ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

ஜெயேந்திரர் விடுதலையும் ஹிந்துமத வெறுப்பும்

ஜெயேந்திரர் விடுதலையும் ஹிந்துமத வெறுப்பும்

ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளும் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளும் சங்கரராமன் கொலை வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. எப்பேற்பட்ட ஹிந்துத் துறவியாக இருந்தாலும், அவர் சட்டத்தின் முன் சாமானியரே என்றும், ஓர் அரசு தன்னுடைய அசுர பலத்துடன் அதிகார துஷ்பிரயோகத்துடன் ஒரு சன்னியாசியையே கபடராகச் சித்திரித்தாலும், நீதியின்முன் அவரால் வெல்லமுடியும் என்பதையும் இந்த வழக்கு நமக்கு ஒருங்கே காட்டியுள்ளது. அரசின் அதிகார துஷ்பிரயோகம் என்பது இந்த வழக்கில் எத்தனை தூரம் செல்லமுடியுமோ அத்தனை தூரம் சென்றது. ஒரு […]

பில்லா 2 குழுவினருக்கு ஒரு கடிதம்

பில்லா 2 குழுவினருக்கு ஒரு கடிதம்

  அன்புள்ள சக்ரி டொலேட்டி, அஜித்…     அன்புள்ள சக்ரி டொலேட்டி,   பில்லா 2 பார்த்தேன். உங்கள் நல்ல மனம் புரிகிறது. எல்லாருக்கும் கேரக்டர் வேண்டும் என்ற உயரிய நோக்கோடு நீங்கள் படம் எடுத்திருக்கிறீர்கள். நல்ல விஷயம்தான். எல்லோருக்குமே கேரக்டர் என்றால் ஹீரோ அஜித்துக்கு கேரக்டரோ கேரக்டர் என்று நீங்கள் யோசித்திருப்பீர்கள் என்று புரிந்துகொள்கிறேன். இவ்வளவு பெரிய பட்ஜெட் படத்தை எடுக்கும்போது இதைக்கூட யோசிக்காவிட்டால் என்ன இயக்குநர்! ஆனால் என்ன, கொஞ்சம் அதிகம் யோசித்துவிட்டீர்கள். […]

வேலாயுதம்

வேலாயுதம்

  வரிசையாக மொக்கைப் படங்களைக் கொடுத்துக்கொண்டிருந்த விஜய் இந்தப் படத்தின் மூலம் கொஞ்சம் மூச்சு விட்டிருப்பார். படம் எந்த வகையிலும் புதுமையான படமில்லை. முதல்வன், அந்நியன் படங்களை நினைவுபடுத்தும் கதைதான். ஆனால் எத்தனை முறை ஊழலை எதிர்த்துப் படமெடுத்தாலும் மக்கள் பார்ப்பார்கள். அதிலும் விஜய் போன்ற ஒரு நடிகர் நடித்தால் அதை நிச்சயம் விரும்பிப் பார்ப்பார்கள். இது ஒன்றுதான் படத்தின் ப்ளஸ். இதனைப் புரிந்துகொண்டதாலோ என்னவோ, இயக்குநர், ஒரு படம் ஓடுவதற்கு என்ன தேவையோ அதனை சரியாகக் […]

வாகை சூட வா

வாகை சூட வா

வாகை சூட வா பார்த்தேன். நல்ல படம். தமிழின் மிக முக்கியமான படமாக வந்திருக்கவேண்டியது. இப்போதும் ஓரளவு முக்கியமான படம்தான். வேறு வழியில்லாத சில சமரசங்கள்தான் வழக்கம்போல் பிரச்சினை. ஹிந்தியில் அமீர்கான் நடித்து வந்திருக்கவேண்டிய படம் போன்ற சாயல். தமிழில் இப்படியெல்லாம் வராது என்ற தீர்மான எண்ணம்தான் இப்படி நினைக்கச் செய்கிறாதோ என்னவோ. ஏற்கெனவே அங்கன்வாடி என்ற ஒரு ‘மாநில மொழித் திரைப்படமும்’ இதே வரிசையில் வந்த மிக முக்கியமான ஹிந்தித் திரைப்படம். இசையில் பாடல்கள் நன்று. […]

அண்ணா ஹசாரே – ஊழலுக்கெதிரான காந்தியப் போராட்டம்

அண்ணா ஹசாரே – ஊழலுக்கெதிரான காந்தியப் போராட்டம்

  ஜெயமோகனின் ஒரு புதிய புத்தகம் வெளிவந்ததுமே அதைப் படித்து முடிப்பது எனக்குப் புதியதல்ல. 97-98 வாக்கில் விஷ்ணுபுரம் படித்தபோது தொற்றிக்கொண்ட வேகம். என் ரசனையில் பல எழுத்தாளர்கள் பின்னுக்குப் போவதும், முன்னுக்கு வருவதுமாக இருக்க, ஜெயமோகன் மட்டும் எப்போதும் பெரிய பிரமிப்பாகவே எனக்குள் மிஞ்சி நிற்பது பெரிய ஆச்சரியம்தான்.  இணையத்தில் ஜெயமோகன் எழுதத் துவங்கியதுமே, அது சரியான செயல் என்று நினைத்தேன். அப்போதே அவரிடம் சொன்னதாகவும் நினைவு. இன்று இணையத்தின் வழியாக ஜெயமோகன் எழுதிக் குவிப்பதைப் […]

மங்காத்தா – வெற்று அலப்பறை

மங்காத்தா – வெற்று அலப்பறை

  அறிமுகப் பாடல் இல்லை, எவ்வித ஆக்‌ஷனும் இல்லை, அஜித் அப்படியே வருகிறார். இப்படித்தான் இந்தப் படத்துக்கு விமர்சனம் தொடங்கவேண்டும் என்பது இணைய மரபு. ஆனால் இரண்டுமே பொய். அஜித்தின் அறிமுகமே ஒரு சண்டைக் காட்சியில். அடுத்தது ஒரு பாட்டு, விளையாடு மங்காத்தா. எனவே இது அப்பட்டமான கமர்ஷியல் படமே. கமர்ஷியலுக்கான விறுவிறுப்பைத் தொலைத்துவிட்டு, எங்கே என்ன நடக்கிறது என்று தெரியாமல், யார் யார் எதற்காக என்ன செய்கிறார்கள் என்பதைத் தெளிவாகச் சொல்லமுடியாமல், அத்துவானக் காட்டில் அநாதை […]

உறுமி

உறுமி

வரலாற்றை அடிப்படையாக வைத்த கற்பனைக் கதைகள் சுவாரஸ்யமாகவே இருக்கும். மற்ற கற்பனைகளைப் போலல்லாது இது போன்ற கற்பனைகளில் பல்வேறு விஷயங்களில் கவனத்துடன் செயல்படவேண்டியிருக்கும். திரைப்படத்தில் பயன்படுத்தும் மொழியில் இருந்து, உடைகளில் இருந்து, இடங்களில் இருந்து என ஒவ்வொரு விஷயத்தையும் கவனத்துடன் செய்யவேண்டும். வரலாற்றுப் புனைவுகளில், ஓர் உண்மைச் சம்பவத்தை எடுத்துக்கொண்டு, அதில் கற்பனையைக் கலப்பதில் என் ரசனையில் சிறந்த படம் ‘ஹே ராம்.’ காந்தியைக் கொன்றவர் கோட்ஸே என்பது வரலாறு. ஆனால் காந்தியைக் கொல்ல சாகேதராமும் முயன்றார் […]

கடைசியாக : July 22, 2016 @ 9:48 am