ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

விதியே கதை எழுது – இறுதி பாகம்

February 18, 2011 by · Leave a Comment 

  ஜெய்நகர் போலீஸ்  ஸ்டேஷன். இன்ஸ்பெக்டர் பசவராஜ்  தனக்குத்தெரிந்த அரைகுறை தமிழில்  பேச ஆரம்பித்தார். "சொல்லுப்பா மஞ்சுநாத்.!..எதுக்கு நீ அந்தம்மாவே கொலே செய்தே? " அவர் எதிரில் முகம் இறுகி நின்று கொண்டிருந்த மஞ்சுநாத் சட்டென," இன்ஸ்பெக்டர்! நான் ராதிகாவைக்கொலை செய்யல… இதோ நின்னிட்டு இருக்கானே சாரங்கன், இவனுக்குத்தான் மனைவி மேல சந்தேகம் அதான் தீர்த்துக்கட்டி இருக்குறான்…ஆனா ஃப்ளாட்டுல அந்த பத்ரிக்கிழவர் ஏதோ என்கூட ராதிகா எப்பவோ வெளீல சுத்தினதா சொன்னதை காரணமா வச்சி என்னை இங்க […]

விதியே கதை எழுது – 10

February 17, 2011 by · 1 Comment 

  "யாரும்மா நீங்க?  இந்த  சூர்யா ·ப்ளாட்டுல யாரைப்பாக்கணும்?"   தூக்கக்கலக்கத்தில்  காம்பவுண்ட்  கதவைத் திறந்தபடி வேலய்யா கேட்டான்.  ஆட்டோக்காரருக்கு அவர் மீட்டருக்கு மேல் கேட்ட பணத்தை பர்சிலிருந்து எடுத்துக்கொடுத்துவிட்டு வந்த சுமித்ரா,"என் தம்பி சாரங்கனைப்பாக்க வந்தேன்ப்பா….சூர்யா ·ப்ளாட்ஸ் நாலாவது ப்ளாக்குல வீடுன்னு  அட்ரஸ்ல  படிச்ச  ஞாபகம். அங்க போகணும்.கொஞ்சம் வழி காட்டறியா? நான் ஊருக்குப்புதுசு" என்று  கெஞ்சும் குரலில் கேட்டாள்    "சாரங்கன் ஐயா வீடுங்களா? அந்த  தம்பி முகத்துல  பொழுது விடியறத்துக்கு முன்னே இப்படி முழிச்சா […]

விதியே கதை எழுது – 9

February 16, 2011 by · Leave a Comment 

  எதிர்  கட்டிடத்தில் கோகுலாஷ்டமி நிகழ்ச்சிகள் முடிந்து விட்டன.  அப்பார்ட்மெண்ட்டில் அனைவரும் தங்களது  ஃப்ளாட்டுக்குத் திரும்ப ,சாரங்கன் மட்டும் அந்த தியான மண்டபத்தில்ஒரு தூண் ஒரமாக   சாய்ந்து உட்கார்ந்திருந்தவன் அந்த ஆன்மிக சொற்பொழிவின் உள்  அர்த்தம் நிறைந்த கதையை மறுபடியும் அசை போட்டான்.  சட்டென  உடம்பு சிலிர்த்துப்போனது. ஏதோ புரிந்த மாதிரி இருந்தது, அமைதியான அந்த இடத்தில் காதுக்குள் மீண்டும் மீண்டும் அந்தக்குரல் எதிரொலித்தது.  "இந்த ஜன்மாவும் நீ எனக்குக்கிடைக்காவிட்டால் , அடுத்த ஜன்மாவிலும் அதற்கு […]

