ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

கபாலி – விமர்சனம்

கபாலி – விமர்சனம்

தமிழ் திரையுலக வணிகத்தில் ‘குறைந்தபட்ச உத்தரவாதம்’ தரவல்ல நட்சத்திரமாக ஒருகாலத்தில் கோலோச்சியவர் எம்ஜியார் என்பார்கள்.  அவருடைய பெயரிலிருக்கும் முதலெழுத்துக்களை ‘மினிமம் கியாரெண்டி’ என்று அடையாளபடுத்துவதாகவும் சொல்வார்கள்.  அவருக்கு பின்னால் அத்தகையதொரு வணிக உத்தரவாதத்தை பெருமளவு சாத்தியப்படுத்தியவர் ரஜினிகாந்த்.  அதுவும் அதிகபட்ச வணிக உத்தரவாதம் கொடுக்க வல்ல ஈர்ப்பு கொண்ட உச்ச நட்சத்திரம் அவர்.  ஆனால் அதற்கான விலையாக அவர் நடிக்கும் படங்களின் கதைகள் ஒருக் குறிப்பிட்ட சட்டகத்திற்குள்தான் அடங்கவேண்டும்.  அவருடைய பாத்திர அமைப்புகள் எப்போதும் பெரும் சவாலை […]

சச்சின் – சின்னஞ்சிறிய கனவினூடே ஒரு சகாப்தம்

சச்சின் – சின்னஞ்சிறிய கனவினூடே ஒரு சகாப்தம்

  பதினாலு வயது பையனாக வான்கடே ஸ்டேடியமில் பந்து பொறுக்கும் பையனுக்கு ஒரு மிகப்பெரிய கனவு. அதே உலகக்கோப்பை மேடையில் தானும் இடம்பெறவேண்டும் என்பதுதான் அது. அக்கால கட்டத்தின் பல சிறுவர்களின் கனவாக அது இருக்கத்தான் செய்தது.     'முட்டிக்கு சற்று மேலே எழும்பிய அந்தப் பந்தை, அவர் கவர் திசையில் ட்ரைவ் செய்ய நினைத்து முன்னேறி, கடைசி நொடியில் மட்டையை விலக்கிக் கொள்ள பந்து கீப்பரின் கைக்கு சென்றது' என்ற கொரகொர ரேடியோ வர்ணனைக்குப் […]

விளையாட்டாய் எழுதலாம் வெண்பா

விளையாட்டாய் எழுதலாம் வெண்பா

  பள்ளியில் யாப்பிலக்கணம் சொல்லிக் கொடுத்தது மகாதேவன் சாரா, கிருஷ்ணப்பாவா என்று சரியாக நினைவில்லை. ஆனால் எனது அண்ணனுக்கு வகுப்பெடுத்த டிவிஆர் சார் ஈற்றடியெல்லாம் கொடுத்து வெண்பா எழுதி வாருங்கள் என்று மாணவர்களுக்கு ஹோம் வொர்க் கொடுப்பார். பசங்களும் மாய்ந்து மாய்ந்து வெண்பா எழுதிக் கொண்டு போவார்கள். அண்ணனுக்கு உதவுகிறேன் பேர்வழி என்று நானும் கொஞ்சம் தேமா, புளிமா எல்லாம் கடித்து சுவைத்தேன். பிறகு இணையத்தில் வந்துதான் எதுகை மோனை, செப்பலோசை, அகவலோசை எல்லாம் அறிந்து கொண்டது. […]

அறிவியல் திருவிழா

அறிவியல் திருவிழா

  பொதுவாக அமெரிக்கவாழ் இந்தியர்களிடையே இருக்கும் ஒரு அனுமானம் இங்கிருக்கும் பள்ளிப்படிப்பின் தரம் இந்திய அளவிற்கு கிடையாது என்பது. இது ஒருவகை ‘அக்கரை பச்சை’ மனோபாவம் என்ற எண்ணம் எனக்கு உண்டு. இதைப் பற்றி விரிவாக ஆராய்வதற்கான அனுபவம் கிடையாது என்பதால் பெரும்பாலும் நண்பர்களின் கூற்றுக்கு ஒத்துப்பாடி விடுவேன்.   நமது ஜூனியர் இப்பொழுதுதான் அருகாமையில் இருக்கும் ப்ரஸ்பட்டேரியன் சர்ச் நடத்தும் பால்வாடியில் சேர்ந்து கலரிங், கட்டிங், ஒட்டிங் வேலைகள் கற்றுக் கொண்டு வருகிறார். இன்னும் நான்கு […]

ராவணன் : மணிரத்னம் துரத்திய மாயமான்

ராவணன் : மணிரத்னம் துரத்திய மாயமான்

பெரும் பராக்கிரமசாலியாக அறியப்படும் இராமனாலே ஒரு மானை குறிவைத்து வேட்டையாட முடியவில்லை. இறக்கும் முன்னர் அந்த மாயமான் மாரீசனாக மாறி இராமனையே ஏமாற்றிவிடுகிறது. ஒடுக்கப்பட்ட மனிதர்களின் கதையை படமாக எடுக்க நினைத்து மணிரத்னம் அதைத்தவிர மற்ற எல்லாவற்றிலும் கவனம் செலுத்தியிருக்கிறார். தலையை சுற்றி மூக்கைத் தொடமுடியவில்லை. இடையில் சுஹாசினியின் தலை வேறு பெரிதாக தடுக்கிறது (அவர்தான் வசனம்). மகாபாரதத்திலிருந்து ஒரு இலையை திருப்பி ‘தளபதி'யாக வெற்றி கண்டது மணிரத்னத்தின் சாமர்த்தியம். ஆனால் ‘ராவணன்' மாயமானாக அவரை ஏமாற்றி […]

T20 உலகக் கோப்பை: ஒரு வாழ்த்தும், இரு மேட்ச் குறிப்பும்.

