ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

கொன்னுட்டாங்கப்பா

கொன்னுட்டாங்கப்பா

December 6, 2012 by · Leave a Comment 

  சாகிற காட்சியில் நடிப்பதைப் பொதுவாகக் கலைஞர்கள் விரும்பமாட்டார்கள். யாரையும் சாகடிக்காமல் ஒரு தொலைக்காட்சித் தொடரை இறுதிவரை நகர்த்திச் செல்ல முடியாது. வாழ்வைக் காட்டிலும் கதைகளில் மரணமானது மிகக் கோரமான வடிவம் கொள்ளும். ஒரு மரணக் காட்சியை எழுதுவது போன்ற இம்சை எழுத்தாளனுக்கு இங்கு வேறில்லை. எழுதுபவனை விடுங்கள். எடுப்பவர்களுக்கு அது இன்னும் பெரிய அவஸ்தை. ஒரு நடிகர் – அல்ல – ஒரு கதாபாத்திரம் இறக்கப் போகிறது என்பது இயக்குநருக்கும் எழுத்தாளருக்கும்தான் முதலில் தெரியும். கதைப்போக்கை […]

நாலு சக்கர போதிமரம்

நாலு சக்கர போதிமரம்

February 13, 2011 by · 1 Comment 

  கல்யாண வீட்டிலிருந்து இன்னும் கொஞ்சம் சீக்கிரம் கிளம்பியிருக்கலாம். கட்டாயப்படுத்தினார்களே என்று டின்னருக்குக் காத்திருந்திருக்கவேண்டாம். எத்தனை கூட்டம்! பழைய நண்பர்கள் பலரைப் பார்த்துவிட்டதில் நேரம் போவது தெரியாமலாகிவிட்டது. பேச்சைக் குறைத்திருந்தால் நேரத்தோடு கிளம்பியிருக்க முடியும். மேடையேறி, பரிசுப் பொட்டலத்தைக் கொடுத்துவிட்டு, புகைப்படத்துக்குச் சிரித்துவிட்டு அப்படியே கைகூப்பியவண்ணம் வெளியே வந்திருக்கலாம். ஆனால்,  கல்யாண வீடென்பதென்ன? நினைவில் மங்கத் தொடங்கிய பலரைச் சந்திக்கிற ஒரு வாய்ப்பு. போட்டோ க்களை தூசு தட்டி மீண்டும் மாட்டிவைக்கிற மாதிரி. அங்கே தாமதமானதில் பிழையில்லை. […]

கொசு – 26

September 11, 2010 by · Leave a Comment 

அத்தியாயம் இருபத்தி ஆறு குளித்த ஈரத்தில் அடித்த விபூதி, பொழுதுபோல் மெல்லப் புலர்ந்தது. அம்மா அதிசயமாகப் பார்த்தாள். வாய்விட்டு முருகா என்று சொல்லிக்கொண்டு அவன் கண்மூடி விபூதி பூசியதில்லை. அவசரத்தில் ஒரு கோடு இழுத்துக்கொண்டே காலில் செருப்பை மாட்டிக்கொள்ளும் வேகம் அங்கே தினசரிக் காட்சி. உழைப்பே கடவுள். வியர்வையே விபூதி. ஒரு பதவி கிடைத்துவிட்ட பிறகு பளிச்சென்று வெள்ளைச் சட்டை அணிந்து விபூதி துலங்கத் தன் மகன் கால் மேல் கால் போட்டு அமர்ந்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டி […]

கொசு – 25

September 10, 2010 by · Leave a Comment 

அத்தியாயம் இருபத்தி ஐந்து வண்டியில் காற்று இறங்கியிருந்தது. ஒழுங்காக ஓடிக்கொண்டிருந்த வண்டி. பஞ்சர் ஆகாமல் வெறுமனே காற்று மட்டும் இறங்குவதற்கு என்னென்ன காரணங்கள் இருக்க முடியும்? டியூப் பலவீனமடைந்திருக்கலாம். யாராவது வேலை மெனக்கெட்டு காற்றைப் பிடுங்கிவிட்டிருக்கலாம். இயல்பாகவே காற்றழுத்தம் குறைந்திருக்கலாம். கவனிக்கத் தவறியிருக்கலாம். எதுவானாலும் கொஞ்சதூரம் தள்ளிக்கொண்டு நடந்துதான் ஆகவேண்டும். எனவே, நடந்தான். குழப்பமாக இருந்தது. கோபமும் துக்கமுமாகப் பொங்கிக்கொண்டு வந்தது. பச்சக் என்று பரோட்டா மாவைக் கல்லில் வீசி அடித்தமாதிரி முகத்தில் ஓர் அவமானப் படலம் […]

கொசு – 24

September 9, 2010 by · Leave a Comment 

அத்தியாயம் இருபத்தி நான்கு நிராயுதபாணியாகப் போர்க்களத்தில் நிற்பது போலிருந்தது முத்துராமனுக்கு. சுற்றி இருக்கிற அத்தனை பேரும் ஆயுதம் தரித்திருக்கிறார்கள். சொற்கள் சிலருக்கு ஆயுதங்களாகி இருக்கின்றன. செயல்கள் சிலருக்கு. அம்மாவுக்குக் கண்ணீர். அப்பாவுக்கு மௌனம். தன்னுடைய செயலற்ற தன்மை ஒரு மொண்ணையான இட்லித் தட்டு கேடயமாகப் பட்டது அவனுக்கு. ஆனால் கண்ணை மூடும் கணமெல்லாம் உள்ளுக்குள் தான் ஓயாமல் வாள் வீசிக்கொண்டிருக்கும் காட்சிதான் பிரதானமாகத் தென்படுகிறது. எதன்மீது என்பதுதான் புரியவில்லை. கனவுகள் சுவாரசியமாக இருக்கின்றன. எதிர்காலம் குறித்த கனவுகள். […]

