தமிழோவியம்
கட்டுரை : திருமணமும், 6-ம் வீடும்
- ஜோதிடரத்னா S. சந்திரசேகரன்

திருமணம் என்றால் உடனே நினைவுக்கு வருவது 7-ம் வீடு தான்.  ஏனென்றால் அது களத்திர ஸ்தானம் என்றழைக்கப்படுகிறது.  7-ம் வீடு களத்திர ஸ்தானமென்றால் 7-ம் வீட்டிற்குப் 12-ம் வீடான 6-ம் வீடு திருமண பந்தத்திற்கு எதிர்மறையான பலனைக் கொடுக்கும் வீடாகும்.  தம்பதியர்க்குள் கருத்து வேற்றுமை, பிரிவு, ஆகியவை களைக் கொடுக்கும்.  ஆகவே திருமணப் பொருத்தம் பார்க்கும்போதே 7-ம் வீடும், 6-ம் வீடும் சம்மன்தப்பட்டு இருக்கிறதா எனப் பார்த்து ஜாதகங்களைச் சேர்த்தல் நலம். வெறும் தசப் பொருத்தங்களை மட்டும் பார்த்து ஜாதகங்களை இணைப்பது அவ்வளவு நல்லது அல்ல; சிலர் தசப் பொருத்தம் மட்டும் பார்ப்பர்; சிலர் சமசப்தமம் இருந்தால் மட்டும் போதுமென்று ஜாதகங்களை இணைப்பர். சிலர் நட்சத்திர ஆதிக்க பலம் உள்ளவைகளான மிருகžரிஷம், மகம்,சுவாதி, அனுஷம் ஆகிய 4 நட்சத்திரங்களுக்கும் தசப்பொருத்தம் தேவை இல்லை என்று ஜாதகங்களைச் சேர்ப்பார்கள். னாம் 6-ம் வீடும், 7-ம் வீடும் சமமந்தப் பட்டால் எவ்வாறு பாதிப்புக்களை, பாதகங்களை ஏற்படுத்துகின்றன அஎன்று பார்ப்போம்.

உதாரண ஜாதகம் இங்கே சொடுக்கவும் (Right click and save target as)

உதாரண ஜாதகம் எண் 1- ஐப் பாருங்கள்.

இது கடக லக்கின ஜாதகம். லக்கினத்தில் குரு. 7-ம் வீட்டில் சந்திரன். இது கஜகேஸ்வரி யோகம்.  ஆகவே மிகுந்த நல்ல பலனைக் கொடுக்கும் என்று கூறலாம். ஆனால் உண்மையில் அவ்வாறில்லை.  திருமணமாகி சில மாதங்கள்தான் கணவன், மனைவியாக வாழ்ந்தனர்.  அதற்குப் பின் பிரிவுதான். திரும்பவும் அவர்கள் சேரவே இல்லை.  இதற்குக் காரணம் என்ன?  7-ம் வீட்டிற்கு குருவின் பார்வை. குரு பார்க்கக் கோடிப் புண்ணியம் அல்லவா? என்று நீங்கள் கேட்க்கலாம். குருவின் பார்வை  நம்மையைச் செய்யவில்லை. மாறாகத் தீமையைத்தான் செய்து இருக்கிறது. எப்படி? குரு 6-ம் வீட்டிற்கு அதிபதியல்லவா? 6-ம் வீடு 7-ம் வீட்டிற்கு எதிரிடையான பலனைக் கொடுக்க வேண்டுமல்லவா? 7-ம் வீடு திருமணமென்றால் 6-ம் வீடு பிரிவினை அல்லவா? ஆக குருவின் பார்வை திருமண வாழ்க்கையில் பிரிவினையைக் கொடுத்து விட்டது. அதைத் தவிர செவ்வாய் 7-ம் வீட்டை வேறு பார்க்கிறார். ஆக இருவரும் சண்டை போட்ட்டுக் கொண்டு பிரிந்து விட்டனர்.


இரண்டாம் ஜாதகத்தை பாருங்கள்.

இது கும்ப லக்கின ஜாதகம். லக்கினத்தில் குரு. 7-ல் சந்திரன். இதுவும் கஜகேஸ்வரி யோக ஜாதகம் தான். உடனே களத்திரஸ்தானத்தில் கஜகேஸ்வரி யோகம் ஏற்படுவதால் திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும் என்ற முடிவுக்கு வந்தால் ஏமாற்றமாகத்தான் இருக்கும்.  7-ல் சந்திரன். அவர் யார்? அவர் 6-ம் வீட்டின் அதிபதி. 6-ம் வீட்டின் அதிபதி 7-ல்; 7-ம் வீட்டின் அதிபதி சூரியன் 6-ல்; இரண்டு அதிபதிகளும் பரிவர்த்தனையாகி விட்டார்கள்.  இந்தப் பரிவர்த்தனை திருமண வாழ்க்கையை முற்றிலுமாகக் கெடுத்து விட்டது. 7-ம் வீடு, 6-ம் வீடும்  பரிவர்த்தனை யில் சம்மந்தப்பட்டு விட்டதால் திருமண வாழ்க்கை கசந்ட்து, இவர் மனைவியுடன் வாழ்ந்ட்த மாதங்கள் மூன்று மட்டுமே. சுமார் 60 வயது வரை வாழ்ந்த இவர்  தனி
மையிலேயே தன் வாழ்நாட்களைக் கழித்தார். பார்த்தீர்களா 6-ம் வீடு செய்கின்ற கோலத்தை.


