ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

அமெரிக்க அரசியல் 2012 டிபேட் 3

அமெரிக்க அரசியல் 2012 டிபேட் 3

மூன்றாவது டிபேட் முழுக்க முழுக்க உலகளாவிய அமெரிக்க வெளியுறவு கொள்கைகளின் மேல் என்று டிபேட் ஆரம்பத்திலேயே சொன்னார்கள்.   அப்பாடா! சென்ற இரண்டு டிபேட்களிலும் வேலையில்லா திண்டாட்டம், பட்ஜெட்டில் பயங்கர துண்டு, ஃபுட்ஸ்டாம்ப்ஸ், ஒபாமாகேர், இன்ஷூரன்ஸ் என்று சக்கையாக அரைத்த மாவையே இப்போதும் திரும்ப அரைக்கப் போவதில்லை என்பதில் ஆடியன்ஸ் நிம்மதிப் பெருமூச்சுடன் கொட்டாவியையும் சேர்த்தே விட்டது.   ஏனென்றால், அமெரிக்கர்களில் பாதிப்பேர் அடுத்த டவுனுக்கு நடந்துகூட போனது கிடையாது. மீதம் பேரிடம் உலக வரைபடத்தைக் கொடுத்தால் […]

ஒபாமா – ராம்னி – ஆக்‌ஷன் 500

முதல் டிபேட்டில் ஒபாமாவின் சோப்ளாங்கி பர்ஃபாமென்ஸ், VP Debateல் பைடனால் டிங்கர் பார்த்து பெயிண்ட் அடித்து ஓரளவு சரி செய்யப்பட்டிருந்த ஒபாமாவின் நசுங்கல்கள், இதெல்லாம் ஏற்கனவே பார்த்தோம்.   ஒபாமா – ராம்னியின் நேற்றைய டிபேட் 2 கண்மூடித்தனமான காட்டா குஸ்தி ரேஞ்சுக்குப் போய்விட்டது என்பதே இதன் ஹைலைட்.    பிஜிஎம்மில் ‘டாய், மவனே, த்தா, ம்மா, வெட்ரா, கீசுடா’ என்ற பஞ்ச் சவுண்டுகள் வந்ததை நானே என் அதிநவீன ஸ்பீக்கர் சிஸ்டத்தில் கேட்டு பயந்து போனேன். […]

ஜனாதிபதி தேர்தல் : நீயா நானா ?

ஜனாதிபதி தேர்தல் : நீயா நானா ?

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்களில் போட்டியாளர்களின் டெலிவிஷன் பிம்பம் ஒரு முக்கியமான அங்கம் வசிக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். கென்னடி, கிளிண்டன் போன்ற முந்தைய ஜனாதிபதிகள்  அட்டகாசமான வெற்றி பெற்றதற்கு டீவி முக்கிய காரணி.    கிட்டத்தட்ட “சேப்பா இருக்கறவன் பொய் சொல்லமாட்டான்” டைப் முட்டாள்தனமான லாஜிக்.   இந்த 2012 எலெக்‌ஷனின் சாராம்சம் என்ன? மூன்றே மூன்று விஷயங்கள்: 1. பொருளாதாரம் 2. வரிச்சுமை 3. ஹெல்த்கேர்   இதில் அமெரிக்க பொருளாதாரம் இன்னமும் மந்த […]

ராம்னியின் அபத்தங்கள்

ராம்னியின் அபத்தங்கள்

  முந்தைய பகுதி   மிட் ராம்னி சகாப்தம் ஆரம்பிப்பதற்குள்ளாகவே அல்பாயுசில் முடிந்துவிடும் போலிருக்கிறது.    பெரும் சுனாமியென எழும் என்று சிலர் எதிர்பார்த்த மிட் ராம்னி அலை சின்ன நாய்க்குட்டியாய் சுருண்டு காலை நக்கிவிட்டு வாலையும் பின்னங்காலிடுக்கில் சுருட்டிக்கொண்டு ஓடிவிடும் போலிருக்கிறது.   தோல்வி பயத்திலிருப்பவர்கள் தன் நிழலைக்கண்டுகூட மிரள்வது போல் திருவாளர் ராம்னியும் நடுநடுங்க ஆரம்பித்திருக்கிறார், அபத்தங்களை அள்ளிவீச ஆரம்பித்திருக்கிறார்.   அரசியல் முட்டுக்கட்டைகளால் முக்கியமான விஷயங்களில் முடிவெடுக்க முடியாமல் ஒவ்வொரு முறை ஒபாமா […]

