ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

ஐயோ பாவம் அப்பாக்கள் !!

ஐயோ பாவம் அப்பாக்கள் !!

March 23, 2012 by · Leave a Comment 

  பொதுவாகவே சமுகத்தில் பெண்களுக்கென்று ஒரு மேன்மையான இடம் உண்டு.  சாதனை படைப்பவர்களையும், திறமை உள்ளவர்களையும் பெருமை படுத்தி அங்கிகாரமும் கிடைப்பதை கண்கூடாகப் பார்க்கிறோம். மகளிர் தினக் கொண்டாட்டமும், mother's day யும் அதை தான் பறைச்சாற்றுகின்றன. அதே சமயம் அதை தக்க வைத்துக் கொள்வதும் நம் கையில் தான் உள்ளது. ஆனால் இதே முக்கியத்துவத்தை குடும்பத்தின், சமுதாயத்தின் மற்றொரு கண்ணான கணவன், தந்தை என்ற முகங்களைக் கொண்ட ஆண்களுக்கு கொடுக்கிறோமா என்ற கேள்விக்கு முழு மனதுடன் […]

இது நாத்திகமாகுமா ?!!

இது நாத்திகமாகுமா ?!!

March 8, 2012 by · 1 Comment 

  ஒவ்வொரு மதத்திற்கும் தனித் தனி கொள்கைகளும் வழிபாடுகளும் உண்டு. இருந்தாலும் இந்து மதத்திற்கு மட்டுமே உருவ வழிபாடு என்ற தனித்துமை உண்டு. இது ஒரு தனிச் சிறப்பாக இருந்தாலும் இதுவே சில சமயம் கேலிக்கு ஆளாக்க படுகிறது. இந்து மதம் என்றாலே பல உருவ கடவுள்களும், இரு பெரும் காப்பியங்களுமான ராமாயண மகாபாரதமும் தான் நினைவுக்கு வரும். இந்த மதத்தில் முக்கியமான ஒரு பண்பாடு ஒருவனுக்கு ஒருத்தி என்பது; ஆனால் வணங்கப் படும் சிவன் விஷ்ணு,முருகன்,கண்ணன் […]

குழந்தை வளர்ப்பு யார் பொறுப்பு ?

குழந்தை வளர்ப்பு யார் பொறுப்பு ?

March 1, 2012 by · 1 Comment 

இன்றைய உலகில் எவ்வளவுக்கு எவ்வளவு அறிவியலும் தொழில் நுட்பமும் பெருகி உள்ளதோ அதே அளவு சமுக விரோத செயலும் கொடுமைகளும் பெருகிக் கொண்டு தான் இருக்கின்றன.அது வளர்ந்த  நாடானாலும் சரி, நம் போல் வளர்ந்துக் கொண்டிருக்கும் நாடும் விதிவிலக்கல்ல; இதற்கு காரணம் அந்தந்த சமுதாயத்தைத் தான் கூற முடியும். சமுதாயம்   என்பது தனிப் பட்ட அமைப்பு அல்ல; அங்கு வாழும் மக்களைத் தான் குறிக்கும். நல்லதிர்கான பலனை அனுபவிப்பது  போல் சமுக விரோத செயலை தடுப்பதற்கான […]

கலக்கல் கலாச்சாரம் !

கலக்கல் கலாச்சாரம் !

February 7, 2012 by · Leave a Comment 

  இப்போதெல்லாம் தமிழர் பண்பாடு கலாசாரம் இவை எல்லாம் ரொம்பவும் நீர்த்துக் காணாமல் போய்க் கொண்டிருப்பதாக புலம்புவது வழக்கமாகி விட்டது. ஆனால் அது அப்படி இல்லை என்று தான் தோன்றுகிறது. காலத்திற்கு ஏற்ப சில பழக்க வழக்கங்கள் வேண்டுமானால் மாறி இருக்கலாம்; அதையும் பண்பாட்டுடன் சேர்த்து குழப்பிக் கொள்ளக் கூடாது. முன்பெல்லாம் பெற்றோர் என்ன சொன்னாலும் திருப்பிக் கேள்விக் கேக்காமல் ஒப்புக் கொள்ளும் மனோபாவம் இருந்தது. இப்போதுள்ள தலை முறைக்கு எதற்கும் காரணம் தெரிய வேண்டும். சிலவற்றுக்கான […]

வாங்க பேசலாம் !!!

வாங்க பேசலாம் !!!

