ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

பிடி 22

பிடி 22

வசந்த் வெள்ளைத் தடியைத் தட்டித் தட்டித் தட்டுத் தடுமாறி பஸ் ஸ்டாப்பில் வந்து அமர்ந்த போது அநேகமாய் அங்கே வேறு யாருமில்லை. “ஹலோ, ஹலோ” என்ற அவன் குரலுக்கு பதில் குரல் எதுவுமில்லை. சாலையில் அவ்வப்போது எழுவதும், அடங்குவதுமாகக் கார்களின் ஓசைகள். அவனுடைய உலகம் ஓசையும், மணமும், தொடுதலும்தான். வட்டம் சதுரம் எல்லாம் ஆட்காட்டி விரலால் தொட்டறிந்தவை. அருகில், அருகாமையில் எல்லாம் அவனுக்கு சப்தங்களின் அளவுகள். பிறர் உலகத்தை அவன் பார்த்ததில்லை. அம்மா அப்பா என்றிருந்தால் எப்படி? […]

ஆட்டோ சவாரி

ஆட்டோ சவாரி

சித்திரை வெயில் மண்டையைப் பிளக்க, சவாரி கிடைக்காத சலிப்புடன் மாரி ஆட்டோவை சாலை ஓரமாக உருட்டிக் கொண்டிருந்தான். மனைவி அவனுக்காக கட்டித் தந்திருந்த குழம்பு சோறும், வெண்டைக்காய் பொரியலும் அவன் உண்ட மயக்கத்தை தந்து கொண்டிருந்தது. தெருவில் ஈ காக்காய் இல்லை, ஆனால் குண்டும் குழியுமாய் இருந்ததால் இவன் ஆட்டோ ‘டுக்டுக்டுக்’ என்று ஊர்ந்து சென்றுகொண்டிருந்தது. சற்று தூரத்தில் வியர்க்க விருவிருக்க ஓர் உருவம் பேருந்து நிலையம் நோக்கி சென்று கொண்டிருப்பதை கவனித்த மாரி ஆட்டோவை வேகமாக […]

வஞ்சகன்

வஞ்சகன்

உஷா அவநம்பிக்கையோடு பார்த்தாள். “அப்போ கண்டிப்பா அவன் கிட்டே போய் காரை வாங்கத்தான் போறிங்களா?” “ஆமா.” என்றான் விஷ்ணு. “சுளையா பத்தாயிரம் டாலர் டீல். ஏமாந்து போய் நிக்கப் போறிங்க. க்ரெய்க் லிஸ்ட் மாதிரி வெப்சைட் எல்லாம் டேபிள் சேர் சோஃபா வாங்க ஓக்கே. யாராவது கார் வாங்குவாங்களா? டீலர் கிட்டே போய் சர்ட்டிஃபைடு கார் வாங்குங்கன்னு தலையால அடிச்சிக்கறேன். நாளைக்கு கார் நடு ரோட்டில் நின்னுருச்சுன்னா என் கிட்டே புலம்பாதிங்க.” “உஷா, என் ஃப்ரண்ட்ஸ் நிறைய […]

ஆண்களுக்கு பேன் வருவதில்லை

நீங்கள் எல்லாம் மிஞ்சி மிஞ்சிப் போனால் தாத்தாவையும் பாட்டியும்தான் சாகடித்திருப்பீர்கள். நான் பத்து மாதக் குழந்தையைக் கொன்றவன். நானும் உங்களைப் போல் சில்லறை விஷயங்களுக்காகத்தான் இதில் இறங்கினேன். முந்தாநாள் இரவு பத்து மணி இருக்கும். கிம் கர்டாஷியனும் மோனிகா பெலூச்சியும் போட்டி போட்டுக் கொண்டு கணித்திரையை ஆக்கிரமித்திருந்தார்கள். அப்போதுதான் ராம் அழைத்தான். “வாடா… பௌலிங் போகலாம்!”  இருபத்து நான்கு மணி நேரமும் திறந்திருக்கும் பௌலிங் மையம். மூன்று மாதத்தில் வெள்ளைப் பனி காலம் போய் வெஞ்சிவப்பு கோடை […]

ஜெயமோகனின் நிலமும் கிடாவும்

ஜெயமோகனின் நிலமும் கிடாவும்

என்னவளுக்கு இரண்டாம் பிரசவம் எங்கள் வீட்டிலேயேதான் நடந்தது. எங்கள் வீட்டில் ஒருமாத காலம் தங்கியிருந்து விட்டுப் பின்னரே இரண்டு மாதகாலம் அவள் பிறந்த வீடு சென்றாள். அன்று எங்கள் வீட்டு வாசலில் அமர்ந்து இருவரும் பேசிக் கொண்டிருந்தோம். உள்ளே தூங்கிக் கொண்டிருந்த குழந்தை தூக்கம் கலைந்து எழுந்து சிணுங்கல் போலத் துவங்கி உடனடியாக வீறிட்டு அழத் துவங்கினாள். பொதுவாக அம்மாக்களுக்குத் தெரியுமாம் குழந்தைகளின் அழுகையின் காரணம்.    உள்ளே நடக்கப் போனவள் என் பக்கமாகத் திரும்பி, “ப்பா […]

