ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு

சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு

தற்பொழுது இந்தியா முழுவதும் கடையடைப்புக்கள். போராட்டங்கள் மத்திய மந்திரிகள் ராஜினாமாவென்று நாளொரு பொழுதும் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன.  காரணம். மத்திய அரசின் புதிய பொருளாதாரக் கொள்கைதான். சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு 51% வரை இருக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்து விட்டது.  இதனால் மக்கள் பெறப் போகும் நன்மையென்ன?   விவசாயிகள் தங்கள் பொருள்களை தரகர்கள் மூலம் விற்க வேண்டாம்.  நேரடியாகவே இந்த அங்காடிகள் விவசாயிகளிடமிருந்து விளைபொருட்களைக் கொள்முதல் செய்யும். இடைத்தரகர்கள் இல்லாததால் நல்ல விலைக்கு விவசாயிகள் விற்க […]

இலவச தேர்தல்

இலவச தேர்தல்

March 25, 2011 by · 2 Comments 

தி.மு.க., – அ.தி.மு.க. இரு கட்சிகளுமே அடுத்து ஆட்சியைப் பிடிக்கும் முயற்சியில் அரிசி, மின்விசிறி, மிக்சி, கிரைண்டர், லேப்-டாப், மானியம் என இலவசங்களை தங்கள் தேர்தல் அறிக்கையில் அள்ளி விட்டுள்ளன. ஆனால் இந்த இலவசங்கள் நம்மை எங்கே அழைத்து செல்லப்போகின்றன?  தமிழகத்தின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் கட்சிகளாக கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக இயங்கி வருபவை தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும். ஆனால் அந்தக் கட்சிகளே தங்களை நம்பாமல் இலவசங்களை நம்பித் தான் களமிறங்குகின்றன. இரண்டு நாட்களுக்கு முன்பு தேர்தல் அறிக்கை […]

மகர ஜோதி பித்தலாட்டம்

மகர ஜோதி பித்தலாட்டம்

  இந்த ஆண்டு மகர ஜோதி தரிசனத்திற்காக சென்றிருந்த இருந்த பக்தர்கள் அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் அகப்பட்டுக் கொண்டு நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அகால மரணமடைந்து இருக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் பொங்கலன்று காணப்படும் மகர ஜோதியைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் அன்று காலை முதலே காத்துக் கிடப்பது வழக்கம். இந்த ஜோதி  ஸ்வாமி ஐயப்பனுக்கு தேவர்கள் எடுக்கும் கற்பூர ஆரத்தியென்றும், ஒரு நம்பிக்கை உண்டு. இன்னும் சிலர் அன்று வானத்தில் தோன்றும் அதிசய ஜோதியென்றும் நம்பிக்கை வைத்துள்ளனர். […]

தரம் தாழ்ந்து அரசியல் நடத்தும் கருணாநிதி

தரம் தாழ்ந்து அரசியல் நடத்தும் கருணாநிதி

  இந்த 2G  ஸ்பெக்ட்ரம் குறைபாடுகள் வந்தாலும் வந்தது, பத்திரிகைகளில் இதைத்தவிர வேறெந்த செய்திக்கும் முக்கியத்துவம் இல்லை. இதுவரையில், கண்டறியாத, கேள்விப் படாத முறைகேடுகள் காணப்படுகிறன. இந்த முறைகேட்டில் திமுகவிற்கும், காங்கிரசுக்கும் பெரும் பங்கு உண்டு என்று பரவலாகப் பேசப்படுகிறது. சுப்பிரமணிய ஸ்வாமியும் அவர்களின் விகிதாச்சாரப் பங்கை தொலைக்காட்சியில் கூறியிருக்கிறார்.  இந்தியப் பிரதமர் தன் மௌன விரதத்தைக் கலைக்கவே இல்லை.  கடந்த 21 நாட்களாக நாடாளுமன்றம் முடங்கிப்போய் உள்ளது.  எந்த அலுவலும் நடைபெறவில்லை. எதிர்க் கட்சிகள் JPC […]

ஆரிய – திராவிட யுத்தம்

ஆரிய – திராவிட யுத்தம்

தமிழக முதலமைச்சர் கலைஞர்  வேலூரில் 27-11-2010 ல் நடந்த பொதுக் கூடத்தில் நாட்டு மக்களை மேற்கண்ட யுத்தத்திற்குத் தயாராக இருக்கும்படி அறை கூவல் விடுத்துள்ளார்.   ஸ்பெக்ட்ரம் முறையீடுகளில் சிக்கியுள்ள முன்னாள் தொலைத் தொடர்பு அமைச்சர் " தலித்" என்பதால்தான் எதிர்க்கட்சிகள் JPC  வேண்டுமென்று போராடுபவதாக முறையிட்டுள்ளார். முன்னாள் நிதி அமைச்சர் மறைந்த T.T. கிருஷ்ணமாச்சாரி மீது எழுந்த முந்திரா ஊழல் வழக்கில் அவர் பதவியை ராஜினாமாச் செய்தவுடன் எதிர்க்கட்சிகள் அடங்கிவிட்டதாகவும்  JPC  வேண்டுமென்று பிடிவாதம் காட்டவில்லை என்றும் […]

