தமிழோவியம்
கட்டுரை : மடியில் இரசாயன குண்டு
- குழலி

போபாலில் நடந்த கொடுமை இன்னும் நம் நெஞ்சை விட்டு அகலவில்லை, மெத்தில் ஐசோ சயனைடு என்கிற விட வாயு கசிந்து உருக்குலைந்த மக்களும் இன்னமும் பிறந்து கொண்டிருக்கும் பாதிப்படைந்த குழந்தைகளும் அந்த கொடூரத்தின் சாட்சிகளாய் நம் முன்னே.

கடலூர் கெடிலம்,தென் பெண்ணை, உப்பனாறு என்ற மூன்று ஆறுகள் கடலில் சங்கமிக்கும் ஊர், தமிழகத்தின் தலைநகர் சென்னையை எளிதில் இணைக்கும் சாலைகளையும் மூன்றரை மணி நேர பயண தூரத்தையும் கொண்டது, இரயில் சந்திப்பு நிலையமும், துறைமுகமும் ஆக அத்தனை தரை வழி, கடல் வழிகளாலும் இணைக்கப்பட்ட போக்குவரத்திற்கு எளிதான ஒரு நகரம், தடையில்லா மின்சாரம் கிடைக்க அருகிலேயே நெய்வேலி அனல் மின் நிலையம், இத்தனையும் வரமென்றால் இந்த வரமே சாபமாகிவிட்டது கடலூருக்கு.

கடலூர் சிதம்பரம் சாலையில் கடலூர் பழைய நகரத்தின் எல்லையில் ஆரம்பிக்கும் சிப்காட் தொழிற்பேட்டை, இரசாயன தொழிற்சாலைகள் நிறைந்த இந்த பகுதியில்  பல கிராமங்கள் உள்ளன,  எண்பதுகளின் இறுதியில் இந்த தொழிற்பேட்டை ஆரம்பிக்கப் பட்ட போது வேலைவாய்ப்புகள் பற்றிய உறுதிகளும்
55 வார்த்தை Fiction - 4

ஆணா? பெண்ணா?
- மாதங்கி

அரசாங்க பிரசவ ஆஸ்பத்திரியின் லேபர் வார்ட். வெங்கடராமனும் ஜெயாவும் வாயிலில் கவலையோடு உட்கார்ந்திருந்தார்கள். கடவுளே, இந்த பிரசவத்திலாவது சம்பந்திகள் விருப்பப்படி குழந்தை பிறக்க வேண்டும். அப்போதுதான் புகுந்த வீட்டுக்கு குழந்தையுடன் அழைத்துச் செல்வார்களாம். இல்லாவிட்டால் பிறந்த வீட்டிலேயே இருக்க வேண்டுமாம். சே, என்ன மனிதர்கள். அம்மா " என்ற அலறல் தொடர்ந்து குவா குவா சத்தம். குழந்தை சுத்தம் செய்யப்பட்டு எடுத்துவரப்பட்டது.

"மீண்டும் ஆண் குழந்தை நான் என்னம்மா செய்வேன்" படுக்கையில் இருந்த மகன் சீனு ஓவென்று அழுதான்.

அதனால் நல்ல வாழ்க்கையை எதிர்பார்த்தும் இந்த இரசாயன தொழிற்சாலைகள் பற்றிய எதிர்ப்பு முனகல்கள் கூட எழவில்லை,இன்றைய நிலையில் கடலூருக்கு ஓரளவு வேலை வாய்ப்பும் தந்து கொண்டிருக்கின்றது இந்த சிப்காட்,  கடந்த சில ஆண்டுகளாக சாதி மோதல்கள் அதிகமில்லாமல் இங்கே நிலவி வரும் அமைதிக்கு இதுவும் ஒரு காரணம்.

அந்த பகுதியை பேருந்தில் கடக்கும் பத்து நிமிட நேரத்திலேயே  அழுகிய முட்டை நாற்றத்தை போன்ற நாற்றம் மூச்சு திணற வைக்கும், சில சமயங்களில் அந்த இரசாயன தொழிற்சாலைகளிலிருந்து சில மணி நேரங்களுக்கு ஒரு முறை திறந்து விடப்படும் கழிவு வாயு மிகக் கடுமையான நாற்றத்தோடு மூச்சு திணற வைக்கும்.

