பறவையின் தடங்கள் -- நாகூர் ரூமி
All writings like poems, stories and articles in Tamil and English

முகப்பு

யூனிகோடில் தேட
 
முற்றாத புள்ளி, சொற்களின் சீனப்பெருஞ்சுவர்
அலைகள்
என்று தணியும்?
காவியப் பயணம்
நல்லிணக்க நாகூர்
ஆல்ஃபா தியானம்
இலியட்
உடல் மண்ணுக்கு
விநோத உலகம்
முகமூடி கிழித்துக்கொண்ட வெங்கட் சாமிநாதன்
மெய் காட்டும் பொய்கள்
பெரியார் பன்னிரண்டு
இறைவா கவிதைகள்
ஞானத்தை நோக்கிய பயணம்
HIV - கொல்லப் பிறந்த கொடுங்கோலன்

Links
தமிழோவியம்
தமிழ்ஈபுக்
பா.ராகவன்
அப்துல் கையூம்
கீற்று
மதுரைத் திட்டம்
நாகூர் படைப்பாளிகள்
நாகூர் ரூமி (ஆபிதீன் பக்கங்கள்)
யுகபாரதி
தாஜ்
¬À¢¾£ý
எண்ணங்கள்

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது
தொடர்புகொள்ள
நாகூர் ரூமி
  நாள் : 8/14/2007 3:49:05 PM, நாகூர் ரூமி
 
  ஆல்ஃபா தியானம்

மறுபடியும் வெகு நாட்களுக்குப் பிறகு இங்கே நான்.

மறுபடியும் ஒரு புத்தகத்துடன். ஆம்.  இது எனது 18வது நூல்.  ஆல்ஃபா தியானம் பற்றி விரிவானதொரு நூல். முதல் பதிப்பு, ஜூலை 2007. 136 பக்கங்கள். விலை ரூபாய் 60/-. கிழக்கு பதிப்பக வெளியீடு. அதன் முன்னுரையை இங்கே வழங்குகிறேன்.

 

என் அடுத்த விநாடி நூலுக்கு எண்ணிக்கையில் வைத்துக்கொள்ள முடியாத அளவில் கடிதங்களும், தொலைபேசி அழைப்புகளும், மின்னஞ்சல்களும் வந்தன. வந்துகொண்டும் இருக்கின்றன. அந்த நூலில் நான் சொல்லியிருப்பவற்றைப் பின்பற்றி நோய்கள் நீங்கியதாகவும், படிப்பில் முன்னேறியதாகவும், தன்னம்பிக்கை ஏற்பட்டதாகவும் சொன்னார்கள். எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. என்னாலும் சக மனிதனுக்கு என்னாளான வகையில் உதவ முடிந்திருக்கிறது.

நான் ஆல்·பா சொல்லிக் கொடுத்த சில ஊர்களில் இருந்த சிலருக்கு அற்புதங்கள் என்று சொல்லத் தக்க அளவுக்கு ஆசைகள் நிறைவேறியுள்ளன. பத்தாண்டு காலமாக ஜாதகக் கோளாறினால் திருமணமாகாமல் இருந்த பென்ணுக்கு அவள் மனதில் ஏற்படுத்தி வைத்திருந்த எல்லா நிபந்தனைகளையுன் பூர்த்தி செய்யும் ஒரு கணவன் கிடைத்தான். ஐசியூவில் கோமாவில் இருந்த தன் மாமானாருக்காக ரயிலில் போகும்போதே ஆல்·பா செய்தாள் ஒரு இளம் மருமகள். அவள் நினைத்தபடியே அவள் போய்ச் சேர்ந்த உடன் அவர் கோமா நிலையிலிருந்து நார்மல் நிலைக்கு முன்னேறி சாப்பிடவும் பேசவும் தொடங்கினார்.

இப்படி நடந்து கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் ஏன் ஆல்·பா தியானத்தையே கொஞ்சம் விரிவான அளவில் செய்யக் கூடாது என்ற கேள்விக்கும் ஆசைக்கும் பதிலாக செய்யலாம் என்ற முடிவுக்கு இறைவன் என்னை வரச்செய்துள்ளான்.

அதன் துவக்கமாக ஆல்·பா தியானத்தை விளக்கி இந்த நூல். என்னிடம் நேரில் ஆல்·பா கற்றுக்கொள்ள இருப்பவர்களின் சந்தேகத்தைப் போக்குவதற்கு இந்த நூல் நிச்சயம் உதவும். வேறு யாரிடம் கற்றுக் கொண்டாலும் உதவும். ஏனெனில் உண்மையை யார் சொன்னால் என்ன? அடுத்த விநாடியில் பல உண்மைகள், வெற்றியின் கூறுகள் பொதுவாக சொல்லப்பட்டுள்ளன. ஆல்·பா பற்றி அதில் சொல்லப்பட்டிருந்தாலும், இந்த நூல் ஒரு புள்ளியை நோக்கிய குவியலாக இருப்பது இதன் சிறப்பு.

இதை வெளியிடும் கிழக்கு பதிப்பகத்தாருக்கு என் நன்றிகள்.

அன்புடன்
நாகூர் ரூமி
10, ஜூலை, 2007 சென்னை.

ruminagore@gmail.com
cell: 99947 - 67681

 

 


   | Refer to friend  | மதிப்பு : 3.2  | மதிப்பீடு செய்ய :  | Print this article
 
 
மறுமொழி
Shahul Hameed
8/20/2007 , 12:43:01 PM
Dear Sir,

Your book briefing alpha meditation really a pot of fortune for all us.

Please go ahead and continue your work like this.

Thanks

Shahul Hameed

Tambaram.

   
Nagoori***
9/7/2007 , 6:09:15 PM
Inspired to pop-in yr web site.
Greaaaaaaaaaaaaaaaaaaaat
Keep it up
Good luck
Nagoori***
   
nataraj
11/3/2007 , 5:35:07 AM
yfrdyhdyhijfy354gyug
   
vinothkumar
9/30/2009 , 2:27:19 AM
i am very happy of your.because you can change me as me
   
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)

Powered by : Tamiloviam - Tamilpathivu
Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.