ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

கத்தி இசை – ஒரு பார்வை

கத்தி இசை – ஒரு பார்வை

October 16, 2014 by · Leave a Comment 

விஜய் – முருகதாஸ் – அனிருத் என்று பெரிய எதிர்பார்ப்பை கிளப்பினாலும், இதுவரை கொஞ்சம் கொஞ்சம் கேட்டிருந்த செல்ஃபி புள்ள, அப்புறம் செல்ஃபி புள்ள டைப்புலயே ஒரு ஹிந்தி பாட்டு, அந்த ராப் பிகினிங் வர்ற பாட்டு இதெல்லாம் வெச்சு கொஞ்சம் காதுக்கு கத்தியான ஆல்பமுன்னு ஒரு எண்ணம் இருந்தது. ஆனா, இன்னிக்கு நிதானமா கேட்டப்ப பாடல்கள் ரொம்ப unconventionalஆ பட்டுது. எனக்கு தெரிஞ்சு எந்த பாட்டுமே ரெகுலர் பல்லவி – இண்டர்ல்யூட் – சரணம் ஃபார்முலாவில […]

மீனாக்ஷி ஊரில் காமாக்ஷி ஊர்வலம்!

மீனாக்ஷி ஊரில் காமாக்ஷி ஊர்வலம்!

ஒரு கச்சேரி என்றால் என்ன எதிர்பார்ப்போம். வர்ணம், விநாயகர் மேல ஒரு பாட்டு, ரெண்டு மூணு பிரபல சாஹித்தியங்கள், கொஞ்சம் சூடு பிடித்த பின் ஸ்வரம் நிரவலோட ஒரு மெயின் ராகம், நேரம் இருந்தால் ஒரு ராகம் தானம் பல்லவி, தொடர்ந்து சில துக்கடாக்கள் என விளிக்கப்படும் ஜனரஞ்சகமான பாடல்கள், ஒரு தில்லானா, மங்களம். இப்படி ஒரு கட்டுக்கோப்பான நிகழ்ச்சி நிரலை ஒட்டி அன்றைய நிகழ்வு இருக்க வேண்டும் என்பதுதான் நம் எதிர்பார்ப்பாக இருக்கும். இதைத்தான் கச்சேரி […]

சீசன் கச்சேரியை சிம்பிளாக் கேட்கலாம்

சீசன் கச்சேரியை சிம்பிளாக் கேட்கலாம்

மார்கழிதான் ஓடிப் போச்சு போகியாச்சு – இப்படி ஆரம்பிக்கும் பிரபல திரைப்படப் பாடல் ஒன்று. ஆனால் மார்கழி ஆரம்பித்த உடனே ஒருத்தர் ரெண்டு பேர் என்று இல்லாமல் பெரும் குழாம் ஒன்று வேறு எங்கும் இல்லாத ஓட்டம் ஒன்றைத் தொடங்கும். அது டிசம்பர் சீசன் கச்சேரிகளைக் கேட்க என்றே சென்னையை நோக்கிப் படை எடுக்கும் ரசிகர் கூட்டம். சுமார் ஆறு வார காலம். அதில் ஆயிரக்கணக்கில் கச்சேரிகள். கூடவே நாட்டியங்கள்,  செய்முறை விளக்கங்கள் என வேறு பல […]

ஷாஜி இசை விமர்சகரா?

ஷாஜி இசை விமர்சகரா?

