ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

வானம்

வானம்

May 3, 2011 by · 1 Comment 

தெலுங்கில் வெளியான வேதம் படத்தை பார்த்துவிட்டு சில இரவுகளை தூக்கமின்றி கழித்திருக்கிறேன். அற்புதமான திரைப்படம் அது. உங்களுக்குள் பலவித ரசாயன மாற்றங்களை உண்டுபண்ணிவிடக்கூடிய அருமையான திரைக்கதை! சிரிப்பு,துக்கம்,கோபம்,ஆர்வம் என படம் முழுக்க வெவ்வேறு உணர்வுகளை நம்மையும் அறியாமல் ஏற்படுத்தும். வெவ்வேறு தளங்களில் இயங்கும் ஐந்து கதைகளினையும் ஒரு குறிப்பிட்ட சம்பவத்தில் அல்லது இடத்தில், ஐந்து கதைக்குமான கிளைமாக்ஸாக மாற்றியிருப்பார் இயக்குனர். இதைப்போல அந்தக்காலத்திலேயே முருகன் அருள்,பெருமாள் மகிமை மாதிரியான திரைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன. ஷகிலாவின் நவகன்னிகள் என்னும் படமும் […]

மன்மதன் அம்பு

மன்மதன் அம்பு

December 24, 2010 by · 5 Comments 

  கடந்த இருபது ஆண்டுகளில் கமல் நடித்த மிகச்சிறந்த குப்பைகளில் ஆகச்சிறந்த குப்பை மன்மதன் அம்பு. பெரிய கப்பலை காட்டுகிறார்கள்.. பிறகு கமலை காட்டுகிறார்கள்.. கப்பல்… கமல்.. இதற்கு நடுநடுவே காமெடி மாதிரி கமலே எழுதிய வசனங்களை பேச சில நடிகர்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். கமலே எழுதிய தத்துவார்த்தமான வசனங்கள், ஒருவரிகூட புரியாத கமலின் கவிதைபாடல்  கமலுக்கு மட்டுமே புரிந்து சிரிப்பு மூட்டக்கூடிய காமெடி வசனகாட்சிகள்.. கமலே கரகர குரலில் பாடி ஆடும் பாடல்கள்… ஆவ்வ் தூக்கம் வரவைக்கும் […]

ஈசன்

ஈசன்

December 23, 2010 by · 2 Comments 

மர்மமான முறையில் நிகழும் மரணங்கள்.. அதன் பிண்ணனியை நூல்பிடித்து சென்றடையும் நேர்மையான போலீஸ்கார். இருவரும் இணையும் புள்ளியில் "பச்சை கிளிகள் தோளோடு" எனத் துவங்கும் நாயகனின் சந்தோச வாழ்க்கை சொடக்கு போடுவதற்குள் சோகமாக மாறிப்போவதும்.. ( இந்த இடத்தில் நாயகனின் தங்கையை கற்பழித்துவிடுவார்கள் அல்லது குடும்பத்தையே கொன்றுவிடுவார்கள்)  ஃபிளாஷ்பேக் முடிய முக்கிய வில்லன்களை முக்கி முக்கி கொல்லும் நாயகன். கிளைமாக்ஸில் அவ்வளவு சிரமத்தை தாண்டி கண்டுபிடித்த குற்றவாளியை , பொசுக்கென "நீங்க போங்க நீங்க ஜெயிலுக்கு போய்ட்டா […]

விருதகிரி

விருதகிரி

December 11, 2010 by · 3 Comments 

"எங்கள காப்பாத்த யாருமே இல்லையா" என ஒட்டு மொத்த தமிழகமும் கூக்குரலிட அங்கே மக்களை காக்க நீதியை காக்க நியாயத்தை காக்க தர்மத்தை காக்க புயலென தோன்றினார் தேமுதிக தலைவரும் டாக்டரும் கேப்டருமான புரட்சி கலைஞர் விஜயகாந்த். கலைஞரை எதிர்த்து அரசியல் செய்யும் ஒப்பற்ற எழில் சூரன் நம் விஜயகாந்த். அவரால் மட்டும்தான் இனி இந்தியா வல்லரசாக முடியும். அவரால் மட்டும்தான் காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க முடியும். அமெரிக்காவால் கூட அடக்கமுடியாத தீவிரவாதிகளை ஒற்றை ஆளாய் சிங்கம் […]

நந்தலாலா

நந்தலாலா

November 27, 2010 by · Leave a Comment 

  அவனை எனக்கு பிறந்ததிலிருந்தே தெரியும். ஒன்னரை வயதாய் இருந்த போதே அம்ம்ம்மா வீட்டில் கொண்டு போய் விட்டுவிட்டாள் அவனுடைய அம்மா. பதினெட்டு வயது வரை அங்கேதான் வளர்ந்தான். கிட்டத்தட்ட ஒரு அநாதையைப் போல! அவனுடைய அம்மாவின் மேல் எப்போதும் அவனுக்கு தீராத வெறுப்பும் ஆத்திரமும் இருந்தது. அவளை எப்போதும் அவன் அம்மா என்றழைத்ததே இல்லை. எப்போதாவது ஊருக்கு ஒதுக்குப்புறமாய் அம்மா வசித்த அவளுடைய குடிசைக்கு போவதுண்டு. அம்மா வாரி அணைத்து முத்தமிடுவாள். இவன் கன்னத்தை துடைத்து […]