தி.மு.க. வின் காவலன் காங்கிரஸ்

தி.மு.க. வின் காவலன் காங்கிரஸ்

  ஒரு வழியாக தொலைத் தொடர்பு அமைச்சர் ராசா தன்னுடைய ராஜினாமாக் கடிதத்தை பிரதம மந்திரியிடம் கொடுத்துள்ளார். இவர் ராஜினாமச் செய்ததினால் மட்டும் பிரசனைகள் முடிவுக்கு வரவில்லை. எதிர்க் கட்சிகளுக்கு  இது ஊழலுக்கெதிரான முதல் வெற்றிதான்.  இதில் யாரெல்லம் சம்மந்தப் பட்டுள்ளார்கள், யார் யாருக்கு எவளவு பங்கு சென்றது போன்றவைகளெல்லாம் வெளிச்சத்திற்கு வந்தாக வேண்டும்.  இதற்காக எதிர்க் கட்சிகள்  J.P.C ( Joint Parliament Committee) அமைத்து அதன் மூலமாக விசாரிக்க வேண்டுமென்று போராட்டம் நடத்துகின்றனர். கடந்த […]

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியும் இந்தியாவும்

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியும் இந்தியாவும்

உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் விளையாட்டுப் போட்டிகள் அடுத்த மாதம் அக்டோபரில் தொடங்க இருக்கிறது.  இந்த விளையாட்டுப் போட்டிகளை இந்த முறை நடத்துபவர்கள் நாம்தான்.  அதுவும் நமது தலைநகர் டெல்லியில்.  ஏசியாட் 82 – வை நாம் சிறப்புடன் நடத்தி முடித்தோம்.  அதே எதிபார்ப்புத்தான் எல்லோருக்கும் இருந்தது. ஆனால் எதிபார்ப்புக்கள் பொய்த்துவிடும் போல் இருக்கிறது.  இன்னும் விளையாட்டுத் திடல்கள், வீரர்கள் தங்கும் கேம்ஸ் வில்லேஜ் ஆகியவைகள்  முழுமை பெறவில்லை.  முழுமையாக மின் வசதி, தண்ணீர் வசதிகள் ஆகியவை செய்து […]

செஸ் விளையாட்டு வீரர் ஆனந்த் இந்தியரா?

செஸ் விளையாட்டு வீரர் ஆனந்த் இந்தியரா?

மனித மேம்பாட்டுத் துறை அமைச்சகத்திற்கு இப்படி ஒரு சந்தேகம் வந்திருக்கிறது.  அதுவும் எப்போது? அவருக்கு ஹைதராபாத் பல்கலைக் கழகம் டாக்டரேட் பட்டம் கொடுக்கும்போது, நான்கு முறை சாம்பியன் பட்டம் பெற்ற ஆனந்த் இந்தியரா என்ற சந்தேகம் வந்ததால் பட்டமளிப்பு விழா தள்ளிப் போடப்பட்டுள்ளது. அவருக்கு ஸ்பெயினில் சொந்தமாக வீடு இருக்கிறது.  ஐரோப்பிய நாடுகளில் செஸ் போட்டிகள் அதிகம் நடப்பதால் அவர் அங்கு அடிக்கடி சென்று தங்குவது வழக்கம். அதனால் அவருடைய குடியுரிமை பற்றிய சந்தேகம் அமைச்சகத்திற்கு எழுந்துள்ளது. […]

சென்னை விமான நிலையம்

சென்னை விமான நிலையம்

இன்றைக்கு சென்னை விமான நிலையத்தை உபயோகிக்கும் பயணிகளின் எண்ணிக்கை இந்தியாவிலேயே மூன்றாவதாக இருக்கிறது.  அதேபோல் சரக்குகளைக் கையாளுவதில் மும்பைக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருக்கிறது. எதிர்காலத்தை முன்னிட்டு, தற்போதுள்ள விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டு அருகிலுள்ள கிராமங்களிலுள்ள நிலங்களை எடுத்துக் கொள்ள முயற்சிசெய்யப்பட்டபோது பலத்த எதிர்ப்புக் காணப்பட்டது.  அதன் காரணமாக அந்த முயற்சி கைவிடப்பட்டு 2007-ல் சர்வ கட்சிக் கூட்டம் முதலமைச்சர் தலைமையில்  நடந்தது.  அதில் ஸ்ரீ பெரும்புதூரில் ஒரு புதிய விமான நிலையம் […]

அன்புமணியின் தமிழ்நாட்டு பற்று

அன்புமணியின் தமிழ்நாட்டு பற்று

சமீபத்தில் மாஜி மந்திரி திரு. அன்புமணி ராம்தாஸ் அவர்கள் ஒரு பொன் மொழி உதிர்த்துள்ளார். தமிழ் நாட்டில் உள்ள காவிரியையும், வைகையையும் இணைக்க முயற்சித்தால் அதை அவர் எதிர்ப்போம் என்று கூறியுள்ளார். காரணம் காவிரி வடதமிழ்நாட்டு நதியாம். வைகை தென் தமிழ்நாட்டு நதியாம். வட தமிழ் நாட்டுத் தண்ணீர் தென் தமிழ்நாட்டுக்குச் செல்லக் கூடாதாம். என்னே இவர்களின் தமிழ்ப் மொழிப்பற்று, தமிழ் நாட்டுப் பற்று  மற்றும் இன உணர்வு ! இவ்வேஷதாரிகள் பேசுவது தமிழ் நாட்டு உயர்வு […]

Next Page »

கடைசியாக : July 22, 2016 @ 9:48 am