இசைவிமரிசனம் என்பது காலங்காலமாக இருந்த வரும் விஷயம் என்ற போதும், முன்னோடிகளாகக் கருதப் படுபவர்கள் கல்கியும், சுப்புடுவும்தான். தற்காலத்தில் இசைவிமரிசனத்திற்கென்று எந்த ஒரு கறாரான வழிமுறைகளும் தோன்றாமல் தடுத்து நிறுத்திய பெருமை இவர்களுக்கு உண்டு. ஏனெனில் இசை என்பது ஒரு பொழுதுபோக்கு அம்சமாக நிறுவப்படுவதை இவர்கள் முன்னேடுத்துச்சென்றர்கள். எந்த ஒரு கலையுமே தீவிர விமரிசனத்திற்குட்படுதல் அவசியம். இசை இதற்கு விதிவிலக்கல்ல. அதிலும் மிகவும் கறாராக மதிப்பிடப்படவேண்டிய ஒரு துறையாக இசை இருக்கிறது.   தற்போது இசை விமர்சனம் […]

சிட்னியில் ஒளிர்ந்த “வைர(த்தில்) முத்து(க்கள்)

சிட்னியில் ஒளிர்ந்த “வைர(த்தில்) முத்து(க்கள்)

திரையிசைக்கவிஞர்கள் கறிவேப்பிலையாய்ப் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில் அவர்களுக்கு ஒரு நட்சத்திர அந்தஸ்தைக் கொண்டு வந்து காட்டியவர் கவிப்பேரரசு வைரமுத்து. அவருக்கு முன்னான காலகட்டத்தின் சகாப்தங்களான பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவியரசு கண்ணதாசன் போன்ற ஆளுமைகள் தமிழ்த்திரையிசைப் பாடல்களின் தனித்துவங்களாக இருந்தாலும், கவிஞர் வைரமுத்து அவர்கள் பாடலாசிரியர்களுக்கான தனித்துவம் என்ற விஷயத்தில் முன்சொன்னது போல நட்சத்திர முத்திரையைப் பதித்திருக்கின்றார். அந்த வகையில் ஒரு பாடலாசிரியரை முன்வைத்து அவுஸ்திரேலியாவில் நடக்கும் முதல் கலை நிகழ்ச்சியாக அமைந்தது சரிண்டா வழங்கிய "வைரத்தில் முத்துக்கள்". […]

மேற்கிசை : மாஹ்லர்

Adagietto என்பது மெதுவாக செல்லக்கூடிய இசைக்கான (இத்தாலிய) இசைச் சொல்.இதைப்போல இசையின் meter என்று சொல்லக்கூடிய வேகத்தை குறிக்க பல சொற்கள் ஐரோப்பா இசையில் உள்ளது. நம் கர்நாடக இசையின் தாளம் என்ற பிரயோகத்தை இதனுடன் ஓரளவு ஒப்பிடலாம். ஆனாலும் இவை இரண்டும் வெவ்வேறு வகைப்பட்டவை. எல்லா இசையையும் தாளத்தால் பிரிக்க முடியும். சாதாரணமாக நாம் தாளம் போடுவதால் இந்த ஒலியை பல சிறிய பகுதிகளாக பிரிக்கிறோம். இந்த பகுதிகள் ஒரே அளவில் இருக்கவேண்டிய கட்டாயம் இல்லை.அப்படி […]

குருவே சரணம் – நூல் விமர்சனம்

குருவே சரணம் – நூல் விமர்சனம்

சென்ற வருடம் டிசம்பர் மாதம், சதுரம் பதிப்பகம் 'குருவே சரணம்' என்ற நூலை பதிப்பித்துள்ளது. இந் நூலில், 'தாம்பரம் மியூசிக் கிளப்' நடத்தி வரும் பாஷ்யம் தம்பதியினர் கண்டுள்ள நேர்காணல்களை, கிருஷாங்கினி தொகுத்துள்ளார். இதில் பத்தொன்பது மூத்த கலைஞர்களின் நேர்காணல்கள் இடம் பெற்றுள்ளன. பரவலாய் அறிந்தவர்களை மட்டும் நேர்காணல் செய்யாமல், அறிவும், திறனும் முழுமையாய் வாய்த்திருந்த போதும் அதிகம் அறியப்பட்டிராத அரிய கலைஞர்களையும் தேடிப் பிடித்து, அவர்களிடமிருந்தும் தகவல்களைச் சேகரித்திருக்கும் பாஷ்யம் தம்பதியினர் பாராட்டுக்குரியவர்கள். நேர்காணல் கொடுத்திருக்கும் […]

