ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

சச்சின் – சின்னஞ்சிறிய கனவினூடே ஒரு சகாப்தம்

சச்சின் – சின்னஞ்சிறிய கனவினூடே ஒரு சகாப்தம்

  பதினாலு வயது பையனாக வான்கடே ஸ்டேடியமில் பந்து பொறுக்கும் பையனுக்கு ஒரு மிகப்பெரிய கனவு. அதே உலகக்கோப்பை மேடையில் தானும் இடம்பெறவேண்டும் என்பதுதான் அது. அக்கால கட்டத்தின் பல சிறுவர்களின் கனவாக அது இருக்கத்தான் செய்தது.     'முட்டிக்கு சற்று மேலே எழும்பிய அந்தப் பந்தை, அவர் கவர் திசையில் ட்ரைவ் செய்ய நினைத்து முன்னேறி, கடைசி நொடியில் மட்டையை விலக்கிக் கொள்ள பந்து கீப்பரின் கைக்கு சென்றது' என்ற கொரகொர ரேடியோ வர்ணனைக்குப் […]

பார்ட்டி, பெட்டிங் பின்னே (Super Bowl) புட்பால்

பார்ட்டி, பெட்டிங் பின்னே (Super Bowl) புட்பால்

கிரிக்கெட் மேட்ச் பார்க்கும் பொழுது பெருங்கடுப்பு ஒவ்வொரு ஓவரின் முடிவிலும் வரும் விளம்பரங்கள்தான். அதுவும் சச்சின் டெண்டுல்கர் அவுட் ஆகி போகும் பொழுது அவர் நடித்த விளம்பரங்களைப் போட்டால் டீவியை உடைத்தால் என்ன என்பது போன்ற ஆத்திரம்தான் நமக்கு வரும். அதிலும் சில அசட்டு விளம்பரங்களைக் கண்டால் இன்னுமே நம் ரத்தக் கொதிப்பு அதிகமாகும். நிற்க. இந்தக் கட்டுரை கிரிக்கெட் பற்றியோ கடுப்பேற்றும் இந்த மாதிரி விளம்பரங்கள் பற்றியோ இல்லை. கவலை வேண்டாம். ஆனால் விளையாட்டு, விளம்பரம் […]

சச்சினா ! சதமா ?!

சச்சினா ! சதமா ?!

January 12, 2012 by · Leave a Comment 

  இன்று கொலைவெறி பாடலுக்கு அடுத்தபடியாக அதிகமாக  பேசப்படும் விஷயம் சச்சின் 100வது சதம் அடிப்பாரா மாட்டாரா! என்ற கேள்விதான். ஐயோ! போதுமடா சாமி! ஊடகங்களும், பத்திரிக்கைகளும் மாறி மாறி போட்டுத் தாக்குவது; கண்டிப்பாக நூறாவது சதம் என்பது சச்சினுக்கு இன்னொரு மைல்கல் என்பதில்  ஒரு துளி ஐயமும் இல்லை. எதிர்பார்ப்பு கூடக் கூட அதுவே அவரை பலவீனப் படுத்திவிடுமோ என்று நினைக்கத் தோன்றுகிறது. என்னதான் அனுபவப்பட்ட வீரராக இருந்தாலும் அவரும் மனிதர்தானே! இத்தனை மக்களின் எதிர்பார்ப்பை […]

அசோசியேட்டுகள் இல்லாத 2015 உலகக் கோப்பை

அசோசியேட்டுகள் இல்லாத 2015 உலகக் கோப்பை

  அடுத்த உலகக் கோப்பை போட்டிகளில் பத்து அணிகள் மட்டுமே இடம் பெறும் என்ற ஐசிசி அறிவிப்பு பெருவாரியான அதிருப்தியைக் கிளப்பி இருக்கின்றது. அது என்ன பத்து நாடுகள், இது ஏன் சில நாடுகளைப் பாதிக்கப் போகிறது என்று பார்ப்பதற்கு ஐசிசியின் கட்டமைப்பை அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.  1909ஆம் ஆண்டு இம்பீரியல் கிரிக்கெட் கான்பரென்ஸ் என்ற பெயரில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா நாடுகளின் பிரதிநிதிகளால் துவங்கப்பட்டதுதான் ஐசிசி. இந்த மூன்று நாடுகள் மட்டுமே அதிகாரபூர்வமான […]

தோனி : கேப்டன்களின் சூப்பர் ஸ்டார்

தோனி : கேப்டன்களின் சூப்பர் ஸ்டார்

கிரிக்கெட் கேப்டன்களின் சூப்பர் ஸ்டார் என்று, கொஞ்சம் அதிகப்படியாக புகழப்படுகிறாரோ என்று தோன்றலாம், ஆனால் மரியாதைகளும், பட்டங்களும் வெற்றியாளர்களுக்கே ! டெஸ்ட் போட்டிகளில் ஐ.சி.சி தர வரிசையில் இந்தியா முதலிடம். முதல் T20 உலக கோப்பையில் இந்தியா சாம்பியன். கடந்த ஆண்டு IPL சென்னை சூப்பர் கிங்க்ஸ் சாம்பியன் தற்போது ஐம்பது ஓவர் உலக கோப்பையில் இந்தியா சாம்பியன்.   இந்த அனைத்து சாதனைகளையும் ஒரே நேரத்தில் தன் வசமாக்கிய பெருமை கேப்டன் தோனியையே சேரும். எளிதில் […]

