பறவையின் தடங்கள் -- நாகூர் ரூமி
All writings like poems, stories and articles in Tamil and English

முகப்பு

யூனிகோடில் தேட
 
முற்றாத புள்ளி, சொற்களின் சீனப்பெருஞ்சுவர்
அலைகள்
என்று தணியும்?
காவியப் பயணம்
நல்லிணக்க நாகூர்
ஆல்ஃபா தியானம்
இலியட்
உடல் மண்ணுக்கு
விநோத உலகம்
முகமூடி கிழித்துக்கொண்ட வெங்கட் சாமிநாதன்
மெய் காட்டும் பொய்கள்
பெரியார் பன்னிரண்டு
இறைவா கவிதைகள்
ஞானத்தை நோக்கிய பயணம்
HIV - கொல்லப் பிறந்த கொடுங்கோலன்

Links
தமிழோவியம்
தமிழ்ஈபுக்
பா.ராகவன்
அப்துல் கையூம்
கீற்று
மதுரைத் திட்டம்
நாகூர் படைப்பாளிகள்
நாகூர் ரூமி (ஆபிதீன் பக்கங்கள்)
யுகபாரதி
தாஜ்
¬À¢¾£ý
எண்ணங்கள்

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது
தொடர்புகொள்ள
நாகூர் ரூமி
  நாள் : 9/3/2006 2:49:09 PM, நாகூர் ரூமி
 
  இறைவா கவிதைகள்

இஜட். ஜபருல்லாஹ் நாகூர்க்காரர். கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாடு மாநில இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கில் பல பதவிகளிலும் பணியாற்றியவர். பணியாற்றிக் கொண்டிருப்பவர். சுயமாக சிந்தனை செய்யத் தெரிந்த சிலரில் இவரும் ஒருவர். சிறந்த மேடைப்பேச்சாளர். நிறைய கவிதைகளும், சிறுகதைகளும் எழுதியுள்ளார். நாகூரில் மறைந்து வாழும் ஞானாசிரியர் எஸ். அப்துல் வஹ்ஹாப் பாகவி அவர்களிடமிருந்துதான் முறையான சிந்தனை செய்வது எப்படி என்று கற்றுக் கொண்டதாக இவர் கூறுகிறார்.

இஸ்லாத்தில் சொல்லப்பட்டதற்கும் செய்யப்படுவதற்கும் இடையிலுள்ள தூரத்தை கீழே
கொடுக்கப்பட்டுள்ள இவருடைய சில கவிதைகள் மிக அழகாகச் சாடுகின்றன. இலக்கிய நயத்தோடு கருத்தாழம் மிக்க எளிய கவிதைகளை சுவைத்துப் பார்க்க விரும்புவோருக்கு இதோ இறைவா-கவிதைகளில் சில:

இறைவா
என் 'இபாதத்' இலைகள்
சருகாகி வீழ்ந்தாலும்
கிடப்பதென்னவோ உன்
ஏகத்துவ விருட்சத்தின்
காலடியில்தான்

இறைவா
உன்னோடு
அரபு மொழியில் பேசுவதைவிட
அழுகை மொழியில்
பேசும்போதுதான்
உன் அண்மை தெரிகிறது

இறைவா
தொழும்போதுகூட நான்
தூரமாகிறேன்
உன்னை
நினைக்கும்போதெல்லாம்
நெருக்கமாகிறேன்

இறைவா
வானம் வரைகூட
என் எண்ணங்கள்
வியாபிக்க முடிகிறது
இந்த
வார்த்தைத் தடைகள்
என்னை
தரையிலேயே நிறுத்திவிடுகின்றனவே!

இறைவா
உன் அருள் பெட்டகத்துக்கு
பூட்டுக்களே இல்லையெனும்போது
இவர்கள் மட்டும் ஏன்
வெறும் வார்த்தைச் சாவிகளை
பிரார்த்தனை வளையங்களில்
கோர்த்துக்கொண்டு அலைகிறார்கள்?