ஜி.என்.பி கிருதிகள் – 2 (நீ தய ராதா)

ஜி.என்.பி கிருதிகள் – 2 (நீ தய ராதா)

சிந்துஜாவுடன் இணைந்தளிக்கும் ஜி.என்.பி கிருதிகள் வரிசையில் இது  இரண்டாவது பாடல். எனக்கு மிகவும் பிடித்த ராகங்களுள் ஒன்று ஆந்தோளிகா. கரஹரப்ரியாவின் ஜன்ய ராகமான இந்த ராகத்தின் ஆரோஹணத்திலும் அவரோஹணத்திலும் ஸ்வரங்களின் எண்ணிக்கை ஒன்றாக அமைந்த போதும், இதன் scale asymmetric-ஆக அமைந்துள்ளது. தியாகராஜரின் 'ராக ஸுதா ரஸ', இந்த ராகத்தில் அமைந்துள்ள கிருதிகளுள் பிரபலமான ஒன்று. தியாகராஜர், கிருதியின் முதல் பிரயோகத்திலேயே ராகத்தின் ஜீவனை வெளிப்படுத்துகிறார். அதன் அடிப்படையில் அமைந்துள்ள ஜி.என்.பி-யின் வர்ணம் புதிய பரிமாணங்களையும் வெளிக் […]

ஜி.என்.பி கிருதிகள் -1 (ஸ்ரீ சக்ர ராஜ)

ஜி.என்.பி கிருதிகள் -1 (ஸ்ரீ சக்ர ராஜ)

சில நாட்களுக்கு முன், "ஜி.என்.பி-யின் நூற்றாண்டில், அவரது பாடல்கள் சிலவற்றைப் பாடி என் வலைப்பூவில் வருடம் முழுவதும் போடலாம் என்று நினைத்துள்ளேன். அவற்றைப் பற்றி எழுத முடியுமா?", என்று சிந்துஜா  கேட்டார். கரும்பு தின்னக் கூலியா வேண்டும்? உடனே ஒப்புக் கொண்டேன். முதல் பாடலாய், சிவசக்தி ராகத்தில் அமைந்துள்ள 'ஸ்ரீ சக்ர ராஜ' பாடலைப் பாடியுள்ளார். பாடலுக்குள் செல்வதற்கு முன்னால், ஜி.என்.பி என்ற வாக்கேயக்காரரைப் பற்றி ஒரு சிறு அறிமுகம். பிரபல வாக்கேயக்காரர்களாய் விளங்கியவர்கள் அதம் கச்சேரி […]

தீட்சிதர் அகண்டம்

தீட்சிதர் அகண்டம்

March 11, 2010 by · 2 Comments 

பாரதிய சங்கீத வைபவம் என்ற அமைப்பு கடந்த 4 வருடங்களாக தீட்சிதர் கிருதிகளுக்காக அகண்டம் நடத்தி வருகிறது. அகண்டத்தில், காலையில் தொடங்கி தொடர்ந்து 12 மணி நேரம் தீட்சிதரின் பாடல்கள் பாடப்படுகின்றன. "இது வரை நடந்த அகண்டங்களில் மட்டும், குறைந்த பட்சம் 280 தீட்சிதர்களாவது பாடப்பட்டு ஆவணப்படுத்தப்படூள்ளன. இன்னும் சில ஆண்டுகளில் , தீட்சிதர் கிருதிகள் முழுவதையும் ஆவணப்படடுத்தி விட முடியும்" என்கிறார் இந் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் குமார். வருடா வருடம் நடக்கும் இந்த அகண்டம், […]

Next Page »

கடைசியாக : July 22, 2016 @ 9:48 am