ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

கிழித்தெறிந்த காகிதம்; காட்டினை அழித்தது!

கிழித்தெறிந்த காகிதம்; காட்டினை அழித்தது!

எழுதி நிறைந்ததில் கவிதையானது – கதைகளானது – புத்தகமானது; கிழித்து கிழித்து எரிந்ததில் – குப்பையானது; காகிதம்!   கண்ணீரில் மை தீட்டி, எண்ணம் வார்த்ததில் கடிதமானது; நினைவுகளை சுமந்து வந்ததில் பொக்கிசமானது; காகிதம்!   கடவுளை பற்றி எழுதியதில் புனிதமானது காலம் கடந்ததை எழுதி வரலாறானது காலிடறி பட்டாலும் தொட்டுக் கும்பிடவைத்தது; காகிதம்!   எரிந்ததில் சாம்பலானது எழுதிவைக்க குறிப்பேடானது நேரம் காலம் குறித்ததில் நாளேடானது நேற்றையும் இன்றையையும் எழுதி வைத்ததில் நாட்குறிப்பானது; காகிதம்!   […]

குவைத் பொங்கு மன்றத்தின் கலை இலக்கிய விழா

குவைத் பொங்கு மன்றத்தின் கலை இலக்கிய விழா

21.05.10, வெள்ளிக் கிழமை மாலை ஆறு மணியளவில், குவைத் பிந்தாஸ் அரங்கத்தில் விழா துவங்கி இரவு பத்து மணிவரை, மிக சிறப்பாகவும், தமிழரின் சிறப்பு இப்படித் தான் இருக்கும் என்பதாகவும், தமிழர் விழாக்களை இப்படி நடத்துங்கள் என நம் பண்பினை மீண்டும் நமக்கே  போதிப்பதாகவும், நாட்டியம் கிராமியப் பாடல்கள், ஐயா அவர்களின் தமிழ் பேச்சாழி என வந்தவரின் உள்ளம் கவர்ந்து நிறைவடைய தமிழர் என்ற பெருமிதத்துடன் கலைந்தது கூட்டம்.   ஐயா திருவுடையான் அவர்களின் குரலில் பாரதியார் […]

என் குழந்தையும் நானும்! – 1

என் குழந்தையும் நானும்! – 1

கையசைத்துவிட்டு பள்ளிக்கு செல்கிறாய்,   எனக்கென்னவோ நான் தான் உனை விட்டுப் பிரிவது போல் வலி,   நீ – குதூகலத்தோடு ஓடிவந்து – எனக்கொரு முத்தமிட்டு விட்டு புதியதாய் ஒரு சுதந்திரம் கிடைத்தாற்போல் ஓடுகிறாய்;   எது உனக்கு சந்தோஷம்?   எனைவிட்டுப் பிரிந்திருப்பதா இல்லை, யாருமே உனை கண்டித்திராத ஒரு உலகமா???!!  நானும் நீயும் அடித்து அடித்து விளையாடுகிறோம்,   நீ எனக்கு வலிக்கும்வரை அடிக்கிறாய்..,   நான் – எங்கு உனக்கு வலித்துவிடுமோ […]

கடைசியாக : July 22, 2016 @ 9:48 am