January 31, 2012 by · Leave a Comment 

சமீபத்தில் இந்தியக் கல்வித் தரத்தை பற்றி வெளி வந்த செய்தியை  அப்படியே ஒப்புக் கொள்ள முடியாவிட்டாலும் அதை ஒரு முன்னெச்சரிக்கையாக எடுத்துக்  கொள்வதில் தவறில்லை. சர்வ தேச அளவில் ஒவ்வொரு நாட்டில் இருக்கும் அடிப்படை கல்வியை ஆராயும் போது நமது கல்வித் தரம் மிகவும் பின் தங்கி இருப்பதாக கணித்துள்ளனர். எட்டாம் வகுப்பு வரை உள்ள கல்வியின் தரம், 72 நாடுகளில் 70 வது இடத்தில் இருப்பதாக கூறுகின்றனர். இந்தியாவில் உள்ள 2  மாநிலங்களைக்  கணக்கில் கொண்டு […]

House Husband

House Husband

January 23, 2012 by · Leave a Comment 

"House Husband"…!!!, என்ன ஏதாவது மாற்றி சொல்லி விட்டேனா என்று யோசிக்க வேண்டாம் . house wife கு பதிலாக house husband  ஆக இருந்தால் எப்படி இருக்கும் என்று கொஞ்சம் மாத்தி சிந்தித்து பார்க்கலாமே! முதலில் இந்த house wife என்ற வார்த்தையே சரியான மதிப்பை பெறுவதில்லை; அதற்கு home maker என்ற வார்த்தை எவ்வளவோ மேல். அது ஆணாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய மனம் எத்தனை பேருக்கு வரும் என்று தெரியவில்லை; ஆனால் […]

விவாகரத்து – மறுபக்கம் !!!

விவாகரத்து – மறுபக்கம் !!!

January 19, 2012 by · 1 Comment 

  இன்று பன்முக கலாச்சாரம் நம்மிடையே அதிகம் ஊடுருவிக் கொண்டிருப்பதை மறுக்க முடியாது. அதனால் ஒரு சில நன்மைகள் இருந்தாலும் நமக்கே உரித்தான சில தனித்துவம் நிறைந்த கலாச்சாரம் கொஞ்சம் கொஞ்சமாக நம்மை விட்டு  மறையத் தொடங்குவதையும் கண்கூடாகப் பார்க்கிறோம். இது ஒரு  நல்ல அறிகுறியாக எடுத்துக் கொள்ள முடியாது. இதில் முழுவதும் நம்மை தொலைத்து விடாமல் இருக்க  ஒரு எச்சரிக்கை உணர்வோடு செயல்படுவது அவசியம் என்று தோன்றுகிறது. நாணயத்திற்கு இரண்டு பக்கம் போல் எந்த ஒரு […]

சச்சினா ! சதமா ?!

சச்சினா ! சதமா ?!

January 12, 2012 by · Leave a Comment 

  இன்று கொலைவெறி பாடலுக்கு அடுத்தபடியாக அதிகமாக  பேசப்படும் விஷயம் சச்சின் 100வது சதம் அடிப்பாரா மாட்டாரா! என்ற கேள்விதான். ஐயோ! போதுமடா சாமி! ஊடகங்களும், பத்திரிக்கைகளும் மாறி மாறி போட்டுத் தாக்குவது; கண்டிப்பாக நூறாவது சதம் என்பது சச்சினுக்கு இன்னொரு மைல்கல் என்பதில்  ஒரு துளி ஐயமும் இல்லை. எதிர்பார்ப்பு கூடக் கூட அதுவே அவரை பலவீனப் படுத்திவிடுமோ என்று நினைக்கத் தோன்றுகிறது. என்னதான் அனுபவப்பட்ட வீரராக இருந்தாலும் அவரும் மனிதர்தானே! இத்தனை மக்களின் எதிர்பார்ப்பை […]

மன அழுத்தமா ? போயே போச்சு !!!

மன அழுத்தமா ? போயே போச்சு !!!

January 10, 2012 by · Leave a Comment 

இன்றைய காலக் கட்டத்தில் மருத்துவ துறையில் இருப்பவர்களுக்கு சவாலாக இருக்கும் விஷயங்களில் ஒன்று திருமணமான  இளையத் தலைமுறை இடம் காணப் படும் மனஅழுத்தம் .அதுவும் குறிப்பாக பெண்கள்  தான் அதிகம் பாதிக்கப் படுகின்றனர். படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற பாகு பாடே இல்லாமல் இதற்கு ஆளாவது மிகவும் வருத்தத்திற்குரியது. அதே சமயம் கவனிக்கப் பட வேண்டிய ஒன்று. ஒரு காலத்தில் இத்தகைய மன அழுத்தம் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் தான் காணப் பட்டு வந்தது. அதற்கு பல […]

வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்

January 1, 2012 by · Leave a Comment 

  பதினோறாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் எங்கள் தமிழோவியத்திற்கு எனது பத்தாயிரம் வாழ்த்துக்கள்!!. தமிழோவியம் ஒரு mixed bag!! எல்லாத் தரப்பு ரசனை உள்ளவர்களுகளையும் ஈர்க்கும் ஒரு முழுமையான படைப்பு. நடப்பு செய்தி, அரசியல், விளையாட்டு, சிறு கதை, கட்டுரை, சினிமா என்று எந்த துறையையும் விட்டு விடாமல் எளிய நடையில் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு. புதிதாக எழுதுபவர்களுக்கு வாய்ப்பளித்து அவர்களை ஊக்கு வைப்பதில் தயங்கியதும் இல்லை ,தவறியதும் இல்லை. நாட்டு நடப்போ அரசியலோ யாரையும் […]

Next Page »

கடைசியாக : July 22, 2016 @ 9:48 am