பறவையின் தடங்கள் -- நாகூர் ரூமி
All writings like poems, stories and articles in Tamil and English

முகப்பு

யூனிகோடில் தேட
 
முற்றாத புள்ளி, சொற்களின் சீனப்பெருஞ்சுவர்
அலைகள்
என்று தணியும்?
காவியப் பயணம்
நல்லிணக்க நாகூர்
ஆல்ஃபா தியானம்
இலியட்
உடல் மண்ணுக்கு
விநோத உலகம்
முகமூடி கிழித்துக்கொண்ட வெங்கட் சாமிநாதன்
மெய் காட்டும் பொய்கள்
பெரியார் பன்னிரண்டு
இறைவா கவிதைகள்
ஞானத்தை நோக்கிய பயணம்
HIV - கொல்லப் பிறந்த கொடுங்கோலன்

Links
தமிழோவியம்
தமிழ்ஈபுக்
பா.ராகவன்
அப்துல் கையூம்
கீற்று
மதுரைத் திட்டம்
நாகூர் படைப்பாளிகள்
நாகூர் ரூமி (ஆபிதீன் பக்கங்கள்)
யுகபாரதி
தாஜ்
¬À¢¾£ý
எண்ணங்கள்

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது
தொடர்புகொள்ள
நாகூர் ரூமி
  நாள் : 3/4/2005 10:48:27 AM, நாகூர் ரூமி
 
  இலக்கியமும் உள் நோக்கமும் : சுந்தர ராமசாமியின் கதை

இந்த மாத காலச்சுவடு இதழில் (பிப்ரவரி 2005) சுந்தர ராமசாமி பிள்ளை கெடுத்தாள் விளை என்று ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார். அதைப் படித்த பிறகு எனக்கு சில கேள்விகள் எழுந்தன. இலக்கியத்தை இலக்கியமாக மட்டும்தான் பார்க்க வேண்டுமா? படைப்புக்கும் படைப்பாளிக்கும் உள்ள உறவுகள் முக்கியமில்லையா? ஒரு படைப்பு அநாகரீகமான உள் நோக்கம் கொண்டதாக இருந்தால் அதை எங்கே வைப்பது? ஒரு படைப்பின் இலக்கியத் தரம் அதன் உள்ளார்ந்த ஒழுக்கத்தைவிட முக்கியமானதா? இப்படி எத்தனையோ கேள்விகள்.

தங்கக்கண் என்று ஒருத்தன். அவன் ஒரு சுதந்திரப் போராட்டத் தியாகி. ஊர் பெயர்களைப் பற்றிய ஆராய்ச்சியில் இறங்குகிறான். 'பிள்ளை கெடுத்தாள் விளை' என்ற ஊரைப்பற்றி நிறைய தகவல்களைச் சேகரித்து வைத்திருக்கிறான். ஊர்ப்பெரியவர்களிடம் தான் சேகரித்து வைத்திருக்கும் அந்த ஊரைப்பற்றிய சுவாரஸ்யமான கதையைச் சொல்லிக் காட்டுகிறான்.

அதன்படி, இந்த கதையில் தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்த ஒரு பெண் -- அதாவது தலித் பெண் -- படிப்பறிவு பெறுகிறாள். ஊருக்கு வந்த ஒரு ஜெர்மன் பாதிரியார் அவளுக்கு படிப்பு சொல்லிக் கொடுக்க முன்வருகிறார். முதலில் எதிர்ப்பு தெரிவிக்கும் அவள் சமுதாயம் பின்னர் ஒத்துக்கொள்கிறது.

ஆனால் அவள் பெரியவளானதும் படிப்பு கொஞ்ச காலம் தடைப்படுகிறது. ஆனால் பாதிரியாரே அவள் இருக்கும் இடத்துக்கு வந்து சொல்லித்தர ஒப்புக்கொள்கிறார். அனுமதி கொடுக்கப்பட்டு தாயம்மா என்ற அந்தப் பெண் ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம் போன்ற பாடங்களை பத்து ஆண்டுகள் அவரிடம் கற்றுத் தேர்கிறாள்.

அவளது படிப்பு காரணமாக அவளுக்கு திருமணம் ஆவது தடைப்படுகிறது. முதிர் கன்னியான அவள் அந்த ஊர் பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியையாகவும் ஆக்கப்படுகிறாள். அப்படியே போகிறது காலம்.

