ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

ஸ்ரீ முருகன் – புதிய புத்தகம்

ஸ்ரீ முருகன் – புதிய புத்தகம்

அழகிய முருகனைப் பற்றி புதிய புத்தகம் ஒன்று வெளியாகியுள்ளது. “Sri Muruga". இதை எழுதியவர் ராகுல் கபடே. பூனாவில் பிறந்து – பெங்களூரில் படித்து – அமெரிக்காவிற்கு குடியேறி தற்போது யுகேவில் மென்பொருள் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டவர்.   முருகனின் அறுபடை வீடு – முருகனை வழிபடும் முறை அவரில் பல்வேறு பெயர்களின் சரியான உச்சரிப்பு ஆகியவற்றை விளக்குகிறார். முருகனை கந்தா என்றும் அழைக்கிறோம். அவ்வாறு ஏன் அழைக்கிறோம் என்பதை […]

உளவுக் கோப்பை கிரிக்கெட்

  எண்பதுகளின் மத்தியில் தொடங்கி கிட்டத்தட்ட தொண்ணூறுகளின் இறுதிவரை நம்மூரில் சக்கைப் போடு போட்டவை பாக்கெட் நாவல்கள். மாத நாவல்கள், மாதமிருமுறை நாவல்கள் என புத்தகக் கடைகளில் முன்னணியில் நின்று அலங்கரித்தவை இந்த பாக்கெட் நாவல்கள். நிறைய பதிப்பகங்கள், புற்றீசல் போல் நிறைய நாவல்கள் வந்தாலும் ஜீயே பப்ளிகேஷன்ஸின் அசோகன் இந்தப் புத்தகங்களை வெளியிட்டவர்களுள் சூப்பரிலும் சூப்பர் ஸ்டார்.   ராஜேஷ்குமார், பிகேபி, சுபா இவர்கள் அந்த காலகட்டத்தின் சூப்பர் ஸெல்லர்கள். பிற்காலத்தில் பாலகுமாரனும் இந்தக் களத்தில் […]

காமசூத்ரா

காமசூத்ரா

July 10, 2012 by · Leave a Comment 

  காமசூத்ரா. உலகம் முழுவதும் கொண்டாடப்படும் எந்த ஒரு புத்தகத்திற்கும் இப்படி ஒரு பொருத்தமில்லாத பெயர் இருக்குமா எனத் தெரியவில்லை.    மனமும் மூளையும் சேர்ந்து, தொடுதல், கேட்டல், சுவைத்தல், நுகர்தல், பார்த்தல் ஆகிய ஐம்புலன்களின் உதவியோடு ஆனந்தம் அடைவதே காமம். ஆனந்தம் தருவதும், ஆனந்தம் பெறுவதும் ஒன்றோடு ஒன்று இணைய, அவை இணைகின்றன என்ற உணர்வும் அந்த சங்கமத்தின் காரணமாக வரும் குதூகலமே காமம் என்று வாத்சாயனர்  விளக்கம் சொல்கிறார். சுருக்கமாக காதல் கூடல் உடலுறவு […]

மொஸாட் – புத்தக விமர்சனம்

மொஸாட் – புத்தக விமர்சனம்

இயேசு கிறிஸ்துவின் காலத்திலிருந்தே யூதர்களைச் சுற்றி வரும் ஒரு சாபத்தைப் பற்றி சிலர் பேசக் கேட்டிருக்கிறேன். தங்களுக்கென துண்டு நிலம் இன்றி யூதர்கள் திண்டாடுவார்கள் என்பதுவே அது. இன்று இஸ்ரேல் என்ற யூதர்களுக்கான தேசம் உருவாகி இருந்தாலும் அவர்களைச் சுற்றி ஆயிரம் பிரச்னைகள் சூழ்ந்து நிற்கின்றன. இயேசு கிறிஸ்துவின் வரலாறிலேயே கூட யூதர்களை இயேசுவிற்கு எதிரான ஆளுமைகளாகப் பார்க்கிறோம்.    ஹிட்லர் காலத்தினில் யூதர்கள் கூட்டம் கூட்டமாகக் கொன்று அழிக்கப்பட்டதனை இந்த உலகம் அறியும். இப்போது சமீபத்தில் […]

