ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

நீதிமன்றங்கள் – இருட்டறையா… ஒளிவிளக்கா

நீதிமன்றங்கள் – இருட்டறையா… ஒளிவிளக்கா

சட்டம் ஒரு இருட்டறை… அதில் வக்கீலின் வாதம்தான் ஒளிவிளக்கு… என்ற அறிஞர் அண்ணாவின் வாசகம்..  நீதிமன்றங்களில் வழக்கறிஞர்களின் மதிப்பை, பங்களிப்பை, முக்கியத்வத்தை ஒற்றை வரியில் எடுத்துரைக்கும் அருமையான பொன்மொழி.  சட்டங்கள் இருட்டாக இருந்தாலும், அதனால் உண்டாகும் பலன்கள், மக்களை வெளிச்சத்திற்கு (முன்னேற்றத்திற்கு) கொண்டு போக வேண்டுமே தவிர..  மேலும் இருட்டாக்க கூடாது.   சட்டங்கள் இயற்றப்படுவதற்கான முழு அதிகாரம் பாராளுமன்றத்திற்கு இருந்தாலும், அதை செயல்படுத்துவதற்கும்,. மாற்றுவதற்கும்.. ஏன் தடை போடுவதற்கும், நீதிமன்றத்திற்கு உரிமை உண்டு.  தற்போது, நீதிமன்றங்களின் […]

கவரும்.. கவரேஜும்

கவரும்.. கவரேஜும்

செய்தித்தாள்களிலோ, பத்திரிகைகளிலோ நமது பெயர் வர வேண்டுமென்றால், ஒரு கதையையோ, கட்டுரையையோ,கவிதையோ எழுதி அனுப்பினால், அது பிரசுரமாகும் பட்சத்தில், அந்த கதையொடு அல்லது கவிதையொடு, நமது பெயரும் இடம் பெறும் அல்லது எதாவது போட்டியில் வெற்றி பெற்றாலோ, விளையாட்டில் சாதனை செய்தலோ, பத்திரிகைகளில் நமது புகைப்படத்துடன் பெயரும் இடம் பெறும் வாய்ப்புண்டு. . இப்படி எதாவது ஒரு வகையில் தனது திறமையை காண்பித்து, தனது பெயரை இடம் பெற செய்ய, பிரம்ம பிரயத்தனம் செய்து சாதித்து நம் […]

மக்களாட்சியா…. மந்திரிகளின் ஆட்சியா

மக்களாட்சியா…. மந்திரிகளின் ஆட்சியா

ஜனநாயகம் என்பது மக்களால், மக்களின், மக்களுக்காக செயல்படும் ஆட்சியாகும். இப்படி மக்களால் எற்படுத்தபட்ட மக்களின் ஆட்சியில், மந்திரிகளும், அதிகாரிகளும், மக்களுக்காக செயல்படும் ஊழியர்களே தவிர, முதலாளிகள் அல்ல. மக்களுக்காகதான் அரசாங்கமே தவிர, அரசாங்கத்திற்காக மக்கள் அல்ல என்பதை ஆட்சியுள்ளவர்கள் புரிந்து செயல்படுகிறார்களா என்று கேட்டால், இல்லை என்பதை யாராலும் மறுக்க முடியாது. "குடி உயர கோல் உயரும்" என்ற பழைய கிழமொழியெல்லாம், கிடப்பில் போட்டுவிட்டு, நாமும் நம் சந்ததியினரும் நன்றாக இருந்தால் போதும் என்ற குறுகிய மனப்பான்மையோடு, […]

விஸ்வநாதன் ராமமூர்த்தி

விஸ்வநாதன் ராமமூர்த்தி

திருச்சிராப்பள்ளி கிருஷ்ணசாமி ராமமூர்த்தி இசை பாரம்பரியமுள்ள குடும்பத்தில் பிறந்தவர். குடும்பத்தில் உள்ள அனைவருமே வில்லிசையில் (அதாங்க வயலின்) சிறந்தவர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. இசை பாரம்பரியமிக்க குடும்பத்தில் பிறந்ததினால், திரு. ராமமூர்த்தி அவர்கள், இளம் வயதிலேயே, வில்லிசையில் மிகவும் தேர்ச்சிப் பெற்றவராக விளங்கினார். தனது இசை திறமையை மேலும் வளர்த்துக் கொள்ளவதற்காக, பிரபல இசை தட்டு ஒலிப்பதிவு நிறுவனமான எச். எம். வி ரிகார்டிங் கம்பெனியில் தற்காலிக ஊழியராக சேர்ந்தது, தனது இசை உலக வாழ்க்கையில் […]

