ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

‘ஈமு’த் தாய்

‘ஈமு’த் தாய்

  தேர்தல் சமயத்தில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக (?!) குரல் கொடுத்து ‘ஈழத் தாய்’ என்ற பட்டம் பெற்ற தமிழக முதல்வர் இப்போது அநாதையாக விடப்பட்டுள்ள ஆதரவற்ற ஈமுக் கோழிகளைக் காப்பாற்றுவதற்காக ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதி அளித்துள்ளார். இனிமேல் ‘ஈமுத் தாய்’ என்று அவரை தாராளமாக போற்றி மகிழலாம்.   ஈமுக் கோழி ஃப்ராடுகள் ‘உள்ளே’ தள்ளப்பட்டிருக்கிறார்கள். ஏற்கனவே வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஃபைனான்ஸ் கம்பெனிகள் லிஸ்ட்டில் ஈமுவையும் சேர்த்து விட வேண்டியது தான். […]

ஈமு திட்டமா ? இவா திட்டமா ?

ஈமு திட்டமா ? இவா திட்டமா ?

  சுமார் பத்து, பதினைந்து வருடங்களுக்கு முன்பாக சென்னை பனகல் பார்க் பக்கம் போனால் நூற்றுக்கணக்கான பெரிசுகள் கும்பலாக நின்று கொண்டிருப்பார்கள். நடுவே ஒரு ஸ்டூலைப் போட்டு ஏறி நின்று ஒரு வாலிப வயோதிக அன்பர், “…ஆகவே, அரசாங்கம் அந்தக் கயவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கையை நாம் வைப்போம். நாமும் தொடர்ந்து போராடுவோம்” என்று புலம்பிக் கொண்டிருப்பார். எல்லோருமே தங்கள் கையிலிருந்து முழு சேமிப்பு, ரிடையர்மெண்ட் தொகை, வூட்டம்மாவின் நகை என அனைத்தையும் […]

பில்லா 2, புஸ்வானமா ?

பில்லா 2, புஸ்வானமா ?

  நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் தொடருகிறேன்..   நடுவில் எங்கேடா ஆளைக் காணோம் என்று தேடிய பல்லாயிரக்கணக்கான…. சரி.. சரி… ஆயிரக்கணக்கான…. அதுவுமில்லையா? சரி… தேடியவர்களுக்கும், தேட மறந்தவர்களுக்கும் நன்றி பல!   வெஜிடேரியன், நான்-வெஜிடேரியன் அப்படீன்னு இருந்த ரெண்டு வகைகள் கலிகாலத்தில் பரிணாம வளர்ச்சி அடைந்து வெஜிடேரியன், ப்யூர்-வெஜிடேரியன், எக்கிட்டேரியன், நான்-வெஜிடேரியன் என்றெல்லாம் ஆகியிருக்கின்றன. இதிலேயே கூட, “நான் சிக்கன் மட்டும் தான் சாப்பிடுவேன். மத்ததெல்லாம் இல்லை” என்று சொல்பவர்களும் உண்டு. ஆட்டையும், மாட்டையும் […]

சேனல் – 4 வீடியோ #Killingfields

சேனல் – 4 வீடியோ #Killingfields

  இங்கிலாந்தில் சேனல்-4 ஒளிபரப்பிய இலங்கை படுகொலை வீடியோ காட்சிகள் வழக்கம் போல உலக அளவில் அதிர்வலைகளை எழுப்பியுள்ளன.   நம் தாய்த் தமிழகத்தில் மட்டும் பெரிய அளவில் பரபரப்பு இல்லை.   மக்களுக்கு கவலைப்பட மின்வெட்டு, அதனால் ஏற்படும் தொலைக்காட்சி சீரியல் பார்க்க முடியாத கொடூரம், சங்கரன்கோவில் தேர்தல் என பல ஜீவாதாரப் பிரச்னைகள் இருக்கின்றன. இதையெல்லாம் மீறி கூப்பிடு தொலைவில் உள்ள இலங்கைத் தமிழர்களின் பிரச்னையை காது கொடுத்து கேட்பதில் என்ன வந்து விடப் […]

‘சாணக்கியர்’ கருணாநிதிக்கு என்ன ஆச்சு?

‘சாணக்கியர்’ கருணாநிதிக்கு என்ன ஆச்சு?

February 16, 2012 by · 1 Comment 

முதலமைச்சரும், எதிர்கட்சித் தலைவரும் சட்டசபையிலேயே கிட்டத்தட்ட நேருக்கு நேர் மோதிக் கொண்டிருக்கிறார்கள்.    நாக்கை மடக்கி, விரலை உயர்த்தி தனது படங்களின் க்ளைமாக்ஸ் காட்சிகளுக்கு சற்றும் தொய்வில்லாமல் விஜயகாந்த் சட்டமன்றத்தில் கோபப்பட்டு டிஸ்மிஸ் ஆகி வந்திருக்கிறார்.   பக்கத்திலேயே வாயைப் பிளந்தவாறு உட்கார்ந்து பார்த்து விட்டு அடுத்த நாள் வெளிநடப்பு செய்திருக்கிறார்கள் ஸ்டாலினும், துரைமுருகனும் இன்ன பிற கொஞ்ச நஞ்ச திமுக எம்.எல்.ஏ.க்களும்!   சரி.. வெளியில் இதான் சாக்கு என்று புகுந்து விளையாடும் முன்னாள் அரசியல் […]

