ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

கொன்னுட்டாங்கப்பா

கொன்னுட்டாங்கப்பா

December 6, 2012 by · Leave a Comment 

  சாகிற காட்சியில் நடிப்பதைப் பொதுவாகக் கலைஞர்கள் விரும்பமாட்டார்கள். யாரையும் சாகடிக்காமல் ஒரு தொலைக்காட்சித் தொடரை இறுதிவரை நகர்த்திச் செல்ல முடியாது. வாழ்வைக் காட்டிலும் கதைகளில் மரணமானது மிகக் கோரமான வடிவம் கொள்ளும். ஒரு மரணக் காட்சியை எழுதுவது போன்ற இம்சை எழுத்தாளனுக்கு இங்கு வேறில்லை. எழுதுபவனை விடுங்கள். எடுப்பவர்களுக்கு அது இன்னும் பெரிய அவஸ்தை. ஒரு நடிகர் – அல்ல – ஒரு கதாபாத்திரம் இறக்கப் போகிறது என்பது இயக்குநருக்கும் எழுத்தாளருக்கும்தான் முதலில் தெரியும். கதைப்போக்கை […]

நெடுந்தொடர்களின் ரசிக ரசிகைகளின் கவனத்திற்கு

நெடுந்தொடர்களின் ரசிக ரசிகைகளின் கவனத்திற்கு

இந்தியாவிலும் வெளி நாடுகளிலும் சன் தொலைக்காட்சியின் திருமதி செல்வம், தென்றல் மற்றும் செல்லமே தொடர்களை விரும்பிப் பார்க்கிறார்களே என்று தொடர்களைப் பார்க்கலானேன். நெடுந்தொடர்களின் நெடிய சிந்தைனைகள் என்னை நெளிய வைத்தது.   திருமதி செல்வம் தொடரில் கதா நாயகன் செல்வத்தின் தங்கை ராணி அலுவலக விஷயமாகத் தன்னுடன் பணிபுரியும் சொந்தக்காரருடன் சிதம்பரம் சென்றது அறிந்து வெகுண்ட காதல் கணவனும் அவனது குடும்பமும் மிகவும் மங்கலகரமான வார்த்தைகளைப் பயன்படுத்தி அந்தப் பெண்ணின் ஒழுக்கத்தைச் சின்னாபின்னபடுத்தி தொடருக்கே அழகு சேர்த்தது. […]

இயக்குனர் விஜயகாந்தையும் கூப்பிட்டிருக்கலாம்.

இயக்குனர் விஜயகாந்தையும் கூப்பிட்டிருக்கலாம்.

January 14, 2011 by · Leave a Comment 

  வழக்கம்போல் இந்தமுறையும் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகளில் சினிமா விவாதம் தவறாமல் நடந்தது. எதிர்பார்த்தது போலவே சுஹாசினி, மிஷ்கின்,பிரபுசாலமன்,சீனு ராமசாமியெல்லாம் பீடத்தில் ஏறி உட்கார்ந்துகொண்டு அருள்வாக்கு சொன்னார்கள். கூட வந்த உதவி இயக்குநர்கள் ஆடியன்ஸ் கேலரியில் உட்கார்ந்து உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர்விட்டார்கள். இயக்குநர் சங்கத்திற்கு புதிய வரவான விஜயகாந்த்தையும் கூப்பிட்டிருக்கலாம்.  விஜய் டிவியின் சினிமா விவாதம் முக்கியமானது. எது வெகுஜன சினிமா, எது நல்ல சினிமா என்னும் ஆராய்ச்சி நடந்தது. உலக சினிமா பார்த்துவிட்டு உருகுபவர்களின் பெருமதிப்பை பெற்றிருக்கும் […]

