ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

இருக்க வேண்டியது !!

இளமையில் என்னிடம் படிப்பு இருந்தது பட்டம் இருந்தது பணம் இருந்தது பதவி இருந்தது வீடு இருந்தது குடும்பம் இருந்தது வீரம் இருந்தது விவேகம் இருந்தது தெம்பு இருந்தது திராணி இருந்தது வசதி இருந்தது வாய்ப்பு இருந்தது இறைவனின் நினைப்பு எப்போதாகிலும் வந்தது! முதுமையில் என்னிடம் வயசு இருக்கிறது அனுபவம் இருக்கிறது முதிர்ச்சி இருக்கிறது முயற்சி இருக்கிறது நோயும் இருக்கிறது நோவும் இருக்கிறது வேதனையும் இருக்கிறது மறதி இருக்கிறது மந்தம் இருக்கிறது இறைவனின் நினைப்பு எப்போதும் இருக்கிறது!! தொடர்புடைய […]

மக்கள் நல அரசு!!

மக்கள் நலம் பேணுவதில் முன்னிலையில் தான் இருக்கிறது நம் அரசு! நிதி நெருக்கடி காரணமாய் மின் கட்டணம் ஏற்றிய பின்னரும் கூட பொது மக்களின் செலவைக் குறைக்க நாள் தோரும் மூன்று மணி நேரம் மின் வெட்டு! கொக்கி போடும் மின் திருடர்க்கு ஏனில்லை வேட்டு? தொடர்புடைய படைப்புகள் :தொடர்புடைய படைப்புகள் எதுவும் இல்லை !

சர்க்கரை !

இனிப்பானது சுவையானது அனைவருக்கும் பிடித்தமானது! லட்டு பூந்தி மைசூர் பாக் அல்வா… எனப் பற்பல உருவங்களில் உலா வருவது! விருந்தோம்பலும் மங்கல நிகழ்ச்சிகளும் இவை யன்றி இருப்பதில்லை! தன் இனிப்பாலும் சுவையாலும் தானோர் ‘கொடூரன்’ என்பதை உணராது செய்து விடும் தன்மை மிக்கது! ஒருவர் தன் வாழ்நாளில் உட் கொண்ட சர்க்கரைத் துகள்களைக் காட்டிலும் அது உட்கொண்ட மனித உயிர்கள் பற்பல மடங்கு! ‘இன்சுலின்’ சுரப்பின் குறைபாடே இந் நோய்க்குக் காரணம்! உடனே உணர்ந்து செயல்படா விட்டால் […]

வழிப் பறி !

அரசின் அனுமதியோடு அதிகாரக் கொள்ளை! நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கே பட்டப் பகலில் வழிப் பறி! சுங்க வரியாம்!! விழி பிதுங்குகிறது நுகர்வோருக்கு! சுங்க வசூலா? அல்லது தங்க வசூலா? தொடர்புடைய படைப்புகள் :தொடர்புடைய படைப்புகள் எதுவும் இல்லை !

‘பெட்ரோல்’ விலை!!

‘பெட்ரோல்’ விலை!!

‘பெட்ரோல்’ எரி சக்தி தான்! தான் எரிந்து வாகனங்களை ஓடச் செய்கிறது உலகெங்கிலும்! ஆனால், நம் நாட்டில் தான்-அது தான் எரிவதோடில்லாமல் நம் கையையும் பையையும் வயிற்றையும் எரித்துக் கொண்டிருக்கிறது !! தொடர்புடைய படைப்புகள் :கிறுஸ்துமஸ் கச்சேரிWorldcup Final – As it happenedபவர் ப்ளே – சில சிந்தனைகள்உலகக் கோப்பை – இனி….உலகக் கோப்பை – இது வரைமூன்றாவது மேட்ச்காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியும் இந்தியாவும்இலங்கை டெஸ்ட் தொடர் தொடக்கம்

தேர்தல்!!

கடந்த தேர்தல் முதல் இத்தேர்தல் வரையிலும் ஏற்பட்ட கழிவுகளையும் களைகளையும் களைந்து சனநாயகத்தைத் தூய்மை படுத்திட சனநாயகம் அளித்திடும் அரிய வாய்ப்பு ! சமூக விரோத சக்திகளை இனம் கண்டு பாடம் புகட்டிட மீண்டும் ஓர் சந்தர்ப்பம்! சனநாயகக் கடமையாற்றிட முன் வரவேண்டியவர்கள் முன் வாராமையால் நாற்காலிகளே நாற்காலிகளுக்காக மோதிக் கொள்கின்றன! வாக்களிப்போரிலும் பெரும்பாலோர் மனசாட்சியை உறங்க வைத்துவிட்டு வாக்குச் சாவடிக்குச் செல்வதால் நாற்காலிகளே-மீண்டும் நாற்காலிகளை அலங்கரிக்கின்றன !! தொடர்புடைய படைப்புகள் :ஒரு வரி செய்திகள் – […]

என்ன உறவோ?

  மரங்களுக்கும் மின்சாரத்துக்கும் இடையேத் தான் என்ன உறவோ? மின் தடை ஏற்படும் போதெல்லாம் அவை அசைவற்று நின்று விடுகின்றனவே! ‘இன்வெர்ட்டர்’ நிறுவனங்களுடன் ஏதும் புரிந்துணர்வு ஒப்பந்தமோ? தொடர்புடைய படைப்புகள் :தொடர்புடைய படைப்புகள் எதுவும் இல்லை !

போபால் நச்சுவாயுத் துயரம்

இருபதாயிரம் உயிரிழப்புகள்! ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்டோரின் ஊனங்கள்! எண்ணிலடங்கா அனாதைகள் கைம்பெண்கள் உறவுகள், நட்பின் இழப்புகள் உயிர்ச் சேதம், பொருட்சேதம் எனத்தான் இத்தனைக் காலமாய் வியந்து கொண்டிருந்தது இவ்வையம்! கால் நூற்றாண்டு விசாரணைக்குப் பின் இப்போது தான் புரிந்தது ஊனத்தின் கணக்கில் விடுபட்டுப் போனவை இந்தியாவின் சட்டமும் நீதியும்!! தொடர்புடைய படைப்புகள் :தொடர்புடைய படைப்புகள் எதுவும் இல்லை !

கடைசியாக : July 22, 2016 @ 9:48 am