ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

யாதுமானவள் உருவான கதை

யாதுமானவள் உருவான கதை

February 3, 2012 by · 3 Comments 

மறைந்த எழுத்தாளர் சுஜாதாவின் அனாமிகா சிறுகதையை ஆனந்தவிகடனில் வாசித்திருக்கிறீர்களா? பிறப்பையும், இறப்பையும் பற்றி தத்துவார்த்தமாக கேள்வி எழுதும் கவிதைப் பெண் ஒருவள், அந்தக் கவிதையை எழுதிய மறுநாள், மெரினா கடற்கரையில் சுனாமியில் சிக்கி அலையோடு அலையாக மறைந்துவிடுகிறாள். ஒரு கவிதை போல ஆச்சரியப்படுத்தி திடீரென மறைந்த அந்தப் பெண்ணின் பெயர் அனாமிகா. அனாமிகா என்றால் பெயரில்லாதவள் என்று பொருள். பெயரில்லாதவள் திடீரென ஒரு சுனாமி அலையில் அவளே இல்லாமல் போகிறாள். இதில் நெகிழ வைப்பது என்னவென்றால் அனாமிகா […]

அந்த இளைஞர்களுக்கு சல்யூட்!

February 15, 2011 by · 2 Comments 

  கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன். நான் அப்போதுதான் கல்லூரி முடித்து கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவனம் துவங்கியிருந்த நேரம். உதவும் கரங்கள் வித்யாகரை சந்தித்தேன். "நீங்கள் வாரா வாரம் இங்கிருப்போருக்கு கம்ப்யூட்டர் பயிற்சி தர முன் வந்திருப்பது நல்ல விஷயம். ஆனால், உங்களால் இதை தொடர்ந்து செய்ய முடியும் என்ற உத்திரவாதம் தந்தால் மட்டுமே, நான் உங்கள் உதவியை ஏற்பேன்", என்றார். அவர் குரலில் இருந்த மெல்லிய கடுமை என்னை கோபம் கொள்ள வைத்தது. உதவி செய்ய […]

இதுதான் காதல் என்பதா?

இதுதான் காதல் என்பதா?

February 14, 2011 by · Leave a Comment 

  நான் ஓய்வெடுக்கப் போவது என் வீட்டு காலிங் பெல்லிற்கு எப்படியோ தெரிந்துவிடும். இன்றும் அப்படித்தான். எழுந்து வர்றீயா இல்லையா என்பது போல தொடர் டிர்ர்ர்ரிங்.. கடுப்புடன் மாடியிலிருந்து எட்டிப் பார்த்தபோது ஒரு இளம்பெண்ணும் ஆணும். "சார் ஒரு நிமிஷம்" என்றாள் அவள்.  "எனக்கு எதுவும் வேண்டாம்மா", என்று ஒரே வாக்கியத்தில் அவளை துரத்தப் பார்த்தேன். "சார். . . நான் சென்சஸ் எடுக்க வந்திருக்கேன்", என்றாள். பட்டென என் மூடு மாறியது. படி இறங்கி வந்தேன். […]

ஒரு மனிதன் எப்போது மாமனிதனாகிறான்?

ஒரு மனிதன் எப்போது மாமனிதனாகிறான்?

January 14, 2011 by · 3 Comments 

ஒரு மாபெரும் பாடகரின் வாழ்க்கையில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம். (எப்போதோ ஒரு பழைய புத்தகத்தில் வாசித்தது) மிகப் பெரிய நடிகர் நடிக்கவிருந்த படத்தின் பாடல் பதிவிற்க்காக ஒரு இரவுப் பயணம்!  சீர்காழியிலிருந்து திருச்சி வழியாக காலையில் சென்னை அடைந்த அந்தப் பாடகருக்கு ஒரு அதிர்ச்சி. பாடலின் ஒலிப்பதிவு குறிப்புகள் உட்பட, அவரின் உடமைகள் அனைத்தும் காணவில்லை. உடமைகளை விட பாடல் குறிப்புகள் காணாமல் போனதில் அவருக்கு மிகவும் வருத்தம். குறிப்புகளின் உதவியின்றி இன்று ஒலிப்பதிவு சிக்கலாகப் போகுமே […]

மினிமம் பட்ஜெட்டில் டிஜிட்டல் சினிமா

மினிமம் பட்ஜெட்டில் டிஜிட்டல் சினிமா

May 6, 2010 by · Leave a Comment 

"அவர்" – திரைப்படத் துவக்க விழாவும், டிஜிட்டல் சினிமா கருத்தரங்கும் "அவர்" – இயக்குனராக நான் அறிமுகமாகும் முதல் திரைப்படம். ஒரு கனவு நிறைவேறப் போகிற மகிழ்ச்சி இருந்தாலும், முதல் படம் என்கின்ற பதற்றம் இல்லாமல் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். முதல் காரணம், இணையம் வழியாக நான் பெற்றிருக்கும் உங்களின் நட்பு, அன்பு மற்றும் ஆதரவு. அடுத்த காரணம், சினிமாவை ஒரு கலையாக மட்டும் பார்க்காமல், கல்வியாக நினைத்து கற்கும் குணம் என்னிடத்தில் எப்போதும் உண்டு. கடைசியாக, […]

சூப்பர் ஸ்டார் ஆகணும் சார்

சூப்பர் ஸ்டார் ஆகணும் சார்

April 2, 2010 by · Leave a Comment 

"சூப்பர் ஸ்டார் ஆகணும் சார். அதுதான் என் கனவு!" புதுமுகம் முதல் தளபதிகள் வரை நடிக்க வருபவர்களின் கனவு இதுதான். சூப்பர் ஸ்டார் ஆவது என்றால் என்ன ? தொடர்ந்து வசூல் மன்னனாகத் திகழ்வதா ? எம்.கே. தியாகராஜ பாகவதர் போல, பாடியே மக்களைக் கவர்வதா? எம்.ஜி.ஆரைப் போல சண்டைக்காட்சிகளால் மனங்களை வெல்வதா? ரஜினியைப் போல ஸ்டைல்களால் ஈர்ப்பதா? இதற்கு ஒரு சிலர் ஆம் என சொல்லக் கூடும். அதே கேள்வியை மேலும் நீட்டித்தால்? சூப்பர் ஸ்டார் […]

கடைசியாக : July 22, 2016 @ 9:48 am