ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

உன் காலடி ஓசையிலே

உன் காலடி ஓசையிலே

சின்ன விஷயங்களுக்கு கூட தன் கணவனையே நம்பி (அமெரிக்காவில்) வாழும் ஒரு இந்தியப் பெண்ணின் கதை. தொடர்புடைய படைப்புகள் :தொடர்புடைய படைப்புகள் எதுவும் இல்லை !

பிடி 22

பிடி 22

வசந்த் வெள்ளைத் தடியைத் தட்டித் தட்டித் தட்டுத் தடுமாறி பஸ் ஸ்டாப்பில் வந்து அமர்ந்த போது அநேகமாய் அங்கே வேறு யாருமில்லை. “ஹலோ, ஹலோ” என்ற அவன் குரலுக்கு பதில் குரல் எதுவுமில்லை. சாலையில் அவ்வப்போது எழுவதும், அடங்குவதுமாகக் கார்களின் ஓசைகள். அவனுடைய உலகம் ஓசையும், மணமும், தொடுதலும்தான். வட்டம் சதுரம் எல்லாம் ஆட்காட்டி விரலால் தொட்டறிந்தவை. அருகில், அருகாமையில் எல்லாம் அவனுக்கு சப்தங்களின் அளவுகள். பிறர் உலகத்தை அவன் பார்த்ததில்லை. அம்மா அப்பா என்றிருந்தால் எப்படி? […]

வஞ்சகன்

வஞ்சகன்

உஷா அவநம்பிக்கையோடு பார்த்தாள். “அப்போ கண்டிப்பா அவன் கிட்டே போய் காரை வாங்கத்தான் போறிங்களா?” “ஆமா.” என்றான் விஷ்ணு. “சுளையா பத்தாயிரம் டாலர் டீல். ஏமாந்து போய் நிக்கப் போறிங்க. க்ரெய்க் லிஸ்ட் மாதிரி வெப்சைட் எல்லாம் டேபிள் சேர் சோஃபா வாங்க ஓக்கே. யாராவது கார் வாங்குவாங்களா? டீலர் கிட்டே போய் சர்ட்டிஃபைடு கார் வாங்குங்கன்னு தலையால அடிச்சிக்கறேன். நாளைக்கு கார் நடு ரோட்டில் நின்னுருச்சுன்னா என் கிட்டே புலம்பாதிங்க.” “உஷா, என் ஃப்ரண்ட்ஸ் நிறைய […]

ஆம்புலன்ஸ்

ஆம்புலன்ஸ்

  ஈரக் கோழி மாதிரி வெடவெடவென நடுங்கிக் கொண்டிருந்தான் அனந்து.   அவ்வப்போது விலுக் விலுக்கென்று உடம்பு தூக்கிப் போட்டது. சிவந்த கண்களும், உலர்ந்த உதடுகளும் ஒரு மாதிரி கோணிக் கொண்டிருக்க, போர்வைக்குள் சன்னமாய் அனத்திக் கொண்டிருந்தான்.   இரண்டு மாதங்களாகத்தான் அவனை எனக்குத் தெரியும். அமெரிக்காவுக்குப் புதுசு என்று பார்த்த மாத்திரத்தில் புரிந்து விட்டது.   பாக்கெட்டில் கர்ச்சீப் வைத்துக் கொண்டு அடிக்கடி எடுத்து முகம் துடைப்பது, இடது கையில் தங்க முலாம் பூசிய டைட்டன் […]

தித்திக்கும் தேன்

தித்திக்கும் தேன்

டிவியில் அலாரம் வைத்து இன்று காலை துயிலெழுந்தேன். கூகிள் டிவி.    கிட்டத்தட்ட ஒரு வருட தவம். ஒரு வழியாய் ஹனிகோம்ப் 3.1 வந்து சேர்ந்தது.   ஏகப்பட்ட வாக்குறுதிகளோடு ஸோனி தயாரித்து, இண்ட்டல் சிப்பில்  ஆண்ராய்ட் இயங்குதளத்தை அடக்கி வைத்து அமர்க்களமாக கடந்த ஆண்டு வெளியானது கூகிள் டெலிவிஷன் சாதனம்.    உண்மையைச் சொல்லப் போனால் அது டெலிவிஷன் தோல் போர்த்திய கம்ப்யூட்டர். டிவி என்பது நோட்பேட் போல், பிரவுசர் போல் அதனுள் இருக்கும் மற்றுமோர் […]

சிங்கம்டா !

சிங்கம்டா !

  ஒரு காதலியைப் போல வாஞ்சையாய்த் தடவுவதும், ஆசையாய்க் கிள்ளுவதும், செல்லமாய் ஒரு தட்டு தட்டுவதும் ஐபோனில் ஆரம்பித்தது. முத்தம் கொடுப்பதும், கண்ணடிப்பதும்தான் பாக்கி.  தடவினால் திரை நகரும். கிள்ளினால் படம் சிறிதாகும். ஐகானைத் தட்டினால் அப்ளிகேஷன் உயிர் பெறும்.  ஆப்பிள் அறிமுகப்படுத்திய Gesture UI என்ற புரட்சி, தொடு திரை செல்போன்களின் புதிய யுகம் ஒன்றை ஆரம்பித்து வைத்தது. அது காறும் இருந்த விண்டோஸ் தொடுதிரை போன்களும், ஸ்டைலஸ் கொண்டு மாரடித்து வந்த இன்ன பிற […]

பிடிச்சிருக்கு பிடிச்சிருக்கு

பிடிச்சிருக்கு பிடிச்சிருக்கு

இந்த பகுதியில், அமெரிக்க வாழ் தமிழர்கள் தங்களுக்கு அமெரிக்காவில் பிடித்தவைகளை இங்கே பகிர்ந்துகொள்வார்கள். முடிந்தவரை வேறு எந்த நாட்டோடும் ஒப்பிடாமல் அமெரிக்காவின் சிறப்புகளை மட்டுமே எடுத்துக்காட்டும் ஒரு முயற்சி இது. வாசகர்கள் இந்த பகுதியில் எழுத விரும்பினால், உங்கள் படைப்பை feedback @tamiloviam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். இந்த வாரம் : சத்ய ராஜ்குமார் – ஆர்     1. சட்டம்-ஒழுங்கு, போலீஸ்-பொதுமக்கள் உறவு பிடிச்சிருக்கு. http://inru.wordpress.com/2007/08/31/lawandorder/  http://inru.wordpress.com/2008/11/26/stranger/ 2. இன்னமும் சிதைந்து போய் விடாமல் […]

டால்பின்கள்

டால்பின்கள்

  "நெத்தியில் என்னமோ பட்டிருக்கு." என்றான் எலிவேட்டரில் என்னைப் பார்த்த அமெரிக்க மேலாளன். இது அக்கறை இல்லை. ஒரு வித இளக்காரம். அப்பாவி போன்ற தொனியில் கேள்வி கேட்டு, நறுக்கென்று குத்தும் இது எந்த வகை இலக்கண அணி என்று கொத்தனார் நோட்ஸில்தான் தேடிப் பார்க்க வேண்டும். "ஹோலி ஆஷ்." என்றேன். "இன்னிக்கு தீபாவளி. இந்தியப் பண்டிகை தினம். வீட்டில் சாமி கும்பிட்டு வரேன்." "ஓ… ஐயாம் சாரி." – சிரித்துக் கொண்டே ஒரு போலியான சம்பிரதாய […]

கடைசியாக : July 22, 2016 @ 9:48 am