ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

மிஸ். தீபிகாவின் துணிச்சல்!

மிஸ். தீபிகாவின் துணிச்சல்!

சென்னை எத்திராஜ் கல்லூரியின் வாசல். மாணவிகள் ஆட்டோக்களிலும் கார்களிலும் ஸ்கூட்டிகளிலும் வந்து இறங்கி தங்கள் வகுப்பு நோக்கிப் போகிறார்கள். ஸ்டைலாக சுசுகி பைக்கில் வந்து இறங்குகிறார் ஒரு மாணவி. பத்தொன்பது வயதான தீபிகா, அந்தக் கல்லூரியில் டூரிஸம் அண்ட் மானேஜ்மெண்ட் பிரிவில் இரண்டாம் ஆண்டு மாணவி. படிப்பில் மட்டும் தன் கவனத்தைச் செலுத்தாமல் பல்வேறு விதமான திறமைகளை வளர்ந்துக் கொள்வதில் ஆர்வம் கொண்டவர். அவரது ஆர்வங்கள் பட்டியலிட்டால் அதன் எண்ணிக்கை நீண்டு கொண்டேயிருக்கிறது. அதில் ஒன்றுதான் பைக் […]

இரண்டு மனம் வேண்டும் – டி.எம்.எஸ்ஸின் திகில் அனுபவம்

இரண்டு மனம் வேண்டும் – டி.எம்.எஸ்ஸின் திகில் அனுபவம்

ஒரு பத்திரிக்கையாளனாக பலபேரை பேட்டி எடுத்திருக்கிறேன். ஆனால் என் அபிமான பாடகர் டி.எம்.எஸைப் பார்த்து பேட்டியெடுக்க வேண்டும் என்கிற கனவு நீண்ட நாள் தள்ளிக் கொண்டே போனது. அந்த தேன்மதுரக்குரலுக்குச் சொந்தக்காரரை சந்திக்க வேண்டும் என்ற ஆவலில் அவருடன் தொலைபேசியில் அறிமுகப்படுத்திக் கொண்டு பேசினேன். அப்போது நான் ஒரு பிரபல பத்திரிக்கையில் உதவி ஆசிரியன். பேட்டிக்காக நாள் குறிக்கப்பட்டது. நாங்கள் அவர் வீட்டுக்குப் போனது ஒரு ஞாயிறு காலை. பேப்பர் படித்துக் கொண்டிருந்தார். போனில் பேசிய விபரத்தைக் […]

விஜய் டிவியின் மோசடி

விஜய் டிவியின் மோசடி

'புதிய தலைமுறை' வார இதழில் உதவி ஆசிரியராக பணியாற்றும் நான்,  அதில் எழுதிய கட்டுரைகளிலேயே பெருமைப்பட்டுக் கொள்ளகூடிய எழுத்தாக நான் கருதுவது ஜெரினா பேகம் என்கிற பெண்மணியின் போராட்டங்கள் நிறைந்த தன்னம்பிக்கை வாழ்க்கையைப் பற்றிய பதிவுதான். அதில் அவர் தன் காணாமல் போன எட்டுவயது குழந்தை பற்றி தெரியப்படுத்தியிருந்தார். அந்தக் குழந்தையின் படத்தையும் அந்தக் கட்டுரையில் வெளியிட்டிருந்தேன். அதைப் படித்த ரகுநாதபுரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த வாசகி நிர்மலா என்பவர் மூலம் ஜெரினாவின் குழந்தை இருக்கும் இடம் […]

எம்.ஜி.ராமச்சந்திரன் பேசுகிறேன்..

எம்.ஜி.ராமச்சந்திரன் பேசுகிறேன்..

அப்போது நான் 'தாய்' வார இதழில் உதவி ஆசிரியர். எம்.ஜி.ஆர். அவர்களால் நடத்தப்பட்ட பத்திரிகை அது. அவரது வளர்ப்பு மகன் அப்புவின் நிர்வாகத்தில் இயங்கிக் கொண்டிருந்த்து. அப்போது எம்.ஜி.ஆர்தான் தமிழகத்தின் முதல்வர். அது சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்த வேளை. எனக்கு இன்னமும் நன்றாக நினைவிருக்கிறது அந்த நாள். ஜனவரி மாதத்தின் மூன்றாம் வாரத்தில் ஒரு திங்கட்கிழமை. அன்றைக்கு வழக்கத்தைவிடவும் கொஞ்சம் சீக்கிரமாகவே அலுவலகத்திற்கு வந்துவிட்டேன். ஆசிரியர் வலம்புரி ஜான் அறையிலிருந்த டெலிபோன் ஒலித்ததும், அவர் வரத் […]

கடைசியாக : July 22, 2016 @ 9:48 am