குஜராத்தையும், தமிழகத்தையும் மத்திய அரசு வஞ்சிக்கிறது

குஜராத்தையும், தமிழகத்தையும் மத்திய அரசு வஞ்சிக்கிறது

  ’குஜராத்தையும், தமிழகத்தையும் மத்திய அரசு வஞ்சிக்கிறது’ என்று சென்னை துக்ளக் விழாவில் வந்து கர்ஜித்து விட்டுச் சென்றிருக்கிறார் மோடி.   மாற்றாந்தாய் மனப்பான்மை என்பது மத்திய அரசுகளுக்கு ஆரம்பம் காலம் தொட்டே இருந்து வருகிறது. வேறு வழியில்லாமல் அவர்களுடைய அரசமைக்க அவர்களுடைய சிண்டு நம்மாட்களின் கையில் மாட்டும் போது தான் நாம் சொல்வதற்கெல்லாம் ‘பூம் பூம்’ மாடு போல தலையாட்டுகிறார்களே தவிர, ஏனைய சமயங்களில் அவர்களுக்கு நம்மவர்கள் என்றால் இளக்காரம் தான்!   நாமும் அப்படி […]

‘உடன்பிறப்புகள்’ ஜாக்கிரதை

‘உடன்பிறப்புகள்’ ஜாக்கிரதை

  தமிழக அரசு அண்மையில் உயர்த்திய பேருந்துக் கட்டணத்தை ரத்து செய்யக் கோரி சில வழக்கறிஞர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கின்றனர்.   ”கடைசியாக 2001-ம் ஆண்டு தான் தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது. அதன் பிறகு  டீசல் விலை 137 சதவிகிதமும், உதிரி பாகங்களின் விலை 180 சதவிகிதமும் உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசு போக்குவரத்து கழகத்திற்கு 6,154 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் அண்டை மாநிலங்களான […]

’மக்கள் சேவகர்’ சகாயம்

’மக்கள் சேவகர்’ சகாயம்

தினந்தோறும் நள்ளிரவு இரண்டு மணியாகிறது அவர் உறங்கச் செல்வதற்கு!   அது வரையில் மலை போல குவிந்து கிடக்கும் கோப்புகளை ஒவ்வொன்றாக பார்வையிடுகிறார். கையெழுத்திடுகிறார்.   எந்த ஒரு கோப்பும் தன் பார்வைக்கு வந்து விட்டே செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார்.   மறுநாள் காலை ஆறு மணிக்கெல்லாம் மீண்டும் நடைபயிற்சி, யோகா என்று சுறுசுறுப்பாக ஆரம்பித்து விடுகிறார்.   ”எப்பவாச்சும் அவரு தூங்குவாருங்களா?” – கேட்கிறார்கள் ஆட்சியர் அலுவலக கடைநிலை ஊழியர்கள்.   அவர் தான் […]

Goodbye – 2011

Goodbye – 2011

  கடந்த ஆண்டு பல ஆச்சரியங்களையும், பல அதிர்ச்சிகளையும், பல பிரமிப்புகளையும், பல தடைகளையும், பல போராட்டங்களையும், பல திகைப்புகளையும், பல திருப்திகளையும், பல கவலைகளையும், பல ஆதங்கங்களையும் உருவாக்கிச் சென்றுள்ளது.   தமிழகத்தைப் பொறுத்த வரையில் அரசியல் மாற்றம் நிகழ்ந்தேறியது. ‘எங்களை எதுவும் செய்ய முடியாது’ என்ற இருமாப்புடன் இருந்த ஆட்சியாளர்களை துச்சமென மதித்து தூர எறிந்து விட்டார்கள் மக்கள். காசு கொடுத்தால் எதையும் வாங்கலாம் என்ற எண்ணத்தை தவிடு பொடியாக்கிவிட்டார்கள்.    பெரும்பான்மை பலத்துடன் […]

சனிப்பெயர்ச்சி யாருக்கு ?

சனிப்பெயர்ச்சி யாருக்கு ?

நேர்மைக்கு பெயர் பெற்ற அதிகாரி சகாயம். மதுரை மாவட்ட ஆட்சியராக இருக்கிறார். ஒரு அரசு ஊழியர் எப்படியெல்லாம் கை சுத்தமாக இருப்பதோடு, தனக்கான பணியை செவ்வனே செய்து மக்களுக்கு அதிகபட்ச நன்மை புரிய முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு சகாயம்.   போன ஆட்சியின் போது நாமக்கல்லில் மாவட்ட ஆட்சியராக பணி புரிந்த போது அவர் எடுத்த பல அதிரடி நடவடிக்கைகளால் ஆளும் கட்சியினர் சிலரும் சரி, அரசு அதிகாரிகள் பலரும் சரி.. அவர் மீது படுபயங்கர கடுப்புக்கு […]

Next Page »

கடைசியாக : July 22, 2016 @ 9:48 am