நான் பணிபுரியும் கல்லூரிக்கு வந்த கடிதம் ஒன்று எனக்கு அனுப்பப்பட்டது. மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி என ஏதாவது இருக்கும் என்று பிரித்துப் பார்த்தேன். அந்த மாதிரி கடிதம் அல்ல. பாலம் என்ற ஒரு சேவை அமைப்பின் தலைவரிடமிருந்து வந்திருந்தது. பா.கல்யாண சுந்தரம் என்ற அவர், உடம்பு முடியாமல் மருத்துவ மனையில் இருப்பதாகவும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் உதவி கேட்டும் கடிதம்.
ஆனால் இது வழக்கமாக உதவி கோரி வரும் கடிதங்களைப் போன்றதல்ல. அதில் எனக்கு சில ஆச்சரியங்கள் காத்திருந்தன. அதிலிருந்து நான் தெரிந்து கொண்ட சில விஷயங்கள்.
0
பாலம் என்ற சேவை அமைப்பு 51 ஆண்டுகளாக திருச்சியில் இயங்கி வருகிறது.
0
அதனை உருவாக்கியவர் பா. கல்யாண சுந்தரம்.
0
கல்வி, மருத்துவம், ரத்த தானம், இலவச சட்டம், இலவச திருமணம், ஆதரவற்ற குழந்தைகள், முதியோர், ஊனமுற்றோருக்கு நல்வாழ்வு, வேலை வாய்ப்பு, இயற்கையின் சீற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி போன்ற பல சேவைகளை செய்து வருகிறது.
0
இதன் தலைவர் பா. கல்யாண சுந்தரம் அமெரிக்காவின் Man of the Millenium விருதும் (6.5 மில்லியன் / 30 கோடி ரூபாய்), கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் Most Notable Intellectual of the World என்ற பட்டமும், ஐ.நா.சபையின் Outstanding People of the 20th Century என்ற கௌரவத்தையும் பெற்றவர்.
0
அவர் 35 ஆண்டுகளாக ஆசிரியராக வேலை பார்த்த சம்பளத்தையும், ஓய்வூதியத்தையும் (சுமார் 31 லட்ச ரூபாய்) பொது நலனுக்கு வழங்கிவிட்டவர்.
0
அமெரிக்கா வழங்கிய 30 கோடியையும் சர்வதேச குழந்தைகள் பல்கலைக் கழக அமைப்பிற்கு வழங்கியவர்.
0
தன்னுடைய பங்குக்கு கிடைத்த லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்க¨ளையும் பொது நலனுக்கு வழங்கியவர்.
0
தன்னுடைய செலவிற்காக திருநெல்வேலியில் உள்ள ஓட்டல் ஆர்யாஸில் சர்வராக இரவில் வேலை பார்த்தவர்.
0
20 ஆண்டுகளுக்கு முன்பே கண்களையும், மற்ற உடல் உறுப்புகளையும் மருத்துவக் கல்லூரிக்கு தானமாக எழுதி வைத்தவர்.
0
பொது நலன் பாதிக்கப்படக் கூடாதென்பதற்காக திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பவர்.
0
M.A.(Litt), M.A.(G.T.), M.A.(Hist), B.Lib.Sc., D.G.T., D.M.T.I.F. & C.W., C.S. ஆகிய பட்டங்களைப் பெற்றவர்.
0
ஜனாதிபதிகள் சங்கர் தயால் சர்மா, அப்துல் கலாம், பில் கிளிண்டன், பிரதமர்கள் நேரு, நெல்சன் மண்டேலா, மன் மோகன் சிங், முதலமைச்சர்கள் காமராஜர், கருணாநிதி, சரத் பவார், ஆளுனர்கள் ·பாத்திமா பீவி, ராஜேந்திரன், நீதிபதிகள் நடராஜன், மோகன், இஸ்மாயீல், கல்வியாளர்கள் வா.செ.குழந்தைசாமி, வசந்தி தேவி, க.பா.அறவாணன், இயக்குனர்கள் பாலசந்தர், பாரதிராஜா, நடிகர் ரஜினிகாந்த், எல்லா தமிழ் ஆங்கில பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகள் -- இப்படி பல தரப்பிலிருந்தும் பாராட்டைப் பெற்றவர்.
