டிங்க" சிணுங்கியபடியே அவள் நகர்ந்தாள்

இந்தப்பெண்கூட என்னை எவ்வளவு நன்றாக எடை போட்டு வைத்திருக்கிறது?

நம்பி அவசரவசரமாக வந்தான்

"அப்பா இருபது ரூபா குறையுது,,, உங்கிட்ட இருக்குமா?; என்று கேட்டான்

"என்னப்பா  என்ன விஷயம்?"

நம்பி பதில் சொல்வ்சதற்குள்"நமஸ்கார்ண்டி" என்றபடியே ஒரு நடுத்தரவயது மனிதர் உள்ளே நுழைந்தார்

"பாவம்பா..ஆந்திராக்காரராம்..நம்ம ஊருக்கு  வந்த இடத்துல இவர் பையை எவனோ திருடுட்டானாம். கோயில்ல மண்டபத்துல தவிச்சிடிருந்தாரு...யாரும் இவர லட்சியம் செய்யல.. நாந்தான் பாத்து விவரம் கேட்டேன்...என் கையிலே இருபது ரூபா இருக்குது நீங்க ஒரு இருபது ரூபா கொடுத்தா டிக்கட் வாங்கி சொந்தக்காரங்க ஊருக்கு- பக்கத்துலதானாம்- போயிட்றராம் ..ஊரு போயிச் சேர்ந்ததும் பணம் திருப்பிடுறேங்கறாரு.."

மனவாளன் பெருமூச்சு விட்டான்

புலிக்குப்ப்பிறந்தது பூனையாகுமா?

என்னைப்போலவே நீயும் பைத்தியக்கரானாய் இருக்கியேடா? அவனவன் ஆளுகிடச்சா தேட்டை போட்றான் நீ என்னடான்னா கைக்காசை எடுத்து தானம் கொடுக்கிறேங்கறே.... வம்சாவளிடா எல்லாம்  வம்சாவளி...

அப்பாவின் மௌனம் மகனுக்குப் புரிந்து போனது

கடைசியில் அந்த  ஆந்திரவாடு இருபதுருபாயோடுதான் புறப்பட்டுப்போனார்

கும்பாபிஷேகத்துக்கு நாள்கூட வைத்துவிட்டர்கள் இப்போது மணவாளன் அந்த ஆயிரம் ரூபாயை கோபுரத்திருப்பணிக்குச் செலுத்திவிட பரபரக்க ஆரம்பித்தான்.

திண்ணையில் படுத்தபடியே ஆகாயத்தைப்  பார்த்தவனுக்கு ஒருவழியும் புலப்படவில்லை. இந்தத்திருப்பணிக்கு எங்க வம்சத்துக் காணிக்கை எப்படியாவது போய்ச்சேரணும் பணம் செலுத்தறதா நேர்ந்துட்டிருக்கக்க்கூடாது அப்படி நேர்ந்துக்கிட்ட  பிறகு அதை செலுத்தாம  இருந்தா அது பேரன் பேத்திகாலம் வரைக்கும் தொடர்ந்துகிட்டு இருக்குமாம்.

அழகியமணவாளா! நம்பெருமாளே!  உன் திரு உள்ளம் என்னவோ?

'குலம் தரும் செல்வம் தரும்
 அடியார்படுதுயராயினவெல்லாம்..'

வாய் பாசுரம் முணுமுணுத்தபடி இருக்க கண் மூட ஆரம்பித்தது ஆனால் இனந்தெரியாத துயரம் ஒன்று

பெருமூச்சாய் வெளிப்பட்டு அதுவே மெல்ல மெல்ல விம்மலாகி உள்ளேயே அமிழ்ந்து நெஞ்சை அடைக்க ஆரம்பித்துப் பிறகு தூக்கத்தில் கொண்டு விட்டது.

எத்தனை நேரமாயிற்றோ திடீரெனத் தன்னை யாரோ வந்து உலுக்கவும் விழித்தான்

"ஏய் என்ன தூக்கம் இன்னமும்?'

குரல் மிக அருகாமையி;ல் அவனைக்கிட்டத்தட்ட   அணைத்துக் கொண்டு  ரொம்பவும் அந்நியோன்னியமாய் அதட்டியது மனவாளன் அந்தகுரலைத் துழாவிப்பார்த்தான் எங்கோ கேட்ட குரல்! ஆத்மாவை ஊடுருவும்குரல் !அந்தக்குரலுக்குள் பழமை நெடி வீசிற்று.