சேதனன், விமலை மற்றும் கொஞ்சம் தனிமை

சேதனன், விமலை மற்றும் கொஞ்சம் தனிமை

December 26, 2012 by · Leave a Comment 

“வா. என் மடி மேலே வந்து மண்டியிட்டு உட்கார்” சேதனன் குரலில் கடுமை இல்லை. ஆனால் உறுதி இருந்தது. அவன் கண்கள் மூடிய நிலையிலேயே இருந்தது. மிச்சமிருந்த கொஞ்ச தயக்கத்தையும் கழற்றி விடலாமா என்ற யோசனை தோன்ற ஆரம்பித்து விட்டது விமலைக்கு.   “மன மயக்கத்தினால் வருவது தயக்கம். உனக்கென்று ஒரு யோசனையும் வேண்டாம், நான் சொல்வதை மட்டுமே உன் மனம் கேட்கட்டும்” சேதனனின் வசீகரக்குரலில் விமலை தன்னை மறந்து ஒரு மாய உலகத்துக்குள் நுழைய தயாரானாள். […]

நேரில் கடவுள்

  அறை வாசலில் நிழலாட 'யாரது?" படுக்கையிலிருந்தவாறே கேட்டார் ரங்கசாமி அய்யா.   நடுத்தர வயதுக்காரனொருவன். 'அய்யா நீங்கதானே ரங்கசாமி அய்யா. தமிழாசிரியர்?" கேட்டபடி உள்ளே வந்தான்.   'ஆமாம் நீ யாரு?"   'நான் கலெக்டர் ஆபீஸ்ல இருந்து வர்றேன், கலெக்டர் கோபிநாத் அய்யா அனுப்பிச்சார். போன வாரம் அவர் இந்த முதியோர் இல்லத்திற்கு ஒரு நிகழ்ச்சிக்காக வந்திருந்தப்ப உங்களைப் பார்த்தாராம்,பேசினாராம். அவர் உங்க கிட்டப் படிச்சவராமே? .அவர் இங்க வந்தப்ப நீங்க தங்கியிருக்கற இந்த […]

புகை ஓவியம்

  கிட்டத்தட்ட இருபத்தொன்பது வருடங்களுக்குப் பிறகு பிறந்து வளர்ந்த சொந்த கிராமத்திற்குச் செல்லும் வாய்ப்பு எனக்கு இப்போதுதான் வாய்த்தது. அதற்கும் கூடக் காரணம்  என் ரிடையர்மெண்ட்தான்.    ஈரோட்டிற்கு அருகில் உள்ள சிவகிரி கிராமத்தில் பிறந்து பள்ளி வாழ்க்கையை அங்கும். கல்லூரி வாழ்க்கையை ஈரோட்டிலும் முடித்த எனக்கு உத்தியோகம் சென்னையில் அமைய இருபத்தொன்பது வருடங்களுக்கு முன் இடம் பெயர்ந்தேன்.  அதற்குப் பிறகு கல்யாணம் காட்சியெல்லாம் சென்னையிலேயே முடிந்து குடும்பம் மனைவி குழந்தை ஆபீஸ் என்கிற நடைமுறை யதார்த்தங்களில் […]

ஏ இவளே !

ஏ இவளே !

August 1, 2012 by · 1 Comment 

  எனக்கு ரெண்டு பொண்டாட்டி. ஒருத்தி அவளே, இன்னொருத்தி இவளே. அப்படித்தான் நான் கூப்பிடுவேன். மொதல்ல கட்டிக்கிட்டவளை இவளேன்னு கூப்பிட்டுகிட்டிருந்தேன். ரெண்டாமவள் வந்ததும் முதலாமவள் அவளே ஆகிட்டா. ரெண்டாமவள் இவளே ஆகிட்டா. இதுவரைக்கும் ரெண்டு பேரையும் ஒப்பிட்டு பார்த்ததில்லை. உங்ககிட்ட சொல்றதுக்காக இப்போ ஒப்பிடுறேன். அவளே வந்து நல்ல நிறம், கச்சிதமான அமைப்புள்ளவ. ஆனா கொஞ்சம் பொம்மைத்தனம் இருக்கும். இவளே வேற மாதிரி. மாநிறம், கொஞ்சம் சுமாரா இருப்பா, ஆனா உயிர்ப்புள்ளவ. அவ இருக்கிற எடத்துல யாரும் […]

குட்டி கதைகள் – 2

  கல்யாணம்   'ஏண்டா திவாகர்….. வயசுக்கு வந்த ரெண்டு தங்கச்சிக கல்யாணத்துக்கு நிக்கும் போது நீ ஒரு பொண்ணைக் காதலிச்சிட்டு 'அதைத்தான் கட்டிக்குவேன் அதுவும் உடனே" ன்னு குதிக்கறியே ஊரே உன்னைக் கேவலமாப் பேசுமேடா!…' தண்டபாணி மாமா கத்தலாய்க் கேட்க,   மெலிதாய்ச் சிரித்தபடி அவரருகே வந்த திவாகர், 'மாமா என்னோட  நிலைமைல நான் சம்பாதிச்சு ரெண்டு தங்கைகளுக்கும் கல்யாணம் பண்றதுங்கறது நடக்காத ஒண்ணு!…அதான் வசதியான கலைவாணியைக் காதலிச்சேன். என்னோட நிலையைச் சொன்னேன் தங்கச்சிக கல்யாணத்துக்கு […]

Next Page »

கடைசியாக : July 22, 2016 @ 9:48 am