ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

கபாலி – விமர்சனம்

கபாலி – விமர்சனம்

தமிழ் திரையுலக வணிகத்தில் ‘குறைந்தபட்ச உத்தரவாதம்’ தரவல்ல நட்சத்திரமாக ஒருகாலத்தில் கோலோச்சியவர் எம்ஜியார் என்பார்கள்.  அவருடைய பெயரிலிருக்கும் முதலெழுத்துக்களை ‘மினிமம் கியாரெண்டி’ என்று அடையாளபடுத்துவதாகவும் சொல்வார்கள்.  அவருக்கு பின்னால் அத்தகையதொரு வணிக உத்தரவாதத்தை பெருமளவு சாத்தியப்படுத்தியவர் ரஜினிகாந்த்.  அதுவும் அதிகபட்ச வணிக உத்தரவாதம் கொடுக்க வல்ல ஈர்ப்பு கொண்ட உச்ச நட்சத்திரம் அவர்.  ஆனால் அதற்கான விலையாக அவர் நடிக்கும் படங்களின் கதைகள் ஒருக் குறிப்பிட்ட சட்டகத்திற்குள்தான் அடங்கவேண்டும்.  அவருடைய பாத்திர அமைப்புகள் எப்போதும் பெரும் சவாலை […]

செம்புலம் – குறும்படம்

செம்புலம் – குறும்படம்

Another NJ made movie directed by CJIF member Raja IlaMurugu, featuring one of NJs talented Mohan Raman had made it to the top 5 international entries in Radaan SHORT FILM Festival. Story : Sathyarajkumar   தொடர்புடைய படைப்புகள் :தொடர்புடைய படைப்புகள் எதுவும் இல்லை !

உன் காலடி ஓசையிலே

உன் காலடி ஓசையிலே

சின்ன விஷயங்களுக்கு கூட தன் கணவனையே நம்பி (அமெரிக்காவில்) வாழும் ஒரு இந்தியப் பெண்ணின் கதை. தொடர்புடைய படைப்புகள் :தொடர்புடைய படைப்புகள் எதுவும் இல்லை !

ஐ விமர்சனம்

ஐ விமர்சனம்

‘ஐ’ படம் ஓடும் அத்தனை திரையரங்குகளிலும் இன்று நல்ல கூட்டம். ஷங்கர் என்ற பெயரும் விக்ரம் என்ற பெயரும் செய்யும் மேஜிக் இது. வழக்கமாக எழுத்துப் போட ஆரம்பிக்கும் போதே படத்தையும் ஆரம்பித்து விடுவார் ஷங்கர். அப்படியான ஆரம்ப காட்சிகள் கதாநாயகனையோ, கதைக்களத்தையோ நமக்கு அறிமுகம் செய்து நம்மை படத்திற்குள் இழுத்துக் கொள்ளும். ‘ஐ’யிலும் எழுத்துப் போடும் போதே படமும் தொடங்கி விடுகிறது. ஆனால் வழக்கமான அறிமுக காட்சிகளுக்குப்பதிலாக ஒரு விறுவிறுப்பான காட்சியை வைத்து நம்மை எல்லாம் […]

கத்தி இசை – ஒரு பார்வை

கத்தி இசை – ஒரு பார்வை

October 16, 2014 by · Leave a Comment 

விஜய் – முருகதாஸ் – அனிருத் என்று பெரிய எதிர்பார்ப்பை கிளப்பினாலும், இதுவரை கொஞ்சம் கொஞ்சம் கேட்டிருந்த செல்ஃபி புள்ள, அப்புறம் செல்ஃபி புள்ள டைப்புலயே ஒரு ஹிந்தி பாட்டு, அந்த ராப் பிகினிங் வர்ற பாட்டு இதெல்லாம் வெச்சு கொஞ்சம் காதுக்கு கத்தியான ஆல்பமுன்னு ஒரு எண்ணம் இருந்தது. ஆனா, இன்னிக்கு நிதானமா கேட்டப்ப பாடல்கள் ரொம்ப unconventionalஆ பட்டுது. எனக்கு தெரிஞ்சு எந்த பாட்டுமே ரெகுலர் பல்லவி – இண்டர்ல்யூட் – சரணம் ஃபார்முலாவில […]

அஞ்சான் – விமர்சனம்

அஞ்சான் – விமர்சனம்

கன்னியாகுமரிலேர்ந்து பெட்டி எடுத்துட்டு வரும் தம்பி சூர்யா காணாம போன அண்ணனைத் தேடி மும்பைக்கு வர்றார். அப்போ அண்ணன் சூர்யாவை ஒவ்வொரு விலாசத்திலும் தேடி விசாரிக்க, அண்ணனைப் பத்தி ரசிகர்களாகிய நமக்கு சாதா அண்ணன் இல்ல, தாதா அண்ணன் ராஜூபாய்னு நிறைய பில்ட்–அப் கொடுக்கிறாங்க. கொஞ்சம் கொசுவர்த்திச்சுருள் எல்லாம் போட்டு பிளாஷ்பேக்கும் காட்டறாங்க. அண்ணனுக்கு ஒரு நெருங்கின தோழன், தாதா பிரண்ட் டாக்டரா என்ன? அவரும் தாதா தான். ரெண்டு பேரும் சேர்ந்து சமூக சேவை செய்யறாங்களானு […]

கோச்சடையான் – தலைவர் ரசிகன் பார்வையில்..