ஆனால் ஐந்தாம் வகுப்பில் சேர்ந்திருந்த மணிகண்டன் என்ற "அவசரமாக சம்பாதித்துக் கொண்டிருந்த" அரசியல் வாதியின் மகனை பாலியல் பலாத்காரத்துக்கு அவள் உட்படுத்தியதாக அவன் புகார் கொடுக்கிறான். ஊர்ப்பெரியவர்கள், நிர்வாகம் எல்லாம் சேர்ந்து அவளை கம்பால் வாயிலும் மார்பிலும் அடித்துத் துன்புறுத்த, அவள் ஊரைவிட்டே ஓடிவிடுகிறாள்.

எண்பது வயது கிழவியாக 53 ஆண்டுகள் கழித்துத் திரும்பி வருகிறாள் தாயம்மா. அப்போதுகூட உயிரோடு இருக்கும் சிலர் அவளை வார்த்தைகளாலும், சில கட்டுப்பாடுகளாலும் துன்புறுத்துகின்றனர். கடைசியில் அவள் இறந்துபோகிறாள்.

இந்த விஷயத்தை ரொம்ப வருத்தமுடன் தங்கக்கண் ஊர்ப்பெரியவர்களிடம் சொல்லிக் காட்டுவதாக கதை அமைக்கப்பட்டுள்ளது. சின்னப் பையனை அவள் கெடுத்ததால் அந்த ஊருக்கே 'களியக் காவிளை' என்பதுபோல 'பிள்ளை கெடுத்தாள் விளை' என்று பெயர் வருகிறது!

கதை சொல்லிச் செல்லும் விதம் ரொம்ப இயல்பாகவும் சுவாரஸ்யமாகவும் அமைக்கப்பட்டு உள்ளது. சுந்தர ராமசாமி தன் திறமைகளையெல்லாம் காட்டியிருக்கிறார் என்று சொல்வதைவிட அவருடை எழுத்து அனுபவத்தில் நுட்பமான நகைச்சுவை, வட்டார வழக்கு மொழி எல்லாம் இயல்பாக ஆற்றோட்டம்போல வந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

ஒரு உதாரணம். தங்கக்கண் ஒரு சுதந்திரப் போராட்டத் தியாகியல்லவா? அந்த போராட்டத்தில் பல தழும்புகளையும் பெற்றவன் அவன். அவை எப்படி இருந்தன? "முதுகில் பூரான்போல் அற்புதமான தழும்புகள் இன்றும் இருக்கின்றன" என்கிறார் சு.ரா. அந்த 'அற்புதமான' என்ற சொல்லில் அவருடைய முத்திரை இருக்கிறது. ஒரு தழும்பு, ஒரு அவமானம், பட்ட அடி எப்படி அற்புதமாக இருக்க முடியும்?!

ஒட்டு மொத்த கதையையும் வைத்துப் பார்க்கும்போது, லேசான புன்னகையை ஏற்படுத்தும் இந்த வர்ணனையை இந்த கதையின் போக்கை பிரதிநிதித்துவப் படுத்தும் ஒரு குரூர கற்பனையாகவே பார்க்கலாம். தாயம்மாவை ஊர்ப்'பெரியவர்கள்' அடித்துத் துன்புறுத்தும்போது பேசும் வார்த்தைகளிலும் இந்த கற்பனை இருப்பதைப் பார்க்கலாம் :

"ரவிக்கை அவுக்குறதுக்கா ஸ்கூலுக்கு வர்ற தேவுடியா?"

மார்பில் ஒரு அடி.

"இப்பம் நான் உறிஞ்சட்டுமா உனக்கு?"

கல்வியறிவு பெற்ற ஒரு தலித் பெண் ஒரு உயர் ஜாதிக்காரச் சிறுவனை -- வசதியாக அச்சிறுவன் எந்த ஜாதியென்று சொல்லப்படவில்லை -- பாலியல் பலாத்காரம் செய்வதாக சொல்வதுதான் கதையின் மையம். அப்படி தாயம்மா நடந்து கொண்டதற்கு, பாலுமகேந்திராவின் திரைப்படங்களில் வருவதுபோல, அவள் திருமணமாகாத முதிர்கன்னி என்று ஒரு கதா நியாயமும் தரப்பட்டுள்ளது.