இறைவா
உண்டுவிட்டு உனக்கு
நன்றி சொல்வதைவிட
பசித்திருந்தும்
உன்னளவில்
பொறுமை கொள்ளும்போதுதான்
என் ஆன்மா
ஆனந்தமடைகிறது

இறைவா
உன்
மகத்துவமிக்க மன்னிப்பால்
மறுபடி மறுபடி
எங்களை
மனிதனாக்குகிறாய்
நாங்களோ
எங்கள் செயல்களால்
மறுபடி மறுபடி
ஷைத்தானாகிறோம்
மறுபடியும் எங்களை
மன்னித்துவிடு நாயனே

இறைவா
தொழுகையில்
உன்னைத் தொலைத்தோம்
வாழ்க்கையில்
எம்மைத் தொலைத்தோம்
'கலிமா'வையும் நாங்கள்
களவு கொடுக்குமுன்
கரையேற்றிவிடு நாயனே

இறைவா
நீ அனுப்பிய
வேத வார்த்தைகளை
உன் தூதர்
வாழ்க்கையாக்கினார்
இவர்களோ
அவைகளை
மறுபடியும்
வார்த்தைகளாக்கிவிட்டார்கள்

இறைவா
நீ
சேதாரமில்லாமல்
பாதுகாக்கும்
திருக்குர்ஆனை
இவர்கள்
ஆதாரத்துக்கு மட்டுமே
அணுகுகிறார்கள்

இறைவா
நீ
உன் தூதரின்
மனதில் இறக்கி வைத்த
திருவசனங்களை
இவர்கள்
மூளைக்குக் கடத்திவிட்டார்கள்
அதனால்
நம்பிக்கை விழுந்தது
சந்தேகம் எழுந்தது

இறைவா
நீ
எழுத்தில் அனுப்பாத
திருமறையை
இவர்கள்
எண்களுக்குள்
சிறைவைத்து விட்டார்கள்

இறைவா
நீ
தர்க்கத்தை
தவிர்க்கச் சொன்னாய்
ஒற்றுமையை
வளர்க்கச் சொன்னாய்
இவர்கள்
தர்க்கித்தே
பிரிந்து போகிறார்கள்

இறைவா
நீ
மறுமை நாளின்
நீதிபதி என்றாய்
இவர்கள்
நீ மறுமைக்கு மட்டுமே
என நினைத்து
இம்மையின் நீதிபதிகளாக
தீர்ப்புகளை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்

இறைவா
கரியை வைரமாக்கும்
காரியக்காரனே!
இங்கே
உன் வஹியைச் சுமந்த
வைரங்களெல்லாம்
பணத்தீயில்
கரியாகிக் கொண்டிருக்கின்றனவே
கொஞ்சம் கவனிப்பாயா?

இறைவா
இந்த
'தவ்ஹீது'க் குயில்களெல்லாம்
ஏகத்துவ கானத்தை
எங்கே தொலைத்தன?

இறைவா
'ஒதுவீராக'
எனப்பணித்தாய்
இவர்கள்
ஒலிப்பேழைகளாக்கி
விற்றுக் கொண்டிருக்கிறார்கள்

இறைவா
அடிக்கடி
சிந்திக்கச் சொன்னாய்
இவர்கள்
குழு அமைத்து
நிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்

இறைவா
இவர்களுக்கு
அச்சமூட்டி எச்சரிக்கை செய்ய
ஏதாவது செய்யேன்


 


   | Refer to friend  | மதிப்பு : 2.2  | மதிப்பீடு செய்ய :  | Print this article
 
 
மறுமொழி
இப்னு ஹம்துன்
9/5/2006 , 6:25:38 AM
ரூமி நானா,
இறைவா என்ற பெயரில் கவிஞர் இ.பதுருத்தீன் ஒரு நூல் எழுதியிருக்கிறார். தெரியும்.(அவரிடமிருந்தே அன்பளிப்பாகப் பெற்றுள்ளேன்). அதே போல் 'இறைவா' என்ற பெயரில் கவிஞர் ஜஃபருல்லாஹ் அவர்களும் கவிதை எழுதியுள்ளார் என்பது புதிய செய்தி.
இருவருடைய நடையும் ஒன்று போலவே தெரிகிறதே!
   
நாகூர் ரூமி
9/6/2006 , 5:27:06 PM
அன்பு இப்னு ஹம்துன்,

பதுருத்தீன் எழுதியது கட்டுரை என்று நினைக்கிறேன். சகோதரர் ஜபருல்லாஹ்வுடையது கவிதைகள். இருவரின் நடையும் ஒன்றுபோல் இருக்கிறதே என்றால் என்ன அர்த்தம் என்று எனக்குப் புரியவில்லை. பதுருத்தீனின் உரைநடை கவித்துவம் மிக்கதாக இருக்கிறது என்று பொருளா? ஜபருல்லாஹ்வின் கவிதைகளில் உரைநடைத்தன்மை இருக்கிறது என்று பொருளா?! அல்லது கவிதைகளில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்கள் பத்ருத்தீனின் கட்டுரைகளிலும் இருக்கின்றனவா?

அன்புடன்
நாகூர் ரூமி
   
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)

Powered by : Tamiloviam - Tamilpathivu
Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.