மந்திரப் புன்னகை

மந்திரப் புன்னகை

November 26, 2010 by · Leave a Comment 

  சில படங்களை பிட்டு பிட்டாக பார்த்தால் அட! போட தூண்டும். ச்சே என்ன மாதிரி சீன்ப்பா என்னமா யோசிச்சிருக்கான்பா என்று சொல்ல வைக்கும். ஆனால் ஒட்டு மொத்தமாக படத்தை பார்க்கும் போது ரீலருந்த பாணா காத்தாடி போல எதை நோக்கியும் நோக்காமலும் கண்டமேனிக்கு படம் காற்றில் பறக்கும். அந்த வகை படங்களில் குறிப்பிடத்தக்க இயக்குனர்களின் படங்கள் பல உண்டு. அதில் இன்னொன்று கரு.பழனியப்பன் நடித்து இயக்கி வெளிவந்திருக்கும் மந்திரப் புன்னகை.  ஏற்கனவே நாம் பார்த்துக் கடாசிய […]

எக்பென்டபிள்ஸ்

எக்பென்டபிள்ஸ்

August 21, 2010 by · Leave a Comment 

தமிழில் வெளியாகும் தொண்ணூறு சதவீத படங்களும் ஆண்களை மட்டுமே குறிவைத்து எடுக்கப்படுபவை. மிகச்சில படங்களே பெண்களுக்கும் குழந்தைகளுக்குமானவை. ஹாலிவுட்டிலும் கூட அப்படிப்பட்ட தரமான ஆண்கள் ஸ்பெசல் படங்கள் அடிக்கடி வெளியாவதுண்டு. ஆண்களே ஆண்களுக்கான இந்த படங்களில் மைக்ரோபாவடையோ பிகினியோ அணிந்த அறிவில்லாத அழகு பெண்கள், உருண்டு திரண்டு கட்டுமஸ்தான நரம்பு முறுக்கேறிய தேகத்துடன் அலையும் ஹீரோ , கோட் சூட்டோடு அடியாட்களும் துப்பாக்கியுமாக அலையும் வில்லன்கள். ஆயிரம் பேராக இருந்தாலும் கண்ணிமைக்கும் நேரத்தில் அனைவரையும் சுட்டு வீழ்த்தி […]

கராத்தே கிட்

கராத்தே கிட்

June 14, 2010 by · Leave a Comment 

  அசராம அடிப்பதுதான் ஜாக்கிசான் ஸ்டைல். கராத்தே கிட் படத்தில் அசராமல் நடித்திருக்கிறார் ஜாக்கி! கடைசியாக வெளியான போலீஸ் ஸ்டோரியிலேயே அழுது புரண்டிருந்தாலும்.. கராத்தே கிட்டில் அமைதியாக ஆர்பாட்டமில்லாமல் நடித்திருக்கிறார். அமைதியான சீனர்களுக்கேயான கிழட்டு நடை! புன்னைகையில்லாத அமைதியான முகபாவம்.. இத்தனைவருடமாக ஜாக்கியை ஹாலிவுட்டும் சீனர்களும் விரட்டி விரட்டி சண்டையே போட வைத்துவிட்டனர். இந்த படத்தில் ஒரே ஒரு சண்டைதான் அதுவும் மிகமிக மிருதுவான வன்முறையில்லாத சண்டை!  ஹாலிவுட் நடிகர் வில்ஸ்மித்தின் மகன் ஜேடன் ஸ்மித் ஹீரோவாக […]

சிங்கம்

சிங்கம்

May 31, 2010 by · 2 Comments 

மிளகு தூக்கலாய்! இஞ்சி சீரகம் பட்டை கிராம்பு மற்றும் இன்னபிற சுறுசுறு விறுவிறு ஐட்டங்களையும் போட்டு , அம்மியில் வைத்து அரைத்து , நல்ல குறும்பாட்டு கறியை வாங்கி, சின்ன சின்ன துண்டுகளாக வெட்டிப்போட்டு , கொஞ்சம் நல்லி எலும்புகளையும் போட்டு , கொஞ்சம் மஞ்சள் நிறைய மிளகாய்த்தூள் என சேர்த்து நன்றாக வேக வைத்து , சோத்துல விட்டு பினைஞ்சு அப்படியே ஒரு நல்லி எலும்ப கடவாயில் வைத்து கடித்தால்.. காரம் உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரைக்கும் […]

கனகவேல் காக்க விமர்சனம்

கனகவேல் காக்க விமர்சனம்

May 21, 2010 by · 2 Comments 

அந்த கதையில் முதலில் மலைக்கள்ளனாக எம்.ஜி.ஆர் நடித்தார் , பின் சிவாஜி, பின் ரஜினி, கமல்,விஜயகாந்த், அஜித்,விஜய்,விக்ரம் என லேட்டஸ்ட்டு நண்டு சிண்டுகள் வரை நடித்து தீர்த்துவிட்டன. பிரஷாந்த் கூட ஜாம்பவான் என்றொரு படத்தில் இதே கதையில் நடித்ததாக நினைவு. பாகவதர் கூட இந்த கதையில் நடித்திருக்க வாய்ப்புண்டு. படம் பெயர் நினைவில்லை. ஷங்கர் இந்த கதையை வைத்தே பலகாலம் தமிழ்சினிமாவின் இன்றியமையாத இயக்குனர் ஆகிவிட்டார். தமிழ்சினிமாவில் வெளியாகும் பத்து திரைப்படங்களில் ஒன்றில் இடம் பெறும் அளவுக்கு […]

கடைசியாக : July 22, 2016 @ 9:48 am