விதியே கதை எழுது – 8

February 13, 2011 by · Leave a Comment 

  "ஹலோ மஞ்சுநாத்?"  ஜெய்நகர் போவதாக சாரங்கனிடம் சொல்லிய ராதிகா தெருமுனையிலிருந்த பார்க்கில் போய் ஒரு பெஞ்சில் உட்கார்ந்துகொண்டாள். சுற்றிலும் பார்வையை நுழைத்தபடி செல்போனில் மஞ்சுநாத்தை அழைத்தாள்  ஏற்கனவே ஆபீசில்தான் வசமாய்மாட்டிக்கொண்டுவிட்ட கவலையில் வீட்டில்முடங்கிக்கிடந்த மஞ்சுநாத் ராதிகாவின் அழைப்பை வழக்கம்போல் ஆரவாரமாய் ஏற்காமல் சுரத்தில்லாமல்" ஹலோ ?" என்றான்.  "ஹேய் மஞ்சு, வேர் ஆர் யூ யா? இங்க,  சாரங்கனுக்கு சந்தேகம் வந்திடிச்சி..இன்னிக்கு ஆபிசிலிருந்து வந்ததுமுதல் கேள்வியா கேட்டு தாக்கறாரு.  நீ வாங்கித்தந்த வைரநெக்லசை   சந்தேகமா […]

விதியே கதை எழுது – 7

February 12, 2011 by · 1 Comment 

  சுமித்ரா! சுமித்ரா!" எதிர்வீட்டு பாக்யா அலறிக்கொண்டு ஓடிவந்தாள் கோகுலாஷ்டமிக்காக பூஜை அறையை அலங்கரித்துக்கொண்டிருந்த சுமித்ரா நிமிர்ந்தாள். "வா பாக்யா!ரொம்ப பதட்டமாய் தெரியறியே, உக்கார்ந்து நிதானமா சொல்லேன்?' என்றாள் மென்மையானகுரலில். சாரங்கனைப்போல சுமித்ராவிற்கும் அதிர்ந்து பேசிப்பழக்கமில்லை. "சு சுமித்ரா…உன் பொறுமைக்கு சோதனை வந்திடிச்சி…ஆமா..உன் புருஷனை..உன் புருஷனை.." "என்னாச்சு பாக்யா? என்புருஷனுக்கு என்னாச்சு?" சுமித்ரா பதட்டமாய் கேட்டாள். "உன் புருஷனை போலீஸ் பிடிச்சிட்டுப்போயிட்டிச்சி.." "என்ன, போலீசா?" "ஆமா..மேலத்தெருவுல இருக்கற உங்க சம்மந்தி அதான் சாரங்கன் மாமனாரை  உன் புருஷன் […]

விதியே கதை எழுது – 6

February 6, 2011 by · Leave a Comment 

சந்தேக நூலிழை கயிறாகமுன்பு அதை அறுத்து எறிய நினைத்த சாரங்கன், அன்று வீடுவந்ததும் ராதிகாவை அழைத்தான். "என்ன  இது புதுசா இருக்கு குரலை உயர்த்தி என் பெயரைச்சொல்லிக்கூப்பிடறீங்க?" வியந்தாள் ராதிகா. 'காரணம் இருக்கு ராதிகா..ஆமா அன்னிக்கு  எனக்காக வாங்கினதாய்  நீ காண்பித்த அந்த பித்தளைபட்டர்ப்ளை வச்ச ஷூ எங்க? ஷூ ராக்கிலயும் காணோமே?' என்று சாரங்கன் கேட்டான். "அ அது அதுவந்து… அந்த மாடல் உங்க அழகுக்கு எடுபடாதுன்னு  கடைல கொண்டுபோய் கொடுத்து அதுக்கு பதிலா எனக்கு […]

விதியே கதை எழுது – 5

February 4, 2011 by · Leave a Comment 

  ராகவ் எண்டர்ப்ரைசஸ். மானேஜிங் டைரக்டர் சுரேஷின்  பிரத்தியேக அறை. ஏசியின் அந்தக்குளுமையிலும் சுரேஷுக்கு வியர்த்துகொட்டியது. உடம்பே பற்றி எரிகிற மாதிரி இருந்தது.எதிரே கைகட்டிக்கொண்டு சாரங்கன் அமைதியாக நின்றிருந்தான்.அவனுக்கு சுரேஷைப்போல ஆத்திரம் வரவில்லையெனினும் மஞ்சுநாத் இப்படிச் செய்துவிட்டதில் மனது வேதனைப்பட முடிந்தது. கம்பெனியின் சீனியர் மேனேஜர் என்ற முறையில் மஞ்சுநாத்தை மிகவும் நம்பியிருந்தார் விபத்தில் மறைந்துபோன  சுரேஷின் அப்பா.  .அதனால் அப்போது வெளிவராத உண்மைகள் எல்லாம் இப்போது தெரியவந்தன. அவன் ஊழல் செய்துவிட்டதற்கு ஆதாரமான ஃபைல்கள் ஒவ்வொன்றாய் […]

