ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

நேரில் கடவுள்

  அறை வாசலில் நிழலாட 'யாரது?" படுக்கையிலிருந்தவாறே கேட்டார் ரங்கசாமி அய்யா.   நடுத்தர வயதுக்காரனொருவன். 'அய்யா நீங்கதானே ரங்கசாமி அய்யா. தமிழாசிரியர்?" கேட்டபடி உள்ளே வந்தான்.   'ஆமாம் நீ யாரு?"   'நான் கலெக்டர் ஆபீஸ்ல இருந்து வர்றேன், கலெக்டர் கோபிநாத் அய்யா அனுப்பிச்சார். போன வாரம் அவர் இந்த முதியோர் இல்லத்திற்கு ஒரு நிகழ்ச்சிக்காக வந்திருந்தப்ப உங்களைப் பார்த்தாராம்,பேசினாராம். அவர் உங்க கிட்டப் படிச்சவராமே? .அவர் இங்க வந்தப்ப நீங்க தங்கியிருக்கற இந்த […]

புகை ஓவியம்

  கிட்டத்தட்ட இருபத்தொன்பது வருடங்களுக்குப் பிறகு பிறந்து வளர்ந்த சொந்த கிராமத்திற்குச் செல்லும் வாய்ப்பு எனக்கு இப்போதுதான் வாய்த்தது. அதற்கும் கூடக் காரணம்  என் ரிடையர்மெண்ட்தான்.    ஈரோட்டிற்கு அருகில் உள்ள சிவகிரி கிராமத்தில் பிறந்து பள்ளி வாழ்க்கையை அங்கும். கல்லூரி வாழ்க்கையை ஈரோட்டிலும் முடித்த எனக்கு உத்தியோகம் சென்னையில் அமைய இருபத்தொன்பது வருடங்களுக்கு முன் இடம் பெயர்ந்தேன்.  அதற்குப் பிறகு கல்யாணம் காட்சியெல்லாம் சென்னையிலேயே முடிந்து குடும்பம் மனைவி குழந்தை ஆபீஸ் என்கிற நடைமுறை யதார்த்தங்களில் […]

குட்டி கதைகள் – 2

  கல்யாணம்   'ஏண்டா திவாகர்….. வயசுக்கு வந்த ரெண்டு தங்கச்சிக கல்யாணத்துக்கு நிக்கும் போது நீ ஒரு பொண்ணைக் காதலிச்சிட்டு 'அதைத்தான் கட்டிக்குவேன் அதுவும் உடனே" ன்னு குதிக்கறியே ஊரே உன்னைக் கேவலமாப் பேசுமேடா!…' தண்டபாணி மாமா கத்தலாய்க் கேட்க,   மெலிதாய்ச் சிரித்தபடி அவரருகே வந்த திவாகர், 'மாமா என்னோட  நிலைமைல நான் சம்பாதிச்சு ரெண்டு தங்கைகளுக்கும் கல்யாணம் பண்றதுங்கறது நடக்காத ஒண்ணு!…அதான் வசதியான கலைவாணியைக் காதலிச்சேன். என்னோட நிலையைச் சொன்னேன் தங்கச்சிக கல்யாணத்துக்கு […]

குட்டி கதைகள்

முதலாளி   செந்தில் மளிகை ஸ்டோர்ஸ் முன் தன் டெம்போவை நிறுத்தினான் குணா.   'பரவாயில்லையே குணா சீக்கிரத்திலேயே வந்திட்டியே!" சொல்லியவாறே கல்லாவிலிருந்து எழுந்து வந்து, குணாவின் தோளைத் தட்டிக் கொடுத்த செந்தில் மளிகை ஸ்டோர்ஸ் முதலாளி முருகேசன், அத்தோடு நில்லாது கடைக்குள் திரும்பி, 'டேய்..நம்ம குணாவுக்கு ஒரு கூல் டிரிங்ஸ் உடைச்சுக் குடுடா!" ஆணையிட்டார்.   பையன் கொண்டு வந்து கொடுத்த கூல் டிரிங்ஸை வாங்கி தானே தன் கையால் குணாவிற்கு கொடுத்து விட்டு, 'நீ […]

கடைசியாக : July 22, 2016 @ 9:48 am