ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

இந்தியக் கிரிக்கெட் கடந்த 10 ஆண்டில்

இந்தியக் கிரிக்கெட் கடந்த 10 ஆண்டில்

  சூதாட்டத்தில் தனது பெயரையும் பொலிவையும் இழந்த கிரிக்கெட், தனது சந்தைப்படுத்தலின் மூலம் வேகம் விறுவிறுப்பின் வழியாக  அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது இந்த 2001 – 2010 தசாப்தத்தில்தான். கண்ணியமிக்க கதாநாயகர்களின் ஆட்டம் என்ற தேன்கூடு கல்லெறிந்து கலைக்கப்பட்டபின்னர் குறிப்பாக இந்தியக் கிரிக்கெட்டை மீள் உருவாக்கம் செய்தவர்கள் தங்களை நிலைப்படுத்திக் கொண்டதும் இந்த பத்தாண்டுகளில் தான். உலகம் என்றால் அமெரிக்கா என இருப்பதைப்போல ஒரு காலத்தில் கிரிக்கெட் என்றால் இங்கிலாந்து என்ற மாயையை இந்தியா உடைத்ததும் […]

2011 – திகில் சிறுகதை

  இலைகளைத் துறந்து நிர்வாணத்திற்கு வெட்கப்பட்டு பனியைப்போர்வையாக போர்த்திக் கொண்டிருந்த மரங்களையும் செடிகளையும் ரசித்தபடியே புது வருடக் கொண்டாட்டங்களுக்கு தயராகிக் கொண்டிருக்கும் சுவீடனின் தென்பகுதி நகரான கார்ல்ஸ்ஹாம்ன் நகர சாலை ஒன்றில் மோகனுடன் நடந்து கொண்டிருந்த பொழுது  "கார்த்தி, இன்னக்கி நைட் நியுஇயர் கல்லறையில கொண்டாடுவோமா!!"  நான் எதுவும் பதில் பேசவில்லை. எங்கள் வீட்டில் இருந்து சில நூறு மீட்டர்கள் தூரம் இருக்கும் கல்லறைத்தோட்டத்தை நாங்கள் கடந்து கொண்டிருக்கும்பொழுதுதான் அந்தக் கேள்வியை கேட்டபொழுது   குறிப்பிட்டக் கல்லறைத்தோட்டம் […]

பிறன்மனை நோக்கா

எண்ட காதலி உங்களுக்கு மனைவி ஆகலாம், ஆனால் உங்க மனைவி எனக்கி திரும்ப காதலியாகாது சாரே , அந்த ஏழு நாட்கள் பாக்யராஜ் மாதிரி வாழ்ந்து கொண்டிருந்த நான் இப்பொழுதெல்லாம் மற்றவர்களுக்கு உரிமையான பெண்களிடம் அடிக்கடி சஞ்சலப்படுகின்றேன். சாதரண அழகுடையப் பெண்கள் கூட அடுத்தவனின் காதலி என அறியப்படும் பொழுது அவர்களின் மேல் இருக்கும் கவர்ச்சி மேலும் அதிகமாகுகிறது.  வயது கடை இருபதுகளில் இருப்பது கூட ஒரு காரணமாக இருக்கலாம். அம்மு நீங்கலாக முன்னாள் காதலிகள் அனைவருமே […]

கிரிக்கெட் நிகழ்கால ஊழல் – ஸ்பாட் பிக்ஸிங்

கிரிக்கெட் நிகழ்கால ஊழல் – ஸ்பாட் பிக்ஸிங்

தனி மனித ஒழுக்கம், கிரிக்கெட் கண்ணியம் , தலைமைப் பண்பு , ஆட்ட நேர்த்தி என அனைத்திற்கும் முன்னுதாரணமாகப் பார்க்கப்பட்ட ஹான்ஸி குரோனியேவின் "சில கிரிக்கெட் ஆட்டங்களின் முடிவுகளை முன்கூட்டியே கணித்தேன், நான் முழுக்க முழுக்க நேர்மையானவனும் அல்ல” என்ற ஒப்புதலிலும் அதன் தொடர் அதிர்வுகளிலும்  கிரிக்கெட் உலகமே ஸ்தம்பித்துப் போய் 10 வருடங்கள் ஆகிய நிலையில் , கிரிக்கெட் ரசிகர்களை மீண்டும் வேதனையில் ஆழ்த்த ஸ்பாட் – பிக்ஸிங் முகமது அமீர், ஆசிப் மற்றும் சல்மான் […]