கொசு – 23

September 8, 2010 by · Leave a Comment 

அத்தியாயம் இருபத்தி மூன்று பயமும் கவலையுமாக இருந்தது. யோசித்துப் பார்த்தால் எல்லாமே அபத்தமாகத் தோன்றியது. திடீரென்று வாழ்க்கையில் நுழைந்த அரசியல்வாதிகளின் அத்தியாயம். இரண்டு பேர். இரண்டு துருவங்கள். இரண்டு வாய்ப்புகள் என்று முத்துராமன் நினைத்தான். இரண்டு பிரச்னைகளாக அவர்கள் இருந்தார்கள். பிரச்னை என்று நினைத்தால் வீடு உள்பட எதுவுமே பிரச்னைதான். ஏன் இது வாய்ப்பாக இருக்கக்கூடாது? இயல்பில் இல்லாவிட்டாலும் வாய்ப்பாக மாற்ற முடியாதா என்ன? அப்படித்தான் அவன் நினைத்தான். அதையேதான் விரும்பவும் செய்தான். ஆனால் ஒன்றை அடுத்து […]

கொசு – 22

September 7, 2010 by · Leave a Comment 

அத்தியாயம் இருபத்திரண்டு ‘சேச்சே. என்னண்ணே நீங்க? அந்தாளு ஒரு கொசு. அவனுக்குப் போயி துப்பாக்கி அது இதுன்னுகிட்டு. வெத்துவேட்டுண்ணே. இன்னியவரைக்கும் உங்க மூஞ்சி முன்னால வந்து நின்னு ஒரு வார்த்த பேசியிருப்பாரா? உங்கள பாத்தாலே பேதியாயிரும்ணே. தள்ளி நின்னுக்கினு கொலைக்கறாரு. தொண்டத்தண்ணி வத்தினா தன்னால அடங்கிருவாரு.’ முதலில் ஒரு கணம் பயந்தாலும் முத்துராமன் சுதாரித்துக்கொண்டான். கொன்றுவிடு என்பது ஒரு வெறுப்பில் சொல்லப்படும் வார்த்தை. அதன் பின்விளைவுகள் குறித்து யோசிக்கத் தெரியாத அளவுக்கு எம்.எல்.ஏ. தங்கவேலு அத்தனை அடிமுட்டாள் […]

கொசு – 21

September 6, 2010 by · Leave a Comment 

அத்தியாயம் இருபத்தி ஒன்று ‘ஒனக்கு என்னா வயசாவுது? ஒவயசுல நான் மூணு புள்ள பெத்தவன். தெரியுமா? நீயாச்சும் குடிசைல வாள்றவன். நான் பக்கா ப்ளாட்•பார்ம். எங்கப்பன் எப்ப மச்சுவூடு கட்னான்னு தெரியுமா ஒனக்கு? எப்பிடி கட்டினான்னாச்சும் தெரியுமா? எங்கப்பன் வூடு கட்னது இருக்கட்டும். நான் எப்பிடி ஓட்டல் கட்னேன் தெரியுமா? அப்பன்காசுன்னு ஊருக்குள்ளார சொல்லுவாங்க. அது இல்ல நெசம். அடிச்ச காசு அது! எங்க அடிச்சேன், எப்பிடி அடிச்சேன், எவன் வயத்துல அடிச்சேன்னு தெரிஞ்சா பேதியாயிருவ சாக்ரதை! […]

கொசு – 20

September 5, 2010 by · Leave a Comment 

அத்தியாயம் இருபது கடற்கரையில் அதிசயமாகக் கூட்டம் இல்லாதிருந்தது. தவிரவும் கவியத் தொடங்கியிருந்த இருளுக்குள் ஒளிய இடம் தேடி அலைகள் நெருக்கியடித்து முந்தியதில் கருமையின் இருவேறு வண்ணங்கள் மேலும் கீழுமாகக் கண்முன் விரிந்தன. உப்புச் சுவையுடன் வீசிய காற்றில் மேனி பிசுபிசுத்தது. இதமான சூழல் நிரந்தரமானால் எத்தனை நன்றாக இருக்கும் என்று முத்துராமன் நினைத்தான். பரவசத்தில் சட்டென்று அருகே அமர்ந்திருந்த சாந்தியின் இரு கன்னங்களை ஏந்தி முத்தமிட நெருங்குபவன் போல் அருகே தன் முகத்தைக் கொண்டுவந்தான். ‘ஐயோ..’ என்றாள் […]

கொசு – 19

September 4, 2010 by · Leave a Comment 

அத்தியாயம் பத்தொன்பது ‘அதுல பாருங்க தம்பி, ஆங்.. பேரென்ன சொன்னீக? முத்துராமன். நல்ல பேரு. நா என்ன சொல்லவாரேன்னா, அரசியலுக்கு வர்றதுன்னா பதினாறு வயசுல வந்துரணும். இருவது வயசுல செயிலுக்குப் போயி பாத்துரணும். அப்பத்தேன் முப்பதுல கட்சிக்காரன் மதிக்க ஆரம்பிப்பான். நாப்பதுல மக்களுக்கு நம்மளத் தெரிய ஆரமிக்கும். அம்பதுல மினிஸ்டர் ஆயி அறுவதுல சாவறதுக்குள்ள கொஞ்சம் சொத்து சேத்துவெச்சிட்டுப் போயி சேரலாம். நடுக்கா, நாலஞ்சு போராட்டம், தடியடின்னு பேப்பர்ல நம்ம பேரு வந்திச்சின்னா ஒரு கவனம் கெடைக்கும். […]

Next Page »

கடைசியாக : July 22, 2016 @ 9:48 am