கருணாநிதியும் வெங்காயமும்

கருணாநிதியும் வெங்காயமும்

December 28, 2010 by · Leave a Comment 

  ஜெயா டிவியில் ஸ்பெக்ட்ரம் ஸ்பெஷல் தொடர் பேட்டிகள். சோ பேட்டிதான் பிள்ளையார் சுழி. துக்ளக் தலையங்கத்தில் இருக்கும் காரம் பேட்டியில் மிஸ்ஸிங்.சூடான விஷயமென்றாலும் சுரத்தே இல்லை. பாஜகவினரை பேசவிட்டால் திமுகவை திட்டிவிட்டு காங்கிரஸை கண்டித்துப் பேச வந்து விடுகிறார்கள். சுப்ரமணிய சுவாமியோ திமுகவை திட்டிவிட்டு காங்கிரஸை பாராட்ட ஆரம்பித்துவிடுகிறார். கம்யூனிஸ்ட் கட்சிகளோ, காங்கிரஸ் கட்சியை மட்டுமே குறிபார்க்கிறார்கள். திமுகவை கண்டபடிதிட்டி, காங்கிரஸ் மேல் உச்சு கொட்ட சோ மட்டுமே இருககிறார். ஆகவே இப்போதைக்கு உற்சவமூர்த்தி சோ […]

சுஜாதாவை பார்த்தால் பரிதாபமாக இல்லை ?

சுஜாதாவை பார்த்தால் பரிதாபமாக இல்லை ?

November 24, 2010 by · 1 Comment 

  பீகார் தேர்தல். எதிர்பார்த்த முடிவுகள் வர ஆரம்பித்துவிட்டன. நிதிஷ்க்கு ஜெயம். லாலுவுக்கு கரி. ஜெயித்தவர்கள்,தோற்றவர்கள் பாரபட்சம் பாராமல் மைக் நீட்டி கருத்துக் கேட்கும் வழக்கமான ஜர்னலிஸம்தான் பெரும்பாலான சேனல்களில். நம்மூரில் வெறும் பிளாஷ் செய்தியோடு நிறுத்திக்கொண்டார்கள். என்டிடிவி, புள்ளி விபரத்தை அள்ளிவிட்டு அசத்தினார்கள். ரவுண்ட் டேபிளில் இருந்தாலும் கடைசிவரை பர்கா தத் குளோஸப்பில் வரவேயில்லை. முழு ரிசல்ட் வந்தபின்னர்தான் கருத்து சொல்லமுடியும் என்கிற வழக்கமான பல்லவியோடு ஆரம்பித்தார் ஜெயந்தி நடராஜன். பீகாரில் பிரச்சாரம் செய்ய ராகுலுக்கு நேரமில்லையாம், இன்னா பில்ட் […]

பச்சை யானையே எழுந்து வந்தாலும் எதுவும் நடப்பதில்லை

பச்சை யானையே எழுந்து வந்தாலும் எதுவும் நடப்பதில்லை

November 16, 2010 by · Leave a Comment 

ராசா புயல் கரையை கடந்துவிட்டது. மதராசிகளை கிண்டலடிப்பதற்கு இன்னொரு காரணம் சிக்கிவிட்டது. ராஜினாமா நியூஸ் எப்படியும் வருமென்று ஞாயிற்றுக்கிழமை முழுக்க கையில் காமிராவோடு காத்திருந்தார்கள். என்ன பேசவேண்டும் என்பதையும் ஸ்கிரிப்டாக எழுதி அறிவாலயத்திலிருந்து அனுப்பி வைத்திருந்தார்கள் போலிருக்கிறது. துளியும் பிசகவில்லை. சசி தரூர், அசோக் சவான் வரிசையில் ராசாவையும் சேர்த்துவிட்டு டெல்லி சானல்கள் ஓய்ந்துவிட்டன. கூட்டணிக்காரர்கள் கைகுலுக்கிக்கொண்டார்கள்.இதுக்கு மேல் என்னதான் செய்யறது என்று போயஸ்தோட்டமும் நொந்துவிட்டது. ஜேபிசியெல்லாம் தேவையில்லை என்று சிதம்பரமும் தீர்ப்பெழுதிவிட்டார்.சவப்பெட்டி ரெடி! கே டிவியில் […]

மாட்டிக்கொண்டது ஷங்கரும் பாப்பையாவும்தான்

மாட்டிக்கொண்டது ஷங்கரும் பாப்பையாவும்தான்

November 10, 2010 by · Leave a Comment 

  பொழுது சாயும் நேரத்தில் கலைஞர் டிவியில் வர்த்தகச் செய்திகள். சீரியலுக்கு முன்னர் சிரமப்பரிகாரம் செய்யும் நேரத்தில் வரும நிகழ்ச்சி. முழுக்க முழுக்க வர்த்தகச் செய்திகள். பங்குச் சந்தையில் ஆரம்பித்து எல்லா எகானாமிக் டைம்ஸ் விஷயங்களையெல்லாம் கவர் செய்கிறார்கள். மறுநாள்  வியாபாரம் பற்றிய ஆருடமும் உண்டு. தங்கம் விலை முதல் மஞ்சள் வரை மார்க்கெட் விலை சொல்கிறார்கள். கத்தரிக்காய் விலையிலிருந்து புண்ணாக்கு விலை வரும் சகலமும் தெரிந்து கொள்ளலாம். நிகழ்ச்சி பெயர் பணம் வரும் நேரமாம். பணம் […]