கோச்சடையான் – தலைவர் ரசிகன் பார்வையில்..

‘கோச்சடையான்’ திரைப்படம் பார்க்க 5 காரணங்கள் என்று பட்டியலிட்டால்.. 1. சூப்பர் ஸ்டார் 2. சூப்பர் ஸ்டார் 3. சூப்பர் ஸ்டார் 4. சூப்பர் ஸ்டார் 5. சூப்பர் ஸ்டார் என்று பட்டியலிட்ட ஆசாமி நான். ஆனாலும் தொடர்ந்து தாமதமாகிக் கொண்டே போனதும், ஏற்கனவே வெளியான ஒரு நிமிட டீஸரும் ‘கோச்சடையான்’ ரிலீஸ் ஏனைய ரஜினி படங்கள் ரிலீஸின் போது இருந்த உற்சாகத்தை இரண்டு நாட்களுக்கு முன்பு வரை தரவில்லை.  டிக்கெட்டுகள் ஆன்லைனில் கிடைக்க ஆரம்பித்த உடன் […]

விடியும் முன் – திரை விமர்சனம்

விடியும் முன் – திரை விமர்சனம்

நான்கு பேர், மூன்று காரணங்கள், இரண்டு பெண்கள், ஒரு நாள் என்று படத்தின் முன்னோட்டமே திரும்பிப் பார்க்க வைத்தது, பெண் குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல்களைக் கருவாகக் கொண்ட கதை.   பாலியல் தொழிலாளியான பூஜாவிற்கு பன்னிரண்டு வயது சிறுமியைக் கூட்டி விடும் வேலை அமைகிறது. வேண்டாவெறுப்புடன் பணத்திற்காகவும் பழக்கத்திற்காகவும் அந்தச் சிறுமியை வயதானவரிடம் கூட்டிப் போகும் வேளையில் மனது பொறுக்காமல் அந்த இடத்திலிருந்து காப்பாற்றிக் கூட்டிச் செல்கிறார். அவர்களைத் துரத்தும் விரோதிக்கும்பலிடமிருந்து தப்பித்தார்களா? மாட்டினார்களா? ஓர் […]

வீரம் – திரை விமர்சனம்

வீரம் – திரை விமர்சனம்

முரட்டுக்காளை, வானத்தைப் போல போன்ற அண்ணன் – தம்பி பாசம் பற்றிய கதைக்களம் தான். ஆனால் அஜீத்தைக் கிராமத்துவாழ் பாசக்கார அண்ணனாகப் பார்ப்பது  நமக்கெல்லாம் புதியது. நகரத்துக்கதைகளிலே கோட் – சூட் போட்டு நடித்து வந்த அஜீத் இதில் வேட்டிக்கு மாறியிருக்கிறார்.  எதிரிகளுக்கு விருந்து கொடுத்து தெம்பாக்கி அடிக்கும் பாசக்கார அண்ணன் அஜீத்துக்கு நான்கு தம்பிமார்கள்.இவருக்கு அடிதடி பிடிக்கும் அளவிற்குப் பெண்களைப் பிடிக்காது. திருமணம் செய்தால் வரும் பெண் தன் தம்பிகளிடமிருந்து தன்னைப் பிரித்து விடுவார் என்று […]

கல்யாண சமையல் சாதம் – விமர்சனம்

கல்யாண சமையல் சாதம் – விமர்சனம்

இந்தியாவில் இருந்த வரை முதல் நாள் முதல் காட்சி சென்று பார்த்த படங்கள் ஒன்றோ இரண்டோதான். ஆனால் இங்கு பல படங்களை அப்படிப் பார்த்துவிடுகிறேன். அப்படித்தான் இன்று கல்யாண சமையல் சாதம் படத்தையும் முதல் நாள் முதல் காட்சி பார்த்தேன், அதுவும் குடும்பத்துடன். பொதுவாக ஒரு படத்தைப் பார்க்கப் போகிறேன் என முடிவு செய்துவிட்டால் விமர்சனங்களைப் படிப்பதைத் தவிர்த்துவிடுவேன். மெல்ல சிரித்தாய் பாடலும், நகைச்சுவைப் படமென்ற விளம்பரமும் இந்தப் படத்தைப் பார்க்கலாம் என நினைக்க வைத்தன. அதனால் […]

Next Page »

கடைசியாக : July 22, 2016 @ 9:48 am