ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

வாசல்

கழுவிக் கொண்டு கையிலிருந்து விழுந்தது நீர் நழுவிக் கொண்டு விரலிருந்து வந்தது வண்ணம் வீட்டின் தலைமகள்  முன்னெடுத்து, அவதரிக்க நிலமகளுக்கு நடந்தது அலங்காரம் திசைகளுக்கு ஒரு பின்பமென எட்டும் நிறத்திற்கு ஒரு முகமென ஏழும் புள்ளிகளுக்குள் ஒளிந்து கொண்டது. வளைவுகளும் வளையங்களும் மையத்தில் கூடி சித்திரமொன்றைச் சிறைபடுத்தியது வாசல் தொடர்புடைய படைப்புகள் :தொடர்புடைய படைப்புகள் எதுவும் இல்லை !

எப்படி இருக்க வேண்டும்

ஏழைக்கு உதவி செய் கோழைக்கு துணையாயிரு குடும்பத்திற்கு குடையாயிரு தோழனுக்கு தோள் கொடு இளைஞர்க்கு உதாரணமாயிரு முதியவர்க்கு தொண்டனாயிரு நிதிக்கு உண்மையாய் உழை நீதிக்கு தலைவணங்கு இறைவன் நினைவாயிரு தொடர்புடைய படைப்புகள் :தீபாவளி நல்வாழ்த்துகள்

என்றென்றும் வாலி

என்றென்றும் வாலி

கூவி அழைக்கிறேன்  வேள்வி எழுப்புறேன்  வேண்டி கேட்கிறேன்  வா வா  வாலி வா வா இறந்த போதிலும்  நிறைந்து நிற்கிறாய்  விரைந்து எழுந்து  வா வா  வாலி வா வா தமிழன் தமிழுக்கும்  கவிஞன் கவிதைக்கும்  எதுகை மோனைக்கும்  வா வா  வாலி வா வா இறைவன் திருவடியில்  இணைந்த போதிலும்  தமிழுக்காகவே  வா வா  வாலி வா வா   தொடர்புடைய படைப்புகள் :2010 பாக்யராஜ்

கடவுளின் ஞாபகம் வருகிறது….

January 15, 2013 by · Leave a Comment 

    கையில் காசு இல்லாமல் கடந்து செல்லும் பெரும் செலவு மருத்துவர் அறையில் காத்திருக்கும் நொடி   இயல்பாகக் கடவுளை ஞாபகப் படுத்துகிறது…..   கூடிப் பிரியும் நட்பு நிரந்தரமாக் விலகிப்  போகும் நிராகரிப்பின் போதும் தனிமை கழுத்தை நெறிக்கும் போதும்  எப்போதும் கடவுள் ஞாபகம் வருகிறது….   சுனாமி, பூகம்பம், நில அதிர்வு தீவிரவாதம்,குண்டு வெடிப்பு, விபத்து இவையெல்லாம் வெறுமே உச்சரிக்கும் போது கூட கடவுள் ஞாபகம் வருகிறது….   தன்னைக் குறித்த அயர்ச்சியும் […]

தீபாவளி நல்வாழ்த்துகள்

  உண்ண வழி இல்லாதவர்களுக்கு உழைக்கும் வழி காட்டினால் தீபாவளி..   கல்வி கற்க இயலாதவர்களுக்குக் கருணைமொழி பேசினால் தீபாவளி…   அன்பில்லாமல் தவிப்பவர்களுக்கு பாசவிழிகள் வீசினால் தீபாவளி..   உடலாலும் மனதாலும் தளர்ந்தவர்களுக்குப் பட்டாசு பேசா மெளனமொழி தீபாவளி…   தேர்விற்குப் படிப்பவர்களுக்குத் தொந்தரவு செய்யாவழி தீபாவளி..   யாருமில்லாத தனித்து விடப்பட்டவர்களுக்கு இனிப்பும் உடைகளும் தந்து அன்பை வாரி வழங்குவதும் தீபாவளி…   பிடித்ததைப் பிரியமானவர்களுக்குச் செய்து மகிழ்வது தீபாவளி..   மனதில் இருக்கும் […]

வாழ்த்துப்பா

வாழ்த்துப்பா

அழகாய் அருமையாய் ஆல் போல் தழைத்தாய் இயல்பாய் இனிமையாய் ஈந்தாய் அழகுத்தமிழை உயர்வாய் உன்னதமாய் ஊனில் நிறைந்தாய் எனக்கும் ஏனைக்கும் ஐயமின்றி -தமிழ் எழுத்துக்களை அச்சேற்றி-வளரும் எழுத்தாளர்களை ஊக்குவித்து ஒப்புமையேதுமில்லாத தமிழை ஓங்கி வளர்க்கும் தமிழோவியத்தை அஹ்தே அனைவரின் சார்பில் வாழ்த்துகிறேன். பிறந்த நாள் காணும் முத்தான தமிழோவியம் பத்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நன்னாளில் ஓவியத்தின் இரு கண்களாய்த் திகழும் கணேஷ்-மீனா அவர்களுக்கும் எழுத்தாளர்கள் வாசகச்சொந்தங்களுக்கும் மனமார்ந்த நன்றி மலர்களைத் தூவுகின்றேன். பற்பல பிறந்த நாட்களைக் […]

செலோ என்றொரு நண்பன்!