Worldcup Final – As it happened

Worldcup Final – As it happened

The Match எதிர்பார்ப்புகளைப் பொய்யாக்காமல் நியூசிலாந்தை வீழ்த்திய இலங்கை அணி ஒரு புறம். தொடர்ந்து பாகிஸ்தானை உலகக் கோப்பை போட்டிகளில் வீழ்த்திய இந்திய அணி மறுபுறம். தொடக்கம் முதலே நன்றாக ஆடி வரும் இலங்கை அணி. மிக சாதாரணமாகத் தொடங்கினாலும் தேவைப்பட்ட பொழுதெல்லாம் தனது ஆட்டத்தின் தரத்தை உயர்த்திக் கொண்ட இந்திய அணி என்று சமமான இரு அணிகள் மோதும் ஆட்டம். முரளிக்காக இலங்கை அணியும் சச்சினுக்காக இந்திய அணியும் கோப்பையை வெல்ல வேண்டும் என்று இரு […]

பவர் ப்ளே – சில சிந்தனைகள்

பவர் ப்ளே – சில சிந்தனைகள்

  20-20 ஆட்டங்கள் வந்த பின் 50 ஓவர் ஆட்டங்களின் மவுசு குறைய ஆரம்பித்தது. aaஇதில் சுவாரசியத்தைக் கூட்ட செய்த மாற்றங்களில் ஒன்றுதான் பவர்ப்ளே. பவர்ப்ளே மூன்று கட்டங்களாக ஆட்டத்தில் வருகின்றன. ஒரு அணி பேட்டிங் செய்யும் பொழுது முதல் பத்து ஓவர்களில் 30 யார்ட் வட்டத்திற்கு வெளியே இரண்டு ஆட்டக்காரர்கள் மட்டுமே பீல்ட் செய்ய முடியும். அது தவிர இருவர் கட்டாயமாக பேட்ஸ்மன் அருகே கேட்ச் பிடிக்கும் நிலைகளில் இருந்து பீல்டிங் செய்ய வேண்டும் என்பதும் […]

உலகக் கோப்பை – இனி….

உலகக் கோப்பை – இனி….

  இது வரை நடந்ததைப் பற்றி எளிதாகப் பேசியாகி விட்டது. இனி கணிப்பு. அரையிறுதிக்கு முன்னேறி இருக்கும் நான்கு அணிகளுமே வெல்லும் வாய்ப்பை உடையவைதான். இருந்தாலும் ஒவ்வொரு அணியின் நிறைகுறைகளைப் பார்த்து எந்த அணி வெல்லும் வாய்ப்புகள் அதிகம் என்று பார்க்கலாம். முதலில் நியூசிலாந்தும் இலங்கையும் மோதும் ஆட்டம். இதுவரை நடந்த ஆட்டங்களை வைத்துப் பார்த்தால் இலங்கை அணி ஜெயிக்கும் வாய்ப்பே அதிகம். ஆனால் பாகிஸ்தானோடும் சரி, தென்னாப்பிரிக்காவோடும் சரி, இதே நிலமையில் இருந்த நியூசிலாந்துதான் வெற்றி […]

உலகக் கோப்பை – இது வரை

உலகக் கோப்பை – இது வரை

நம் அரசியல்வாதிகள் எப்பொழுதும் சொல்லும் நீண்ட நெடும் பயணம் மாதிரி ரொம்ம்ம்ம்ப நாளா இந்த லீக் ஆட்டங்கள் நடந்து கொண்டே இருந்தது. அதுவும் ஒவ்வொரு க்ரூப்பிலுமே எந்த நாலு அணிகள் காலிறுதிப் போட்டிகளுக்கு முன்னேறப் போகின்றன என்று முதலிலேயே தெளிவாகத் தெரிந்த ஒன்றாகிப் போன பின் சிறிதும் சுவாரசியமே இல்லாத ஆரம்பம்தான் இந்த உலகக் கோப்பைக்கு. வெகு சில ஆட்டங்களே இதற்கு விதிவிலக்காக அமைந்தன. அயர்லாந்தும் நெதர்லாந்தும் பங்களாதேஷும் கூட சில நல்ல ஆட்டங்களை விளையாடினாலும் தொடர்ந்து […]

இந்தியக் கிரிக்கெட் கடந்த 10 ஆண்டில்

இந்தியக் கிரிக்கெட் கடந்த 10 ஆண்டில்

  சூதாட்டத்தில் தனது பெயரையும் பொலிவையும் இழந்த கிரிக்கெட், தனது சந்தைப்படுத்தலின் மூலம் வேகம் விறுவிறுப்பின் வழியாக  அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது இந்த 2001 – 2010 தசாப்தத்தில்தான். கண்ணியமிக்க கதாநாயகர்களின் ஆட்டம் என்ற தேன்கூடு கல்லெறிந்து கலைக்கப்பட்டபின்னர் குறிப்பாக இந்தியக் கிரிக்கெட்டை மீள் உருவாக்கம் செய்தவர்கள் தங்களை நிலைப்படுத்திக் கொண்டதும் இந்த பத்தாண்டுகளில் தான். உலகம் என்றால் அமெரிக்கா என இருப்பதைப்போல ஒரு காலத்தில் கிரிக்கெட் என்றால் இங்கிலாந்து என்ற மாயையை இந்தியா உடைத்ததும் […]

Next Page »

கடைசியாக : July 22, 2016 @ 9:48 am