ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

வாசல்

கழுவிக் கொண்டு கையிலிருந்து விழுந்தது நீர் நழுவிக் கொண்டு விரலிருந்து வந்தது வண்ணம் வீட்டின் தலைமகள்  முன்னெடுத்து, அவதரிக்க நிலமகளுக்கு நடந்தது அலங்காரம் திசைகளுக்கு ஒரு பின்பமென எட்டும் நிறத்திற்கு ஒரு முகமென ஏழும் புள்ளிகளுக்குள் ஒளிந்து கொண்டது. வளைவுகளும் வளையங்களும் மையத்தில் கூடி சித்திரமொன்றைச் சிறைபடுத்தியது வாசல் தொடர்புடைய படைப்புகள் :தொடர்புடைய படைப்புகள் எதுவும் இல்லை !

செலோ என்றொரு நண்பன்!

செலோ என்றொரு நண்பன்!

    சிதறிப் போனவையையும்  கீறல் விழுந்தவையும்  மீண்டும் காகிதமாக  தன்னைக் கிழித்துக் கொள்பவன்   பணத்தில் பாகப்பிரிவினை நடக்காமலிருக்க கண்ணாடி  ரோடுபோடும் காண்ராக்டர்   அஞ்சல் தலைப் பொட்டிட்ட  காகிதப் பொட்டிகளைப்  பூட்டிக் கொண்டு  தபால்காரருடன் ஊர்சுற்றுவான்   உடைந்த பொம்மை  இணைக்கப்பட்டது  இவனை உடைத்து   அறிக்கையை கவ்விக் கொண்டு  தகவல் உரைக்கும் பலகையில்  படுத்துக்கொள்வான்   முறுக்கை வயிற்றில் கட்டிய பாலித்தீன் பையின் வாயைக்  கட்டும் வித்தகன்   ஸ்டேபிளர் பின்களின்  கடியிலிருந்து […]

எந்திரன் ரிடன்ஸ்

எந்திரன் ரிடன்ஸ்

  நிலுவையில் இருக்கும் வழக்குகளுக்கு விரைவாகத் தீர்ப்புச் சொல்ல ரோபோக்களை  அங்கீகரிக்க வேண்டி வந்த பொது நலன்  வழக்கை அடுத்த மாதத்திற்கு ஒத்திவைத்தார் நீதிபதி!    பணம் கொடுத்தால் ஓட்டுப் போட மனித  ரோபோக்கள் சம்மதம் தெரிவித்துள்ளதால்  கீ கொடுத்தால் கள்ள ஓட்டுப் போடும் ரோபோக்களின் விற்பனை படு மந்தமாகவுள்ளது    சாதிச் சான்றிதழ் உறுதிப் படுத்தப்படாததால்  ரோபோக்களை வேலையிலிருந்து நீக்கி உத்தரவிட்டு சமத்துவம் காத்தார் சாதியொழிப்புத்துறை அமைச்சர்   நிறுத்தங்களில் பேருந்தை நிறுத்தாமல் சென்றதால்  'ரோபோக்களை […]

என் மகள்

அண்டங்கள் தாண்டி ஆகாயத்தில் உலாவும் மீன்களில் ஏதோ இன்று என்கைகளில் கலை மான் என்பேனா! சத்திய மான என் சக்தி இது சிஷ்டியில் விளைந்த மூல சொத்து அது பாலில் ஊறி வளர்ந்த மலர் பாரில் சாதிக்க வந்த சிலை கண்ணசைவில் காவியம் முட்டி தட்டி தடுமாறும் உதட்டசைவில் ஒவியங்கள் நலிந்து மெலிந்து சிதையும் நவசைவில் நாதங்கள் பிறண்டு வரண்டு வாடும் பூமிக்கு புது வரவாக பூவுக்கு புது இனமாக நாளைக்கு ஒரு தாயாக இன்றைக்கு என் […]

நான் தேடுவதில்லை

திருவிழாக்களும் தேர்வுலாக்களும் எனக்கு வசந்தகாலம் சில்லறை அதிகம் சேர்வதால் தெரு நாய்களும் கொசுக்களும் என் பங்காளிகள் இரவில் எனக்கு துணையாக நெருசலான சாலைகளும் நெருடலான காலைகளும் என் ரசிகர்கள் அங்கெல்லாம் நான் காட்சிப்பொருளே வியற்ற நெத்தியும் வெந்த வயிறும் என் உடன் பிறப்புக்கள் வறுமையிலும் உடனிருப்பவை மழை கதிரும் வெயில் சாரலும் என் குற்றாலம் இலவசமா கிட்டுபவை ஹோட்டல் கழிவும் டீக்கடையின் கனிவும் எனக்கு அறுசுவையே அடிக்கடி பசியாத்துபவை தந்திர மானுடமும் எந்திர வாழ்க்கையும் நான் பாவப்படுபவை […]

என்னைப் போல ஒருவன்

புதிய மடி கிடைத்தது புகுந்தோடி தவழ்ந்தேன்; உயரமான தோள்கள் கிடைத்தது உலகை ஏறிப் பார்த்தேன்; பாச விரல்கள் கிடைத்தது பற்றிக்கொண்டேன் பயமின்றி; பைசா காசுகள் கிடைத்தது பையுடன் செலவழித்தேன்; விழாகாலத்தில் சொக்காய் கிடைத்தது விடியவிடிய போட்டுக் கொண்டேன்; பணவாசனையால் சீட்டுகிடைத்தது படித்துப் பட்டம் வாங்கினேன்; வேலைக்கு தேவை வந்தது வெளிநாட்டு குழுமத்தில் சேர்ந்தேன்; மணவறை யோகம் வந்தது மணாலனாக மாலையிட்டேன்; பாசம் வசதிக்கு இடர்தந்தது பணம்கட்டி முதியோரில்லத்தில்விட்டேன்; எனக்கென்று புதுவுறவுகிடைத்தது உத்தமப்புத்திரனுக்கு தந்தையானேன்; அவனுக்கும் பாசம் இடருதோ? […]

கடைசியாக : July 22, 2016 @ 9:48 am