முகமது அலி மற்றும் முத்தையா முரளிதரன்

முகமது அலி மற்றும் முத்தையா முரளிதரன்

என்னை நீக்ரோ என்றழைக்காத வியட்காங்கையர்களை (வியட்நாமிய கம்யூனிஸ்டுகள்) நான் ஏன் கொல்லப்போகவேண்டும்” தான் சார்ந்திருந்த தேசத்தை எதிர்த்து குரல் எழுப்பியது ஒரு அரசியல்வாதியோ ,போராளியோ அல்ல !! புகழின் உச்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த குத்துச்சண்டை விளையாட்டு வீரர் கிளேஸியஸ் எக்ஸ் (அமெரிக்க இஸ்லாமிய தேசியத்தில் பரம்பரைப் பெயர்கள் நீக்கப்பட்டு எக்ஸ் என வைத்துக்கொள்ளப்படும் )என்றழைக்கப்பட்ட முகமது அலி,  விளையாட்டும் அரசியலும் வெவ்வேறு ஆனாலும் அரசியலாலும் அரசாங்கத்தாலும் மனித உரிமைகள் நசுக்கப்படும்பொழுது விளையாட்டுவீரர்களும் குரல் கொடுக்கவேண்டும் என்பதற்கு […]

அரையிறுதிக்கு போகப்போவது யார் ?

அரையிறுதிக்கு போகப்போவது யார் ?

முந்தைய இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த முறை, ஐபிஎல் இல் அரையிறுதிப் போட்டிகளுக்கான இடங்களைத் தக்க வைத்துக்கொள்ள மும்பையைத் தவிர்த்து ஏனைய ஏழு அணிகளுமே கடுமையாக முயற்சிக்க வேண்டியுள்ளது. பஞ்சாபிற்கு கூட காகித கணக்கில் நூலிழை வாய்ப்பு இருக்கின்றது. முன்பு போல போட்டித்தொடரின் மத்தியிலேயே தனது அரையிறுதி வாய்ப்புகளை உறுதி செய்து கொண்டவர்கள், வேண்டிய அணிகளிடம் தோற்று வேண்டா அணிகளை வெளியேற்ற முடியாத சூழல் இப்பொழுது இருக்கின்றது. மும்பை அணியின், ராஜஸ்தானுக்கு எதிரான வெற்றியின் மூலம் […]

ஸ்மொலென்ஸ்க் நகரமும் போலாந்து தேசத்தின் சாபமும்

ஸ்மொலென்ஸ்க் நகரமும் போலாந்து தேசத்தின் சாபமும்

இத்தாலியர் அல்லாத போப்பரசரை உலகிற்கு தந்த தேசம் !!! ஷாருக்கானையும் ஹிந்தித் திரைப்படங்களையும் ஆராதிக்கும் நாடு !! மளிகைக் கடைகளில் பழச்சாறுகளுடன் வோட்காவும் கிடைக்கும் கொண்டாட்ட தேசம். சண்டை போடனுமா, போலாந்து என்று ஒரு மைதானம் இருக்கு அங்கே சண்டைகளை வைத்துக் கொள்வோம் என ஐரோப்பிய நாடுகளின் போர் மைதானம். ரேடியத்தைக் கண்டுபிடித்த மேரி கியூரியின் தாயகம் !!  நூறு வருடங்கள் உலக வரைபடத்திலேயே இல்லாத நாடு. மொழியையும் கலாச்சாரத்தையும் எப்படி பதுங்கு குழிகளில் பாதுகாப்பது என […]

சீறும் சிறுத்தை – கங்குலி

சீறும் சிறுத்தை – கங்குலி

கோல்கததா க்நைட் ரைடர்ஸ் ஐபிஎல் 2010 போட்டிகளில் மற்றும் ஒரு வெற்றி பெற்றது. மேம்போக்காக பார்த்தால் கோல்கத்தா அணி தில்லி அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது என வெறும் புள்ளிவிபரக் கணக்காகத் தெரியும்  2008 ஆம் ஆண்டிம் மெக்கல்லமின் அதிரடி முதல் ஆட்டத்தைத் தவிர ஏனைய பெரும்பாலான ஆட்டங்களில் தோற்று கோமாளியைப்போல வெளியேறிய கோல்கத்தா போனவருடமும் பெரிதாகச் சாதிக்கவில்லை. அணி வீரர்களின் பெயர்களைக் கூட நினைவில் வைத்திராத மெக்கலலம் அணியின் தலைவராகப் பொறுப்பேற்றாலும் கோமாளி அணிக்கு […]

கடைசியாக : July 22, 2016 @ 9:48 am