"ஏய் என்னைதெரியல....மணவாளா என்னடா,என்ன முழிக்றே?'

மணவாளன் எழுந்து உட்கார்ந்தான் இப்போது அவனுக்குத்தெரிந்து போயிற்று

"நீ நீ  ...குல சேகரன் இல்ல?"என்ரவன் சட்டென குதூகலமாகிப்போனவனாய் மனைவியை அழைத்து," ஏய் நாச்சி இங்க வாயேன் இது யார் தெரியுமில்ல,,, குலசேகரன் முழுப்பேரு குலேசுதான் நான் கூப்டுவேன்... நாச்சி !நானும் இவனும் அந்தநாளில் அடிச்சிருக்குற கொட்டம் கணக்கு வழக்கில்ல .."என்றான்

மறுபடி குலேசைப்பார்த்து," குலேசு பம்பாய்க்கில்ல போனே? எப்படி இருக்கே புள்ளை குட்டிங்க சுகமா?" என்று கேட்டான்

" எல்லாரும் நலம்...மணவாளா!உன்னை இவ்ளவு நாள் கழிச்சிப்பார்க்கிறபோது எத்தனை சந்தோஷமா  இருக்கு தெரியுமா? நம்ம ஊரே மாறிப்போயிருக்குடா இப்போ... ஆனா நீமட்டும் மாறவே இல்ல"

மணவாளன் மெல்லச் சிரித்தான்

"சரி கிளம்பு ?"என்றான் குலசேகரன்

"எங்கே?"
 
"முதலிலே கொள்ளிடத்திலே குளிக்கணும்.. எம்பெருமான் சேவை பண்ணீக்கணும் அப்புறமா கோபுரத்திருப்பணிக்காக ஒரு சின்னத்தொகை கொண்டுவந்திருக்கேன் அதை செலுத்திடணும் அவ்வளவுதான் மணவாளா"

"ஓ!புறப்படலாமே? நாச்சி! மதியத்துக்கு சாப்பாடு  தயார் செய்துவை." என்றவன் ஏதோ நினைவு வந்தவனாய் உட்புறம் சென்று சமையற்கட்டில் மனைவியிடம்  "வராதவன் வந்திருக்கான், ஒருபாயசம் படைச்சாதான் மரியாதை.." என்று  நெளிந்தான்.

நாச்சியாரம்மாள் தலையை அசைத்தாள். ஆனல் அவள் எப்படி பாயசம் வைப்பாள் என்பது மணவாளனுக்குப் புரியாத புதிராக இருந்தது  பிள்ளையாண்டானோ  கிடைத்த இருபதை அந்த ஆந்திரக்காரனுக்கு தானம் வார்த்து விட்டான், தானும் பைசா காசு கொடுக்கவில்லை

செப்படிவித்தை செய்தாலே ஒழிய அடுப்பில் பால் பொங்கவே வழி இல்லை ஆயினும் நாச்சியார் தலை அசைத்ததிலிருந்து ஒருபாரம் நீங்கிய நிம்மதி நண்பர்கள் கொள்ளிடத்தை நோக்கிப் புறப்பட்டார்கள்

வழிநெடுக பழைய கதையெல்லாம் குலசேகரன் விவரித்தான்.

 பம்பாயில் சொந்தவீடு ஒரு கார் மகன் அமெரிக்காவில்  படிக்கிறானாம்...

 கேட்கக்கேட்க  மணவாளனுக்குப் பெருமையாக இருந்தது.
 
ஒருகாலத்தில் கோபுரமாயிருந்த தன்னுடைய வம்சம்,  குப்பை மேடாகிவிட்டதையும் ஒருகாலத்தில், குப்பைமேடாயிருந்த் குலசேகரனின் வம்சம் இப்போது கோபுரமாகி விட்டதையும் எண்ணிப்பார்க்கிறபோது அந்த வியப்பு பெரிய வினாக் குறீயாக மாறிற்று.

