ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

தோழியாகவே இருந்துவிடேன்

நீ என்ன என்பதில் இன்னமும் நிலவுகிறது எனக்குள் ஒரு குழப்பம்… மூடியே இருக்கிறாய்… பலவந்தமாய் உன் இதழ் பிரிக்க எனக்கு விருப்பமில்லை… தானாய் விரிந்து விட‌ உனக்கும் வரவில்லை… இப்படிச் செதுக்கலாம் உன்னையென‌ நான் யத்தனிக்கையில் எப்படியாயினும் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிதைந்தே போகலாம்… நல்லவேளை என்னிடமிருந்த முத்து மணிகள் இன்னமும் என்னிடத்திலேயே… தோழியாகவே இருந்துவிடேன் நாம் செல்லும் சாலை எங்காவது பிரிகிறதா பார்ப்போம். தொடர்புடைய படைப்புகள் :காற்றில் கரைந்தவன்

மாலதி

அந்த பன்னாட்டு நிறுவனத்தின் ஏசி கேன்டீனில் அப்போதைக்கு ஜாஸ்தி கூட்டம் இல்லைதான். கண்ணாடிச் சுவர்களுக்கு அப்பால், புல் தரையினூடே அமைந்த நடைபாதையில் தங்கள் ஆக்ஸஸ் கார்டுகளைத் தேய்த்தபடி போய் வந்து கொண்டிருந்த என்ஜினியர்களைப் வெறுமையாய்ப் பார்த்தபடி அமர்ந்திருந்தான் ராகவன். உண்மையில் அது அவன் வேலை செய்யும் அலுவலகம் அல்ல. அவன் வேறு நிறுவனத்தைச் சார்ந்தவன். நண்பனைப் பார்க்க‌ கொடுக்க கெஸ்ட் பாஸ் போட்டு வந்தவன் பதட்டமாய் அப்படி அமர்ந்திருந்ததற்கு வேறு காரணங்கள் இருந்தது. அவன் வந்து அமர்ந்த […]

திரியும் உண்மைகள்

திரியும் உண்மைகள்

'ம‌ஞ்சு, பூர்ணிமாவ‌ நான் ல‌வ் ப‌ண்றேன்'. 'நினைச்சேன், பணம் வாங்காம‌‌ ரிப்பேர் ப‌ண்ற‌ப்போவே நினைச்சேன்'. மெலிதாக‌ வெட்க‌ப் புன்ன‌கை பூத்த‌ கதிர் தொட‌ர்ந்தான். 'ஆனா என‌க்கு கொஞ்சம் சந்தேகமா இருக்கு'. 'அட‌ப்பாவி, ல‌வ் ப‌ண்ண ஆர‌ம்பிச்ச‌துமே ச‌ந்தேக‌மா உன‌க்கு'. 'இல்ல‌, அவ‌ ஸ்கூட்டி ரிப்பேர் ஆற‌தும், என்கிட்ட‌யே எடுத்துட்டு வ‌ர‌தும், ரிப்பேர் ப‌ண்ற‌ வ‌ரைக்கும் என் கிட்ட‌யே பேசுற‌தும், வீட்ல‌ ச‌மைச்ச‌த‌ என்கிட்ட‌ குடுக்குற‌தும், நாளு, கிழமைன்னா வீட்டுக்குக் கூப்பிடுறதும் எல்லாமே, நான் ஆச‌ப்ப‌ட்ற‌ மாதிரியே ந‌ட‌க்குது'. […]