இந்த சீதக்காதி மனிதர் அஜீரணக் கோளாறு காரணமாக பசியின்மை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இன்னும் சில மாதங்கள் தங்கி சிகிச்சை பெறுவதற்கான பணத்துக்குத்தான் இந்த கடிதம்.
ஒரு பக்கம் வியப்பாகவும் இன்னொரு பக்கம் வருத்தமாகவும் இருக்கிறது. தனக்கென்று ஒரு பைசாகூட வைத்துக்கொள்ளாமல் லட்ச லட்சமாகவும் கோடிகோடியாகவும் பணத்தை சமூக சேவைக்காக வாரி இறைத்தது சரியா என்ற கேள்விக்கு நாம் பதில் காண வேண்டியுள்ளது.
அதோடு, அவர் அந்த கடிதத்தில் சொல்லியிருக்கும் இன்னொரு விஷயம் கொஞ்சம் உறுத்துவதாக உள்ளது.
"பல முக்கிய பிரமுகர்கள் என்னுடைய மருத்துவ செலவு முழுவதையும் ஏற்றுக்கொள்ள முன்வந்துள்ளார்கள். ஆனால் 50 ஆண்டுகளுக்கு மேலாக மக்களுக்கு, குறிப்பாக மாணவ மாணவிகளுக்கு என்னால் ஆன சேவைகளை செய்து வருகிறேன். ஆகையால் ஆசிரியர்களும் மாணவ மணிகளுமே எனது மருத்துவ செலவுகளை ஏற்றுக்கொள்வது பொருத்தமாக இருக்கும் என கருதுகிறேன். மாணவ மாணவிகள் ஆளுக்கு ஒரு ரூபாயும், ஆசிரியர்கள் தங்கள் குடும்பத்தில் எத்தனை உறுப்பினர்களோ அத்தனை ஒரு ரூபாயும் கொடுத்தால் மிகுந்த மகிழ்ச்சியடைவேன்" என்று அவர் சொல்கிறார்.
கோடிகோடியாகக் கொடுத்தவர் ஒரு ரூபாயைக்கூட எதிர்பார்க்கக் கூடாதா என்றால் கூடாது என்றுதான் நான் சொல்லுவேன். உடல் நலமில்லாமல் இருக்கும் ஒரு மனிதர் குணமடைய உதவக்கூடாதா என்பதல்ல கேள்வி இங்கே. கொடுக்கின்ற கைகள் வாங்குகின்ற கைகளாக மாறலாமா என்பதுதான் கேள்வி. கூடாது. கண்ணன் கண்ணனாகத்தான் இருக்க வேண்டும். ஒரே ஒரு ரூபாய் அளவுக்கு குசேலனாகிக் கொள்கிறேன் என்று சொல்வது அவமானகரமானது.
ஆற்றில் போட்டாலும் அளந்து போடு என்று ஏன் சொன்னார்கள் என்று இப்போதுதான் புரிகிறது. இந்த மாதிரியான இழிநிலை ஏற்படாமல் ஒரு மனிதன் தன்னைக் காத்துக்கொள்ள வேண்டியது அவசியம். தானம் செய்வது சிறந்ததுதான். ஆனால் நிதானமில்லாத தானம் அவமானத்தில்தான் முடியும். இனிமேலாவது அவர் சிந்திக்க வேண்டும். அவருக்காக நான் இறைவனை பிரார்த்திக்கிறேன்.
அவர் முகவரி
பா.கலியாண சுந்தரம்
தலைவர் : பாலம்
அறை எண் : 23
Dr. G.விஸ்வ நாதன் மருத்துவ மனை
சிங்காரத்தோப்பு
திருச்சிராப்பள்ளி -- 620008
தொலைபேசி : 0431-2703945