அப்பத்தா: உண்மையும் உணர்ச்சியும்

  சென்ற ஞாயிறு சென்னை ஆழ்வார்பேட்டை ரஷ்யன் கல்ச்சுரல் செண்டரில் நடந்த பாரதி கிருஷ்ணகுமாரின் இரண்டு நூல்களின் வெளியீட்டு விழாவுக்குச் சென்றிருந்தேன். பாரதி கிருஷ்ணகுமாரை எனக்கு பல ஆண்டுகளாகத் தெரியும். என்னுடைய குட்டியாப்பா சிறுகதை நூல் வெளியீட்டு விழா ஆம்பூர் கல்லூரியில் நடந்தபோது அவர் வந்து பேசியுள்ளார். அப்போது நான் அவரை நெருக்கமாக அறிந்துகொள்ளவில்லை. ஆனால் அவரது உயரமும், அழகிய தோற்றமும், வசீகரமான பேச்சும், கம்பீரமான குரலும் யாரையும் வசீகரிக்கும்.    சமீபகாலமாகத்தான் அவரை நான் கொஞ்சம் […]

அண்ணா ஹசாரே – ஊழலுக்கெதிரான காந்தியப் போராட்டம்

அண்ணா ஹசாரே – ஊழலுக்கெதிரான காந்தியப் போராட்டம்

  ஜெயமோகனின் ஒரு புதிய புத்தகம் வெளிவந்ததுமே அதைப் படித்து முடிப்பது எனக்குப் புதியதல்ல. 97-98 வாக்கில் விஷ்ணுபுரம் படித்தபோது தொற்றிக்கொண்ட வேகம். என் ரசனையில் பல எழுத்தாளர்கள் பின்னுக்குப் போவதும், முன்னுக்கு வருவதுமாக இருக்க, ஜெயமோகன் மட்டும் எப்போதும் பெரிய பிரமிப்பாகவே எனக்குள் மிஞ்சி நிற்பது பெரிய ஆச்சரியம்தான்.  இணையத்தில் ஜெயமோகன் எழுதத் துவங்கியதுமே, அது சரியான செயல் என்று நினைத்தேன். அப்போதே அவரிடம் சொன்னதாகவும் நினைவு. இன்று இணையத்தின் வழியாக ஜெயமோகன் எழுதிக் குவிப்பதைப் […]

விளையாட்டாய் எழுதலாம் வெண்பா

விளையாட்டாய் எழுதலாம் வெண்பா

  பள்ளியில் யாப்பிலக்கணம் சொல்லிக் கொடுத்தது மகாதேவன் சாரா, கிருஷ்ணப்பாவா என்று சரியாக நினைவில்லை. ஆனால் எனது அண்ணனுக்கு வகுப்பெடுத்த டிவிஆர் சார் ஈற்றடியெல்லாம் கொடுத்து வெண்பா எழுதி வாருங்கள் என்று மாணவர்களுக்கு ஹோம் வொர்க் கொடுப்பார். பசங்களும் மாய்ந்து மாய்ந்து வெண்பா எழுதிக் கொண்டு போவார்கள். அண்ணனுக்கு உதவுகிறேன் பேர்வழி என்று நானும் கொஞ்சம் தேமா, புளிமா எல்லாம் கடித்து சுவைத்தேன். பிறகு இணையத்தில் வந்துதான் எதுகை மோனை, செப்பலோசை, அகவலோசை எல்லாம் அறிந்து கொண்டது. […]

கடைசியாக : July 22, 2016 @ 9:48 am