அமெரிக்க அரசியல் 2012 – ஒபாமா vs ராம்னி

அமெரிக்க அரசியல் 2012 – ஒபாமா vs ராம்னி

  அமெரிக்க அரசியல் 2012   அமெரிக்க அரசியல் ஆடுகளம் சூடுபிடித்து விட்டது.    கடந்த சில பல வருடங்களில் என்னவெல்லாம் நடந்து முடிந்துவிட்டது!   ”ஈராக்கில் சதாம் ஹூசேன் Weapons of Mass Destruction பதுக்கி வைத்திருக்கிறார். எங்களிடம் ஆதாரபூர்வமான சான்றுகள் இருக்கின்றன” என்று அதிரடியாக பொய்யைச் சொல்லி ஈராக்கில் நுழைந்து அந்த நாட்டையே சின்னாபின்னமாக்கி அவர்களுடைய எண்ணெய்க் கிணறுகளைக் கைப்பற்றிய அமெரிக்க அநியாயத்தை யாரும் அதற்குள் மறந்திருக்க வாய்ப்பில்லை.   முட்டாள்தனமாக, ஈகோவால் மட்டுமே […]

அமெரிக்க அரசியல்  2012 – 1

அமெரிக்க அரசியல் 2012 – 1

அமெரிக்க அரசியலில் மறுபடியும் இது ஒரு சலசலப்பான நேரம்!   4 வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு அச்சாரங்கள் போடப்படும் நேரம். நவம்பர் 2012ல் தேர்தல் நிச்சயமாக உண்டு.   ஜனநாயகக் கட்சியைப் பொருத்தவரை 2012 எலெக்‌ஷனுக்கு அதிபர் யார் என்பதில் பிரச்னை எதுவும் இல்லை. ஒபாமாவுக்கு 98 சதவீத கட்சி வாக்குகள் பதிவாகி, அடுத்த எலெக்‌ஷனிலும் அவர்தான் நிற்பார்    என்பது தெளிவாகவே சொல்லப்பட்டு விட்டது. அவரை எதிர்த்து நிற்க அங்கே ஆள் […]

செயற்கரிய செய்யவல்லார்

செயற்கரிய செய்யவல்லார்

  “செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலாதார்” என்று திருவள்ளுவர் ஸ்டீவ் ஜாப்ஸைப் பற்றித்தான் சொல்லி இருக்கவேண்டும். இன்று, சற்று நேரமுன்பு ஸ்டீவ் ஜாப்ஸ் தன் 56வது வயதில் அகால மரணம் அடைந்தார் என்பது அதிர்ச்சி தரும் செய்தி. நேற்றைய ஆப்பிள் புதுவரவான ஐஃபோன் 4S பற்றிக் கிண்டலும் கலாட்டாவுமாக ட்விட்டரில் நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது அடுத்தநாளே எங்களுக்காக இப்படி ஒரு அதிர்ச்சிச்செய்தி காத்துக் கொண்டிருக்கிறது என்பது யாருக்குமே தெரியவில்லை. ஆப்பிள் கம்பெனி பற்றியோ அதன் தயாரிப்புகள் […]

அமெரிக்கப் பத்து!

அமெரிக்கப் பத்து!

இந்த புதிய பகுதியில், அமெரிக்க வாழ் தமிழர்கள் தங்களுக்கு அமெரிக்காவில் பிடித்தவைகளை இங்கே பகிர்ந்துகொள்வார்கள். முடிந்தவரை வேறு எந்த நாட்டோடும் ஒப்பிடாமல் அமெரிக்காவின் சிறப்புகளை மட்டுமே எடுத்துக்காட்டும் ஒரு முயற்சி இது. வாசகர்கள் இந்த பகுதியில் எழுத விரும்பினால், உங்கள் படைப்பை feedback @tamiloviam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். இந்த வாரம் : லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் – ஆர் ‘எப்பொருள் யாரார் வாய் கேட்பினும்’ மட்டுமல்ல, எங்கெங்கே நல்ல விஷயங்கள் பார்த்தாலும் நாமும் மாறித்தானே ஆகணும்? அமெரிக்காவில் […]

பாவம், தமிழ் பிழைத்துப் போகட்டும்

பாவம், தமிழ் பிழைத்துப் போகட்டும்

நாட்டில் வரவர தமிழ் படுத்தும் பாடு தாங்கமுடியவில்லை!  "அடேய் தமிழ் துரோகி, உன்னை விட்டேனா பார். நீ பச்சைத் தமிழனா, சிவப்புத் தமிழனா? நீ தமிழ்ப்பால் குடித்தவன்தானா அல்லது புட்டிப்பால் குடித்தாயா?" "அவனா நீயி? ஓஹோ, கைபர், போலன் கணவாய் வழியாக வந்தவனா?"  என்றெல்லாம் மீசையை முறுக்கி, லுங்கியை மடித்துக்கட்டி உதார் விட்டு என்னை யாராவது பயமுறுத்துவதற்குமுன், கொஞ்சம் இருங்கள். சொல்லவந்ததை சரியாகச் சொல்லிவிடுகிறேன்.  அதாகப்பட்டது, தமிழ் சமர்த்தாக தன் வேலையைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது.  தமிழை நாம் […]

கடைசியாக : July 22, 2016 @ 9:48 am