செலோ என்றொரு நண்பன்!

    சிதறிப் போனவையையும்  கீறல் விழுந்தவையும்  மீண்டும் காகிதமாக  தன்னைக் கிழித்துக் கொள்பவன்   பணத்தில் பாகப்பிரிவினை நடக்காமலிருக்க கண்ணாடி  ரோடுபோடும் காண்ராக்டர்   அஞ்சல் தலைப் பொட்டிட்ட  காகிதப் பொட்டிகளைப்  பூட்டிக் கொண்டு  தபால்காரருடன் ஊர்சுற்றுவான்   உடைந்த பொம்மை  இணைக்கப்பட்டது  இவனை உடைத்து   அறிக்கையை கவ்விக் கொண்டு  தகவல் உரைக்கும் பலகையில்  படுத்துக்கொள்வான்   முறுக்கை வயிற்றில் கட்டிய பாலித்தீன் பையின் வாயைக்  கட்டும் வித்தகன்   ஸ்டேபிளர் பின்களின்  கடியிலிருந்து […]

எந்திரன் ரிடன்ஸ்

எந்திரன் ரிடன்ஸ்

  நிலுவையில் இருக்கும் வழக்குகளுக்கு விரைவாகத் தீர்ப்புச் சொல்ல ரோபோக்களை  அங்கீகரிக்க வேண்டி வந்த பொது நலன்  வழக்கை அடுத்த மாதத்திற்கு ஒத்திவைத்தார் நீதிபதி!    பணம் கொடுத்தால் ஓட்டுப் போட மனித  ரோபோக்கள் சம்மதம் தெரிவித்துள்ளதால்  கீ கொடுத்தால் கள்ள ஓட்டுப் போடும் ரோபோக்களின் விற்பனை படு மந்தமாகவுள்ளது    சாதிச் சான்றிதழ் உறுதிப் படுத்தப்படாததால்  ரோபோக்களை வேலையிலிருந்து நீக்கி உத்தரவிட்டு சமத்துவம் காத்தார் சாதியொழிப்புத்துறை அமைச்சர்   நிறுத்தங்களில் பேருந்தை நிறுத்தாமல் சென்றதால்  'ரோபோக்களை […]

இரட்டை முகங்கள்

இரட்டை முகங்கள்

November 17, 2010 by · 2 Comments 

  எங்கு சென்றாலும் இரட்டை முகங்கள்!!! நம் முன் ஒரு முகம் – நம் முதுகுக்குப் பின்னொரு முகம் !!!   எலும்பில்லா நாக்கை சாட்டையாய் சுழற்றி ரணமாக்கி மகிழும் முகம் அது !!!!   முகம் மட்டுமா இரண்டு – நாக்குகளும் தேவைக்கு ஏற்ப வடிவெடுக்கும் விந்தைதான் என்ன ??? தொடர்புடைய படைப்புகள் :தொடர்புடைய படைப்புகள் எதுவும் இல்லை !

இருக்க வேண்டியது !!

இளமையில் என்னிடம் படிப்பு இருந்தது பட்டம் இருந்தது பணம் இருந்தது பதவி இருந்தது வீடு இருந்தது குடும்பம் இருந்தது வீரம் இருந்தது விவேகம் இருந்தது தெம்பு இருந்தது திராணி இருந்தது வசதி இருந்தது வாய்ப்பு இருந்தது இறைவனின் நினைப்பு எப்போதாகிலும் வந்தது! முதுமையில் என்னிடம் வயசு இருக்கிறது அனுபவம் இருக்கிறது முதிர்ச்சி இருக்கிறது முயற்சி இருக்கிறது நோயும் இருக்கிறது நோவும் இருக்கிறது வேதனையும் இருக்கிறது மறதி இருக்கிறது மந்தம் இருக்கிறது இறைவனின் நினைப்பு எப்போதும் இருக்கிறது!! தொடர்புடைய […]

Next Page »

கடைசியாக : July 22, 2016 @ 9:48 am