ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

ராசி பலன்

ராசி பலன்

  ஆங்கிலப் புத்தாண்டு பிறந்து விட்டது. எல்லோரையும்போல் நாமும் அன்று தொலைக்காட்சிப் பெட்டி முன் அமர்ந்து அன்றைய நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டு இருந்தோம். ஒரு அலைவரிசையில் புத்தாண்டு பலன்களைப் பற்றி விவாதம் நிகழ்ந்தது.  அதில்  ஜோதிடர்கள்  பலர் பங்கேற்றனர்.  ஒவ்வொரு ராசிக்கும் 2012 எவ்வாறு இருக்குமென்று  தங்கள் கணிப்புக்களைக்  கூறிக்கொண்டு இருந்தனர்.  எந்தெந்த ராசிக் காரர்களுக்கு இந்த ஆண்டு நன்மை பயக்குமென்றும், எந்தெந்த ராசிகளுக்கு இந்த ஆண்டு தீமையான பலன்கள் நடைபெறும் என்றும் ஜோதிடர்கள் விவாதித்தனர். சுமார் […]

நிமித்தக்காரனும் – நிமித்தமும்

நிமித்தக்காரனும் – நிமித்தமும்

  ஜோதிடத்தில் பல வகைகள் உண்டு.  கிரகங்களை அடிப்படையாக வைத்துப் பலன் கூறுவது பொதுவாக எல்லா ஜோதிடர்களும் கையாளும் முறை.  சிலர் சோழிகளை வைத்துப் பலன்கள் கூறுவர்.  இதற்குப் “பலகரை” ஆரூடம் எனப் பெயர். சிலர் கேள்விகேட்ப்பவர்களையே வெற்றிலை வாங்கிக் கொண்டு வரச்சொல்வர். அந்த வெற்றிலையின் எண்ணிக்கையை வைத்துக் கொண்டு பலன் சொல்லுவர். சிலர் கேள்வி கேட்பவர்களை 108 க்குள் எதாவது எண் சொல்லச் சொல்லுவர்.  அந்த எண்னை அடிப்படையாக வைத்துப் பலன்கள் கூறுவர்.  அந்தப்பலன்கள் சரியாக […]

நிமித்தக்காரன் கதைகள் – 1

நிமித்தம் என்பது ஜோதிடத்தில் ஒரு முக்கிய அம்சம். சில சமயம் ஜாதகம் மூலமாக சொல்ல முடியாததை நிமித்தங்கள் மூலமாக சொல்ல முடியும். நிமித்தம் என்பது ஒருவர் வாழ்க்கையில் நிகழப்போவதை வேறு ஒரு நிகழ்வின் மூலம் அறிந்து கொள்வது. அதில் தேர்ந்தவர்களை நிமித்தகாரன் என்றும் சொல்லுவதுண்டு. நிமித்தத்திற்கும் சகுனத்திற்கும் நூலிழை வேறுபாடுதான். அதை பின்னர் பார்ப்போம். நிமித்தங்களை பற்றி விளக்கும் போது இந்த கதையை சொல்வதுண்டு. ooOoo ஒரு நிமித்தக்காரர் தன்னுடைய சீடர்களுடன் ஆஸ்சிரமத்தில் வசித்து வந்தார். ஒரு நாள் […]

வருடப் பிறப்பில் எத்தனை வகைகள் – 2

முந்தைய பகுதி சென்ற பகுதியில் கொல்லம் ஆண்டைப் பற்றிப் பார்த்தோம். தமிழ்நாட்டிலும் சௌரமானத்தையே பின்பற்றுகின்றோம். அதாவது சூரியன் மேஷத்தில்  அஸ்வினி நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் நாளே வருடப் பிறப்பாகும். ஒவ்வொரு ஆண்டிற்கும் ஒரு பெயருண்டு. தற்போது உள்ள ஆண்டின் பெயர் விக்ருதி ஆண்டாகும். இந்த ஆண்டுகள் எவ்வாறு பலன் தரும் என்றுவெண்பாக்களால் நமது பெரியவர்கள் கூறி இருக்கிறார்கள். இது மொத்தம் 60 ஆண்டு களாகும். 60 ஆண்டுகள் முடிந்த பின்னர் திரும்பவும் முதலில் இருந்து சுழற்சி முறையில் ஆரம்பமாகும். […]