"மணவாளா!  ஒரு பத்தாயிரம் ரூபா கோபுரத் திருப்பணிக்குக் கொடுக்கலாம்னு இருக்கேன் ஆனாலும் பாருடா எனக்கு உன்னைப் பார்த்தா  பெருமையாகவும் கொஞ்சம் பொறாமையாகவும் கூட இருக்கு. என்னால தரமுடிஞ்சதெல்லாம்  வெறும்  பத்தாயிரம் ரூபாய்தான் ..ஆனா  நீ, உன் உழைப்பை ரத்தத்தை வேர்வையை மூச்சை என்று எல்லாத்தியும்  ஆத்மார்த்தமாய் பெருமாளுக்குச்  செலுத்தி இருக்கியேடா!
நானெல்லாம் காசுபணம் என்று ஊரைத் துறந்து போனவன் ஆனால் நீ அப்படி இல்லடா..பாசுரம் ஒண்ணு உண்டே..

தூராத மனக்காதல் தொண்டர்தங்கள்
 குழாம் குழுமித் திருப்புகழ்கள் பலவும் பாடி
ஆராத மனக்களிப்போடழுத கண்ணீர்
 மழை சோரநினைந்துருகியேத்தி, நாளும்
சீரார்ந்தமுழவோசை பரவை காட்டும்
 திருவரங்கத்தரவணையில் பள்ளி கொள்ளும்
போராழியம்மானை கண்டுதுள்ளிப்
 பூதலத்திலென்று கொலோ புரளூம் நாளே!"


மணவாளனுக்கு இந்தப்பேச்சு சற்று சமாதானமாக இருந்தாலும் நேர்ந்துகிட்டதை தன்னால் நிறைவேற்றமுடியாது என்பதால் ஏற்பட்ட ஏக்கம் பெருமூச்சாக வெளிப்பட்டது "மணவாளா !என்னால இந்தப் பத்தாயிரம் ரூபா இப்போ கொடுக்கமுடியுதுன்னா அதுக்கு யார் காரணம் தெரியுமா?" வினவினான் குலசேகரன்

மணவாளன் விழித்தான்

"நீதான் காரணம், உங்ககுடும்பம் காரணம் ! நீங்க ஏத்தி வச்ச விளக்கு கார்த்திகை தீபமாய் எரியுதுடா.."

"குலேசு, நீ என்ன சொல்றே?"

"ஏண்டா?  மறந்திட்டியா? அப்போ நான் பம்பாய் போகிறபோது உங்கப்பா என்னை ஆசிர்வாதம் செய்து பணம் கொடுத்தாரே,ஞாபகமில்லயா உனக்கு?"

"அப்படியா? இருக்கலாம்... அவர் காலத்தில் செயலாய் இருந்தாரு கொடுத்தாரு.."

"அந்தப்பணத்தில் தாண்டா  என் வாழ்க்கையே உன்னதமான நிலைக்கு வந்தது..அட..பணத்தைவிட்டுத்தள்ளு.. உங்கப்பாவிடம்  பெற்ற ஆசிர்வாதம் தான் என்னை இந்த நிலைமைக்கு  கொண்டுவிட்டிருக்குதடா.... மணவாளா..உங்க குடும்பத்துக்குப்பட்ட கடனை எப்படி அடைக்கபோறேனோ தெரியல...  பெரியவர்களுக்குச் செய்தால் அதுவே பெருமாளுக்குச் செய்தமாதிரி என்பார்கள். உங்கப்பா பெரியவர் உயர்ந்தவர் அவரோட குடும்பத்துக்குப் பட்ட கடனை இப்போ நான் செலுத்தபோறேன்.. என்னால தரமுடிஞ்சது  பணம்தான் அதை உன்னிடம் தருகிறேன் நீ அதை உன் அப்பா பெயரில் கோபுரத்திருப்பணிக்கு செலுத்துவியாடா?"

மணவாளனுக்கு கண்களில் நீர் சுரந்தது.

அவனுடைய தெய்வம்  தனது கோபுரத் திருப்பணிக்கு அவன் நேர்ந்து கொண்டதை எவ்வளவு அழகாய் கணக்காய் வசூல் செய்து கொள்ளத் திட்டமிட்டுவிட்டது?

எதிரே குலசேகரன், கோபுரமாய், தன்னுடைய கனவின் நனவாய், ஆதர்சமாய் நிற்கக் கண்டான்.

உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |