ஒரு சமூக சரித்திரம்
ஒரு சரித்திர நாவல் நிச்சயம் சமூக நாவலின் சாயலைக் கொண்டிருக்கமுடியாது. அதே மாதிரி சமூக நாவலில் பொதுவாக சரித்திர வாசனை இ
ருக்காது. வெங்கடேஷின் "இருவர்" ஒரு சமூகத்தின் சரித்திரம் என்பதால் முற்றிலும் வேறுவிதமானதொரு வாசிப்பு அனுபவத்தைத் தருகிறது.
தமிழ் வெகுஜன பத்திரிகை உலகம் குறித்த கலைப்பதிவுகள் மிகவும் குறைவு. இத்தனைக்கும் தமிழகத்தின் சரித்திரம் என்று எழுதினால் ஒரு முழு ப
¡கம் வரக்கூடிய அளவுக்கு தினசரிகளூம் வார இதழ்களும் மாத இதழ்களும் முக்கியப் பங்காற்றியிருக்கின்றன. ஒரு சுதேசமித்திரனை மறந்துவிட்டு
சுதந்தரப் போராட்ட காலத்தை நம்மால் நினைத்துப் பார்க்கமுடியுமா? ஒரு கலைமகளையோ மணிக்கொடியையோ கல்கியையோ விகடனையோ
கணையாழியையோ ஒதுக்கிவிட்டு சிறுகதை, புதினங்கள் குறித்து சிந்திக்கமுடியுமா? தொலைக்காட்சியெல்லாம் நேற்று முளைத்தக் காளான். தமிழர்
களின் வாழ்வோடு ஒன்றியவை பத்திரிகைகள் தாம்.
ஆனால் இந்தப் பத்திரிகைகளின் பெயரும் செயலும் தெரிந்த சமூகத்துக்கு இதன் பின்னே இருக்கும் உலகம் தெரியாது. எதற்குத் தெரியவேண்டும்
என்று கேட்கலாம். ஒரு கல்யாணச் சாப்பாட்டை ரசித்துவிட்டு சமையல்காரரைக் கூப்பிட்டு தாளிப்பில் சேர்க்கும் நெய் ஆவினா, ஆரோக்யாவா எ
ன்று கேட்பது போன்ற விஷயம் தான் இது. பதில் சொல்வதும் மறுப்பதும் அவர் இஷ்டம். கேட்கும் ரசிகரின் ஆர்வத்தைக் குறைசொல்ல முடியாதல்
லவா?
வெங்கடேஷின் இந்த நாவல் பத்திரிகை உலகைச் சுற்றி நடக்கிறது. அல்லது, ஒரு பத்திரிகையின் 80 பக்கங்களுக்குள் நடக்கிறது என்றும் சொ
ல்லலாம். பத்திரிகையின் பக்கங்கள் என்பவை துணை ஆசிரியரின் வியர்வையால் செய்யப்படுபவை. நிருபர்களின் ரத்தத்தால் அச்சிடப்படுபவை. க¨
லப்பணி தான். ஆனால் அச்சில் வார்க்கும் பொம்மைகள் போன்ற கலை. அந்த இயந்தரத்தனத்துக்குள் ஒரு நளினம். அந்த அவசரத்துக்குள் ஒரு
அழகு. அந்த நெருக்கடிக்குள் ஒரு நகைச்சுவை. வித்தை தான். சந்தேகமில்லை.
வெங்கடேஷின் பார்வை, வித்தையைக் காட்டிலும் வித்தைக்காரர்களின் வாழ்க்கைமீது அதிகம் படிகிறது. ஒரு பத்திரிகையாளனின் மனம் எந்நேரத்
தில் எப்படி இயங்கும் என்று இலேசில் வரையறுத்துவிட முடியாது. அவனது கொதிப்புகள் விவரிப்புக்கு அப்பாற்பட்டவை. அடையாளம் தேடும் வாழ்
க்கை தான். ஆனால் ஏணியாகவே இருந்துவிட்டுப் போகச் சபிக்கப்பட்டவர்கள். வாழ்ந்து பார்க்காதவரை எல்லாமே செய்தி அறிக்கை தான்!
ஆனால் இது ஒரு பத்திரிகையாளனாக வாழ்ந்து பார்த்தவரின் அனுபவப் பதிவு என்பதால் இளஞ்சூட்டு ரத்தத்தின் முழு வாடையை நுகரமுடியும். கதை
மிக எளிமையானது.
பத்திரிகை ஒன்றின் துணை ஆசிரியராக இருக்கும் கதாநாயகர்கள் இருவரில் ஒருவருக்கு சினிமாவுக்குப் போகும் கனவுகள். வங்கி வேலையை வி
ட்டுவிட்டு பத்திரிகைப் பணிக்கு வந்துவிடலாமா என்று இன்னொரு கதாநாயகனுக்குக் கனவு.
பொதுவாக மிடில் க்ளாஸ் மனிதர்களின் கனவுக்குப் பெரிய அந்தஸ்து ஏற்பட்டுவிடுவதில்லை. பூத்த வேகத்தில் உதிர்ந்துவிடும் பொய்க்கனவுகளோடு
வாழ்க்கை ஓடிக்கொண்டிருப்பது தான் யதார்த்தம். அப்படிப் பார்த்தால் இருவரின் இந்த இரண்டு கதாநாயகர்களும் மிக வேகமாகப் புறப்பட்டு எங்
கும் போகாமலேயே மிக நீண்ட பயணம் மேற்கொண்டு, புறப்பட்ட இடத்திலேயே பூரண திருப்தி காணுகிற கதை என்று ஒரு வரியிலும் சொல்லலா
ம்.
மாறாக தமிழ் வார இதழ் சூழலையும் அதில் சிக்கிக்கொள்ளும் எழுத்து தாகமெடுத்த அப்பாவிப் பத்திரிகையாளர்களின் நிலைமையையும் மிக அனுத
¡பத்தோடு கவனித்துப் பதிவு செய்திருக்கும் ஒரு துறை சார்ந்த படப்பிடிப்பு என்றும் சொல்லலாம்.
இந்த நாவல் சொல்லும் விஷயங்களை விட, சொல்லாமல் விடும் விஷயங்கள் மிக அதிகம். சமீபத்திய சரித்திர நிகழ்வுகள் பல நாவலெங்கும் ஒவ்வெ
¡ரு அத்தியாயத்தில் மிகச் சுருக்கமாக விவரிக்கப்பட்டு அப்படியே மறக்கப்படுகின்றன. சரித்திரத்துக்கு நமது சமூகம் கொடுக்கும் அங்கீகாரம் அதுவே
என்பதை உணர முடிந்தால் நாவலின் முப்பரிமாணம் புரியும்.
தீவிர வாசகர்கள் அவசியம் படிக்கவேண்டிய முக்கியமான நாவல் இது. இதற்கு முன் ரொம்ப வருஷத்துக்கு முன்னால் நா.பார்த்தசாரதி பத்திரிகைத்
துறை குறித்து ஒரு நாவல் எழுதியிருக்கிறார். சுந்தரக்கனவுகள். அது தினசரிப் பத்திரிகை உலகம் குறித்துப் பேசுகிற ஒரு நாவல். வெங்கடேஷின்
இந்த நாவல் வார இதழ் உலகைக் காட்டுவது.
ஆனால், வார இதழ் உலகம் என்பதற்கும் அதில் வாழ்பவர் உலகம் என்பதற்கும் மேலதிக வித்தியாசம் இல்லை என்பது தெரிந்திருக்கவேண்டும்.
நன்றி: கல்கி வார இதழ்
|
பாஸ்கர், சதா மற்றும் தொன்னூறுகள்
வங்கிப் பணியில் இருந்துகொண்டு, தன்னுள்ளிருக்கிற பத்திரிகை ஆர்வத்தின் தீவிரத்தைத் தாளமுடியாமல் திணறும் சதாவுக்கு, இதனால் தன் தொ ழிலுக்கு துரோகம் செய்கிறோமோ என்கிற கவலை, முழுநேரமும் பத்திரிகைத் துறையில் ஈடுபட்டால்தான் என்ன என்று யோசிக்கிறான், நினைப்ப¨ தச் செயலாக்க முடியாதபடி இறுக்கும் யதார்த்தத்தின் வேலிகள். அவனது நண்பன் பாஸ்கர், முழுநேரப் பத்திரிகையாளன், ஆனால், "இன்னும் வளர§ வண்டும்" என்கிற முழுமையின்மை எண்ணமும், திரைத்துறையில் சாதிக்கிற ஆசையும் அவனைச் செலுத்திக்கொண்டிருக்கிறது. நண்பர்கள் இருவருக்கும் அக்கரைக்குப் போகிற ஆர்வம் இருப்பினும், கையிலிருப்பதை உதறிவிட்டுச் செல்லத் தயங்குகிறார்கள்.
இப்படியாக, தான் இருக்கிற படியிலிருந்து இன்னொரு நிலைக்குத் தாவ விழையும் பாஸ்கரும், சதாவும்தான் "இருவர்" நாவலின் கதைநாயகர்கள். என்றாலும், "இருவர்" இவர்களின் கதை மட்டுமில்லை. ஆசிரியரே தன் உரையில் குறிப்பிடுவதுபோல, தொன்னூறுகளின் கதை.
சதா, பாஸ்கர் இருவரின் கதையை இரண்டு இழைகளாய் எடுத்துக்கொண்டு, அத்தியாயத்திற்கு ஒன்றாய் சம்பவங்களைப் பின்னிச் செல்வது நல்ல உத்தி, இருவரின் கச்சிதமான நாவல் அமைப்பிற்கு இந்த உத்தி பெருமளவு பயன்பட்டிருக்கிறது. ஒரு பாட்டில் பணக்காரராகும் சினிமாத்தனம் த லைகாட்டாமலிருப்பது, நாவலின் யதார்த்தப் போக்கை உறுதிசெய்கிறது. நண்பர்கள் இருவரின் கவலைகளும், இயல்பவை, இயலாமைகளும், தன் னைச் சுற்றி நடக்கிற சம்பவங்கள்தான் தங்கள் வாழ்க்கையையே தீர்மானிக்கிறதோ என்றெண்ணும் வேதனையும், அவர்கள்மேல் மற்றவர்களின் அக் கறையும் கதைச் சூழலோடு ஒன்றும்படி மிக இயல்பாய் சொல்லப்பட்டிருக்கிறது.
சினிமா வாய்ப்பு கேட்டுப்போன இடத்தில், பத்திரிகை புத்தி தலைகாட்ட, "பெரிய" இயக்குநரிடம் சேர்கிற வாய்ப்பை பாஸ்கர் இழந்து திரும்புகிற காட்சியும், ஒரு புது இசையமைப்பாளனின் வெற்றி அவனுக்குள் ஆயிரம் கேள்விகளை, அலசல்களை, குற்றச்சாட்டுகளை, முடிவுகளை ஏற்படுத்துகிற பகுதியும், வங்கித் தொழிலுக்குத் தான் உண்மையாக இல்லையோ, தன் "புத்திசாலித்தன"த்தால், அல்லது மற்றவர்களின் "அறியாமை"யால் பிறரை ஏம ¡ற்றி சலுகை பெறுகிறோமோ என்கிற சதாவின் குற்ற உணர்ச்சியும், "பத்திரிகைத் துறைக்கே முழுசாய் வந்துவிடட்டுமா ?" என்று ஒரு ஆசிரியரிடம் கேட்டு, அவர் அதை ஏற்றதும் அவன் அதீதமாய் உணர்ச்சிவயப்பட்டு நெகிழும் காட்சியும் நாவலில் அனுபவித்துப் படிக்கவேண்டிய பகுதிகள்.
"எனக்கு சென்னையை மட்டும்தான் முழுதாய்த் தெரியும்" என்று நாவலில் யாரோ சொல்கிறார்கள், அது கதாசிரியரைத்தான் குறிக்கிறதோ எ ன்றெண்ணுமளவு, நாவல் முழுதும் அங்கங்கே சென்னை பற்றிய அழகிய குறுவர்ணனைகள், அபூர்வமாய்ப் பிற ஊர்களும், கலவர பூமிகளும் வந்துபோ கின்றன. சுருக்கமான வாக்கியங்களில் காட்சியை நம் கண்முன்னே நிறுத்திவிடுகிற ஆர். வெங்கடேஷின் லாவகத்துக்கு, "தண்ணீர் அடிக்கும் ¨ பப்பின் நீண்ட கைகூட வளைந்துகிடந்தது" என்ற ஒரே ஒரு வர்ணனையை உதாரணம் சொன்னால் போதும்!
உலக அளவில் புகழ்பெற்ற சிறந்த நாவல்களை வாசித்துப் பார்க்கையில், தீவிர நாவல் இலக்கியம், சரித்திரப் பதிவுக்கான அழகியல் கருவியாக பி ரயோகிக்கப்படுவதைக் காணமுடியும், எழுத்தாளர் ஆர். வெங்கடேஷின் முதல் நாவலான இருவர் அந்தப் பணியைச் செவ்வனே செய்திருக்கிறது. மே ற்சொன்ன இருவரின் கதாபாத்திரங்களையும், அவர்கள் வாழ்வில் நடக்கிற சம்பவங்கள், மாற்றங்கள், தடுமாற்றங்களின் உளவியல் அலசலையும் ¨ மயமாய் வைத்துக்கொண்டு, பின்னணியில் தொன்னூறுகளில் உலகெங்கும் நடைபெற்ற சம்பவங்களைக் கோர்வையாய்ப் பின்னியிருக்கிறார். பாஸ்க ரின் "திடீர்" திருமண ஏற்பாடுகளை விவரித்திருக்கும் அதே சுவாரஸ்யத்துடன், தலித் இயக்கங்களின் தேவை, சிற்றிதழ்களின் பின்னணி, வங்கிகள் § தசியமயமாக்கப்படல், நல்ல திரைப்படங்கள், மோசமான திரைப்படங்கள், தேர்தல்கள், இன்றைய பள்ளிச் சிறார்களின் மனோநிலை என்று பலதையும் அலசியிருக்கிறார் ஆர். வெங்கடேஷ். நாடகத்தை ரசிப்பதுபோல், பின்னாலிருக்கிற காட்சிச்சீலையின் அழகையும் நம்மால் ரசித்து அனுபவிக்க முடிவது, நாவலின் வெற்றிக்கு சாட்சி!
கதைநாயகர்கள் இருவருமே ஏதோ ஒருவிதத்தில் பத்திரிகைகளோடு தொடர்புடையவர்கள் என்பதால், அரசியல் மற்றும் சமூக அலசல்கள் உறுத்தா மல் நாவலோடு இயைந்துகொள்கின்றன. சில பகுதிகள் நேரடி விவாதங்களாய், கதாபாத்திரங்கள்கூட முக்கியத்துவமிழந்து போகுமளவு நீண்டாலும், சிரமப்படுத்தாத எளிய வாக்கிய அமைப்புகளாலும், கதைப் பகுதியோடு அதைச் சரியான விகிதத்தில் கலந்திருப்பதாலும், நாவலின் நோக்கத்தைவிட்டு விலகிவிடாமல் கவனமாகக் கையாண்டிருக்கிறார் ஆசிரியர். தகவல்களைக் கொட்டித்தராமல், அதேசமயம் பத்திரிகை உலகம், வங்கிப் பணி, தி¨ ரயுலகம் ஆகியவற்றின் முகங்களை நமக்குத் தேவையான அளவு அறிமுகப்படுத்திவிடுவதில் வெற்றியடைந்திருக்கிறது, "இருவர்". கொஞ்சமே வந்துபே ¡கும் கணிப்பொறியாளர் பணியைக்கூட கச்சிதமாய் அலசியிருக்கிறது நாவல்.
ஒரே ஒரு குறையைக் குறிப்பிட்டு சொல்லத்தோன்றுகிறது - வாழ்ந்த அல்லது வாழ்ந்துகொண்டிருக்கும் மனிதர்களைப் பற்றிப் பேசுகிற சில பகுதிகள், அந்த மனிதர்களைப் பற்றி வர்ணித்திருக்கும் விதத்தால், கிசுகிசுபோன்ற தோற்றம் உண்டாக்கியிருக்கிறது (குறிப்பாக ஒரு "தேர்ந்த" இயக்குந¨ ரப்பற்றிய பகுதி), வாசிப்பை நிறுத்திவிட்டு அவர் யாராயிருக்கும் என்று யோசிக்க விழைவது, வாசகர்களின் தவறு என்று மட்டும் சொல்லிவிட முடிய¡து.
நாவலின் நிறைவுப் பகுதி சற்றே விரைவாகவும், வலிந்து முடிக்கப்பட்டது போலவும் தோன்றுகிறது. என்றாலும், இருவரின் பயணமும், நாவலும் தொ டர்கிறது, தொடரும் என்னும் மறைமுகமான செய்தியோடுதான் முடிக்கிறார் ஆசிரியர். அவரே குறிப்பிடுவதுபோல், இது தொன்னூறுகளின் முழுமைய ¡ன பதிவாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் புனைகதையின் எல்லைகளுக்குள் ஒரு பத்தாண்டுகளை முழுக்க அடக்கிவிடுவதும் சாத்தியமில்லை, அந்த விதத்தில் இது ஒரு நேர்மையான முயற்சி, கவனிக்கப்படவேண்டிய முக்கியமான படைப்பு.
சுருக்கமாய்ச் சொல்வதானால், இருவர் - சமூகத்தைத் தீர்மானிக்கிற தனிமனித உதாரணங்களுடன், பத்தாண்டு சரித்திர அலசல்!
|