விளம்பரங்களா … விஷமங்களா

விளம்பரங்களா … விஷமங்களா

ஒருவர் :  வர வர தொலைகாட்சியில் நிகழ்சிகளையே பார்க்க முடியலே… விளம்பரங்களா போட்டு கொல்றாங்க… மற்றவர்:  ஏங்க… விளம்பரங்கள்தான் எனக்கு சாப்பாடே  போடுது! ஒருவர் :  நீங்க விளம்பர எஜென்சில் வேலை செய்றீங்களா? மற்றவர் :  அட .. நீங்க வேற…. சீரியல் நடுவில வர விளம்பரம் போதுதான் என் மனைவி சாப்பாடு போடுவா… அதான்.                               […]

வரவு எட்டணா செலவு பத்தணா !

வரவு எட்டணா செலவு பத்தணா !

  வேட்பாளர் செலவை அரசே ஏற்கும் என்ற முடிவுக்கு வந்த தேர்தல் கமிஷனுக்கு ஒரு கேள்வி?    அரசு ஏற்கும் செலவிற்கு மக்களின் வரி பணம் தானே மூலதனம்.  மக்களுக்காக சேவை செய்ய  மக்களின் வரி பணத்தையே எடுத்து செலவு செய்து எதற்காக ஒரு பிரதிநிதியை  தேர்ந்தெடுக்க வேண்டும்?  ஏற்கனவே தேர்தல் செலவே மக்கள் வரி பணத்தில்தான் செலவிடபடுகிறது.  மேலும் வேட்பாளரின் செலவையும் அரசே ஏற்கும் என்பது எந்த விதத்தில் நியாயம்?   தற்போது, திருச்சி தொகுதியின் […]

நோயும் வேண்டாம்! மருந்தும் வேண்டாம் !

நோயும் வேண்டாம்! மருந்தும் வேண்டாம் !

ஒரு தனியார் தொலைகாட்சியில் ஒரு நிகழ்சியின் ட்ரைலர் பார்க்க நேர்ந்தது. அதாவது மூடபடாத ஆழ் துளை கிணறுகளில் விழும் குழந்தைகளை காப்பாற்ற ஒரு கருவி கண்டுபிடித்திருப்பதாக காட்டினார்கள். நல்ல விஷயம் தான். ஆனால், ஆழ் துளை கிணறுகள் தோண்டும் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிகை நடவடிக்கை பற்றி சிறிதும் கவலைபடாமல், குண்டக்க மண்டக்க செய்து விட்டு, அசம்பவிதம் நடைபெற்ற பிறகு, அதை சரி செய்ய போராடுவது, எந்த விதத்தில் நியாயம்?   உதாரணதிற்கு ஒரு சில சமுதாய […]

பிளாஸ்டிக் – வரமா! சாபமா?

பிளாஸ்டிக் – வரமா! சாபமா?

  அம்மா…. கடைக்கு போலாமா…  சரி… ஆணியிலே மாட்டி இருகிறே அந்த கூடையை எடுத்து வா.. போவோம்.  கூடை நிறைய பொருட்களை வாங்கி கொண்டு வீட்டிற்கு வருவதே ஒரு அலாதியான சந்தோசம்… அதெல்லாம் ஒரு காலம்.. இப்போது பத்து ரூபாய் பொருளுக்கே  பிளாஸ்டிக் பையில் வாங்கி வரும் காலம்.  கையை வீசி கொண்டு வீட்டிலிருந்து கிளம்பி கடைக்கு போய் வரும் போது கை நிறைய  பிளாஸ்டிக் பையில் பொருட்களை வாங்கி கொண்டு வருவது இப்போது பேஷன்.   […]

கடைசியாக : July 22, 2016 @ 9:48 am