மூன்றாவது ஜாதகத்தைப் பாருங்கள்.

துலா லக்கின ஜாதகம்.  7-ம் வீட்டிற்குக் குருவின் பார்வை.  குரு 6-ம் வீட்டின் அதிபதியல்லவா? 6-ம் வீட்டின் அதிபதியாகி 7-ம் இடத்தைப் பார்ப்பதால் திருமண பந்தம் Divorce வரை சென்று விட்டது.  ஆம். திருமணபந்தம் விலகி இருவரும் விவாக ரத்துச் செய்து விட்டனர்.


நான்காவது ஜாதகத்தைப் பாருங்கள்.

இதுவும் துலா லக்கின ஜாதகம். லக்கினத்தில் குரு. 7-ம் வீட்டிற்கு 6-ம் வீட்டிற்குடைய குருவின் பார்வை.  இத்துடன் 7-ல் சனி வேறு.  திருமணமாகி 3-மாதங்கள்
சேர்ந்து இருந்தனர்.  பின்பு சண்டையிடுக் கொண்டு அந்தப் பெண் தாய் வீட்டில் தஞ்சமடைந்து விட்டாள்.  திருமணமாகி ஒன்றறை ஆண்டுகள் ஆகி இருக்கின்றன. அதில் 3 மாதங்கள்தான் சேர்ந்து இருந்தனர். இன்னும் சேர வில்லை.  பார்த்தீர்களா 6-ம் வீட்ட்டதிபர் கு 7-ம் வீட்டைப் பார்த்ததினால் விளைந்த விபரீதத்தை. சரி! இவர் மனைவியின் ஜாதகத்தைப் பார்ப்போமா?

 ஐந்தாம் ஜாதகதைப் பாருங்கள்

இவர் ரிஷப லக்கினம்.  லக்கினத்தில் செவ்வாய், சனி, சுக்கிரன்.  மூவரும் 7-ம் இடத்தைப் பார்க்கிறார்கள்.  செவ்வாய், சனி இரண்டும் இயற்கையிலேயே அசுப கிரகங்கள்.  லக்கினத்தில் இருப்பதால் இவரின் குணம் கெட்டு விட்டது. செவ்வாய் இருப்பதால் முரட்டு சுபாவம் உள்ளவராகவும், சனி இருப்பதனால் மிகத் தாழ்ந்த சுபாவம் உள்ளவராகவும்  இருக்கின்றார். இவர் தன் கணவருடன் சேராததற்குக் காரணம் இவர் சுபாவமே. தன் கணவன், தன் தாயார், தந்தையரை விட்டு தன்னுடன் வர வேண்டுமென்பது இவரது வாதம். இவர்கள் பிரிந்து வாழ்வ
தற்கு இதுதான் காரணம். செவ்வாய், சனி இருப்பதுடன் லக்கினத்தில் சுக்கிரனும் இருக்கிறார்.  சுக்கிரன் யார்? சுக்கிரன் 6-ம் வீட்டிற்கு அதிபதி. 6-ம் வீட்டின் அதிபதி லக்கினத்தில் இருந்து 7-ம் வீட்டைப் பார்ப்பதனால் அவர்களுக்குள் பிரிவு ஏற்படக் காரணமாயிற்று.  சுக்கிரன் ஓர் அழகிய கிரகமல்லவா? அவர் லக்கினத்தில் இருப்பதனால் அவருக்கு அழகிய உருவ அமைப்பை சுக்கிரன் கொடுத்து விட்டார். ஆனால் அதே சுக்கிரன் 6-ம் வீட்டு அதிபதியாகி 7-ம் வீட்டைப் பார்த்ததினால் பிரிவையும் உண்டாக்கி விட்டார்.

பொதுவாக ஜாதகங்களைச் சேர்க்கும்போது 10-ப் பொருத்தங்களை மட்டும் பார்க்காது 7-ம் வீடு பாதிக்கப் பட்டு இருக்கிறதா என்று பார்த்துச் சேர்ப்பது நல்லது.  அதே போன்று சந்திரனுக்கு செவ்வாய், சனி, ராகு போன்ற தீய கிரகங்கள் சேர்க்கை இல்லாது பார்த்துச் சேர்ப்பது நல்லது. இவர்கள் சேர்க்கை இருப்பின் அந்த ஜாதகத்தை ஒதுக்கிவிடவும்.

 

Copyright © 2005 Tamiloviam.com - Authors