கல்மாடி இன்னொரு மோடிதான்

கல்மாடி இன்னொரு மோடிதான்

October 20, 2010 by · Leave a Comment 

  சிரிப்பொலியில் மாணவன் என்றொரு பிளாக் ஒயிட் படம். தேவர் பிலிம்ஸ் தயாரிப்பு. பால் வடியும் முகங்கொண்ட ஜெய்சங்கர் தமிழ் வாத்யார். அவருடைய ஸ்டூண்ட்டாக பெரிய கிருதா வைத்த முத்துராமன். என்ன கொடுமை சரவணன்! கல்லூரியின் கரெஸ்பாண்டென்ட் பையன், வகுப்பில் என்னவெல்லாம் செய்வாரோ அதையெல்லாம் முத்துராமன் தவறாமல் செய்கிறார். ஆபிரஹாம் லிங்கன், லால்பகதுர் சாஸ்திரி, அண்ணாதுரை பயோகிராபியை நாலு வரிகளில் நச்சென்று வசனமாய் சொல்லி முத்துராமனை திருத்த முயற்சி செய்கிறாராம் ஜெய்சங்கர். படத்தில் எந்த கேரக்டர் குளோஸப்பில் […]

மைக் மோகனின் டான்ஸ்

மைக் மோகனின் டான்ஸ்

September 25, 2010 by · Leave a Comment 

யாருக்கும் இங்கே படமெடுக்கத் தெரியவில்லை என்று அதிரடியாக ஆரம்பித்தார் அந்த அம்மணி. துட்டு சானலும் கலைச்சேவையை ஆரம்பித்துவிட்டதோ என்று ரிமோட்டை நிறுத்தி நிதானமாக கேட்ட பின்னர்தான் புரொடெக்ஷன் சமாச்சாரம் என்பது புரிந்தது. பிராந்திய மொழி படங்கள்தான் எங்களுடைய முக்கியமான இலக்கு; அடுத்த வருஷம் ஒரு கலக்கு கலக்க இருக்கிறோம் என்றார். ஒவ்வொரு ஆண்டும் 900 சொச்ச படங்கள் வெளியாகிறதாம். அதில் 750 படங்கள் பிராந்திய மொழி படங்களாம்.  அப்போ மிச்ச சொச்சமெல்லாம்?  இதென்ன அதிகப்பிரசங்கித்தனமான கேள்வி.  இந்தியாவுக்கு […]

தேவிபாலா – சீரியல் கில்லர்

தேவிபாலா – சீரியல் கில்லர்

September 14, 2010 by · Leave a Comment 

சூடுபிடிப்பதற்குள் சுருண்டுவிட்டது விஷயம். சல்மான் ஸாரி கேட்டதில் எத்தனை பேருக்கு வருத்தமோ? உண்மையில் நேஷனல் சானல்கள் ஒப்பாரி வைக்காத குறை. எத்தனையோ குண்டுவெடித்தாலும், மும்பை குண்டுவெடிப்புக்குத்தான் ஓவர் ஹைப் கொடுத்துவிட்டார்கள் என்று சல்மான் சொல்லி வைத்ததும தேசபக்தி வியாபார சந்தை சுறுசுறுப்பானது. என்டிடிவியில் ஓவர் ஸ்பீடில் வண்டி ஓட்டும் சல்மானை கலாய்த்தார்கள்.  முதல்நாள் வசூலில் இடியட்டுகளை முந்திவிட்டதாம் சல்மானின் லேட்டஸ்ட் படம். இரண்டு நாளைக்கு மீடியாவை அல்லோகலப்படுத்தியிருக்கலாம்.  எவன்டா கண்டுபிடிச்சது ஸாரி? கேப்டன் டிவியில் தேவிபாலாவின் நேர்முகம். […]

Next Page »

கடைசியாக : July 22, 2016 @ 9:48 am