ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

நாடகம் – அறுபதிலும் ஆசை வரும்

நாடகம் – அறுபதிலும் ஆசை வரும்

April 3, 2016 by · Leave a Comment 

அறுபதிலும் ஆசை வரும் – மேடை நாடகம் Stage Friends USA Proudly Present their 23rd production Apr 9 2016  – 4 PM Colts Neck High School 59 Five Points Road Colts Neck, NJ Buy Tickets Online தொடர்புடைய படைப்புகள் :ஸ்டேஜ் ப்ரண்ட்ஸ் – அறிந்தும் அறியாமலும் நாடகம்Velukkudi Sri Krishnan Swami Discourses in New Jersey and New YorkBoomerang kidsகடந்த வாரம் அமெரிக்காவில்Learn Hindu […]

இலவச தேர்தல்

இலவச தேர்தல்

March 25, 2011 by · 2 Comments 

தி.மு.க., – அ.தி.மு.க. இரு கட்சிகளுமே அடுத்து ஆட்சியைப் பிடிக்கும் முயற்சியில் அரிசி, மின்விசிறி, மிக்சி, கிரைண்டர், லேப்-டாப், மானியம் என இலவசங்களை தங்கள் தேர்தல் அறிக்கையில் அள்ளி விட்டுள்ளன. ஆனால் இந்த இலவசங்கள் நம்மை எங்கே அழைத்து செல்லப்போகின்றன?  தமிழகத்தின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் கட்சிகளாக கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக இயங்கி வருபவை தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும். ஆனால் அந்தக் கட்சிகளே தங்களை நம்பாமல் இலவசங்களை நம்பித் தான் களமிறங்குகின்றன. இரண்டு நாட்களுக்கு முன்பு தேர்தல் அறிக்கை […]

மனிதாபிமானமே உன் விலை என்ன ?

மனிதாபிமானமே உன் விலை என்ன ?

April 21, 2010 by · 1 Comment 

சில நாட்களுக்கு முன்பாக மருத்துவ பரிசோதனைகளுக்காக இந்தியா வந்த பிரபாகரனின் தாயாரை அவசர கதியில் திருப்பி அனுப்பினார்கள் சென்னை விமானநிலைய அதிகாரிகள். 80 வயது உடல் நிலை சரியில்லாத ஒரு மூதாட்டியை விரட்டாத குறையாக வெளியேற்றுகிற அளவுக்கு காட்டுமிராண்டிகளாக ஆகிவிட்டார்களா நம் தமிழக ஆட்சியாளர்கள்?? தன்னை நோக்கி கேட்கப்படும் கேள்விகளை திசை திருப்புவதில் வித்தகரான கருணாநிதி ''பார்வதி அம்மாள் சென்னைக்கு வருவது நள்ளிரவு வரை தெரியாது” என சட்டமன்றத்தில் சொல்லி இருக்கிறார்.. எப்பேற்பட்ட வடிகட்டிய பொய் இது? […]

தேவை பலமான எதிர்கட்சி

தேவை பலமான எதிர்கட்சி

March 24, 2010 by · Leave a Comment 

  சமீபத்தில் மாநில எதிர்கட்சிகளின் நிலை என்ன என்பது குறித்து மத்திய அரசு எடுத்த சர்வேயில் பல மாநிலங்களிலும் எதிர்கட்சிகளின் நிலை பரிதாபகரமாக இருப்பதாக தெரியவந்துள்ளதாம். பீகார், தமிழகம், உ.பி போன்றவை இப்பட்டியலில் முதல் 5 இடங்களில் உள்ள மாநிலங்கள். அதைப்போலவே பலமான எதிர்கட்சி உள்ள மாநிலங்களின் பட்டியலில் மேற்குவங்கம், காஷ்மீர், பஞ்சாப் போன்ற மாநிலங்கள் இடம் பிடித்துள்ளன. தமிழகத்தில் அ.தி.மு.க தலைமை சரியாக செயல்படாததால் அக்கட்சி தொண்டர்களே பலத்த சோர்வடைந்துள்ளார்கள். தலைவி எப்போது என்ன செய்வார் […]

திரும்பி பார்க்க வேண்டும் ஜெயலலிதா

திரும்பி பார்க்க வேண்டும் ஜெயலலிதா

March 12, 2010 by · 1 Comment 

  பழைய மற்றும் புதிய சட்டசபை வளாகத்தில், கருணாநிதியின் உருவப் படம் வைக்கப்படும் என்ற தி.மு.க. அமைச்சரவையின் முடிவு அவை உரிமையை மீறிய செயல் என்றும் சட்டசபை வளாகத்தில் கருணாநிதியின் உருவப்படம் தேவையற்றது – அடுத்த ஆண்டு அ.தி.மு.க., ஆட்சி மலர்ந்ததும் இதுபோன்ற மரபு மீறிய செயல்கள் மாற்றி அமைக்கப்படும் என்றும் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார். சட்டசபை வளாகத்தில் கருணாநிதியின் படத்தை வைப்பது எந்த வழியிலும் வரம்பு மீறிய செயல் இல்லை. இந்திய சரித்திரத்தில் ஐம்பது ஆண்டுக் காலம் […]

சிலைக்கு தேவையா 14 கோடி பாதுகாப்பு?