பரிச்சயக்கோணங்கள்

'இத ஏன் நீ என்கிட்ட முதல்லயே சொல்லல?'. 'அதுக்கு சான்ஸே இதுவரைக்கும் வரல‌, சந்த்ரு'. 'புவனா, நாம ரெண்டு வருஷமா லவ் பண்றோம். இந்த ரெண்டு வருஷத்துல ஒரு தடவ கூடவா அதுக்கு சான்ஸ் வரல? ப‌ழ‌க‌ ஆர‌ம்பிச்ச‌ப்போ சொல்லிருக்க‌லாமே'. ' ப்ச், ரெண்டு வ‌ருஷ‌த்துக்கு முன்னாடி நீ யாரோ, நான் யாரோ. அப்போதான் பாத்திருந்தோம். ப‌ழ‌க‌ ஆர‌ம்பிச்சிருந்தோம். ப‌ர்ச‌ன‌லான‌ விஷ‌ய‌த்தை, அதிக‌ம் ப‌ழ‌க்க‌ம் இல்லாம‌ உன்கிட்ட‌ எப்ப‌டி சொல்ற‌துனு சொல்ல‌ல‌டா'. 'ச‌ரி, அதுக்க‌ப்புற‌ம் சொல்லியிருக்கலாம்ல‌'. ' […]

மோதிக்கொள்ளும் காய்கள்

'பயணிகளின் கனிவான கவனத்திற்கு. வண்டி எண் ஆறு ஒன்று ஏழு எட்டு சென்னையிலிருந்து திருச்சி வரை செல்லும் ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸ் நான்காவது நடைமேடையிலிருந்து இன்னும் சற்று நேரத்தில் புறப்படும். யாத்ரி க்ருப்யா க்யான் தே…' காதைக் கிழித்துவிடும் நோக்கில், சென்ட்ரல் ரயில் நிலையம் முழுவதும் அப்பிக்கிடந்த சலசலப்பையும், பரபரப்பையும் தாண்டி கத்திக்கொண்டிருந்தாள் ஒரு பெண், ரயில் நிலைய ஒலிப்பெருக்கியில். கடைசி நிமிடத்தில் வந்து ரயில் கிளம்புவதற்குள் தங்கள் பெட்டிகளில் ஏறிவிட அவசர அவசரமாய் ராகவனைக் கடந்து விரைந்து […]

தற்கொலை

  அஸ்தமனத்திற்கு பின்பான‌ விடியல்கள், ஒரு விருப்பத்துடனோ அல்லது ஒரு நிர்பந்தத்துடனோ நிராகரிக்கப்படவே செய்கின்றன….   உயிரை விட‌வும் பெரிய‌தாகிவிடுகிறது  ஏதோ ஒன்று…   முட்டுச்ச‌ந்துக‌ளில்  முட்டிக்கொள்ளுகின்ற‌ வாழ்க்கையை பெருந்துணிச்ச‌லொன்று இட்டுச் செல்லுகிற‌து அஸ்த‌ம‌ன‌த்தை நோக்கி…   இட்டுச் செல்லும் வ‌ழியெங்கும் அது விடிய‌ல்க‌ளைப் ப‌ற்றி அவ‌தூராக‌வே பேசுகிற‌து‌…   விடிய‌ல்க‌ளின் வெம்மையை தாங்காத‌ ம‌ன‌ம் அஸ்த‌ம‌ன‌ இருளில் புதைவ‌தை வேறு வ‌ழியின்றி ஏற்கிற‌து…   பாதையைப் பொறுத்தே அமைந்து தொலைகின்றன‌  இந்த முட்டுச்ச‌ந்துக‌ள்…   புதிய‌ […]

அவள் சாமான்யள் அல்ல

  அவளிடம் நான் அப்படிச் சொல்லியிருக்கக்கூடாது. இப்படித் தோன்றிய நொடிகளில் பசித்த வயிறால் தூக்கம் கலைந்திருந்தது எனக்கு. அந்த விடிகாலையில், சுற்றிலும் தூவப்பட்டு பரவிக்கிடந்த மெளனத்தினூடே, உத்தரத்தில் தொங்கும் மின்விசிறியின் உடலை வெறித்துப் பார்த்தபடி கிடந்திருந்தேன் நான். இப்ப‌டி நான் க‌ண்விழிப்ப‌து ஒன்றும் புதித‌ல்ல‌ தான். ஆனால் வழக்கமாக என் நினைவில் அந்த நாள் வரை வந்திராத அவ‌ளிட‌ம் நான் சொன்ன‌ அந்த‌ வார்த்தைகள் அன்று நினைவில் தங்காத ஏதோ ஒரு க‌ன‌வின் முற்றுப்புள்ளியிலிருந்து தொட‌ர்பே இன்றி […]