எந்த ஜாதிப் பெண்ணாக இருந்தாலும் பாலுணர்வு இயற்கையானதே. அதுவும் ஒரு முதிர்கன்னி அப்படி நடந்துகொண்டிருப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கத்தான் செய்கின்றன. இந்த இலக்கிய நியாயத்தை வைத்துக்கொண்டு, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, ஏன் இன்றுவரை, தலித்துகள்மீது இழைக்கப்பட்டு வரும் கொடுமைகளை, வன்முறையை எல்லாம் தலைகீழாக காட்டியிருப்பதுதான் கதையின் பிரச்சனை அல்லது உள் நோக்கம்.

ஏன், ஒரு தலித் பெண் இப்படி நடந்துகொண்டிருக்க வாய்ப்பே இல்லையா என்ற கேள்விக்கு பதில் சொல்ல முடியாது. காரணம், உணர்ச்சி வேகத்தில் யாரும் அப்படி நடந்து கொள்ள முடியும்தான்.

ஆனாலும் இந்திய வரலாற்றின் ஒரு முக்கியமான, மறைக்கப்படாத, அதி வெளிச்சமான, அனைவருக்கும் நன்கு பரிச்சயமான ஒரு பகுதிக்கு இழைக்கப்பட்ட ஒரு துரோகமாக இந்த கதை வந்துள்ளது. கடந்தகால வரலாறும் நிகழ்கால நடப்புகளும் கதைக்கு எதிராகத்தான் சாட்சி பகர்கின்றன. 

இது வெறும் சுவாரஸ்யாமாக எழுதப்பட்ட ஒரு கற்பனைக் கதை என்று ஒதுக்கிவிட முடியாது. ஒரு கற்றுக்குட்டி இதை எழுதியிருந்தால் அப்படி ஒதுக்கலாம். ஆனால் தமிழ் இலக்கியத்தில் பழம்தின்று கொட்டை போட்ட, சர்வதேசப் புகழ் பெற்ற ஒரு எழுத்தாளரிடமிருந்து இது வந்துள்ளது என்பது மிக முக்கியமானது. யாருக்கும் சொரிந்து கொடுக்க வேண்டிய அவசியம் சு.ரா.வுக்கு இல்லை என்றே நினைக்கிறேன். பின் ஏன் இப்படி ஒரு கதை? 

ஒரு உயர்ஜாதி இலக்கியக் குசும்பாகவே இந்த கதை எனக்குப் படுகிறது. இப்படிச் சொல்வதற்காக நான் வருத்தப்படுகிறேன். சுந்தர ராமசாமியிடமிருந்து இப்படி ஒரு கதையை நான் எதிர்பார்க்கவே இல்லை.

 


   | Refer to friend  | மதிப்பு : 4.3  | மதிப்பீடு செய்ய :  | Print this article
 
 
மறுமொழி
மாண்ட்ரீஸர்
3/4/2005 , 12:05:00 PM
http://www.cnn.com/2005/US/02/14/teacher.sex.ap/
கூகிளில் Mary Kay Letourneau என்று தேடிப் பார்க்கவும்...

//ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, ஏன் இன்றுவரை, தலித்துகள்மீது இழைக்கப்பட்டு வரும் கொடுமைகளை, வன்முறையை எல்லாம் தலைகீழாக காட்டியிருப்பதுதான் கதையின் பிரச்சனை அல்லது உள் நோக்கம்.//
அப்படியேதும் குறைந்தபட்சம் எனக்காவது தோன்றவில்லையே. உள்நோக்கம் ஏதுமிருந்தால் அது சுந்தர ராமசாமி தன்னைத்தானே கேட்டுக்கொள்ளவேண்டிய பிரச்னை. மற்றப்படி, மேற்கூறிய மேரி கே லெட்டூர்னோ வழக்கிலும் இவற்றைப் பொருத்திப் பார்க்கலாம் - வேறுவேறு இனங்களைச் சேர்ந்தவர்கள் என்ற அடிப்படையில். அவளை அடித்துத் துவைத்த கூட்டத்தில் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு சுந்தர ராமசாமியும் நின்றதாகத் தோன்றுவதுபோல் அர்த்தப்படுத்திப் பார்ப்பது அவரது ஜாதி அடையாளம் பொதுவிற்குத் தெரிந்ததால்தானே. ஏன் இப்படி ஒரு கதை என்பது தேவையில்லாத கேள்வி; அதை எந்தக் கதைக்கும் கேட்கச் சாத்தியமுள்ளது.
   
karthikramas
3/4/2005 , 1:15:34 PM
கதையை வாசிக்காமல் கருத்துச் சொல்லமுடியாது.
நீங்கள் சொன்ன அளவிலே பார்க்கும் போது,
கதைசொல்லி யின் பின்னாலே ஒளிந்து கொண்டு ,
சுரா என்ற முதுகெலும்பில்லாதா எழுத்தாளப் புலி,
தலித் அடையாளங்களை நோக்கி வீசும் சாணிக்கரைசல் என்றே தோன்றுகிறது.