சிலைக்கு தேவையா 14 கோடி பாதுகாப்பு?

January 31, 2010 by · 3 Comments 

  உத்தரபிரதேசத்தில் மாயாவதி  தனக்கும் கன்ஷிராம் உள்ளிட்ட தலித் தலைவர்களுக்கும் மாநிலம் முழுவதும் பலகோடி செலவில் பல்வேறு இடங்களில் சிலை அமைத்து நினைவுச் சின்னம் எழுப்பியுள்ளதே சர்ச்சையில் உள்ளது. இந்த லட்சணத்தில் இந்தச் சிலைகளுக்கு மாநில போலீஸ் துறை சார்பில் காவலர்களை நியமித்து பாதுகாக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.  14 கோடி ரூபாய் செலவில் நடைமுறைக்கு வரப்போகும் இத்திட்டம் குறித்து தகவல் வெளியிட்டுள்ள உ.பி மாநில அதிகாரிகள் நடந்து வரும் சட்டசபைக் கூட்டத்தொடரில் “சிலை பாதுகாப்பு சிறப்புப்படை” […]

தொடரும் தெலுங்கானா பிரச்சனைகள்

தொடரும் தெலுங்கானா பிரச்சனைகள்

January 12, 2010 by · 1 Comment 

"தெலுங்கானா பிரச்னைக்கு தற்காலிக தீர்வு எந்த வகையிலும் பயன் தராது. பிரச்னைக்கு விரைவில் நிரந்தர தீர்வு காண்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் தொடரும் வன்முறை சம்பவங்களால் மாநிலத்தின் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்படும்” என ஆந்திர முதல்வர் ரோசய்யா தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளது 100க்கு 100 சரி.. தெலுங்கானா விவகாரத்தில், தொடர்ந்து நடக்கும் வன்முறை சம்பவங்களால், ஆந்திர மாநிலத்தின் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் புதிய முதலீடு செய்வதற்கு தொழில் துறையினர் தயக்கம் காட்டுகின்றனர். […]

திருந்தவேண்டிய ஜெயலலிதா

திருந்தவேண்டிய ஜெயலலிதா

January 8, 2010 by · 1 Comment 

புத்தாண்டில் நடந்த முதல் சட்டமன்ற கூட்டத்தொடருக்கு வந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 9 நிமிடங்கள் மட்டுமே இருந்துவிட்டு கிளம்பியுள்ளார். அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அரசின் செயல்பாட்டை குறை கூறி பேசிக்கொண்டிருக்கும்போது ஜெயலலிதா சபைக்கு வந்து வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டார். தொடர்ந்து சபைக்குள் நுழைந்தார். இந்நேரத்தில் நத்தம் விஸ்வநாதனின் இடைத்தேர்தல் தொடர்பான பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதாக சபாநாயகர் கூறினார். 9 நிமிடத்தில் எழுந்த ஜெ., இடைத்தேர்தலில் ஆளும்கட்சி செய்த வித்தைகளை அவைக்குறிப்பில் இருந்து வேண்டுமானால் […]

தேன் கூட்டில் கைவிட்ட கதை

January 1, 2010 by · Leave a Comment 

தேன் கூட்டில் கை விட்ட கதையாக ஆந்திராவைப் பிரிக்க மத்திய அரசு செய்த முடிவினால் ஆந்திரா முழுவதும் ஏற்பட்ட கொந்தலிப்பு கொஞ்சமும் குறையாத நிலையில் இரண்டு நாட்களில் இப்பிரச்சனைக்கு சரியான தீர்வை மத்திய அரசு அறிவிக்கும் என்று பிரதமர் கூறியுள்ளார். அவசர அவசரமாக மாநில நிலைமை குறித்து சரியாக ஆராயாமல் ஒரு சாராரை திருப்தி படுத்த மத்திய அரசு அறிவித்த தனித்தெலுங்கானா ஆந்திரா முழுவதுமே தற்போது வெடித்துவரும் ஆதரவு – எதிர்ப்பு வன்முறைகளுக்கு காரணமாக அமைந்துவிட்டது துரதிஷ்டமானது. […]

மாநில வெறி கொண்டு திரியும் தாக்கரே

November 19, 2009 by · Leave a Comment 

மகாராஷ்டிராவில் நடந்த மாநில சட்டமன்றத் தேர்தலில் ராஜ்தாக்கரே செய்த ஓட்டுப் பிரிப்பால் பலத்த தோல்வியைக் கண்டது சிவசேனா கட்சி. மும்பையில் தன்னுடைய செல்வாக்கு முற்றிலும் சரிந்து வருவதை தாங்கிக்கொள்ள முடியாத மனநிலையில் உள்ள பால்தாக்கரே தேவையே இல்லாமல் சச்சினைப் பற்றி எழுதியுள்ளது இந்தியா எங்கும் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கிரிக்கெட் வாழ்க்கையில் 20 ஆண்டுகளைப் பூர்த்தி செய்ததற்காக பத்திரிக்கைகளுக்கு பேட்டி அளித்த சச்சின் “முதலில் நான் ஒரு இந்தியன், பிறகுதான் மராத்தி. மும்பை இந்தியாவுக்குச் சொந்தமானது. அப்படித்தான் […]

Next Page »

கடைசியாக : July 22, 2016 @ 9:48 am