விநோதன்

விநோதன்

அவன் இயல்பில் அப்படி நிற்பவன் அல்ல. ஆனால் அன்று நின்றிருந்தான், நடுத்தெருவில். இடது புறம் ஒரு சைக்கிள்காரரும், வலதுபுறம் ஒரு மொபெட்காரரும் கடந்து செல்கையில் இவனை வினோதமாக பார்த்துச்செல்கின்றனர். ஆனால், அதைப் பற்றிய பிரங்ஞை இல்லாமல் அவன் பார்வைக்கு தெரிந்த சில நொடிக்காட்சிகள் அப்படியே நின்று விட்டன.  தெருவில் சென்றுகொண்டிருந்த ஏனையோர் அவனை வினோதமாய் பார்த்திருக்க, அவனது பார்வையோ எங்கோ நிலைகுத்தியிருந்தது. கோடு போட்ட அரைகை சட்டையும், கறுப்பு நிற கால்சட்டையும் மறைத்திருந்த அவன் உடலில் எந்த வித அசைவும் இன்றி […]

தவறிவிடும் சந்தர்ப்பங்கள்

தவறிவிடும் சந்தர்ப்பங்கள்

ஃபுட்போர்டில் தொங்கியபடி பயணித்த பஸ்ஸிலிருந்து இறங்கி ஓட்டமும் நடையுமாய் கல்லூரி வளாகத்தைக் கடந்து இரண்டாம் ஆண்டு கணிப்பொறியியல் லாப்பை நோக்கிப் போய்க்கொண்டிருந்த ரவியின் நடையில் அப்பட்டமாய் ஒரு அவசரம் இன்னமும் தொங்கிக்கொண்டிருந்தது. அவன் அப்படிப் போகக் காரணங்கள் இல்லாமலில்லை. அவனுக்கொரு தங்கை இருக்கிறாள். ஒரே தங்கை. பி.ஏ. ஆங்கிலம் படிக்கிறாள். அவள் மேல் ரவிக்கு கொள்ளை அன்பு, பாசம். அவளின் கல்லூரிக்கு சொந்தமாக கல்லூரி பஸ் இல்லை. தினம் சென்னை மாநகர‌ பல்லவனுக்கு காத்திருந்து கூட்டத்தில் ஏறி […]

இருத்தல் தொலைத்த‌ வார்த்தைகள்…

இருத்தல் தொலைத்த‌ வார்த்தைகள்…

  சில நேரங்களில், மெளனம் ஒரு பெரிய ஆயுதம். சொல்லாத வார்த்தைகளுக்கு அர்த்தங்கள் மிக அதிகம். இருத்தல் தொலைத்த வார்த்தைகள் மிக மிக சுதந்திரமானது. அப்படிச் சில வார்த்தைகள், தம் இருத்தலை தொலைத்திருந்தன அந்த மாயாஜால் உணவுவிடுதி மேஜையில். தொலைக்காத வார்த்தைகளை உதிர்த்துக்கொண்டிருந்தனர் அந்த‌ இருவரும். 'இப்ப என்னதான் சொல்ற' மெளனம் கலைத்து சீறினான் கார்த்திக். 'ரமேஷ் உனக்கு முன்னாடியே எனக்கு ஃப்ரண்ட். அவன் ஃப்ரண்ட்ஷிப்ப உனக்காக என்னால விட முடியாது'. பதிலுக்கு பாய்ந்தாள் ஜினிதா 'அப்போ […]

Next Page »

கடைசியாக : July 22, 2016 @ 9:48 am