எதிர் அவதானமாய், தலித் செய்தால், எல்லோரும் அடிப்பதும்,ஊரை விட்டு விலகுவதும், நடைமுறையில் இருந்ததைச் சுட்டவதாயும் பார்க்கமுடியும்.

என்னத்தை சொல்லவ்ருகிறார் என்று சுராவுக்கே வெளிச்சம்.
   
பாலாஜி
3/4/2005 , 1:57:57 PM
Karthik... here is the kaalachuvadu url for the suraa story:
http://sify.com/news_info/tamil/kalachuvadu/feb05/fullstory.php?id=13661961
   
karthikramas
3/4/2005 , 2:52:56 PM
நன்றி பாலாஜி,
கதையை வாசித்தேன். ரூமியின் கேள்வியில் அர்த்தம் உள்ளது.
கதையில் விவரணை , சமூகம் இப்படி [கேவலமாய்]இருந்தது எனபதற்கான வரிகள் விரவியே உள்ளன. ஆனாலும், தாயம்மா தலித் பெண் எனபது வெளிப்படையாய் சொல்லப்பட்டிருக்கிறது.

சுரா, சுரணையற்று எழுதியுள்ளதாய் நான் நினைப்பது. அத்தனை படிப்பறிவும் பெற்ற ஒருவள், ஒரு சிறுவனிடம் அவ்வாறு நடந்து கொள்வாளா? என்பதுதான் சுத்தப்பேத்தல்.

அவள் தலித் எனபதால் அவ்வாறு செய்யக்கூடயவளாக இருக்ககூடாதா? என்று யாராவது வாதாடலாம். செய்யகூடியவள் என்பதை சொல்வதற்கு தலித் அடையாளம் தேவையா? இது தான் என் கேள்வி.

இதை மிக நேர்த்தியாய் நெய்திருக்கிறார் சுரா. இதற்கு என்ன அவசியம்?

இதையே மாற்றி, ஒரு மேல்ஜாதி, அல்லது பிராமணப் பெண் ஆசிரியை
ஒரு தலித் பையனை, பாலியல் பலாத்காரம் செய்ததாய் எழுத முடியுமா?
அப்படி செய்தாலும் அதற்கு விளைவு, அவளை ஊரைவிட்டு தலித்துகள்
துரத்துவதாய் எழுத குறைந்தபட்ச சாத்தியக்கூறுகளாவது உள்ளதா?
உயர் ஜாதி மானம் உயர்ந்த மானம்! தலித்துக்கு மானம் இல்லையா?






   
மூர்த்தி
3/4/2005 , 10:16:40 PM
சு.ரா ஒரு சிறந்த எழுத்தாளர் என்பதில் இருவேறு கருத்துக்களுக்கு இடமில்லை. ஆனால் இவ்வாறான கதைகள் அவரிடமிருந்தா சாரு பாணியில் வெளிப்பட்டன என நினைக்கும்போது சற்றே கவலை.

தலித் பெண், பிராமணப் பெண் என்றல்ல. எல்லா பெண்களுக்கும் உணர்வுண்டு. இந்த குறிப்பிட்ட ஜாதிப் பெண்கள்தான் அப்படிச் செய்கிறார்கள் எனக் குறிப்பிட்டுச் சொல்வது தவறு.

மற்றபடி மஞ்சள் பத்திரிகை எழுத்தாளர் போன்று எழுதாமல், ஜாதி துவேஷம் பாராமல் நல்ல சிந்தனையை வளர்க்கும், நம்மையே புரட்டிப் போடும் அருமையான கதைகளைத்தான் எதிர்பார்க்கிறோம்.

இலக்கியம் என்ற போர்வையில் காம எழுத்துக்கள் கதையாக, கவிதையாக வெளி வருவது வேதனைக்குரிய விசயம்.
   