அவ்வப்போது கிராமவாசிகள் இந்த கழிவு வாயுக்களினால் மயக்கமடைவதும் நடந்து கொண்டு தான் இருக்கின்றது, அந்த நேரத்தில் மக்களிடையே சில முனகல்கள் ஏற்பட்டு பின் அடங்கிவிடும்.

SIPCOT Area Community Environmental Monitors (SACEM) இந்த பகுதியில் 12 விட வாயுக்கள் காற்றில் கலந்துள்ளதாக தெரிவிக்கின்றது, மேலும் இங்குள்ள காற்று மனிதர்கள் சுவாசிப்பதற்கு ஏற்றதாக இல்லை என்றும் சோதனைகள் மூலம் தெரிய வந்துள்ளது. அமெரிக்க தரக் கட்டுப்பாட்டின் படி இங்கிருக்கும் காற்றில் உள்ள 12 வாயுக்களில் 7 வாயுக்கள் மிக ஆபத்தானவையாக குறிப்பிடப்படுகின்றன.

இந்த காற்றில் உள்ள Trichloroethylene என்கின்ற வேதிப்பொருள் புற்று நோய் ஏற்படுத்த கூடியது, இது US Environmental Protection Agency (USEPA) தரக்கட்டுப்பாட்டில் அனுமதிக்கப்பட்டதை விட 400 மற்றும் 900 மடங்கு அதிகமுள்ளதாக இரண்டு சோதனைகளில் தெரியவந்துள்ளது மேலும் Carbon disulphide, bromomethane, trichloroethene, 4-methyl 2-pentanone, acrolein, methylene chloride and hydrogen sulphide என்ற வேதிப்பொருட்களும் அமெரிக்க தரக்கட்டுபாட்டின் அளவைவிட பல நூறு மடங்கு அதிகமாக உள்ளது.

இந்த பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து கொண்டு வந்துள்ளது, சில ஆண்டுகளுக்கு முன் 30 அடி ஆழத்தில் கிடைத்துக்கொண்டிருந்த நீர் இன்று சில நூறு அடி ஆழத்தில் கூட கிடைக்கவில்லை, ஒரு நாளைக்கு இங்குள்ள தொழிற்சாலைகள் பயன்படுத்தும் நீரின் அளவு இருபது மில்லியன் லிட்டர்,  கிடைக்கும் நிலத்தடி நீரும் வெளிர் மஞ்சள் நிறத்தில் உள்ளது, தொழிற்சாலை கழிவு நீர் நிலத்தடி நீரை அழிப்பதுடன் மீன் வளத்தையும் அழித்துள்ளது. இந்த நீரில் குளிப்பதால் தோல் அரிப்பு பிரச்சினைகள் வருகின்றன.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB )  காற்றில் உள்ள மாசு அளவை கட்டுப்படுத்த எல்லா முயற்சிகளும் எடுப்பதாக கூறினாலும் சோதனைகள் அதை உறுதி செய்யவில்லை.

அவ்வப்போது அரசியல் கட்சிகள் இந்த பிரச்சினையை கையில் எடுத்து போராடினாலும் எதுவும் ஒரு முடிவுக்கு வரவில்லை.

மீன் பிடி தொழிலின் பாதிப்பினாலும் நம்மால் முடிந்தது ஊரை விட்டு கிளம்புவது மட்டுமே என்ற எண்ணத்தினாலும் பலர் சென்னைக்கு இடம் பெயர்கின்றனர்.

சிலருக்கு கிடைக்கும் வேலைவாய்ப்பிற்காகவும், எதிர்த்து போராட முடியாமலும் எம் மக்கள் சோர்ந்து கிடக்கின்றனர் மடியில் இராசாயன குண்டை கட்டிக்கொண்டு என்று வெடிக்குமோ என்ற பயத்தில்.

 

தகவல்களுக்கு நன்றி
http://www.flonnet.com/fl2212/stories/20050617003403100.htm
http://www.thesouthasian.org/archives/000370.html
http://sipcot.com/Industrial_complex_cuddalore.htm
http://www.bhopal.net/oldsite/friendsandallies/cuddalorepressrelease.html

எம் ஊரை காக்க உங்கள் புகாரை இந்த சுட்டியிலிருந்து அனுப்புங்களேன்.
http://www.petitiononline.com/snd303js/petition.html

Copyright © 2005 Tamiloviam.com - Authors