ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

2G ஸ்பெக்ரம் என்ன முறைகேடு

MK Singh 2G ஸ்பெக்ரம் என்ன முறைகேடுதகவல் தொடர்பு இலாக்கா 2G ஸ்பெக்ட்ரம் அலை வரிசை ஒதுக்கீடு 2008 ம் ஆண்டு செய்தது. ஆனால் அதை 2001 ல் அமுலில் இருந்த விலைக்கே விற்றது. விற்றதிலும் முறையான விதிகளைப் பின்பற்றப்படவில்லை. தன் இஷ்டப்படி விதிகளைப் பின் தள்ளிவிட்டு, நிதி அமைச்சகமும், சட்ட அமைச்சகமும் கூறிய அறிவுறைகளையும் ஒதுக்கிவிட்டு விற்றது.  இவ்வாறு விற்றதில் 1.76 லட்சம் கோடிகள் அரசாங்கத்திற்கு  நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.  தவிரவும் 2008 ம் ஆண்டு 122 புதிய லைசன்ஸ்கள் வழங்கப்பட்டன.  அதில் சுமார் 85 நிறுவனங்கள் அந்த உரிமைகளைப் பெறவே தகுதியற்றவை.  அவைகள் இந்த அலைவரிசை  ஒதுக்கீட்டினைப் பெற்றுள்ளன. Comptroller and Auditor General of India,  இந்த ஒதுக்கீட்டின் முறைகேடுகளை தணிக்கை செய்து அரசாங்கத்திற்கு தன்னுடைய அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளார். இவ்வளவு பெரிய முறைகேடு இதுவரையில் நடந்ததே இல்லை.  

நாடுளுமன்றத்தில் இந்த தணிக்கை அறிக்கை சமர்ப்பிக்கப்படும்போது  எதிர்க்கட்சி களை அரசாங்கம் எப்படி சமாளிக்கப் போகிறதோ தெரியவில்லை. தமிழக முதல்வரிடமிருந்து எந்தவிதமான பதிலும் இதற்கு இல்லை.

ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக, மத்தியில் காங். அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

பின் குறிப்பு : 

இரண்டு ஆண்டுகளுக்கு முன் சன் குழுமத்திற்கும் – கலைஞருக்கும் லடாய் ஆன போடு சன் டிவி, தினகரனில் இந்த ஊழல் பற்றி அதிகம் பேசப்பட்டது. இப்போது அவர்களுக்குள் பிரச்சனையில்லை ஆகையால் சன் குழுமம் அப்படி ஒரு ஊழல் நடக்காதது போலவே செயல்படுகிறது.

தொடர்புடைய படைப்புகள் :

Facebook Comments:

comments

மனசுல பட்டதை சொல்லுங்க

கடைசியாக : November 11, 2010 @ 1:21 pm