Thara
3/4/2005 , 10:38:08 PM
ஒரு தலித் பெண் படிப்பில் ஆர்வம் காட்டி, நன்றாகப் படித்து முன்னுக்கு வருவதாக ஆரம்பத்தில் சொல்லிவிட்டு கடைசியில் இப்படி கவுத்துட்டாரே சுரா!

தாரா.
   
¾Ä¢ò
3/7/2005 , 4:43:49 AM
ÐÖ즸ý °Áì ÌÍõÀì ¸¡ðÊð¼¡ý...
   
Á¡ì¸¡ý
3/7/2005 , 5:00:11 AM
/"ஒரு உயர்ஜாதி இலக்கியக் குசும்பாகவே இந்த கதை எனக்குப் படுகிறது."/

¯í¸ Å¢ÁâºÉõ ±ÉìÌ ´Õ typical ÐÖì¸ì குசும்பாகô Àθ¢ÈÐ. ¿¡ÖìÌ
¦ÃñÎ ¸ðΨà þŠÄ¡¨Á ²¾¡ÅÐ ´Õ Ũ¸Â¢ø ¯Â÷ò¾¢
±ØÐõ ¿£í¸û, Í.á.-¨Å º¡¾¢ 㾢¡¸ Å¢Á÷º¢ôÀÐ §¸Ä¢ìÜòÐ.

¯õ¨Á ¬Ã¡¾¢òÐ þíÌ À¢ýëð¼í¸û þðÊÕìÌõ «¨ÉÅÕõ
¯ÁÐ ¦ºð¼ô ±ýÀ¾üÌ ¯-õ: karthikramas
/"கதையை வாசிக்காமல் கருத்துச் சொல்லமுடியாது."/
«Îò¾ Åâ:
/"சுரா என்ற முதுகெலும்பில்லாதா எழுத்தாளப் புலி,
தலித் அடையாளங்களை நோக்கி வீசும் சாணிக்கரைசல்"/
   
polli
3/7/2005 , 5:20:08 AM
"ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, ஏன் இன்றுவரை, தலித்துகள்மீது இழைக்கப்பட்டு வரும் கொடுமைகளை, வன்முறையை எல்லாம் தலைகீழாக காட்டியிருப்பதுதான் கதையின் பிரச்சனை அல்லது உள் நோக்கம்."
´Ä¸õ âá "ƒ¢¸¡¾¢"¸ «ôÀ¡Å¢ Áì¸Ç ¦¸¡ýÛ¸¢ðÎ þÕìÌÈô§À¡ ¿£ ÁðÎõ þŠÄ¡õ ´Õ
"«ýÒ Á¡÷ì¸õ" «ôÊýÛ Òò¾¸õ §À¡ÎÈ¢§Â? «Ð ±ôÊ Ã¡º¡? ¿£§Ã¡ À¢Êø Å¡º¢îº Á¡¾¢Ã¢Â¡??!!!
   
ravi
3/7/2005 , 7:43:21 AM
//சுரா, சுரணையற்று எழுதியுள்ளதாய் நான் நினைப்பது. அத்தனை
படிப்பறிவும் பெற்ற ஒருவள், ஒரு சிறுவனிடம் அவ்வாறு நடந்து
கொள்வாளா? என்பதுதான் சுத்தப்பேத்தல். //
¸ñ¸¨Ç ãÊ즸¡ñÎ ¯Ä¸õ þÕðÎ ±ýÀÐ §À¡Ä ¯ûÇÐ.
.¯Ä¸õ ÓØÐõ þÐ §À¡ýÈ ÀÄ ºõÀÅí¸û ¿¼óÐûÇÉ
Á¡ñðரீஸர் ¦¸¡Îò¾ link-³ ÀÊì¸×õ...

//அவள் தலித் எனபதால் அவ்வாறு செய்யக்கூடயவளாக
இருக்ககூடாதா? என்று யாராவது வாதாடலாம்.
செய்யகூடியவள் என்பதை சொல்வதற்கு தலித் அடையாளம்
தேவையா? இது தான் என் கேள்வி.//
þôÀÊ ±ó¾ì ¸¨¾Â¢Öõ ±ó¾ À¡ò¾¢Ãò¨¾
§¿¡ì¸¢Ôõ §¸ûÅ¢ ±ØôÀÄ¡õ..."¸×ñ¼ý þ¨¾î
¦ºöšɡ? §¾Åý þôÀÊ ¦ºöšɡ?
¦ºðÊ¡÷ ¦ºöšɡ? ±ýÚ?? ¯í¸û §¸ûÅ¢ôÀÊ
À¡÷ò¾¡ø ±ó¾ì ¸¨¾Â¢Öõ ¡Õì̧Á º¡¾¢
«¨¼Â¡Çõ ¦¸¡Îì¸ þÂÄ¡Ð.