விதியே கதை எழுது – 4

February 1, 2011 by · 1 Comment 

"யாரது சாரங்கனா?" மாடிப்படியில் இறங்க இருந்தவனை எதிர்ப்ளாட்டின் வாசல்கதவைத்திறந்தபடி  வெளியே வந்த பத்ரியின் குரல் திரும்ப வைத்தது. நிலைப்படியின் ப்ளாஸ்டிக் மாவிலைத்தோரணத்திற்குக் கீழே கைவைத்த வெள்ளைபனியனுடன் லேசான முன் வழுக்கையுடன் பூர்ணம் விசுவநாதனின் ஜாடையில் பத்ரி நின்றுகொண்டிருந்தார். பேசுவதும் அவரைப்போலவே இருக்கும். அண்மையில்தான் அஞ்சல் அலுவலகப்பணியின்றும் ஓய்வு பெற்றவர். ஒரேமகள் திருமணமாகி பம்பாயில் இருக்கிறாள். திருமதி பத்ரி அமைதியாய் இருப்பவர். பத்ரியின் வீட்டில் எம் எஸ்சின் பாடல்களோ அல்லது  ஜி என் பியின்  சாகித்யஸ்வரங்களோ ஒலிக்காத நாளில்லை.சங்கீதம் […]

விதியே கதை எழுது – 3

January 28, 2011 by · 1 Comment 

  "குட்மார்னிங் சாரங்!" கூவினாள் ராகினி.. இடம் ராகவ் எண்டர்ப்ரைஸின் மூன்றாவதுதளம். நேரம் காலை பத்துமணி பத்துநிமிடங்கள். சாரங்கன் அப்போதுதான் ஆபீசுக்குள் நுழைந்து  வேகவேகமாய் தனது அறையை நோக்கி நடந்துகொண்டிருந்தான்.  "ஓ, காட்!. .பத்துநிமிஷம் லேட்டா வந்திருக்கேனே" முணுமுணுத்தபடி நடந்துகொண்டிருந்தவனுக்கு ராகினி காலைவணக்கம் கூறியது காதில் விழவேயில்லை.  புதிய டிசைனர் சேலையில்,அதற்கு மேட்சாக கழுத்தில் சோக்கர் அணிந்துகொண்டு ப்யூட்டிபார்லரில் நேற்று ஹைலைட்ஸ் செய்துகொண்ட மெரூன்வண்ணமுடி  காற்றில்பறக்க தேவதைபோல நிற்கும் தன்னை ஏறெடுத்தும்பார்க்காமல் போன சாரங்கனீன்மீது  செல்லக்கோபமாய் வந்தது. […]

விதியே கதை எழுது – 2

January 27, 2011 by · 1 Comment 

மாலதி, டில்லியில் சாரங்கனோடு அலுவலகத்தில் ஒன்றாய் பணி புரிந்தவள். அறிவும் அடக்கமும் அழகும் சேரும்போது அங்கே அலாதியான முகக்களை ஏற்படுமே கவனித்திருக்கிறீர்களா அது மாலதியிடம் ஏராளமாகவே உண்டு. பலவருஷங்கள்முன்பே தொழில்நிமித்தம் டில்லிக்குக் குடிபெயர்ந்த பலகுடும்பங்களில்மாலதியின் குடும்பமும் ஒன்று. மாலதியின் அப்பா பூமிநாதன் பிரபல மேஜிக் நிபுணர்.  தன் ஒரே வாரிசான மாலதியை தனக்குப்பின் இந்தக்கலையைக்கற்று அந்தக்கலையை மேலும் பிரபலப்படுத்த நினைத்தார்.  மாலதி கற்றுக் கொண்டாள்.ஆனால் அப்பாவைப்போல அதையேதொழிலாக்கிக்கொள்ள அவள் மனம் இடம் தரவில்லை. இலக்கியம் சமூக சேவை ஆன்மீகம் […]

Next Page »

கடைசியாக : July 22, 2016 @ 9:48 am