T20 உலகக் கோப்பை: ஒரு வாழ்த்தும், இரு மேட்ச் குறிப்பும்.

கிரிக்கெட் உலகின் முடிசூடா மன்னர்களான இங்கிலாந்து கடைசியில் இன்று முடிசூடிக் கொண்டுவிட்டார்கள். 2010 T20 உலககோப்பை இறுதிப் போட்டியில் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த ஆஸ்திரேலியாவை அநாயசமாக ஜெயித்து வரலாற்றில் இடம்பிடித்து விட்டார்கள். முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 147 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தாலும் ஆஸியின் மேல்தான் நான் முழு நம்பிக்கை வைத்திருந்தேன். ஆனால் ஆட்டநாயகன் கிரேக் கீஸ்வெட்டர் கம்பாக நின்று ஆஸ்திரேலியாவின் T20 சாம்பியன்ஷிப் கனவை தவிடுபொடியாக்கிவிட்டார். இங்கிலாந்திற்கு வாழ்த்துகள். அதிக ஆர்ப்பாட்டமில்லாமல் ஒன்-சைடடாக நடந்து […]

கொல்லத்தான் நினைக்கிறேன் – விமர்சனம்!

கொல்லத்தான் நினைக்கிறேன் – விமர்சனம்!

பைத்தியக்கார பயல்கள் விளையாட்டு போட்டிகளில் (Crazy boys in games) விளையாடுவது பற்றிய ஒரு ஆங்கில Spoof படம் முன்னர் வெளிவந்தது. அதே காலத்தில்தான் கிரேசி மோகனின் முதல் நாடகமான 'கிரேசி தீவ்ஸ் இன் பாலவாக்கம்' நாடகப் பிரதி வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பிறகு அம்மாதிரி நாடக வடிவங்கள் நிறைய படித்து, டிவியில் பார்த்து, ஒலிநாடாக்களில் கேட்டிருந்தாலும், இன்றும் அந்த முதல் பிரதியில் இருந்த புத்துணர்ச்சி மறக்க முடியாதது. எங்கள் பாட்டி முதற்கொண்டு எல்லாரும் சுற்றி உட்கார்ந்திருக்க […]

கடவுள்களின் கார்னிவெல்

கடவுள்களின் கார்னிவெல்

பொதுவாக இந்தியர்கள் தாங்கள் அமெரிக்க மண்ணை மிதித்ததற்கு சாட்சியமாக டிஸ்னிலேண்ட், நயாகரா, நியுயார்க் டைம் ஸ்கொயர், லாஸ் வேகாஸ் காஸினோக்கள் என்று பிகாஸா ஆல்பம்களில் நிரப்பி வைத்தாலும் மனதிற்குள் ரகசியமாக ’இங்க எங்கிட்டுய்யா நைட் கிளப், நியூட் பார்லாம் இருக்கு? ஒருதடவ போயிட்டு வந்திரனும்’ என்று வந்த புதிதில் நேர்ந்து கொள்வார்கள். ஆரம்ப பரபரப்புகள் எல்லாம் அணைந்துபோய் டிவியும், கள்ள டிவிடியில் திரைப்படமுமாக வாழ்க்கை சுவாரசியமில்லாது போகும்போது சமூக சந்திப்பு கூடமாக முதலில் தெரிவது கோவில்கள். கிறிஸ்துவர்கள், […]

தாசில்தார் ஆபிஸ் மைக்கூடு

தாசில்தார் ஆபிஸ் மைக்கூடு

  இப்பொழுது இந்திய நகரங்களில் தாசில்தார் ஆபிசில் மைக்கூடு வைத்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. ஆனால் அமெரிக்க குடியுரிமை மற்றும் வந்தேறிகள் சேவை மையத்தில் (அதாங்க  USCIS – United States Citizen and Immigration Service)ஒரு மைக்கூடு வைத்திருக்கிறார்கள். அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர்களின் வம்புகளுக்குத் தீனிபோடும் வற்றாத மைக்கூடு அது. ‘நெவார்க் ஏர்போர்ட்ல வந்து இறங்கினவுடன திருப்பி அனுப்பிச்சிட்டாங்களாம்பா’ என்று ஒரே செய்தியை பத்து காப்பி போட்டு பலருக்கும் விநியோகம் செய்து கொண்டே இருப்பார்கள். பத்து பத்தாக […]

கடைசியாக : July 22, 2016 @ 9:48 am