//இதையே மாற்றி, ஒரு மேல்ஜாதி, அல்லது பிராமணப் பெண் ஆசிரியை
ஒரு தலித் பையனை, பாலியல் பலாத்காரம் செய்ததாய் எழுத முடியுமா?
அப்படி செய்தாலும் அதற்கு விளைவு, அவளை ஊரைவிட்டு தலித்துகள்
துரத்துவதாய் எழுத குறைந்தபட்ச சாத்தியக்கூறுகளாவது உள்ளதா?//

¸¡Äí¸¡ÄÁ¡¸ ¯Â÷ º¡¾¢Â¢É÷ ¾¡ý ¾Ä¢ò-¸¨Ç ¸£Æ¡¸ Á¾¢òÐ,
¦¸¡Î¨Áô ÀÎò¾¢É¡÷¸û/ÀÎòи¢È¡÷¸û...
¸¨¾Â¢ý ¿õÀ¸ò¾ý¨Á측¸ Í.á. «¨¾ì
¨¸Â¡ñÊÕì¸Ä¡õ..þ¾¢ø ºó§¾¸ô À¼ ±ýÉ þÕ츢ÈÐ
±ýÚ ÒâÂÅ¢ø¨Ä??¿£÷ ¦º¡øÖõ ¯ø¼¡ ¸¨¾ ±í§¸Ûõ
¿¼ó¾¾¡¸ ¿¡ý ÀÊò¾¾¢ø¨Ä..þ¨¾ô ÀÊìÌõ
Å¡º¸ÛìÌ ¸¨¾ Á£Ð ±ýÉ ¿õÀ¸ò¾ý¨Á/À¢ÊôÒ
²üÀÎõ? «ôÒÃõ ¿£§Ã "¸¨¾Â¢ø "¯ôÒ ºôÒ" þø¨Ä.."
Í.á. ×ìÌ ºÃìÌ ¾£÷óÐÅ¢ð¼Ð" ±ýÀ£÷..."

//உயர் ஜாதி மானம் உயர்ந்த மானம்! தலித்துக்கு மானம் இல்லையா?//
«¼ô§À¡í¸ö¡...
åÁ¢...karthikramas ¦º¡¾ôÒÈ¡÷..§ÅÈ ¿øÄ "¯ÕôÀÊ"¡ À¡òÐ train ÀñÏí¸....
   
karthikramas
3/7/2005 , 11:53:47 AM
ரூமி சொல்லும் இலக்கியகுசும்பு என்ன என்று உங்களுக்கு புரிகிறதா எனச்சொன்னால் ஏதாவது பதில் தர முடியும். சுத்தமா புரியாத ஒன்னுக்கு எப்படி பதில் சொல்வது?
   
bangkok-kan
3/8/2005 , 3:00:16 AM
congratulations rumi!

it is your writings that has made a brahmin to nickname him as 'thalith' in his marumozhi.

it is 'avaal' giving all the marumozhi...s..! Iswaro ....!
   
Sankara Narayana Gurukkal
3/8/2005 , 3:09:08 AM
1. When you write about Geetha, No firing Pinnootangal.

2. If you write about the way daliths are treated, firing pinnootangal from brahmins.

3. If you write about islam, then all the firefighters will come and queue for pinnootangal.

I suggest that you write more about RSS, Bajrang Dal, VHP and their gooooooood companions..!
   
¾Ä¢ò
3/9/2005 , 1:20:28 AM
Dear bankok-an,
FYI, I'm a pillai not 'avaal'...
In fct I don't like 'avaal's...
You hate 'avaal's but don't be
foolish by assuming everybody who
criticizes this rumi as 'avaal's.

   
ravi
3/9/2005 , 8:14:13 AM
¾õÀ¢ Å¢ÁâºÉôÒÄ¢ karthikramas,

ÌÍõÒ¸û ±øÄ¡õ ¯ÉìÌõ, ¯ý Áý
åÁ¢-ìÌõ ÁðÎõ¾¡ý ÒâÔõ ±É
¿£ ¿¢¨Éò¾¡ø «Ð ¯ý «È¢Â¡¨Á...
§¸ð¼ §¸ûÅ¢¸¨Ç Å¢Ç측Áø
"Å¢Ç즸ñ¨½"-ò¾ÉÁ¡¸ §ÀÍõ ¿£Å¢÷ Å¡ú¸!!!!
   