வருடப் பிறப்பில் எத்தனை வகைகள் – 1

புத்தாண்டு முடிந்து விட்டது.  கோடையின் தாக்கமும் அதிகரித்து விட்டது. இப்புத்தாண்டில் புதிய பஞ்சாங்கங்கள் வாங்குவதும், அதற்குறிய பலன்கள் பார்ப்பதும், கேட்ப்பதும் எல்லாம் அடங்கி விட்டது.  தொலைக்காட்சிகள் சில புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளி பரப்பியது. புத்தாண்டு என்று கூற மனமில்லாத சில நிறுவனங்கள்  சித்திரை மாதப் பிறப்பென்று கூறி நிகழ்ச்சிகளை ஒளி பரப்பின. சிலர் அத்தொலைக்காட்சி ஆரம்பித்த தினமென்று அந்நாளைக் கொண்டாடினார்கள் எப்படியோ எல்லா ஓசைகளும் அடங்கி விட்டன. நமக்கு இன்னும் ஓசை அடங்கவில்லை. இந்த ஆண்டு […]

ஜென்ம ராசி ஜோதிட பலன்கள்

ஜென்ம ராசி ஜோதிட பலன்கள்

பொதுவாகப் பலன் சொல்லும் போது லக்கினத்தியே முதல் பாவமாக வைத்துப் பலன் சொல்கிறோம். ஆனால் ராசிபலன் எழுதும் போது சந்திர லக்கினத்தையே முதல் பாவமாக வைத்து எழுதுகிறோம். லக்கினத்தை எடுத்துக் கொள்வது இல்லை. அதாவது நம் ராசியையே முதல் பாவமாக வைத்து எழுதுகிறோம். மேலை நாட்டினர் அவர்கள் பிறந்த ஜாதகத்தில் சூரியன் எங்கு இருக்கிறதோ அதை முதல் பாவமாக வைத்துப் பலன் எழுதுகின்றனர். கிரகங்களுக்கு இடையே உள்ள தூரமே "Aspect" எனப்படும் பார்வையாகும். இந்தப் பார்வையில் நல்ல […]

தமிழ்ப்புத்தாண்டு குழப்பங்கள்

இது வரையில் ஏப்ரல் 14 – ம் தேதி தமிழ்ப் புத்தாண்டாக இருந்தது.  இந்த ஆண்டு முதல் பொங்கல் திருநாள்  தமிழ்ப்புத்தாண்டாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.   இது அரசாங்கத்தின் ஆணை.  இவ்வாறு அரசு புதிய ஆணை விடுத்ததற்கான காரணங்களைப் பார்ப்போம். சுமார் 75  ஆண்டுகளுக்கு முன்பு  மறைமலை அடிகளார் தலைமையில் 500க்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர்கள் பச்சையப்பன் கல்லூரியில் ஒன்று கூடி  தமிழுக்கென்று தனித் தமிழ்புத்தாண்டு வேண்டும் என்று முடிவு செய்தார்கள்.  தற்போது பழக்கத்திலுள்ள பிரபவ, விபவ என்று […]

“அயனாம்சம்” பற்றி

நாம் ஏற்கனவே நமது பாடங்களில் அயனாம்சத்தைப் பற்றி எழுதி இருக்கிறோம்.  இப்போது சிறிது விரிவாகப் பார்ப்போம். மேஷத்தின் ஆரம்ப இடத்தை ஆங்கிலத்தில் "Vernal Equinox" என்றழைப்பார்கள். இந்த இடத்தைக் காட்ட முடியுமா?  காட்ட முடியும்.  மார்ச் 21 ம்தேதி ஒவ்வொரு ஆண்டும் சூரியன் இந்த இடத்தில்தான் பிரவேசம் செய்கிறார்.  அன்று பகல் பொழுதும் இரவுப் பொழுதும் சரிசமமாக இருக்கும்.  பஞ்சாங்கத்திப் பாருங்கள். "அகஸ்" என்ற கட்டத்தின் கீழே 30 நாழிகை என்று போட்டு இருப்பார்கள்.  அகஸ் என்றால் […]

காரகோ பாவனாசாய

  ஜோதிடத்தில் "காரகோ பாவனாசாய" என்னும் கருத்து நிலவுகிறது.  என்னவென்றால் ஒவ்வொரு கிரகமும் எவைகளுக்கெல்லாம் காரகத்துவம் வகிக்கின்றதோ, அந்தந்தக் காரகங்களைக் குறிக்கும் வீட்டில் இருந்தால் அந்தக் காரகத்துவம் சரியாக இருக்காது.  ஏதோ விடுகதை போடுவதைப் போல் இருக்கிருக்கிறது அல்லவா?  இன்னும் கொஞ்சம் விளக்கமாக எழுதுவோம். உதாரணமாக சூரியன் தந்தைக்குக் காரகனாகின்றார். தந்தையைக் குறிக்கும் வீடு ஒன்பதாம் வீடு ஆகும். தந்தையைக் குறிக்கின்ற சூரியன் தந்தைக்குக் காரகமாய் இருக்கின்ற ஒன்பதாம் வீட்டில் இருந்தால் தந்தைக்கு ஆகாது.  இது தந்தைக்கு […]

கடைசியாக : July 22, 2016 @ 9:48 am