karthikramas
3/11/2005 , 2:12:53 PM
இங்கே நான் சொல்லவந்தது புரியவில்லை என்பதாலேயே மட்டும் இந்த விளக்கம்.
சுரா போன்றவர், தலித் அடையாளத்தை எடுத்து அதை தலைகீழாக்கிப் பின் நேராக்க வேண்டிய அவசியம்
என்ன வந்தது என்பதுதான் என் கேள்வி? அப்பனே , கதையில் பிரச்சினையில்லை, கதையின் உள்நோக்கத்தில்தான் பிரச்சினை. ரூமி அதைத்தான் கேட்டுள்ளார்.

என்னங்கோ, மாண்ட்ரீசர் சொன்ன நிகழ்ச்சியை வைத்தா இந்தக் கதையை சுரா எழுதியுள்ளார்?
எதையும் எதையோடும் பொருத்திப்பார்க்கமுடியும், அது உங்கள் சுதந்திரம்.
நானே கவிழ்ப்பேன் , பிறகு நானே சரி செய்வேன் என்ற சுராவின் மனநிலையைத்தான் நான் இங்கே கவிழ்க்கிறேன். மேற்கொண்டு எழுதுவதாய் உத்தேசமில்லை.

அண்ணே ரூமி, இனிமே கொஞ்சம் நல்லா ட்ரெயினிங் செய்யுங்க என்னை. சரியா? ;-)
இப்படிக்கு விமர்சன்ப்புலி :)
   
ravi
3/14/2005 , 2:12:36 AM
Í.á-Å¢ý «ó¾ì ¸¨¾§Â ¾Ä¢ò «¨¼Â¡Çò¨¾ ¨ÁÂÁ¡¸ ¨Åòо¡ý...
¯ÁÐ §¸ûÅ¢§Â¡ ²ý «ôÀÊ ´Õ ¸¨¾ ±Ø¾§ÅñÎõ ±ýÀÐ...
¯õ¨Áô §À¡ýÈ ¯û§¿¡ì¸ ¯ö¡ġġ-ì¸¨Ç ¾¢Õò¾ ÓÊ¡Ð...

/* மேற்கொண்டு எழுதுவதாய் உத்தேசமில்லை. */
¿£÷ ±Ø¾Å¢ø¨Ä ±ýÚ þ¨½Âò¾¢ø š¢Öõ Å¢üÈ¢Öõ «ÊòÐ즸¡ñÎ
«Øõ ú¢¸ý ±Åý??:):)
   
முத்து
5/3/2005 , 3:58:30 AM
காலச்சுவடு மாத இதழ் பிப்ரவரி 2005ல் வெளியான சுந்தர ராமசாமியின் பிள்ளைக் கெடுத்தாள் விளை மிகவும் கண்டிக்கத்தக்கது. இதில் அவருடைய சாதி உணர்வை மறைமுகமாக வெளிகாட்டியுள்ளார் என்றே எண்ணத் தோன்றுகிறது. கதையில் மேலோட்டமாக பார்க்கும் பொழுது ஒரு தலித் பெண் எவ்வாறெல்லாம் பாதிக்கப்படுகிறாள்? என்ற தோரணையில் செல்வதாக இருந்தாலும், அவள் தலித் ஆக இருந்ததனால் தான் உயர் சாதி சிறுவனை பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தினாள் என்று எழுதியிருப்பதன் மூலம் அவரது உணர்வுகள் வெளிப்படுகிறது. இச்சிறுகதைக்கு சுந்தர ராமசாமி நிச்சயம் மன்னிப்புக் கோர வேண்டும்.
   
vive
6/17/2005 , 3:17:59 PM
amam
   
Garunyan
6/21/2005 , 9:59:36 AM
பிள்ளை கெடுத்தாள் விளை முனைவர் பஞ்சாங்கம் விதப்பதைப்போல் விதக்கவேண்டிய மிக உயர்வான படைப்போ அல்லது மற்றவர்கள் மிதிப்பதைப்போல் மிதிக்கவோவேண்டிய படைப்போ அல்ல.
திருச்சிப் பக்கமாக கொடும்பாளூர் என்றொரு ஊர் உள்ளது. சுந்தரராமசாமியின் அடுத்தகதை அந்தப்பெயர் எப்படி வந்தது என்ற விளக்கத்தைத்தருவதாகக்கூட இருக்கலாம். பி.கெ.விளையில் ஆதவன் தீட்ஷண்யா குறிப்பிடும் காலவழுக்கள் இருப்பது உண்மையே. அது வெளிக்கட்டமைப்பில் உள்ள மறு/மறை. அதனால் படைப்பின் இலக்கியத்தரம் கெடுகிறதென்ற வாதம் அர்த்தமில்லாதது. படைப்பின் உள்ளீடு தலித்துக்களை எதுவிதத்திலும் கேவலப்படுத்துவதில்லை. அப்படிக் கேவலப்படுத்துவதாக அலறுவதுதான் அபத்தம். இதே கதையை ஒரு பாமாவோ, இமயமோ எழுத நேர்ந்திருந்தால் இதேபேர்வழிகள் அதைத் தலையில் வைத்துக்கொண்டாடி இருந்திருப்பார்கள்.

ஏப்ரல் இதழில் 'நதியின் புன்னகை' என்ற நீண்டகதையை டி.சாணக்கியா எழுதிச்செல்கிறார். ஒரு ஆற்றில் நீராடப்போன இரு சகோதரியரும் ஒரு சிறுவனுமான மூன்று அலர் அகவையினர் நீந்தத்தெரிந்திருந்தும் அநியாயத்துக்கு தாமரைக்கொடியில் சிக்கி இறந்து போகிறார்கள். மரணம் ஏற்படுவதற்கும், அவர்கள் உடல்கள் வெளியில் எடுத்துப்போடப்படுவதற்குமிடையில் எதற்கென்று தெரியவில்லை அவர்களை ஒரு மாய உலகத்துக்கு அழைத்துச்செல்கிறார் ஆசிரியர். சகோதரியருடன் கூடப்போன அந்த இளைய அரைக்காற்சட்டைச் சிறுவன். முதல் நிஜத்திலும், பின் மாயத்திலும் சகோதரியர் இருவரினதும் மார்புகளை மாறிமாறிச் சுவைக்கிறானாம். காமத்தை அனாவசியமாக இங்கே புகுத்தி மகிழ்வதில் படைப்பின் கனம் எவ்வகையில் ஏறுகிறது/மாறுகிற தென்று தெரியவில்லை.

இந்த அபத்தத்தை எழுதியதற்காக டி.சாணக்கியாவை எவர்தான் வைதார்கள்? பி.கெ.விளையைப் பொறுத்தமட்டில் இங்கே நடப்பது பிராமணன் அபிராமணன் என்ற அரசியல் மாத்திரமே. அது இலக்கியச் சர்ச்சையேயல்ல.
கதையைப் புரியவேண்டியவர்கள் புரியவேண்டியவிதத்தில் புரிந்தேயிருப்பார்கள்/புரிந்துகொள்வார்கள்.
படைப்பாளி எல்லா விமர்சனங்களுக்கும் விஷமங்களுக்கும் தன்னிலை விளக்கமளிக்கவேண்டியதில்லை.

= காருண்யன் கொன்பூசியஸ் =
   
Garunyan
6/22/2005 , 2:08:28 AM

Please have this passage as a preamble to my previous mail.

பிள்ளை கெடுத்தாள் விளையை சுந்தரராமசாமி எழுதினலும் எழுதினாரோ அது படுகிறபாடும் ஜெயேந்திரர் கைதையும்
விஞ்சிவிடும்போல் இருக்கிறது. ஒரு தலித் பெண் மேல் சாதியென மேல் சாதியினரால் கருதப்படும் சிறுவனைப் பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக ஊகிக்க இடம் தருகிறது கதை. கவனியுங்கள் ==> அப்படியேதும் இல்லாமலும் இருக்கலாம். அத்தலித் பெண்ணானவள் தலித்துக்களாலேயே துரத்தியடிக்கப்படுகிறாள். எந்த விமரிசகனும் சந்தேகத்தின் பலனைத் தலித்துக்குத்தரத் தயாராயில்லாத நிலையில் கதையும் ; அதன் ஆசிரியரின் தலையும் உருட்டுப்படுவதுதான் கேவலம்.

Konfuzius
   
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)

Powered by : Tamiloviam - Tamilpathivu
Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.